இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல


மிழ் சினிமாவை காட்சி அமைப்புகளின் மூலமாக இந்தியத் தரத்திற்கு உயர்த்தியவர். சினிமா மொழியை விரிவாக கையாண்ட முதல் தமிழ் திரைப்பட இயக்குநர். தனது வித்தியாசமான கேமரா கோணங்களால், தமிழ் சினிமாவை அழகுபடுத்தியவர். நவீன தமிழ் சினிமாவின் முன்னோடி இப்படி பல சிறப்புகள் சமீபத்தில் மறைந்த இயக்குநர் ஸ்ரீதருக்கு உண்டு.

ஹாலிவுட் படங்கள், அய்ரோப்பிய படங்கள் ‘க்ரைம்’ படம் என்றால் முழு நீளப் படமும், க்ரைம் சூழலையே சுற்றி வரும். ‘காமெடி’ என்றால், படம் முழுக்க காமடியே. அதுபோல்தான் இவரின் ஆரம்ப கால படங்களும் அமைந்திருந்தன. குறிப்பாக இவரின் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் முழுநீள நகைச்சுவைத் திரைப்படம். (அதற்கு முன் பம்மல் சம்பந்த முதலியார் எழுதி, ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் இயக்கிய ‘சபாபதி’ திரைப்படம்தான் தமிழின் முதல் ழுழு நீள நகைச்சுவைப் படம்)

ஒரே லொக்கேஷனில் (மருத்துவமனை) ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படத்தை குறைந்த நாட்களுக்குள் தரமாக எடுத்து தமிழில் ஒரு புதிய பாணியை உருவாக்கியவர் ஸ்ரீதர். பின்னாட்களில் இந்தப் படத்தைதான் கொஞ்சம் உல்டா செய்து, அதைபோன்றே ஒரே லொக்கேஷனில் ‘நீர்க்குமுழி’ என்று படத்தை எடுத்தார் கே. பாலச்சந்தர்.

வேலையற்ற இளைஞர்களை மையமாக வைத்து ஸ்ரீதர் உருவாக்கிய ‘நெஞ்சிருக்கும் வரை’ படம், கொஞ்சம் மாற்றங்களோடு, பார்ப்பனத் தன்மை கலந்து பாலச்சந்தரின் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ என்று மாறியது.

Fantasy பாணியிலான மறுஜென்ம கதையான இவருடைய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் நம்புபடியாக இல்லாவிட்டாலும் கூட ரசிக்கும் படியாக இருந்தது. இந்தக் கதையைதான் பின்னாட்களில் நடிகர் நாசர் தனது இயக்கத்தில் ‘தேவதை’ என்ற பெயரில் ரசிக்கக் கூட முடியாதபடி எடுத்திருந்தார்.

‘சினமா என்கிற ஊடகம் முழுக்க முழுக்க பொழுது போக்கிற்கான கலைவடிவம் மட்டும்தான்’ என்கிற எண்ணம் இயக்குநர் ஸ்ரீதரிடம், மிக ஆழமாக இருந்திருக்கிறது. அதனால்தான், ஏற்றத் தாழ்வற்ற ஒரு சமூகத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு, ‘மனிதர்களுக்கு பிரச்சினை காதல் மட்டும்தான்’ என்பதுபோல் சோகம், நகைச்சுவை என்று வேறு வேறு வடிவங்களில் காதலையே பெரும்பாலும் காட்டிக் கொண்டிருந்தார்.

மிகப் பெரும்பாலும் பொழுது போக்கு படங்களை மட்டுமே எடுத்திருக்கிறார். அதையும் மீறி அவர் எடுத்த ஒன்று-இரண்டு அரசியல் படங்களும், ‘நாலு Fight அஞ்சு Song’ என்கிற போழுது போக்கு பாணியில்தான் அமைந்திருந்தது.

அதன் பொருட்டே இவர் பின்னாட்களில் எடுத்த மீனவ நண்பன், உரிமைக் குரல், இளமை ஊஞ்சலாடிகிறது, நினைவெல்லாம் நித்யா, தென்றலே என்னைத் தொடு, நானும் ஒரு தொழிலாளி, துடிக்கும் கரங்கள் போன்ற படங்களில் வழக்கமான அவருடைய நேர்த்தியான வடிவத்தைக் கூட அவரால் தர முடியவில்லை.

இதில் உரிமைக் குரல் திரைப்படம் மிக மோசமான திரைப்படங்களுக்கு முன்மாதிரியாக விளங்கியது. இந்தப் படத்தில்தான் பெண்களின் பேராதரவுப் பெற்ற, ‘புரட்சித்தலைவர்’ எம்.ஜி.ஆர் என்ற முதியவர் , இளம் பெண்ணின் மார்பகங்களை மாங்காயோடு ஒப்பிட்டு, அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘காயா இல்லை பழமா? கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா?’ என்று பாட்டு பாடி ஈவ்டீசிங் செய்தார்.

இவர் இயக்கிய படங்களில் ‘வெண்ணிற ஆடை’ மிகுந்த அழகியலோடு, நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். வடிவம் ஐரோப்பிய சினிமா பாணியில் அமைந்தது. உள்ளடக்கம் இந்து பழமையில் ஊறிய கதை. நவீன பாணியில் படம் அமைந்திருந்தாலும், பணக்கார இளம் விதவைக்குக்கூட மறுமணம் செய்து வைக்க முடியவில்லை ஸ்ரீதரின் நவீன பாணி சினிமாவால்.

‘வெண்ணிறாடை’ படத்திற்கு இவர் நடிகர்களை தேர்வு செய்தது பிராமண சங்கத்தில் இருந்தோ, என்று எண்ணுகிற அளவிற்கு பார்ப்பனர்களால் நிரம்பி வழிந்தது அந்தப் படம்.

அந்தப் படத்தில் அறிமுகமான ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, டைப்பிஸ்ட் கோபு, நீலு இவர்கள் மட்டுமல்ல – ஏற்கனவே நடிகர்களாக இருந்த மேஜர் சுந்தரராஜன், லட்சுமியின் அம்மா ருக்மணி இன்னும் துணை நடிகர்கள் கூட பார்ப்பனர்கள்தான். அநேகமாக அந்தப் படத்தில் இயக்குநர் ஸ்ரீதரை தவிர எல்லோரும் பார்ப்னர்களாகத்தான் இருந்தனர்.

‘பார்ப்பனர்களுக்கு அதிக வாய்ப்புத் தரவேண்டும்’ என்கிற எண்ணம் இயக்குநர் ஸ்ரீதரிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ‘தன்னுடைய கதாபத்திரங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறார்களா?’ என்பது மட்டும்தான் ஸ்ரீதரின் கவனமாக இருந்திருக்கும். அதனால்தான் அவர் படங்களில் பார்ப்பன கதாபாத்திரங்கள் அநேகமாக இல்லை. ஆனாலும் அந்த கதாபாத்திரங்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களால்தான் நிரப்பப்பட்டது.

காரணம், ஸ்ரீதரை சுற்றி எப்போதும் மிகப் பெரிய பார்ப்பன கும்பல்தான் இருந்தது. அவர்கள் கொண்டு வருகிற, பரிந்துரைக்கிற நபர்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதன் பொருட்டுதான், பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பனியத்தை விமர்சிக்காதவர்களுக்கு மட்டும்தான் ஸ்ரீதர் படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் இருந்தது.

அதனால்தான் உலகின் மிக சிறந்த நடிகர்களுள் ஒருவரான நடிகவேள் எம்.ஆர். ராதாவிற்கு, ஸ்ரீதரின் ஒரு படத்தில் கூட வாய்ப்புத் தரவில்லை. பெரியாரின் கொள்கைகளில் ஊறிய நடிகவேளுக்கு வாய்ப்புத் தரவில்லை என்பதால், ஸ்ரீதரை திறமையற்றவர் என்று சொல்லி விட முடியாது. தனக்கு லாபம் இல்லை என்பதாலோ, தன்னை புறக்கணிப்பதாலோ தரமான ஒன்றை தரமற்றது என்று சொல்வதும், திறமையான ஒருவரை முட்டாளாக சித்தரிப்பதும்தான் பார்ப்பனியம்.

இந்தி சினிமாவின் இயக்குரும் நடிகருமான ராஜ்கபூர் போன்ற, இசைக்கு அல்லது பாடல்களுக்கு முக்கியத்துவம் தந்து படம் எடுத்த இந்தியாவின் திறமையான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் ஸ்ரீதர். நவீன தமிழ் சினிமாவின் முன்னோடி.

தொடர்புடையது:

சரோஜாதேவியிடம் எம்.ஜி.ஆர் பாடியதும்; தமிழக, இந்திய, சர்வதேசிய விருதுகளும்

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

ராஜபார்ட் ரங்கதுரையை மற்ற கழிசடைகளோடு..

26 thoughts on “இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

 1. சில விஷயங்களை ஆமோதிக்கிறேன். ஆனால், நீங்க சொல்லும் எல்லாவற்றையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
  பார்ப்பனியம் பற்றி, ரொம்ப அதிகமா விவாதிதித்திருப்பது கொஞ்சம் சலிப்பூட்டுவதாக உள்ளது.
  ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ லும் அவரின் தனித்தன்மை வெளிப்பட்டது என்பது என் கருத்து.

 2. பெரியாரின் கொள்கைகளில் ஊறிய நடிகவேளுக்கு வாய்ப்புத் தரவில்லை, என்பதால் ஸ்ரீதரை திறமையற்றவர் என்று சொல்லி விட முடியாது. அப்படி சொல்வதுதான் பார்ப்பனியம்.
  i hope some who do not understand the word brahminism read this.
  i wish someone would write about ALAIGAL a film by sridhar which i have seen only for the first half

 3. //மீனவ நண்பன், உரிமைக் குரல், இளமை ஊஞ்சலாடிகிறது, நினைவெல்லாம் நித்யா, தென்றலே என்னைத் தொடு, நானும் ஒரு தொழிலாளி, துடிக்கும் கரங்கள் போன்ற படங்களில் வழக்கமான அவருடைய நேர்த்தியான வடிவத்தைக் கூட அவரால் தர முடியவில்லை.//
  இவரது சிவந்த மண் போன்ற படங்களின் வசூல்ரீதியான் தொல்வி தான் இவரை இப்படியான நிலக்கு தள்ளியிருக்கும். அது போல இதே பிரச்சனை (மாறி வரும் ரசனைஇகு ஏற்ப தாக்குபிடிக்க முடியாதது) பலருக்கு இருந்துள்ளது. பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் முதல் ஏன் எஸ் ஏ சந்திரசேகரன் உட்பட, விகரமன் வரை பெரிய பட்டியல் இது.

  இவரது நினைவெல்லாம் நித்தியா பாடல்கள் என் ஆல் டைம் favorite

 4. பார்ப்பனியம் பற்றி, ரொம்ப அதிகமா விவாதிதித்திருப்பது தவறில்லை.இன்று தமிழ் திரை உலகம்‘பார்ப்பனர்களுக்குஅடிமையாகத்தான் உள்ளது.இந்த நிலை மாற வேண்டும்’

 5. (அதற்கு முன் பம்மல் சம்பந்த முதலியார் எழுதி, ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் இயக்கிய ‘சபாபதி’ திரைப்படம்தான் தமிழின் முதல் ழுழு நீள நகைச்சுவைப் படம்)

  சபாபதி — அடுத்த வீட்டுப் பெண் — காதலிக்க நேரமில்லை — மைக்கிள் மதன காம ராஜன் ——– என் நினைவுக்கு வரும் பட வரிசை

 6. ஒரு படைப்பாளி தனது படைப்புக்கு தேவையான அல்லது கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவர்களையே தேர்ந்தெடுப்பார். அது ஒரு படைப்பாளிக்கு உள்ள சுதந்திரம். எவரையும் திருப்பதிப்படுத்த நினைத்து ஒரு காரியத்தை செய்ய வேண்டிய தேவையில்லை. அதற்காக ஒருவரை திணித்து நடிக்க வைக்க வேண்டும் என்றால் அது முழுமையான படைப்பாகாது.

  சிலர் ஒரு சில கொள்கையோடு கலையுலகில் இருப்பவர்கள். மறைந்த ராதா அவர்களும் அப்படியானவரே…. அவர் திறமையானவர் அதற்காக அவரையும் நடிக்க வைக்கவில்லை எனும் குற்றச்சாட்டு தார்மீகமாக இல்லை.

  இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் ஒரு சிறந்த இயக்குனர். பல்வேறு விதமான படைப்புகளை தந்தவர்.

  திரைப்படங்களின் வெற்றியும் தோல்வியும் படைப்பவர்கள் கையில் இல்லை. பார்வையாளர் கைகளிலேயே இருக்கிறது. அது அந்த படம் வெளிவரும் காலகட்டத்தையும் அந்த மக்களின் அன்றைய மனநிலையையும் பொறுத்தது.

  எல்லாவற்றுக்குள்ளும் பார்பனியம் என்ற ஒன்றை கையில் கொண்டு விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல.

  http://www.ajeevan.com

 7. உங்களது மின்மடலுக்கு நன்றி.. இயக்குனர் ஸ்ரீதர் குறித்த உங்கள் கருத்துக்கள் பல ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே பட்டது.. ஆனால் எதற்கு சம்பந்தமேயில்லாமல்.. பார்பனிய எதிர்ப்பு.. பார்பனிய எதிர்ப்புக்கும், ஸ்ரீதருக்கும் என்ன சம்மந்தம்.. அவர் ஓரு பார்பனர் என்றாலும் கூட பரவாயில்லை.. அவரை சுற்றி இருந்தவர்கள் பார்பனர்கள் என்றால் அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்.. அவருடன் இருப்பவர்களை என்ன வர்ணம் என்று பார்க்காமல், அவர்களின் திறமையை மட்டும் பார்த்ததினால்தான் அவரால் பல வெற்றி படங்களை கொடுக்க முடிந்த்து என்பது என் கருத்து.. சினிமாவிக்கு மொழி, மதம், ஜாதி, வர்ணம் தேவையில்லை என்பது என் கருத்து..

 8. ஒருவரின் மறைவின் பொழுது பாடாவதிகளை பேசாமல் இருப்பது மரபு. ஆனால் இந்த பதிவுதான் தெல்ஜி போல போலி முத்திரைகள், பட்டங்கள் தயார் செய்து வாரி வழங்கும் பதிவாயிற்றே! இதெல்லாம் எதிர்பார்க்காம இங்கு வந்து பதிவுகளைப் படிக்கும் கேபிள் சங்கருக்கு என் அனுதாபங்கள்.

  பார்பனர்கள் சுற்றியிருந்தார்கள் ஆனால் பார்பனீயம் பழகவில்லை என்ற பட்டத்தை வழங்கி பாராட்டுகிறார் அதையும் ஒருவர் வழி மொழிந்து இந்த மகா தத்துவங்களை உலகிற்கு எடுத்து செல்ல யாருமில்லை என்றும் கவலைப்படுகிறார்.

  காலம் கலி காலம்…இல்லை இல்லை காலிகளின் காலம்!

 9. காலத்தால் அழியாத காவிய நாயகன் இயக்குநர் ஸ்ரீதர்..

  செங்கல்பட்டில் உள்ள சித்தாமூரைச் சேர்ந்த ஸ்ரீதர், டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் குழுவில் வசனகர்த்தாவாகத் தன் கலையுலகப் பயணத்தைத் தொடங்கியவர். இவர் எழுதிய “ரத்த பாசம்’ என்ற நாடகம் பின்னாளில் திரைப்படமாக உருவானது. அந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதித் திரையுலகில் அறிமுகமானார் ஸ்ரீதர்.

  சினிமாவில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவர்.

  சினிமாவை நேசித்த மிகச்சிலரில ஒருவர். தனகென தனி பாணி அமைத்தவர். இயக்குநரால் திரைப்படங்கள் ஒடும் என தனி formula அமைத்தவர்.

  1959 ல் வெளி வந்த கல்யாண பரிசு படத்தில ” அம்மா ஸ்கூலுக்கு போயிட்டு வரேன் ” என்ற ஒரே வசனத்தால் அதை marketing மந்திரமாக பயன் படுத்தியவர். ..

  அந்த காலத்தில் ஒருவரை காதலித்துவிட்டு இன்னொருவரை மணந்துகொண்ட முதல் சினிமா கதை, கல்யாண பரிசுதான். அது எப்படி சாத்தியம்? என்று கடும் விமர்சனத்துக்குள்ளான கதை அது. முதல் இரண்டு நாட்கள் தியேட்டர்களில் கூட்டமே இல்லை. அது தோல்வி படம் என்று முடிவுகட்டிய நிலையில், மூன்றாவது நாளில் இருந்து கூட்டம் அலைமோத ஆரம்பித்தது

  “நெஞ்சில் ஓர் ஆலயம்’ வெற்றிப் படம், 14 நாள்களில் படமாக்கி புதுமை வித்தகர். ஒரே செட். ஒருபுற்ம மருத்துவமனை, மறு புறம் வீடு.. என அசத்தியவர்.

  பெண்களுக்கு என்று ஆடியன்ஸ் ஏற்படுத்தியவர். அவரை பின்பற்றியே பல இயக்குநர்கள் { பாலச்சந்தர், விசு, பாக்யராஜ் } பெண்களை கவர பல உத்தியை கையாணடார்கள்.

  இதைபற்றி அவர் கூறும் போது.. சினிமா என்பது “Talkie” மட்டுமே அல்ல அது ‘Movie” எனபார். புதிய பரிமாணதை 1960 களில் ஏற்படுத்தியவர். எந்த பாடல்களிலும் 30 வினாடிகளுக்கு மேல் ஒரே ஷாட் இருக்க கூடாது என அடம் பிடிப்பவர்.

  நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்டதில் “சொன்னது நீதானா”? என்ற திரைப்பட கட்டிலுக்கு கீழேயிருந்து தான் கேமரா வரவேண்டும் என அந்த ஒரு ஷாட்டுக்காக பல வழிகள்ளில் முயன்று பட மாக்கியவர்.

  ஸ்ரீதர் இயக்கிய `தேன்நிலவு’தான் முதன் முதலாக காஷ்மீரில் படமாக்கப்பட்ட தமிழ் படம் ஆகும்.

  இப்படி எவ்வளவோ விஷயங்க்ளை கூறிக்கொண்டே போகலாம்..

  புதுமையின் விருட்சம் இன்று பூமிக்குள் புதைந்துவிட்டது. அவரை நெஞ்சம் மறப்பதில்லை. தமிழ்த் திரையுலகின் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் பெயர்-ஸ்ரீதர்.

  வேறு வார்தைகளில்லை….

 10. //1959 ல் வெளி வந்த கல்யாண பரிசு படத்தில ” அம்மா ஸ்கூலுக்கு போயிட்டு வரேன் ” என்ற ஒரே வசனத்தால் அதை marketing மந்திரமாக பயன் படுத்தியவர். ..//
  //காலத்தால் அழியாத காவிய நாயகன் இயக்குநர் ஸ்ரீதர்.. //
  //ஸ்ரீதர் இயக்கிய `தேன்நிலவு’தான் முதன் முதலாக காஷ்மீரில் படமாக்கப்பட்ட தமிழ் படம் ஆகும். //
  //வேறு வார்தைகளில்லை….//
  yes
  kamala

 11. உரிமை குரல் ஸ்ரீதரின் தனிதுவு பாணியில் இருந்து விலகியது உண்மையே. சிவந்த மண்ணின் தோல்வியில் இருந்து வெளி வர MGR பாணியில் எடுக்க பட்டது. எனினும் வசூலில் வெற்றி பெற்றது. நினைவெல்லாம் நித்ய, தென்றலே என்னை தொடு போன்ற படங்களில் ஸ்ரீ தரின் தனித்தன்மை வெளி பட்டது.

 12. migavum sirantha katturai. cinemavai patri sridharai patri aavyu seitha katturai. nandrigal.

 13. இயக்குனர் ஸ்ரீதரின் படங்கள் சமூக மற்றதுற்கான ஆரம்ப படங்கள் அமைந்தது .பார்பனர்கள் பற்றி எதற்கு மதி பேசுகிறார் என்றால் அக்காலத்தில் பரப்பான வெறி புரையுடி இருந்த காலம் .இக்கல்கட்டதில் அதன் முக்கியதுத்தை ஏன் கையில் எடுக்கவில்லை .

 14. ஹலோ 108 ஆம்புலன்ஸ் உடனே இங்கே வரவும் இங்கே மதிவாணன் என்ற ஒருவர் புத்தி பேதலித்து உளறிகொண்டு இருக்கிறார்……….தாள முடியலடா சாமி…..!

 15. யோவ் மதி நீ எப்பவும் இப்படிதானா உன் வலைபகுதியை சும்மா ஒரு நோட்டம் விட்டேன் ……..ஒன்னு புரிஞ்சுகிட்டேன் நீ யாருன்னு…….. கடைசியிலே நீ ஒரு டம்மி பீஸ்! பிரான்ஸ் நாட்டில் சொல்வாங்க….. நாலு பேரை நம்ம திரும்பி பார்க்கணும்னா நாலு பேருக்கு நன்கு அறிமுகமானவற்றை (அதாவது புகழ் பெற்ற மக்களிடம் செல்வாக்கு பெற்ற மனிதர்கள், விஷயங்கள்……) எதிர்மறையில் விமர்சிக்க வேண்டும்……. அதைதான் நீ எல்லா இடத்திலும் செய்றே! ஒரு நாலு பேரு உன்னை நம்பலாம்………ஆனா பெரும்பான்மையான மக்களால் அங்கிகாரம் செய்யப்பட்ட அந்த சாகா வரம் பெற்ற நபர்கள் விஷயங்கள் மென்மேலும் மெருகு ஏற்றப்படும்…….. ஆக தொடரட்டும் உன் பணி…….கண்ணதாசன், எம்.ஜி.ஆர் போன்றவர்களுக்கு புகழ் கூடட்டும்……நன்றி மதிகெட்ட மதி!

Leave a Reply

%d bloggers like this: