ஜெயலலிதாவின் சூழ்ச்சி – சீமான், அமீர் கைது – காங்கிரசின் மகிழ்ச்சி
தொடர்ந்து தனது மோசமான அறிக்கைகளால், தமிழகத்தில் ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு’ என்று இருந்த ஒரு முழமையான நிலையை மாற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் – வைகோ, கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் போன்றவர்களை கைது செய்திருக்கிறது தமிழக அரசு.
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், ‘கைதானவர்களை விடுதலை செய்’ என்கிற நிலைக்கு மாறியிருக்கிறது. இது ஜெயலலிதாவின் தந்திரமான சாமார்த்தியத்திற்கு கிடைத்த வெற்றி. ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிற இன்னொரு மாபெரும் துயரம். (உணர்ச்சிவசப்பட்டு பேசியவர்களின் பேச்சும், ஒரு வகையில் ஜெயலலிதாவின் சதிக்கு சாதகமாக அமைந்து விட்டது)
ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு, தமிழக அரசு எடுத்த ‘சீமான்-அமீர் கைது நடவடிக்கை’, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, இதுகாறும் தமிழக அரசு செய்த முயற்சிகளுக்கு பெரிய முட்டுக்கட்டையாக மாறியிருக்கிறது. ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதுகூட பிரச்சினைக்குரியதோ’ என்கிற அச்சம் பொது மக்களிடம் உருவாகியிருக்கிறது.
‘கருணாநிதியே ஆட்சியை ராஜினமா செய்’ என்ற ஜெயலலிதாவின் ஆசையை நிராகரித்த முதல்வர், ‘சீமான்-அமீரை கைது செய்’ என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையையும் நிராகரித்து இருக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சூழலை குலைத்த, குலைக்கிற ஜெயலலிதாவிற்கு துணைபோகாமல், உடனடியாக ‘சீமான், அமீரை’ தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
சமீபமாக ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எந்த அறிக்கையும் தராமல், ‘விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்’ என்று குழுப்பத்தை ஏற்படுத்தும் அறிக்கையை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
நடிகர் வடிவேலு ஒரு படத்தில், ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன்’ என்று வசனம் பேசுவார். அதுபோல் யார் ஆட்சிக்கு வந்தாலும், வைகோவை கைது செய்வது பரிதாபத்திற்குரியது. கைது செய்யப்பட்ட வைகோ, கண்ணப்பனையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
***
தமிழக அரசின் முயற்சியால், சிங்கள ராணுவத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க ஒத்துக் கொண்டிருக்கிறது, இலங்கை அரசு. நேற்றுவரை ‘அப்பாவி தமிழர்கள் தாக்கப்படவில்லை’ என்று ஆணித்தரமாக பொய் சொல்லிக் கொண்டிருந்த ராஜபக்சே, இப்போது இந்த நடவடிக்கையால் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.
சிங்கள ராணுவத்தின் வன்முறையை, மனித உரிமை மீறலை இதையே ஒரு ஆதாரமாகக் கொண்டு, ‘போரை நிறுத்த வேண்டும்’ என்று இலங்கை அரசுக்கு இந்தியா கடுமையன நெருக்குதலை தரவேண்டும். இல்லையேல், இலங்கை ராணுவம் தமிழர்களின் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திக் கொண்டே இருக்கும், நாம் இங்கிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பிக் கொண்டே இருப்போம், என்பது அவலத்திற்குரியது.
‘ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள்’ என்கிற இந்த முயற்சி, குண்டடிப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு கொஞ்சம் மூச்சு விட உதவும். ஆனால், தமிழர்களை சிங்கள ராணுவத்தின் குண்டுகளிலிருந்து இது காப்பாற்றாது.
40 பேரின் எம்பி பதிவியை வேண்டுமானால் காக்ககுமே தவிர, இது நிலையான, நிம்மதியான வாழ்க்கையை ஈழமக்களுக்கு வழங்காது. அதற்கு ஒரே தீர்வு போர் நிறுத்தம் மட்டும்தான்.
-வே. மதிமாறன்
Respected mathimaran
city people already thay know very well about this problem.
manitha sangli, vaiko speech, bharathiraja speech.again and again if you r concentrating like this no body will lisson.
concentrae village side.
from 10 group.each group one person should take care.
for example one group bharahiraja should take all responsibility.
another group R.K. selvamni should take all responsibility.
another one group vairamuthu should take all responsibility.
another group seeman should take all responsibility.
like that form 10 groups collect 10 over head projector.
collect all the video relaed to tamil ellam not LTTE.(important so ppolish thay won’t arrest)
may be use you tupe for this
and show his video to village people .
after that ask them why we put vote for congrass?
take one month for collecting LCDprojector.
takeone month for training what should not speek when we metting the
people
then visit all the village in tamil nadu by bike or cycle.
so that all tamil people thay know what is going on.
if needed i will cover some area in tamil nadu .
thanking you.
by
G.Meenakshi sundaram
//நடிகர் வடிவேலு ஒரு படத்தில், ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன்’ என்று வசனம் பேசுவார். அதுபோல் யார் ஆட்சிக்கு வந்தாலும், வைகோவை கைது செய்வது பரிதாபத்திற்குரியது. கைது செய்யப்பட்ட வைகோ, கண்ணப்பனையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.//
வைகோ வெளியில வந்து என்ன சார் பண்ன போறார். உள்ள இருக்குறது தான் நமக்கும் நல்லது அவருக்கும் நல்லது 🙂 [இல்லன்னா பேசியே கொல்லுவார்]
40 பேரின் எம்பி பதிவியை வேண்டுமானால் காக்ககுமே தவிர, இது நிலையான, நிம்மதியான வாழ்க்கையை ஈழமக்களுக்கு வழங்காது. அதற்கு ஒரே தீர்வு போர் நிறுத்தம் மட்டும்தான்.///
Ithu Tamil Nadu C.M Kku Theriyavandiya news………
G.Meenakshi sundaram
//
Vanakkam Meenakshi Sundaram
Good idea, already we are try this putting videos to all vilages…
Prof. Suba vee Iya avargal Ellamthil nadapathu enna nu oru video vai anaithu vilages kannbikka muyachi irukku…
அன்பு தோழர். மதிமாறன்,
ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழக அரசியலை மிக துல்லியமாக எழுதியிருக்கிறீர்கள். ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் ‘உணர்ச்சிவசப்பட்டு’ உதிர்க்கும் வார்த்தைகள் ஜெயலலிதா, காங்கிரஸ், சுப்பிரமணியசாமி போன்றவர்களது சுயநல அரசியலுக்கு பயன்படும் ஆயுதமாக மாறுகின்றன.
ஈழப்போராட்ட ஆதரவாளர்கள் ‘வாய்ப்பந்தல்’ வார்த்தைகளை விட்டு ஈழத்தமிழர்களது போராட்டத்தின் நியாயங்களை, உரிமைக்கான போராட்டத்தை, அவலங்களை, துயரங்களை வெளிப்படுத்தி மக்களை திரட்டலாம். காட்சிகள் வழியாக மக்களுக்கு உண்மை செய்தியை கொண்டு சேர்க்கலாம்.
புதுடில்லி தமிழக தமிழர்களை புறக்கணிப்பதையும் ஈழப்போராட்டத்தையும் இணைக்கும் புள்ளிகளை தற்போது தவிர்ப்பது அவசியம். மக்கள் எழுச்சி பலம் பெற்ற பிறகு இந்த கண்ணிகள் தானாகவே அவிழும். ஈழத்தமிழர் போராட்ட ஆதரவாளர்களான வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர் உள்ளேயிருப்பதால் போராட்டத்திற்கு பலம் குறையுமே தவிர, பலத்தை சேர்க்க உதவாது.
தமிழக அரசியலில் ஈழத்தமிழர்/தமிழ் எதிர்ப்பு சக்திகளை புறக்கணிக்க தக்க மாற்றங்கள் எழுந்து ஒன்றுபட்டால் மட்டுமே இந்திய அரசும் பணியும் நிலை ஏற்படும். இவையெல்லாம் சுயநல அரசியலில் நடக்க சாத்தியமா?
கலைஞர் அவர்களின் பிச்சை எடுக்கும் போராட்டம் !!!
ஜயா கலைஞர் அவர்களே !!!
இரண்டு வாரங்களுக்கு முன்பு உங்களை நினைத்து
பெருமை பட்டேன்!!!
தமிழர்களுக்காக போராட(இன்னொரு) தமிழன் இருக்கிறார் என்று
பெருமை பட்டேன்!!!
ஈழ தமிழர்களுக்காக தமிழக எம்.பி-க்கள் அனைவரும் ராஜினாமா செய்வோம் என்று அறிவித்தீர்கள் பெருமை பட்டேன்!!!
தமிழினம் படும் துயர்கண்டு தாய்த் தமிழகம் கண்ணீர் வடிக்கிறது என்பதை எடுத்துக் காட்டத்தான் மனிதச் சங்கிலி என்று அறிவித்தீர்கள் பெருமை பட்டேன்!!!
ஆனால் இப்பொழுது நீங்கள் அறிவித்திருக்கும் ஈழ தமிழர்களுக்காக பிச்சை எடுக்கும் போராட்டத்தை நினைத்து
வெட்கபடுகின்றேன்!!! வேதனை படுகின்றேன்!!!
ஈழத்தை உருவாக்குவோம் என்று கர்ஜித்த சீமான் மற்றும் அமீர் ஆகியோரை கைது செய்யும் பொழுதே சற்று சந்தேகம் அடைந்தேன். காரணம் இல்லாமல் கலைஞர் காய் நகர்த்தமாட்டார் என்று நினைத்தேன். ஆனால் காங்கிரஸ் நகர்த்திய காய்க்கு நீங்கள் விழுந்து விட்டீர்கள் என்று நினைக்கும் பொழுது
வெட்கபடுகின்றேன்!!! வேதனை படுகின்றேன்!!!
உங்களுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் எம்.பி-க்கள் தேவை இல்லை ஆனால் இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கும் எம்.எல்.ஏ க்கள் தேவை என்று உணர்த்தி விட்டீர்கள்
வெட்கபடுகின்றேன்!!! வேதனை படுகின்றேன்!!!
நீங்கள் ஈழ போராட்டத்தில் காட்டும் தீவிரத்தை குறைத்து கொள்ள வேண்டும் இல்லையேல் தமிழக காங்கிரெஸ் எம்.எல்.ஏ க்கள் ராஜினாமா செய்ய வைப்போம் என்று வந்த ஒரு சிறு துண்டு சீட்டினால், எங்களை எங்களுக்காக பிச்சை எடுக்க வெய்த்து விட்டீர்களே. வெட்கபடுகின்றேன்!!! வேதனை படுகின்றேன்!!!
ஜயா கலைஞர் அவர்களே !!! உங்களுக்கு இன்னும் இரண்டரை வருட ஆட்சி முக்கியமா அல்லது தமிழர்களின் இருபத்தைந்து வருட போராட்டம் முக்கியமா என்பதனை சற்று நினைத்து பாருங்கள்.
உங்கள் ஒட்டு எங்கள் கையில், எங்கள் உயிர் உங்கள் கையில்
இன்னமும் உங்கள் மேல் ஒரு சிறிய நம்பிக்கை வைத்துருக்கும் ஒரு சராசரி தமிழன்
– உமா சங்கர்-
மீனாட்சி சுந்தரந்தின் கருத்து வரவேற்கத்தக்கது. நன்றி
இதுபோன்ற ஒரு கருத்தையே இயக்குனர் சேரன் முன்வைத்தார்.
இலங்கை வாழ் தமிழ் மக்களது பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வா . அதற்கு பின்னர் வா. ஓட்டு போடுறோம் என தமிழ்நாட்டின் அனைவரும் இல்லாவிட்டாலும் அதிகமானவர்கள் குரல் எழுப்பினாலே போதும். அனைத்து கட்சிகளும் முண்டியடித்துக் கொண்டு ஒருமித்து குரல் கொடுக்க முன்வருவார்கள்.
பதவிக்காக ஏங்குவோர் யோசிக்கவே செய்வார்கள்.
ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழருக்கு குரல் கொடுத்தார். அதற்கு ஒருபடி மேலே போய் கலைஞர் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டினார்.
ஜெயலலிதா குரல் தாழ்ந்தது. கலைஞர் முகம் மீண்டும் பிரகாசித்தது.
ஜெயலலிதா உடனே அடித்தார் பல்ட்டி.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு என தொடர் அறிக்கைகள்.
திரைப்படத்துறையினர் கூடிய ஆக்ரோசமாக பேசினார்கள்.
பலரது பேச்சு ஆவேசமானது. சிலரது பேச்சு ஆரோக்கியமானது.
தா.பாண்டியன் சொல்வது போல கைதானவர்கள் அப்படி பேசியிருக்க வேண்டாம்.
வைகோவுக்கு நல்ல பேச்சு திறன் உண்டு. தமிழீழ ஆதரவாளர்தான்.
வரவேற்கிறோம். ஆனால் அவர் அரசியல் சாணக்கியம் சற்றும் அற்றவர். அவரது பேச்சுக்கள் தமிழர் பிரச்சனைக்கு வேட்டுக்களை வைப்பதை உணரவேண்டும்.
ஈழத்தமிழருக்கு உதவுங்கள் என்பதுதான் போராட்டமாக இருக்க வேண்டுமே தவிர, தமிழ்நாட்டை பிரிக்க இப்போராட்டம் வழிவகுக்கும் என்பதான கருத்தை டில்லி மத்திய அரசு யோசிப்பதாக அமையக்கூடாது? அதையே அவர் தொடர்ந்து செய்து வருகிறார். இதை எதிர்காலத்திலாவது மாற்றிக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
இப்படியான பேச்சுக்கள் எதிரியின் கையில் ஆயுதத்தைக் கொடுத்துவிட்டு நிராயுதபாணியாக நிற்பது போன்றது.
வெளியே போராடும் தகுதி கொண்ட குரல்களை சிறைகளுக்குள் அடைத்து பெருமூச்சுவிட வைப்பது ஒன்றும் தியாகமாகாது. அது மடத்தனம்.
அரசியல் 3 மணிநேர சினிமாவல்ல. மக்களுக்கு பிரச்சனைகளை புரியவைப்பது. அது சார்ந்து செயல்படுவது.
பிரச்சனைகளை புரிந்து கொண்ட தலைவர்கள் தமிழகத்தில் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்களுக்கு கவர்ச்சியில்லை. அத்தோடு அரசியல் பலமும் இல்லை. இது பரிதாபம்.
ஜெயலலிதாவின் பேச்சுக்கு அவரைச் சார்ந்த வைகோ கைதானது ஜெயலலிதாவுக்கே அல்வா கொடுத்த மாதிரி. கலைஞர் அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு வராதவர். ஈழத்தமிழர் குறித்து பேசி பெயர் வாங்குபவர். ஜெயலலிதாவின் ஆதரவாளர்…….
ஜெயலலிதா போட்ட அடுத்த கத்தலுக்கு பலியானவர்கள்.
சீமான் மற்றும் அமீர்.
இப்போ தன்னைக் கைதுசெய்யப் போவதாக ஜெயலலிதாவின் புலம்பல்.
ஈழத்துக்கு ஆதரவானவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
ஈழத்துக்கு எதிரானவர்களும் கைது செய்யப்பட இருக்கிறார்கள் என்றால் , இவை ஈழப்பிரச்சனை தொடர்பான கைதுகளல்ல…..????
இதற்கு வேறு காரணங்கள் இருக்கவேணும்.
மருத்துவர் ராமதாசோ, தொல். திருமாவோ , வீரமணியோ கைதுசெய்யப்படாமைக்கு காரணம் அவர்களது இன மற்றும் கட்சி பின்னணி மற்றும் பலம்.
என்னதான் இருந்தாலும் இவர்களது ஆவேசப் பேச்சும் : இவர்களது கைதும் எழுந்த அலையை அடக்கிவிட்டது வேதனையான உண்மை.
நாமும் கைது செய்யப்படுவோமோ எனும் அச்சத்துக்கு தள்ளிவிட்டதில் சிறீலங்கா அரசு மகிழ்வடைந்தே இருக்கிறது.
கலைஞரை, இந்தியா அனுப்பிய விண்கலத்தில் ஏற்றி அனுப்பியிருக்க வேண்டும் என சில சிங்கள அரசியல் வல்லுனர்கள் பாராளுமன்றத்திலேயே நையாண்டி செய்தார்கள். அது பலருக்கு தெரியுமோ தெரியாது.
எனவே தொடர்ந்தும் இலங்கை தமிழர் படும் அவலம் தீர தமிழகத்தின் குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். அது அரசியல் சாணக்கியத்தோடே அணுகப்படவேண்டும்.
தமிழகத்து உறவுகளின் குரல்கள் அரசியல் ரீதியாக மட்டுமே ஒலிக்கவேண்டும். அது மட்டுமே இந்தியா இலங்கை அரசுக்கான அழுத்தங்களைக் கொடுக்க உதவும்.
அல்லது
அது அதன் திசையை மாற்றிவிடும்.
நன்றி
http://www.ajeevan.com
குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு ஈழத் தமிழர் பிரச்சினை எப்படி புரியும்?: குமுதம் கேள்வி
[செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 01:14 பி.ப ஈழம்] [க.நித்தியா]
போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஈழத் தமிழர் பிரச்சினை எப்படிப் புரியும்? என்று குமுதம் வார இதழ் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் அந்த ஏட்டின் கேள்வி – பதில் பகுதியில் ஒரு வாசகர் எழுப்பியுள்ள கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்:
“இலங்கையில் நடப்பது அதன் உள்நாட்டுப் பிரச்சினை. அதில் இந்தியா தலையிட முடியாது. கருணாநிதி முதலில் இதைப் புரிந்து கொள்ளட்டும்” என்று சொல்லியிருக்கிறாரே ஜெயலலிதா?
சொல்லவில்லை, பிதற்றியிருக்கிறார். வங்காள தேசத்தில் ஒரு பிரச்சினை என்ற போது இந்தியா தலையிடவில்லையா? காஷ்மீர் தனி இராஜ்ஜியமாக இருந்த போது இந்திய இராணுவம் அங்கே நுழையவில்லையா? அவ்வளவு ஏன், இதே இலங்கைக்கு அமைதிப்படை செல்லவில்லையா? ஊருக்கு ஒரு நீதி என்றால் ஜெயலலிதாவுக்கு மட்டும் தனி நீதி. கொழும்பிலும் வட கிழக்கு இலங்கையிலும் இன்றைக்குத் தமிழர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஒவ்வொரு நொடியும் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பயங்கரம் போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு எப்படிப் புரியும். தமிழ்ப்புத்தகம் வைத்திருப்பதும், தமிழ் பேசுவதும் படிப்பதுமே குற்றம் என்கிற நிலை அங்கே நிலவுகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தமிழனும் இன்று ஈழத்தமிழனின் நிலையைக் கண்டு கொதித்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு கருணையும் ஆதரவும் காட்டாதவர்கள் தமிழர்களாக மட்டுமில்லை, மனிதர்களாக இருக்கவே அருகதையற்றவர்கள் என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயாவின் பிதற்றல்களுக்கு அளவே இல்லை.. அய்யோ.. அய்யோ..
தமிழனுக்கும் சுரணையே கிடையாதா..?? சினிமாக்கரன் சொன்னாதான் செய்தியா.. ?? எல்லாமே அரசியல தானா..?? தமிழனை செருப்பால அடிச்சாலும் புத்தி வராது..
மரியாதைக்குரிய தோழர் மதிமாறனுக்கு…
ஜெயலலிதா என்ன சூழ்ச்சி செய்தார்? ‘தி இந்து’ மாலினி மாமியின் மறைமுகமாக எதைச் சொன்னாரோ, அதைத்தானே நேரடியாக, வெளிப்படையாக போயஸ் தோட்டத்து மாமி சொன்னார்… இதில் சூழ்ச்சி எங்கே இருக்கிறது? சூழ்ச்சி நடந்து விட்டதைப் போலவோ, கையறு நிலையில் தவிப்பதாகவோ கலைஞர் எங்குமே சொல்லாத நிலையில் நாமாக ஏன் அவ்வாறு கற்பனை செய்து கொள்ள வேண்டும்?
இலங்கை அரசுக்கு புரவலனாக விளங்கும் இந்திய அரசை நேரடியாக எதிர்த்து அம்பலப்படுத்திப் போராடாமல், தடியும் நோகாமல், பாம்பும் சாகாமல் நடக்கிற போராட்டம்தான் உண்மையான சூழ்ச்சி. இந்த சூழ்ச்சியின் சூத்திரதாரிகள் கலைஞர், வைகோ, திருமா முதலான தமிழினப் பிழைப்புவாதிகள். தாமாக விரித்த வலையில் தாமே விழுந்து நடிக்கிறார்கள். இந்திய அரசை நடுநிலையாளனாக சித்தரிப்பதில் இந்த சூழ்ச்சிக்காரர்கள் முழுவெற்றி பெற்று விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்
பாலஸ்தீன ‘அமைதிக்கு’ அமெரிக்காவிடம் வேண்டுகோள் வைக்கிற நல்ல உள்ளங்கள் எத்தனை அயோக்கியர்களோ, அத்தகைய கடைந்தெடுத்த அயோக்கியர்கள்தான் நமது மாபெரும் தலைவர்கள்.
– புதிய கலாச்சாரம்
அத்தகைய போராட்டங்கள்தான் எதிரிகளை முறியடிக்கவும், துரோகிகளின் சூழ்ச்சிகளை தவிடுபொடியாக்கவும் வழிவகுக்கும்.
இந்துப் பத்திரிகை ஆசிரியர் ராமிற்கு மீண்டும் ஒரு விருது இலங்கையில் வழங்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே பத்திரிகையாளருக்கு பயங்கரமான நாடுகளில் ஒன்றான இலங்கையில் இது நடந்தேறியுள்ளது. இலங்கை அரசு சார்பான Mass Media Society (a government-supported NGO) இந்தக் கேவலத்தை அரங்கேற்றியுள்ளது. ஆசியாவின் மிகச்சிறந்த பத்திரிகையாளராக ராமிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ராமிற்க்கு சிங்கள ரத்னா விருது இலங்கையில் வழங்கப் பட்டது.
தமிழனுக்கு எதிரியென்றால் எருதுக்கும் இங்கு விருது கிடைக்கும்!
1. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குதல். 2. தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்பதை ஏற்றுக் கொள்ளல். 3. தமிழர்களை ஆயுதரீதியில் பலமடைய செய்தல். இந்த மூன்றும் தான் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு. இதற்கு உரிய நடவடிக்கைகள்தான் தேவை.
சீமான் மற்றும் அமீர் பிணையில் விடுதலை
Wednesday, 29 October 2008
ஈழபோராட்டம் குறித்து ஆவேசமாக பேசியதாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
http://www.ajeevan.ch/content/view/6953/1/
கொடுங்கோலன் ராஜ்தாக்ரேவுக்கே பிணை கொடுக்கும் போது அநியாயமாக சிறைப்பட்ட சீமானுக்கும் அமீருக்கும் கொடுத்தது ஒன்றும் தவறில்லை…
போர் நிறுத்தம் என்பதும் தற்காலிக தீர்வு தான்.தனி ஈழமே ஒரே தீர்வு
Dear Comrade, Before you comment on the polotics of the Srilankan tamil people you have to do a thorough study of the past history of our people and particullary the Jaffna based tamil rulling class and their present representation. If you wish to understand more and go very deep into this matter please ask for an article from Hundred pookal organization . In which he will give you the 65 years of the history of the srilankan communist movement and ethnic coflict of Tami people. You know there have been existing a class contradiction in any other society . If you are interested in this matter , please contact this E mail , 100pookkal@gmail.com and I hope he will send the particular article to you.
If you are interested in Marxism and Leninism please go to the following sites. http://www.northstarcompass.org( from Canada) , http://www.revolutionarydemocracy.org (from India)
com.Thavapalan from Canada
thamizhanukku endru oru amaipo, thalamaiyo uruvagata varai ithu thodarum. thamizhagam amathi poongavaga thigazhum varai thamizhanukku ethir galam kidaiyathu, adimmai vazhvuthan. azhtha varuthangal thamizhanukku.