மன்மோகன் சிங்கிற்கு கருப்புக்கொடி – பெரியார் தி.க வினர் கைது – படங்கள்
ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள இராணுவத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்ட மத்திய அரசை கண்டித்து, சென்னை வந்துள்ள மன்மோகன் சிங்கை எதிர்த்து கருப்புக்கொடி காட்ட முயற்சித்த பெரியார் திராவிடர் கழக தோழர்கள் 700 பேர் கைது.
கைதான தோழர்களை சென்னை சைதாபேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து இருந்தார்கள். அங்கு எடுத்தபடங்கள்.
–
–
–
நானும் என் எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன்
இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகள் யாவை?
பத்தாம் வகுப்பு பாடத்தில் உள்ள கேள்வி ..இப்போதெல்லாம் பலமுறை மீண்டும் மீண்டும் கேட்டு கொள்கிறேன் என்னை நானே.
dear mathi,
nam onru patuvom, ezhi nilai pookka
நான் இந்த கருப்புக்கொடி காட்டிய தோழர்களைப் பாராட்டுகின்றேன். அதேசமயத்தில் பொதுமக்களும் இலங்கைத் தமிழர் பிரச்சனை தீரும்வரை வீட்டில் கருப்புக்கொடி ஏற்றலாம்.
கருப்புக்கொடி மட்டுமல்ல, மண்மோகன்சிங்கிற்கு செருப்படி கொடுக்கவும் தமிழர்கள் அனைவரும் தயாராக இருக்கவேண்டும்.
இந்திய அரசின் தமிழர் விரோத போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சனவரி 26 அன்று கருப்புக்கொடி ஏற்றுவோம்.
பாலஸ்தீனம், ஈழம் இவை இரண்டும் நீண்ட விடுதலைப் போராட்டங்கள். இந்த உலகம் உளச்சான்றற்றது என்பது தான் உண்மை.
பாலஸ்தீனத்தின் மீது விமான தாக்குதலில் பொது மக்கள், குழந்தைகள் பலியாகின்றனர். இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. ஏனென்றால், பல முஸ்லீம் நாடுகள் இந்தியாவின் தோழர்கள். இதே கொடுமைகள் ஈழத்தில் நடக்கின்றன. இந்தியா இலங்கை அரசுக்கு ஆயுத உதவி கொடுக்கிறது. தமிழன் நாதியற்றவன். நன்பர்களே! இந்தியாவைப் புரிந்து கொள்ளுங்கள்.
1.5 கோடி தேசமுள்ள சிங்களனுக்கு, 10 கோடி தேசமற்ற தமிழன் ஈடு கொடுக்க முடியவில்லை. உண்மையை ஆழ உணர்வோம். ஆவன செய்வோம்.