அழகியல்:தங்கத் தட்டில் தரப்படுகிறது என்பதற்காக மலத்தை..

Lenin with Child

 ‘வடிவத்தையும் தாண்டி உணர்வோடு வெளிபடுகிறது உள்ளடக்கம்’ என்று பெரியார் நாடகம் பற்றிய விமர்சனத்தில் சொல்லியிருக்கிறீர்களே, வடிவம் என்பது அழகியல் சார்ந்த விஷயம். அப்படியானால் அழகியலே தேவையில்லை என்கிறீர்களா?

-தேன்மொழி

 

நம் சிந்தனையை, கற்பனையை பரவலாக பலருக்கு சொல்வதற்கான ஒரு முறைதான் வடிவம். ஆக முதலில் நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை தெளிவாக, குழப்பமற்று முடிவு செய்து கொள்ளும்போதே அதனோடு சேர்ந்தே இயல்பாகவே ஒரு நேர்த்தியான வடிவம் உருவாகும்.

 

புரட்சிக்கு முந்திய பழைய சோவியத்தில் டால்ஸ்டாயைத் தவிர குறிப்பிட்டு சொல்லுபடியான இலக்கயவாதிகளோ, கலைஞர்களோ இல்லை. புரட்சிதான் மிக சிறந்த கலைகளையும், கலைஞர்களையும் உருவாக்கியது.

அப்படித்தான் ஐஸன்ஸ்டின் என்கிற கலைஞனையும் புரட்சி உருவாக்கியது. ரஷ்ய புரட்சியை ஆதரித்து படம் எடுத்த ஐஸன்ஸ்டினுக்கு அழகியலான வடிவமும் அப்படித்தான் நேர்ந்தது.

 

அதனால்தான் உலக சினிமாக்களுக்கு நேர்த்தியான வடிவத்தை அவரால் உண்டாக்கித் தரமுடிந்தது.

அவருடைய ‘பொட்டம் கின்’ ‘அக்டோபர்’ படங்கள்தான் உலக சினிமாவிற்கு பல்வேறு புதிய உணர்வூபூர்வமான ‘ஷாட்’டுகளை உருவாக்கித் தந்தது. இன்றைய ஹாலிவுட் படங்களுக்கான வடிவம் ஐஸன்ஸ்டின் போட்ட பிச்சை அல்லது, அவரிடம் இருந்து களவாடப்பட்டது.

ஒரு கம்யூனிஸ்ட்டின் வடிவங்களைக் கொண்டுதான் கம்யூனிச விரோதப் படங்களையும் உருவாக்குகிறது ஹாலிவுட்.

 

ஆக, ஒரு நேர்த்தியான வடித்தின் மூலம் என்ன செய்தி சொல்லப்படுகிறது என்பதுதான் முக்கியம்.

சிலசமயங்களில் பெருவாரியான மக்களுக்கு ஆதரவான ஒரு செய்தி, மிக மோசமான வடிவத்தில் கூட சொல்லப்பட்டுவிடலாம். அதனால் ஒன்றும் ஆபத்தில்லை.

ஆனால், பெருவாரியான மக்களை கேவலப்படுத்தி, ஆதிக்கத்தை நியாயப்படுத்தி சொல்லுகிற செய்தி, மிக நேர்த்தியான வடிவத்தில் இருந்தால், அது மிகவும் ஆபத்தானது. அருவருப்பானது.

 

“வேறு வழியில்லை, பசிக்கு உணவு எச்சிலை சோறுதான்” என்றால் கூட மனிதர்கள் உண்டு விடலாம்.

ஆனால் தங்கத் தட்டில் வைத்து தரப்படுகிறது என்பதற்காக மலத்தை தின்ன முடியுமா?

*

ஏப்ரல் 11-2008 அன்று எழுதியது.

தொடர்புடையவை:

“சுயமரியாதையற்ற பெரியார்”

மட்டமான அறிவாளி அல்லது கை தேர்ந்த சந்தர்ப்பவாதி

மலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும்

கீரை விற்பவர் இலக்கியவாதியாக மாறினால், இலக்கியவாதிகள் என்ன ஆவார்கள்?

4 thoughts on “அழகியல்:தங்கத் தட்டில் தரப்படுகிறது என்பதற்காக மலத்தை..”

  1. தமிழ் இலக்கியங்களின் கலை அழகுக்காகவாவது அவற்றைவிட்டு வைக்கக் கூடாதா? என்று பலர் கேட்ட போது தந்தை பெரியார் கேட்டார், “தங்கத் தட்டில் அமேத்தியம் (மலம்) தரப்பட்டால் சாப்பிட முடியுமா?” என்று… அந்த பதிலை தக்க இடத்தில் நினைவூட்டியிருக்கிறீர்கள்

  2. //ஆனால் தங்கத் தட்டில் வைத்து தரப்படுகிறது என்பதற்காக ‘பீ‘ யை தின்ன முடியுமா?//

    நல்ல கேள்வி!! ஆனால் தின்னும் படி இயல்பாக்கப்பட்டுள்ளார்கள்.

Leave a Reply