‘பல்’ சொத்தை முதல், எல்லா சீர்கேடுகளுக்கும் அந்தாளுதாங்க காரணம்!

Kunst Flow
பெரியாரை எல்லோரும் கடுமையாக விமர்சிப்பதின் காரணமென்ன?
ரவிச்சந்திரன்
முதன்மையான முழுமையான காரணம், பெரியார் அவுங்க ஜாதிக்காரர் இல்லை அப்படிங்கறதுதான்.
பெரியார் எதிர்ப்பாளர்களெல்லாம் என்ன காரணம் சொல்லி பெரியார் மீது அவதூறு சொல்கிறார்களோ; அந்த அவதூறை உண்மையாகவே செய்த, செய்கிற தன் ஜாதிக்காரர்களை வெறி கொண்டு ஆதரிக்கிறார்கள், விமர்சிக்க மறுக்கிறார்கள் என்பதே அதற்கு சாட்சி.
அது மட்டுமல்ல, பிற்போக்குத்தனமான தன் ஜாதிக்காரரை ஆதரிப்பதற்காக அவர் மீது இவர்கள் ஏற்றுகிற முற்போக்கு மூட்டை இருக்கிறதே, அது பெரியார் மீது இவர்கள் செய்கிற அவதூறுகளை விட அசிங்கமானது.
ஏற்கனவே நான் குறிப்பிட்டதுதான் என்றாலும் மீண்டும் அதைக் குறிப்பிடுகிறேன்:
பெரியாரிடம், “உங்களை பார்ப்பனர்கள் எதிர்ப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உங்களால் நன்மை அடைந்த பார்ப்பனரல்லாதவர்களும் உங்களை மிக மோசமாக திட்டி பேசுகிறார்களே?” என்று கேட்டதற்கு பெரியார்,
“என் மீது உள்ள கோபத்தினால்தான் அவர்கள் என்னை திட்டுகிறார்கள் என்று அர்த்தமல்ல, என்னை திட்டினால் பார்ப்பானிடம் பொறுக்கித் திங்கலாம், அதனால்தான்…” என்றார்.
பெரியார் சரியாக சொல்லியிருக்கிறார இல்லையா? என்பதை பெரியார் எதிர்ப்பாளர்களின் பட்டியலை எடுத்துப் பாருங்கள், நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

தொடர்புடையவை:

பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?

பெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்!

பெரியார்; தலித் விரோதியா?

பெரியாரின் பெண்ணியம் பெண்ணியவாதிகளின் பெரியார் எதிர்ப்பு-புறக்கணிப்பு

6 thoughts on “‘பல்’ சொத்தை முதல், எல்லா சீர்கேடுகளுக்கும் அந்தாளுதாங்க காரணம்!

 1. “என் மீது உள்ள கோபத்தினால்தான் அவர்கள் என்னை திட்டுகிறார்கள் என்று அர்த்தமல்ல, என்னை திட்டினால் பார்ப்பானிடம் பொறுக்கித் திங்கலாம், அதனால்தான்…” பெரியார் எவ்ளோ பெரிய தீர்கதரிசி. அவர் கூறியது சத்தியமான வார்த்தைகள்.

 2. இது கண் கூடாக பார்க்க முடிகிற ஒன்று …
  இதில் தமிழ் தேசியமும் அடக்கம்

 3. இன்றைக்கு அதுதான் நடந்துக்கொண்டிருக்கிறது எவ்வளவு உண்மையான வார்த்தைகள்

 4. ///பிற்போக்குத்தனமான தன் ஜாதிக்காரரை ஆதரிப்பதற்காக அவர் மீது இவர்கள் ஏற்றுகிற முற்போக்கு மூட்டை இருக்கிறதே, அது பெரியார் மீது இவர்கள் செய்கிற அவதூறுகளை விட அசிங்கமானது.///

  அசிங்கப்படாமல் ஜாதி பெருமை பேசமுடியுமா?

 5. பெரியாரிடம், “உங்களை பார்ப்பனர்கள் எதிர்ப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உங்களால் நன்மை அடைந்த பார்ப்பனரல்லாதவர்களும் உங்களை மிக மோசமாக திட்டி பேசுகிறார்களே?” என்று கேட்டதற்கு பெரியார்,

  “என் மீது உள்ள கோபத்தினால்தான் அவர்கள் என்னை திட்டுகிறார்கள் என்று அர்த்தமல்ல, என்னை திட்டினால் பார்ப்பானிடம் பொறுக்கித் திங்கலாம், அதனால்தான்…” என்றார்.

 6. பல்’ சொத்தை முதல், எல்லா சீர்கேடுகளுக்கும் பிராமணர்கள் காரணம்!
  இப்போ சரியா

Leave a Reply

%d bloggers like this: