தெலுங்கு சினிமா புகழும் என்னை திட்டுபவர்களும்

simhaநீங்கள் எழுதிய சினிமா விமர்சனங்களுக்கு அரசியல் கட்டுரைகளுக்கு கேள்விகளுக்கான பதில்களுக்கு எதிர் வினையாக, பலர் உங்களை திட்டி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நீங்கள் பதில் எழுதலாமே?

-தமிழ்க்கனல்

பத்திரிகை நிர்வாகத்தின் தலைமை பொறுப்பிலிருப்பவர், தெலுங்குகாரர் என்பதால், குறைந்த பக்கங்களே உள்ள பத்திரிகையில் மட்டமான தெலுங்குப் படங்களையும் தெலுங்கு நடிகர்களையும் பற்றி 3 பக்கங்களுக்கு அதுவும் A4 Size ல் புகழ்ந்து எழுதி, தமிழ் வாசகர்களை சித்திரவதை செய்கிற; ஒரு பத்திரிகையாளரின் செயலைப்போல்,

என்னை கண்டபடி திட்டுவதின் மூலமாக அவர்கள் யாரிடமோ நல்ல பெயர் வாங்க விரும்புகிறார்கள். அதை எதுக்கு நான் கெடுப்பானேன். ஏதோ என் மூலமாக அவர்களுக்கு உதவி.

நடக்கட்டும். தெலுங்க சினிமா புகழும் என்னை திட்டுவதும்.

தொடர்புடையவை:

வே. மதிமாறனை விரட்ட வேண்டும்

ஜெனியூனானவர்கள் என்றால் சுயஜாதி அபிமானம் இல்லாதவர்கள்தான்

8 thoughts on “தெலுங்கு சினிமா புகழும் என்னை திட்டுபவர்களும்

  1. யோவ்.. மதிமாரா நீயே தெலுங்குதானே

  2. சிலருக்கு தன்னை பற்றிய ஓவர் பில்ட் அப் தனக்கு தானே உண்டு, கருணாநிதியை மட்டும் எப்போது சாய்ஸில் விட்டுவிட்டு மற்ற அத்தனைபேரையும் திட்டும் நம்ம மதிமாறன் அய்யாவுக்கு தன்னை பற்றி தனக்கு தானே ஓவர் பில்ட் அப் உண்டு.

    இவரை திட்டினா உடனே ஜெயலலிதாவோ, ராமதாசோ நமக்கு எம்.எல்.ஏ சீட்டு தரப்போறாங்களா? இல்லைன்னா இன்னோவா கார் தரப்போறாங்களா? பாஸ் நீங்க அவ்ளோ ஒர்த் இல்லை.

  3. அய்யா பொன்னுசாமி… யாரு திட்டியது என்பத மேலோட்டமாக சொல்லிவிட்டார். இதை பற்றிய விஷயம் தெரியவில்லை என்றால் ஐ புலன்களையும் அடக்கி இருப்பது நன்று. தெரியாத விஷயத்தை தெரிந்தது போல் காட்டிக்கொண்டு இந்த வாமிட் தேவையா உங்களுக்கு ?

  4. பதிவை போல பின்னூட்டத்தையும் ஒரிஜினல் பெயரில் எழுதுங்களேன் மிஸ்டர் ஜோதி 🙂

  5. Purushothaman Ponnusamy உங்களின் முட்டாள்தனமான ஜாதிய கண்ணோட்டம் கொண்ட அவதூறுகளை தொடர்ந்து எழுதுவதாக இருந்தால் இந்தப் பக்கம் வராதீர்கள்.

  6. மதிமாறன் அய்யா, முதலில் எனக்கு ஈமெயிலில் உங்கள் பதிவுகளை அனுப்பி சித்திரவதை செய்வதை நிறுத்துங்கள். இரண்டாவது விமர்சனங்களை எதிர்கொள்ள மறுப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்று நிரூபித்ததற்கு நன்றி

    //உங்களின் முட்டாள்தனமான ஜாதிய கண்ணோட்டம் கொண்ட அவதூறுகளை தொடர்ந்து எழுதுவதாக இருந்தால்//

    அடுத்ததாக நான் மேலே எழுதிய பின்னூட்டத்தில் எது சாதிய கண்ணோட்டம்? உங்களால் சொல்ல முடியுமா? நீங்கள் யாரையேனும் விமர்சிக்கும் போது உங்கள் பக்க சாய்வுகளை எடுத்து வைப்பதை எப்படி நீங்கள் மறுக்க முடியும், மேலும் நீங்கள் பொதுவில் எழுதும் போது இணையத்தில் அனைவராலும் படிக்கும் வகையில் உங்கள் ப்லாக்கை வைத்திருக்கும் போது உங்கள் பக்கத்திற்கு வரக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு தார்மீக உரிமை இல்லை.

    ஒன்று செய்யுங்கள் உங்கள் பக்கத்தை நீங்கள் விரும்புபவர்கள் மட்டும் படிக்கும் வகையாக லாகின் போட்டு வையுங்கள். அதன் பிறகு நான் வந்து கேட்டால் தடை செய்ய உங்களுக்கு நியாயம் உண்டு, பொதுவில் வந்து திறந்து போட்டு எழுதிக்கொண்டு இருந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும், அதை எதிர்கொள்ளும் துணிவு உங்களை போன்ற ஒரு பக்க சாய்வு முற்போக்காளர்களுக்கு என்றுமே இருந்ததில்லை.

  7. vethimaran solvathu miga sari. Mr. Purushothaman, ungalathu sathiya veri enakku vethanai alikirathu. Kalaingar thodangiya samathuvapuram ithu. enku vendam unkal sathiya nokkam.

Leave a Reply

%d bloggers like this: