இலக்கியத்தில், அரசியலில் உடன் பிறந்த வியாதிகள்

பெரியாரோடு இருந்தவர்கள் என்று சொல்லப்பட்ட, இரா.செழியன், க. ராசாராம், ஆர்.எம். வீரப்பன் போன்றவர்களும்,

தமிழ்த் தேசியம், விடுதலை புலி ஆதரவு, திராவிட அரசியல், தலித் அரசியல் என்று பேசுகிற பலரும் அவர்களின் அரசியலுக்கு நேர் எதிராக இருக்கிற சோ, இந்து ராம், காலச்சுவடு, தினமணி போன்ற பார்ப்பனர்களிடமும், இன்னும் சில பார்ப்பன ஊடகங்களிடமும் மிகவும் மரியாதையாகவும், இணக்கமாகவும் அவர்களுடன் சேர்ந்தும் செயல்படுகிறார்களே?

-தமிழ்.

‘கர்ணன்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. துரியோதனனின் அரசவைக்கு வர இருக்கிற கிருஷ்ணனுக்கு ‘யாரும் எழுந்து மரியாதை செய்யக் கூடாது’ என்பது மன்னன் துரியோதனனின் உத்தரவு.

அப்படியிருந்தும் கிருஷ்ணனின் வருகையின்போது ‘விதுரன்’ எழுந்து மரியாதை செய்வது மட்டுமல்லாமல், கிருஷ்ணனை ஆதரித்தும் பேசுவார். உடனே துரியோதனன், விதுரனைப் பார்த்துக் கோபத்துடன்,

“சிற்றப்பா, உடன் பிறந்த வியாதி நீ” என்பான்.

இந்த வசனம் துரியோதனனின் சிற்றப்பா விதுரனுக்கு மட்டும்தானா பொருந்துகிறது?

தொடர்புடையவை:

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு

கலைஞன் பரப்பிய வெளி: சுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி

தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்

தினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை

6 thoughts on “இலக்கியத்தில், அரசியலில் உடன் பிறந்த வியாதிகள்”

  1. Pingback: Indli.com
  2. துரியோதனனுக்கும் பொருந்தும்.

  3. அறிவிலிகளா… இரா.செழியன், பழ.நெடுமாறன் போன்றவர்கள் எழுதிய பல்வேறு கட்டுரைகள் திராவிட பத்திரிகைகளில் வர வேண்டியதய்யா? அதை நேர்மையாக வெளியிட திராணியற்றதாக திராவிட பத்திரிகைகள் இருக்க – வேறு வழியின்றி தினமணியை நாடினார்கள். நீங்க யோக்கியமாக இருந்தால் – அவர்கள் ஏன் இடம் மாறுகிறார்கள்.

  4. ///நீங்க யோக்கியமாக இருந்தால் – அவர்கள் ஏன் இடம் மாறுகிறார்கள்///

    அவர்கள் யோக்கியமாக இல்லையென்றால் இவர்கள் யோக்கியமாக இருந்து காட்டவேண்டும்.அவர்களை எதிர்ப்பதாகக் கருதிக்கொண்டு எதிரிகளிடம் கை கோர்க்கலாமா?துரோகம் இங்கேதான் தொடங்குகிறது.கருணாநிதியின் அரசியலுக்கு ஈடு கொடுக்கக் கூடிய அளவுக்கு அரசியலைக் கற்காமல்,அரசியலைத் தெளியாமல்,அவரை அழிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வெளியேறிய ஈ.வெ.கி.சம்பத்,நெடுமாறன்.செழியன்,ராஜாராம் தொடங்கி வைகோ வரை அனைவருமே கருணாநிதியிடம் தோற்றவர்கள்தான்.கருணாநிதியை விட நல்ல கொள்கைக்காரர்களாக இருந்த இவர்கள் அரசியல் செய்யத் தெரியாமல் காணாமல் போனவர்கள்.இன்று வயிற்றெரிச்சல் காரணமாக எதிரியிடம் சரணடைந்து தம்முடைய இருப்பைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.இவர்களை அறிவிலிகள் என்று யாரும் சொல்லமாட்டார்கள்.ஆனால்,சூழ்ச்சி நிறைந்த இந்திய அரசியலில் நேர்மையும் கொள்கையும் மட்டுமே போதாது;பொறுமையும்,அரசியல் சூழ்ச்சியும் தெரியவேண்டும்.அது கருணாநிதிக்கு இருந்ததால் சக்கர நாற்காலியில் செல்லும் நிலை ஏற்பட்டாலும் இன்றும் இந்தியா அவரைத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இருக்கிறார்.நமக்கு அவரைப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ இதுதான் உண்மை.புகழையும் இழிவுகளையும் மாறி மாறி ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவருக்கு இருக்கிறது.அவ்வளவு ஏன்…நீங்கள் சொல்லும் அறிவுஜீவிகளே எதற்கெடுத்தாலும் கருணாநிதியைப் பேச வேண்டிய தேவை இருக்கிறதே!இதுவே அவரது வெற்றிதானே…

  5. சம்பூகன் அய்யா, இங்கே கருணாநிதியை யார் குற்றம் சொன்னார்கள். இன்றைக்கு கலைஞரு(குடும்பமு)ம், தி.மு.கவும் தங்கள் ஊழல்களால் தான் இந்தியாவையே திரும்பி பார்க்க செய்திருக்கிறார்கள். இது ரெம்ப பெருமையான விஷயம் தான்.

Leave a Reply