கள்ள மவுனம்

மருதையன் – வே.மதிமாறன்

***

“‘சித்திரச் சோலைகளே! உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே முன்னர் எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே’ என்ற கவிதையின் அடிநாதமாக விளங்கும் பாட்டாளி வர்க்கச் சிந்தனையும், அவற்றை வார்த்தைகளுக்குள் வசப்படுத்தும் கவிஞர் பாரதிதாசன் கவித்திறனையும் பரிசீலித்தால்கூட பாரதி பற்றி ஒரு முடிவுக்கு உங்களால் வர முடியும்.

புரட்சிக் கவிஞருக்குக் கூட நீங்கள் போக வேண்டியதில்லை.
இப்போதுள்ள ‘கவிப் பேரரசு’ வின் சில கவிதைகளோடு கூட உங்கள் ‘மகாகவி’யை கொஞ்சம் உரசிப் பார்க்கலாம்.

பார்த்தீர்களானால் உங்கள் குருநாதர் வெற்றுக் கற்பனைகளை வார்த்தைக் கோலங்களாக்கி, கவிதை என்ற பெயரில் நம் தலையில் கட்டியிருக்கிறார் என்பதைக் கண்டுகொள்ளலாம்.

கவிஞன் என்பவன் வெறுமனே கனவுகளை மட்டுமே விதைப்பவன் அல்ல.
‘அப்படித்தான்’ என்பீர்களானால், பாரதியைத் தூக்கிப் போட்டுவிட்டு, அந்த இடத்தில் ‘கவிஞர்’ அப்துல் கலாமை உட்கார வையுங்கள். தப்பில்லை. பொருத்தமாகவும் இருக்கும்.

(‘அதற்காக பதிலுக்கு செத்துப் போன பாரதியை எப்படிங்க ஜனாதிபதி ஆக்க முடியும்? அவரு காலமென்ன? இவரு காலமென்ன?’ என்று உங்களின் அறிவார்ந்த காலக்கட்ட பதிலை சொல்லி பயமுறுத்தாதீர்கள் அறிஞர்களே!

-இரண்டாம் பதிப்பிற்கான பதிப்புரையில் ‘தீஸ்மாஸ் டி செல்வா’

*

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகம் பற்றிய விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி வந்த புத்தகம். புதிய விவாதங்களுடன் மூன்றாம் பதிப்பாக 2011 ஆண்டு வந்து.

சென்னை புத்தகக் காட்சியில் என்னுடைய புத்தகங்கள், கிடைக்கும் கடைகளும் அவைகளின் எண்களும்:

131-132 முரண், 141 அருவி, தடாகம் 269, தாய்மண் 534, அலைகள் 550, கீழைக்காற்று 551-552, கருப்பு பிரதிகள் 572.

தொடர்புக்கு: ஞா. டார்வின் தாசன் 9444 337384

தொடர்புடையவை:

காந்தி…?

இரண்டாண்டுகளில் மூன்று பதிப்பு..

4 thoughts on “கள்ள மவுனம்

  1. பாட்டாளி வர்க்க சிந்தனையை ஆழமாக வெளிப்படுத்திய புரட்சிக் கவிஞர் இந்த பொறம்போக்குக்கு போயி தாசன் ஆனாரேன்னு நினைச்சாதான் வருத்தமா இருக்கு.

  2. பாவேந்தரின் காலத்தில் எளிய கவிதைக்கான முன்னோடியாக பாரதியார் திகழ்ந்தார்.அதனால்,அவரைப் பின்பற்றவேண்டிய சூழல் அன்றைக்கு பாவேந்தருக்கு இருந்தது.ஆனால்,அவர் பெயரளவில்தான் `பாரதி’தாசனே தவிர,உண்மையில் அவர் பெரியாருக்குதான் தாசன்.பெரியார் சிந்தனைகளின் கவிதைப் பதிப்புதான் புரட்சிக்கவிஞர்.அண்மையில் இந்தப் பார்வையில் சு.அறிவுக்கரசு எழுதிய ஒரு நூல் வந்துள்ளது.20 ஆண்டுகளுக்கு முன்பே எனது தமிழாசிரியர் பாவலர் மணி ஆ.பழநி அவர்கள் எழுதிய `பாரதிதாசன் பாரதிக்கு தாசனா?’என்ற ஒப்பாய்வு நூலும் வந்துள்ளது.அதில் அவர் பாரதிதாசன் என்பது பெயர்க்காரணம் மட்டுமே என்று முடித்திருப்பார்.

  3. Naan maatum thaan nallavan … matha ellarum kettavan.. idhu thaan unga ellaa ezhuthilum Naan kanda unmai….

Leave a Reply

%d bloggers like this: