ஈழத்தமிழர்களும் சினிமாவின் அட்டைக்கத்தி வீரர்களும்

-வே. மதிமாறன்

டந்த பல ஆண்டுகளாக நடைபெறும் இலங்கை யுத்தத்தின் காரணமாக, இலங்கை வாழ் ஈழ மக்கள் மிக பெருவாரியாக ஈழத்திலிருந்து வெளியேறி, உலக நாடுகள் முழுக்க பரவினார்கள். அப்படி புலம் பெயர்ந்து மிகுந்த சிரமப்பட்டு ஒரு மரியாதைக்குரிய வாழக்கை நிலையை அமைத்துக் கொண்ட  ஈழத்தமிழர்கள், தமிழகத்திலிருந்து இரண்டு மிக மோசமான விஷயங்களை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தார்கள்.

ஒன்று தமிழ் சினிமா.

இரண்டு ஜோதிடம்.

உலகத்தின பல நாடுகளின் தியைரங்குகளில் தமிழ்சினிமா திரையிடப்பட்டதே, ஈழத் தமிழர்கள் உலகம் முழுக்க குடியேறிதற்குப் பிறகே. தமிழ் சினிமாவின் வர்த்தகத்தில் ‘பாடல் ஒலித்தகடு, திரையரங்கில் திரைப்படம் திரையீடு, திரைப்பட சிடி விற்பனை’ என்று பல கோடிகள், ஏறக்குறை 25 சதவீதம் ஈழத்தமிழர்களின் பாக்கெட்டில் இருந்துதான் பிடுங்கப் படுகிறது.

இதுபோக இந்தத் தமிழ் சினிமாவின் ஊதாரிகள் பலருக்கு, இன்ப சுற்றுலா, நட்சத்திர இரவு (கலை நிழ்ச்சியாம்) என்று நிகழ்ச்சி நடத்தி அதில் வேறு பணம். அநேகமாக ஈழத்தில் சிங்கள ராணுவத்தை எதிர்த்து போராடுகிற போராளிகளுக்கு இவர்கள் செய்த உதவிகளைவிட தமிழ் சினிமா ஊதாரிகளுக்கு இவர்கள் செய்த உதவிகள் நிச்சயம் அதிகம் இருக்கும்.

பெண்களை, தாழ்த்தப்பட்ட மக்களை மிக கேலமாக சித்தரிக்கும் – ஜோதிடம் என்கிற ஒரு மனிதகுல வீரோத மூடநம்பிக்கையின் மீது, தமிழக தமிழர்களைவிட ஆழ்ந்தப் பற்றுக் கொண்ட ஈழத் தமிழர்கள் பலர், தமிழ்நாட்டில் இருந்து பல ஜோதிடர்களை வெளிநாட்டிற்கு வரவைத்து அவர்களுக்கு ராஜ உபச்சாரம் செய்து, ஏரளாமான பணம் கொடுத்திருக்கிறார்கள். கொடுக்கிறார்கள். தமிழர்களின் பேராதரவின் காரணமாக பல ஜோதிடர்கள், ‘காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் காபேர’ என்று உலல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘ஈழம் எப்போது அமையும்?’ என்று போராளிகளை நம்புவதை விட, ஜோதிடர்களை நம்புகிறவர்களும் இருக்கிறார்கள்.

ஈழத்தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதை, ஈழத்தமிழர்களால் பெரும் லாபம் அடையும் மேற் சொன்ன இருவரும், வாய் திறந்து கருத்து சொல்லக் கூட மறுக்கிறார்கள். ஜோதிடர்கள் மோசடிப் பேர்வழிகள் என்பது நேரடியாக தெரிந்ததே. அவர்களுக்கு ‘நேரம் சரியில்லை’ என்று கூட புரிந்த கொள்ளலாம். ஆனால் சினிமாவையும் தாண்டி பல்வேறு சமூக பிரச்சினைகளில் அக்கறை உள்ளவர்களாக காட்டிக் கொள்கிற சினிமாக்காரர்களை அப்படி ஒரே வார்த்தையால் வரையறுக்க முடியாது.

***

சினிமாக்காரர்களில் இயக்குநர் சீமான் முயற்சியால், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கலந்து கொண்டவர்களைத் தவிர, வேறு யாரும் தன்னிச்சையாய் அறிக்கைக் கூட தரவில்லை. (இயக்குநர் மணிரத்தினம் இதிலும் கலந்து கொள்ளவில்லை.) நடிகர்கள் அதிலும் குறிப்பாக நாடாள ஆசைப்படும் நடிகர்கள் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முத்திய அல்லது மூத்த நடிகர்கள் யாரும் சுயமாக வாய் திறக்கவில்லை.

சாதாரண விஷயத்திற்குக்கூட ஊர் நியாயம் பேசுகிற இவர்கள், தமிழர்கள் தாக்கப்படுவதை ஒரு மனிதாபிமான அடிப்படையில் கூட கண்டிக்கவில்லை. ஒக்கேனேக்கல் விவகாரத்தில் சத்யராஜ் பேச்சை, ஏளனம் செய்து, நாகரீகமற்ற பேச்சாக கண்டித்து, ‘வன்முறை தீர்வாகாது. அவர்களை போல் நாம் நடந்து கொள்ளக்கூடாது.’ என்று ஜென்டில்மேன் போல் வசனம் பேசினார் கமல்ஹாசன். அதற்கு முன்பு  தன்னுடைய ‘ஹேராம்’ திரைப்படம் வெளியானபோது, திருட்டு விசிடியை எதிர்த்து சென்னை பாரிமுனையில் ரோட்டில் இறங்கி ‘துணிச்சலாக’ சண்டை போட்டவர்தான் இவர். இந்த மிஸ்டர் கிளினும் நாகரிகமான முறையில் கூட தனது கண்டனத்தை ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தெரிவிக்கவில்லை.

கர்நாடகத்தை ஒரு பெரிய ‘மார்க்கெட்டாக’ நினைத்து நடுக்குகிற இந்த நடிகர்கள், அதைவிட மிகப் பெரிய அளவில் தமிழர்களிடம் வர்த்தகம் நடத்திக் கொண்டே, தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு கண்டனத்தை கொடுக்கக் கூட தயங்குகிறார்கள் இந்த அட்டைக் கத்தி வீரர்கள். இந்த டூப் நாயகர்கள், கும்பல் கூடி நவம்பர் 1 அன்று ஊமைபோல் இவர்கள் இருக்கபோகும் அடையாள உண்ணாவிரதம், இவர்களின் நடிப்புத் திறமைக்கு சிறந்த சான்றாகத்தான் இருக்கும்.

ஈழத் தமிழர்களின் பிரச்சினையிலும் நடிகர்களாக நடந்து கொள்ளும் இவர்களின் படங்களை வாங்கி இனி திரையிடுவதில்லை, இவர்களை அழைத்து இனி ‘கலை’ நிகழ்சிகள் நடத்துவதில்லை என்று உலகெங்கும் வாழம் தமிழர்கள் முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக மலேசியாவில் உள்ள தமிழர்களும் இந்த எதிர்ப்பில் இணைந்து கொள்ள வேண்டும்.

இன்ப சுற்றுலாவிற்கும், படப்பிடிப்பிற்கும் வரும் இவர்களை அங்கிருந்த விரட்ட வேண்டும். இது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள், தன் தாயக ஈழத்தமிழர்களுக்கு செய்யும் பேருதவியாகத்தான் கருத்தப்படும். இந்தப் பேருதவியை செய்வார்களா ? அல்லது ரஜினியின் எந்திரனுக்காக காத்திருப்பார்களா? அல்லது ஜோதிடர்களை கேட்டு முடிவெடுப்பார்களா? பார்ப்போம்.

20 thoughts on “ஈழத்தமிழர்களும் சினிமாவின் அட்டைக்கத்தி வீரர்களும்

 1. அருமை
  அட்டைகத்தி வீரர்களுக்கு உங்களது பேனா கத்தியின் குத்து !!!

 2. சில உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். நன்றி.

  தமிழக சினிமாவை புலம் பெயர் நாடுகளில் விநியோகிப்பவர்களும் , தற்போதைய தயாரிப்பாளர்களில் சிலரும் புலம் பெயர்ந்து வந்த ஈழத் தமிழர்களாகவே இருக்கிறார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை.

  இந்தியர்களில் 99 விழுக்காட்டினர் இந்தி சினிமாவை மட்டுமே உலகத்திற்கு கொண்டு சென்றார்கள்.

  ஆனால் 1983ல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவத்துக்குப் பின்னர் ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோர் வேலை வாய்ப்புக்காகவோ அல்லது கல்விக்காவோ சென்றவர்கள் தொகை மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும்.

  அதற்கு முன்னர் பலர் கல்வி பெறுவதற்காக ஆங்கில மொழி பேசும் நாடுகளுக்கு சென்று கல்விகற்று தாயகம் திரும்பினார்கள். ஒருசிலர் மட்டும் போன இடங்களிலேயே தங்கினார்கள்.

  வேலை வாய்ப்பு தேடிச் சென்றவர்கள் மத்திய கிழக்கு மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கே சென்றார்கள்.

  1983க்கு பின் இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் ஆங்கில மொழி பேசும் அல்லது ஆங்கில மொழி பேசாத நாடுகள் அனைத்திலும் கூட அகதிகளாக தஞசம் கோரினார்கள்.

  ஆங்கிலம் தெரிந்தவர்களை விட தமிழை விட வேறு ஒரு மொழியும் தெரியாத பெரும்பாலானோருக்கு தமது பொழுதுபோக்கிற்காக பார்க்க கிடைத்தது திருட்டுக் வீடியோ படங்களே. அவற்றிற்கு அப்போது பெரும் மவுசும் ஏற்பட்டது.

  அதுவே தமிழ் திரைப்படங்களை கொண்டு வந்து திரையிடும் அளவுக்கு சிலரை முயற்சிக்கவைத்தது.

  அதன் தொடர்ச்சியாக புலம் பெயர் நாடுகளில் தமிழ் நாளிதழ்கள் – சஞ்சிகைகள் – வானோலிகள் – தொலைக்காட்சிகள் போன்றவை புலம்பெயர் நாடுகளில் வரத்தொடங்கின.

  கோயில்கள் கூட அதன் ஒரு அங்கமே.

  உலக நாடுகளில் ஆங்கிலேயரோ அல்லது வேறு மொழி பேசும் மக்களோ தமிழ் திரைப்படங்களை பார்ப்பதில்லை. அப்படி மொழி மாற்றத்துள்ளாகி பார்க்கப்படும் திரைப்படங்கள் இந்திப்படங்களாகவே இருக்கின்றன.

  இந்தியா ஒரு ஏழை நாடு எனும் பரப்புரைகள் உள்ளவர் மனதில் , யதார்த்தமே அற்ற திரைப்படங்களை கனவுலக படங்களாக மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள். நமது கிராமத்து பாமரன் போன்றே புலம்பெயர்ந்து வாழும் தமிழனும் இருக்கிறான் என்பது வேதனையான உண்மை.

  அவனுக்கு அதைத் தவிர வேறு பொழுது போக்கு இல்லை. பெரும் பாலானோர் கலாச்சாரம் எனும் கட்டுப்பாட்டுக்குள் வெளிநாட்டு கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதே இல்லை.

  20 – 25 வருடத்துக்கு முன்னர் நாட்டை விட்டுச் சென்றவன் இன்னும் அவனது நாடு அன்று வெளியேறி நாள் போன்றே இருக்கும் என நினைக்கிறான். அவனால் இதுவரை தனது ஊருக்கு நிம்மதியாக போய் தங்கி வர முடிவதில்லை. போன வேகத்திலேயே ஓடிவருகிறான்.

  ஒருசிலரால் மட்டுமே அது முடிகிறது.

  யுத்தம் மற்றும் மரண பயம் அச்சுறுத்தலாகவே இருக்கிறது.

  அவன் தனது தாயகத்தை பார்ப்பது தொலைக்காட்சி மூக்கு சிந்தும் தொலைக் காட்சி தொடர் வழியாகவோ இந்த யதார்த்தமே இல்லாத சினிமா வழியோதான்.

  அவர்களது பிரச்சனை நம்ம பிரச்சனையில்லை எனும் இந்திய தமிழ் கலைஞர்கள் நிச்சயம் புலம்பெயர் நாடுகளில் ஒதுக்கப்படுவார்கள். அதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

  அதற்கு இரு நடிகர்கள் இப்போதே ஆட்பட்டுவிட்டார்கள். அவை ஏனையவர்கள் சார்பில் தொடர்வதும் தொடராமல் இருப்பதும் அவரவர் நடைமுறையைப் பொறுத்தது.

  ஜோதிடர்களை பற்றி பெரிதாக அலட்ட வேண்டியதில்லை. திருமணத்துக்கு நாள் பார்க்கவும் சில காரியங்களுக்கும் அவர்களை விட்டால் நமஇமாலா செய்ய முடியும்.

  ஜோதிடர்களால் போராட்டத்தின் முடிவை சொல்ல முடியுமானால், இந்தியாவின் மனமாற்றத்தையும், அமெரிக்காவின் அரசியல் மாற்றத்தையும் எதிர்பார்த்து புலிகள் பின் வாங்கி தாக்குதல்களை தாமதப்படுத்த மாட்டார்கள்.

  கிரகத்தை கணித்தே தாக்குதலில் ஈடுபடுவார்கள்?
  எனவே ஜோதிடர்களை நம்பவேண்டியதில்லை.

  ஆனால் கலைஞர்களது எழுச்சியும் தமிழக அரசியல் மற்றும் மக்களது எழுச்சியும் சிறீலங்கா அரசை மட்டுமல்ல டில்லியையும் சற்று ஆட்டியே உள்ளது.

  இதனடிப்படையிலேயே ” இந்து மதத்தை ஒர் தனித்துவமான மதமாக கருத முடியாது எனவும், பௌத்தம் மற்றும் வைதீக மதத்தின் கலவையே இந்து மதம் எனவும் ,ஏனைய மதங்களைப் போன்று இந்து மதத்திற்கு நீண்ட வரலாறு இல்லை எனவும் இந்து மதத்தை ஓர் கஞ்சியாகவே கருத வேண்டும்” எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார் எனும் செய்தி சிறீலங்காவில் இந்து மதத்துக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

  இந்துக்கள் இதுகுறித்து என்ன நினைக்கிறார்களோ தெரியாது?

 3. பேனா கத்தி வீரனால் இந்த பதிவில் பார்பனீயம் பேச முடியல போல இருக்கு..

  சரி எடுத்துக் கொடுப்போமே…

  பார்பன கே.பி. தன் ஆர்வத்துடன் ரமேஸ்வரத்திற்கு செல்லும் ரயிலுக்கு கொடி அசைத்து வைத்த காரணத்தால் மணிரத்தினத்தை மட்டும் அடைப்புக் குறிக்குள் பதிய வேண்டியதாகி விட்டதோ?

  சீமானின் மதிப்பைப் பெற்ற பார்பன நண்பன், நடிகர் மாதவனும் கூட்டத்திற்கு வந்ததாக தெரியவில்லையே?

 4. first they look & help local tamil peoples problem then any political or cine industry peoples support srilankan tamil peoples. in tamil nadu many peoples are still poor and many childrens have no baby foods so better serve our nation first then we look other nation problems. we alredy giving good support srilankan tamil peoples. they are many peoples rich in europe , canada, australia, usa, many countries rich peoples why they are not give support for this peoples ? they are support some other groups. so we think our self and why we want to take more problems in our nation.

 5. மிகச் சரியாகச் சொன்னீர்கள்…
  இவர்கள் தமிழர்களுக்கு செய்ததை விட.
  அவர்களிடமிருந்து சேர்த்தது தான் அதிகம்.

 6. அட்டைக் கத்தி வீரர்களை அம்பலப்படுத்தியதற்கு நன்றி.

  மேற்படி அட்டைகள் தமிழனை உறிஞ்சி வாழ மட்டுமே கற்றவை.
  தமிழனைச் சுரண்ட மட்டுமே வாழ்பவை.

  தமிழர் விழித்தெழ வேண்டும்.
  அட்டைக் கத்தி வீரர்களை விரட்டி அடிக்க வேண்டும்.

  உண்ணநோன்பு என்பது கண்ணாமூச்சி.
  உணர்வோடு பெருகட்டும் தமிழர் எழுச்சி.

  தமிழ்ப்பரிதி.மா
  http://www.thamizhagam.net/
  http://www.chiefguide.net/

 7. அதனால் என்ன சொல்வதென்றால் இலவசமாக இணையத்தில் இறக்கி தமிழ்ப் படங்களை பாருங்கோ.

 8. //அவனுக்கு அதைத் தவிர வேறு பொழுது போக்கு இல்லை. பெரும் பாலானோர் கலாச்சாரம் எனும் கட்டுப்பாட்டுக்குள் வெளிநாட்டு கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதே இல்லை.

  20 – 25 வருடத்துக்கு முன்னர் நாட்டை விட்டுச் சென்றவன் இன்னும் அவனது நாடு அன்று வெளியேறி நாள் போன்றே இருக்கும் என நினைக்கிறான். அவனால் இதுவரை தனது ஊருக்கு நிம்மதியாக போய் தங்கி வர முடிவதில்லை. போன வேகத்திலேயே ஓடிவருகிறான்.

  ஒருசிலரால் மட்டுமே அது முடிகிறது.

  யுத்தம் மற்றும் மரண பயம் அச்சுறுத்தலாகவே இருக்கிறது.//
  this is the truth!
  regards
  kamala

 9. //ஈழத் தமிழர்களின் பிரச்சினையிலும் நடிகர்களாக நடந்து கொள்ளும் இவர்களின் படங்களை வாங்கி இனி திரையிடுவதில்லை, இவர்களை அழைத்து இனி ‘கலை’ நிகழ்சிகள் நடத்துவதில்லை என்று உலகெங்கும் வாழம் தமிழர்கள் முடிவெடுக்க வேண்டும்.//

  …………………………………………………………………………………………………………
  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜீன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர்.
  ……………………………………………………………………………………………..
  புலம்பெயர் தமிழர்களே,
  அஜீத், அர்ஜீன் போன்ற‌
  துரோகிகளின் படங்களை புறக்கணியுங்கள்.

 10. தமிழ் சினிமா நடிகர்களின் போலியான இமேஜ் உலகமெங்கும் மட்டுமல்ல.. தமிழ்நாட்டிலேயே கூட புறக்கணிக்கப்பட வேண்டும்.கோடிகளை சம்பாதித்துவிட்டு வேஷம் போடுகிறார்கள்.

 11. புலம்பெயர் தமிழர்கள் கோமாளிகள் என்பது உண்மைதானே…

 12. I am sorry for replying in english as I do’nt know how to type in Tamil here.

  There is no point in accusing the money making moguls of Tamil movie world who are immuned to the untold sufferings and killings of Tamils in srilanka.
  We have to blame some of the immigrant tamils who lick their feet and worship them and take them to different parts of the world to earn money, like the political traitors in srilanka who lick the feet of the Killer and Terrorist Mahinda .
  So they must make a vow not to entaertain these so called tamils any more and not to import tamil movies .Will they do it ?

 13. முண்டம் மதிமாறன்.
  அவர்கள் சினிமாக்காரங்களை அழைக்காமல் வேறு யாரை அழைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?உன்னைப் போன்ற,கொளத்தூர் மணி போன்ற கருப்பு சட்டை வெறி நாய்களையா அழைக்க வேண்டும்?வெங்காய வெறி நாய்களா,ஈழத்தமிழன் உங்களுக்கு அவ்வளவு கேவலமாகவா போய்விட்டான்?

 14. நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பார்த்தால் ஒரு சிக்கலும் இல்லை.
  தமிழர் விழித்தெழ வேண்டும்.
  அட்டைக் கத்தி வீரர்களை விரட்டி அடிக்க வேண்டும்
  நன்றி
  மதிமாறன்
  தமிழ்ப்பரிதி

 15. சினிமா, ஜோதிடம், அரசியல் இவை மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் நச்சுக்கள். தமிழனை அழிக்கவே உருவெடுத்தனவாக தெரிகிறது. ஜோதிடம் ஒழிக்கப்பட வேண்டியது. நல்ல சினிமா, நல்ல அரசியல் வளத்தெடுக்கப் படவேண்டியவை. மிகையான வருமானமில்லாத எந்த ஒரு துறையும் நலமாகவும், வளமாகவும் வளர்ச்சியடையும். பொதுவுடைமை சார்ந்த தமிழ்த்தேசியம் அமையும்போது தமிழினமும், தமிழ்ப்பண்பாடும் ஏற்றம் கொள்ளும். அதுவரை?……

 16. What ever the motive may be, we need support from all the corners. GOSL spends in millians for their properganda and has sone effect on it to cover up their acts. They are recruiting more people so called ‘awareness’ and clearly people doing these have the motive of getting paid. So, whats wrong if we get the benifit in the same way.
  Please don’t undermine them. There are, like you said, people like Seeman, Parathirajah who have their own beleive in the Lankan tamil’s issue and working hard againt the GOSL.
  ‘Yar kuthinalum arisiyanal chari’

Leave a Reply

%d bloggers like this: