‘தமிழர்களுக்கு வாய்க்கரிசி’-இதுதாண்ட இந்தியா

sirlanka-1

· கொலைகாரனுக்கு நல்ல சார்ப்பான கத்தி சப்ளை. கத்திக்குத்து வாங்கி சாகபோறவனுக்கு முன் கூட்டியே ஒப்பாரி. அடடா, என்ன மனிதாபிமானம்.

· புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறான்.’ – இது பழமொழி அல்ல.

· தலைக்கு குண்டு. வாய்க்கு சோறு. ஆக வாய்க்கரிசி.

· உயிரோடு இருக்கும்போது நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களுக்கு, தரமான மருத்துவம் கொடுத்து காப்பாற்ற வக்கற்ற வாரிசுகள், செத்தப் பிறகு ஊர் மெச்சவேண்டும் என்பதற்காக ‘கருமாதியை’ ரொம்ப விசேஷமாக நிறைய செலவு செய்து கொண்டாடுவார்கள். வருஷா வருஷம் ‘தேவசத்தை’ சிறப்பாக செஞ்சி சொந்தக்காரங்ககிட்ட நல்லபெயர் வாங்குவார்கள். அற்ப இந்துசமூக புத்தி.

· ஈழத்தமிழர்களுக்கு ஏராளமான நிதி குவிகிறது.

· குண்டால் அடிச்சி சோறுபோடுறான்.

· ‘இனி நம்ம கிட்ட ஒண்ணுமில்லே. எல்லாம் மேலே இருக்கிறவன்கிட்டதான் இருக்கு.’ -கையாலாகாத டாக்டரின் வசனம்.

· “அவளே போனபிறகு, நான் உயிரோடு இருக்கிறதுல அர்த்தம் இல்ல. என்னைவிடுங்க நானும் போய் சாகிறேன்.”

பொண்டாட்டியை இவனே தூக்குல மாட்டி தொங்க விட்டுவிட்டு, ஊர் மக்கள் மத்தியில் வசனம் பேசுகிறான் கொலைகார கணவன்.

· “தமிழர்களின் நலனுக்காகத்தான் போர்” என்று ராஜபக்சே சொல்கிறார்.

தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்திற்கு ஆயுத உதவி.

நிவாரண உதவி என்ற பெயரில் தமிழர்களுக்கு வாய்க்கரிசி.

இதுதாண்டா இந்தியா.

12 thoughts on “‘தமிழர்களுக்கு வாய்க்கரிசி’-இதுதாண்ட இந்தியா

 1. வாய்க்கரிசியாவது போய்ச் சேருமா?

 2. ஹ்ம்ம்ம்ம்ம்
  அங்க இருப்பது இந்து தான் அதிகம்
  இது இங்கு இருக்கும் இந்து மக்களுக்கு தெரிய போல
  இல்லை தெரிந்து கொண்ட உதவி பண்ண முடிய அவர்களுக்கு விருப்பம் இல்லை?????

 3. நம்பிக்கை இம்முறையும் வீணாகுமா…? ‘வெள்ளித்திரையில் காண்க’மாதிரி இருக்கிறது நிலைமை.

 4. இதுவே…வேறு இனமாகவோ அல்லது மதமாகவோ இருந்திருந்தால்
  முழு அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும் வட இந்தியர்கள் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருப்பார்களா?
  அதிகாரத்திற்க்கு மட்டும் ஆளாய்ப்பறக்கும் தமிழக அரசியல் இளிச்ச வாயர்கள்..தனது கையாலாகாத்தனத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமலிருக்க இம்மாதிரி ஸ்டண்ட் அடித்து மக்களை நம்ம வைக்க படாத பாடு படவேண்டியதிருக்கிறது.

 5. ஈழத் தமிழனுக்காக இந்தியத் தமிழனைத் தவிர, வேறு எந்த இந்தியனும் அழவில்லை என்பது இப்போதாவது புரிகிறதா?

  இந்திய ‘தேசம்’ என்று ஒன்று இல்லை என்பதுதானே இதன் பொருள். இந்தியரெல்லாம் ஒரு தேசத்தினர் என்றால் எல்லோரும் தானே ஈழத்திற்காக போராடி இருக்க வேண்டும்.

  அட, ஒரு மனித நேய அடிப்படையில்கூட, தமிழனைத்தவிர, வேறு எவனும் அலட்டிக்கொள்ளவில்லையே!

  தமிழனுக்கென்று ஒரு தேசம் இந்தியாவில் தேவை என்பதின் அவசியமும், ஞாயமும் இப்போது புரிகிறதா?

 6. தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்திற்கு ஆயுத உதவி.

  நிவாரண உதவி என்ற பெயரில் தமிழர்களுக்கு வாய்க்கரிசி

  உண்மை தான்.

  ஈழத் தமிழனுக்காக இங்கு நடத்தப்படுவது அரசியல் சதுரங்கம்

  மட்டும் தான். தமிழக, இந்திய அரசியலால் தமிழர்களுக்கு எந்த

  பயனும் இல்லை

 7. இப்போது இந்தியன் என்பதில் கேவலப்படுகிறேன். ஏமாளி தமிழன் மன்னிக்கவும் தமிழ்நாட்டுகாரன் என்பது அதைவிட கேவலம். திரு.ரசினி காந்த 30 வருடங்களாக வீழ்த்முடியவில்லை நீ ஆம்பளையா? என சிங்களர்களை பார்த்து கேட்டார். இந்த வாக்கியம் தமிழ்நாட்டினரை பார்த்து கேட்க தோன்றுகிறது. 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு கையாலாகதனத்தை காட்டும் இவர்கள் எல்லாம் ஆம்பளைகளா?

 8. பிரித்தானியாவில் வாழும் சில ஆயிரம் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரித்தானியாஎந்த ஆயுத உதவிகளும் சிங்களவர்களுக்கு செய்வதில்லை. பிரித்தானிய அரசியல்வாதிகள் தமிழர்களைத்தேடி வந்து இலங்கைப் பிரச்சனை பற்றி அறிந்து கொள்கிறார்கள். தமிழர்கள் நடாத்தும் ஒன்று கூடல்களில் ஒவ்வொரு கட்சிப் பிரதிநிதியும் கலந்து கொள்கிறார்கள். டெல்லியில் தமிழ்மாணவர்கள் நடாத்திய நிகழ்வில் எந்த வட இந்திய அரசியல் வாதியாவது கலந்தாரா? இலங்கைத் தமிழரிலும் பார்க்க இந்தியத் தமிழர்களுக்குத் தான் சுதந்திரம் அதிகம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசு என்ற பெயரில் ஒரு மாநகர சபைதான் உங்கு இயங்குகிறது – இப்போதைய முக்கிய தேவை இந்தியா வாழும் தமிழருக்கான சுயநிர்ணய உரிமை.

 9. tamizhnattu adimai thamizhanukku adhikaram illai enpathu ippothavathu vilanginal sari.cuba ,palasthenaththirku kural kodukkum indhiyargal , marxisttukal eezha pirachinaiyil kalla mavunam sadhippathu een? Ivarkalai INDIA DHESIYAM thane thadukkirathu? appuram antha VENKAYAM namakku edhukku?

 10. குள்ளநரிகளின் தேசத்தில்
  கோழிகள்-
  தேசிய உணவு….
  செய்தி: இலங்கையில் தமிழர் கறி விற்பனை

  கோழிகளின் உயிரும்,
  குள்ளநரிகளின் மயிரும்
  ஒப்பீட்டளவில் ஒன்றே…
  -உலக நாடுகள்

  வேலிபோட வந்த
  கோழிகளை
  காலிகள் என்கின்றன சில-
  கூலிகள்!

  -புலிகள் பயங்கரவாதிகள் என்கிறார்கள் செல்வி(?) செயலலிதாவும், அண்ணன் சோவும்…

Leave a Reply

%d bloggers like this: