அண்ணாவிற்கு பிறகு நெடுஞ்செழியனா.. கருணாநிதியா? ‘ஜஸ்ட் மிஸ்’

web12ph247அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன் மற்றும் அன்பழகன் இவர்களைவிட எவ்வகையில் கருணா மேம்பட்டவர்? மற்றவர்கள் தம் தகுதியால் பெற்றதை தகுதியில்லாமலே கருணா தட்டிப் பறித்தது எப்படி?
-கோ. அருண்முல்லை. 

பா.ஜ.க. பாசம் கொண்ட, பார்ப்பனர்களுக்கான திராவிட இயக்க துருப்புச் சீட்டு இரா. செழியனை ஏன் விட்டு விட்டீர்கள்?

அண்ணாவிற்கு பிறகு, நெடுஞ்செழியன், அன்பழகன் இவர்களைவிட கலைஞர், தொண்டர்களிடம் நெருக்கமாக இருந்தார். அதுவே அவர் தலைவர் ஆனதற்குக் காரணம்.

அதுமட்டுமல்ல முதலியார்களால் சுற்றி வளைக்கப்பட்ட திமுகவின் தலைமைக்குள்,
மிக பிற்படுத்தப்பட்ட ஒடுக்குமுறைக்கு உள்ளான எண்ணிக்கையளவில்கூட ஜாதி செல்வாக்கு இல்லாத, மிக சிறுபான்மையான இசைவேளாளர் சமூகத்திலிருந்து, சிறிய அளவில்கூட ஜாதிய பின்னணியில்லாமல் ஒருவர் தலைமைக்கு வருவது, திறமை இல்லாமல் எப்படி முடியும்?

திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கையான, இடஓதுக்கிட்டூக்கு எதிராக எம்.ஜி.ஆர் ஆட்சியில், ‘பொருளாதார அளவுகோளில் இட ஒதுக்கிடூ’ என்று சட்டம் வந்தபோதே, அப்போது அமைச்சராக இருந்த நெடுஞ்செழியனின் ‘திறமை’யை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.

அந்தப் பாசத்தில்தான், ‘கற்றாரை கற்றாரே காமுறுவர்’ என்ற அவ்வையாரியின் வழிகாட்டுதல்படி, படித்த பார்ப்பனர்கள், படிப்பறிவும், ஆட்சியத் திறமையும் கொண்ட நமக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள் என்ற அசைக்க முடியாது நம்பிக்கையில், மைலப்பூர் தொகுதியில் சுயேச்சையாக நின்றார், திராவிட இயக்கத் தலைவரான ‘நாவலர்’.

ஆனால் படித்தப் பார்ப்பனர்கள், நெடுஞ்செழியனின் நம்பிக்கையை மட்டுமல்ல, அவர்கள் அவ்வையாரையே பொய்யாக்கி காட்டினார்கள்.

நெடுஞ்செழியனுக்கு டெபாசிட் பணத்தை நஷ்டமாக்கிய பார்ப்பனர்கள். மாறாக யாருக்கு அதிக வாக்களித்தார்கள் என்றால், சுயேச்சையாக நின்ற உலகின் மாபெரும் மேதைகளில் ஒருவரான எஸ்.வி. சேகருக்கு.

நெடுஞ்செழியனின் திராவிட இயக்க அரசியல் அறிவு, பார்ப்பனியத்தின் அடிப்படையை கூட புரிந்து கொள்ளாத தன்மையில் இருந்தது.
அவர் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனைப்போல் அதிகாரத்திற்கு வர ஆசைப்பட்டார். ஆனால், ‘நாராயணசாமி’யாகத்தான் நடந்து கொண்டார். அவரின் தவறுக்கு தக்கப் பாடம் கற்பித்தது மயிலப்பூர்.

‘தகுதி, திறமையை’ விரும்பியது நெடுஞ்செழியனின் ‘தகுதியும் திறமையும்.’
‘தகுதி-திறமைகளோ’ பெரியாருக்குப் பிறகு அவருக்கு திராவிட இயக்க அரசியலை மீண்டும் கற்றுத் தந்தனர்.

நல்லவேளை அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் முதல்வரானார். ‘ஜஸ்ட் மிஸ்’ தமிழர்கள்.

anna_karunanidhi_500

பிப்ரவரி 1 அன்று face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்

ஸ்டாலின்-அழகிரி இழிவான சண்டை; ஜெயேந்திரன் நடத்தியது புரட்சிகரப் போராட்டம்

..இவர்களுடன் எம்.ஜி.ஆரும் கலைஞரும் மலையாளிகளும்; தீர்வு தமிழ்த்தேசியம்!?

2 thoughts on “அண்ணாவிற்கு பிறகு நெடுஞ்செழியனா.. கருணாநிதியா? ‘ஜஸ்ட் மிஸ்’

  1. No post will be complete — whatever the subject/topic/core — without mentioning Parppaneeyam and paarppanarkal and of late BJP. Keep it up. (Happened to see only now: hence delayed comment.

Leave a Reply

%d bloggers like this: