பலி வாங்கும் bike

funny-bike-wheeling
நகரத்திற்குள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் ஓட்டக்கூடாது என்று மோட்டர் பைக் வைத்திருப்பவர்களை கட்டுப்படுத்துகிறது காவல்துறை.

ஆனால், நவீன மோட்டர் பைக்குகள் 100 cc க்கு மேல் அதுவும் 300 – 600 cc பைக்குகள் எல்லாம் வந்திருக்கிறது. இவை ஆரம்ப வேகமே 40 கிலோ மீட்டருக்கு மேல்தான்.

இளைஞர்களை, அதுவும் நடுத்தர வர்க்கத்து இளைஞர்களை குறி வைத்தே இந்த வாகனங்கள் சந்தைப் படுத்தப்படுகிறது. இதன் சிறப்பம்சமாக விளம்பரம் படுத்தப்படுவதே வேகம், சாகசம். அதுவும் ஒரு சக்கரம் மேலே தூக்கியபடி ஓட்டுகிற விளம்பரங்கள்தான். (wheeling)

 
இந்த வாகனங்களே நகரங்களில் விபத்து ஏற்படுத்துகிறது. பல உயிர்களை பலி வாங்குகிறது.

இதுபோன்ற ஊதாரித்தனமான வண்டிகளை உற்பத்தி செய்வதற்கும் பொறுப்பற்ற முறையில் விளம்பர படுத்துவதற்கும் தவணை முறையில் விற்பதற்கும் அனுமதி தந்துவிட்டு,
40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் ஓட்டக்கூடாது என்று கட்டுபாடு வைத்திருப்பது யாரை ஏமாற்ற?

குடிப்பதற்கு சாராயக்கடையை திறந்து வைத்து ‘நல்லா குடி.. ஆனா போதை ஆகக்கூடாது’ என்பதுபோல்தான் இதுவும்.

*

February 25 அன்று face book ல் எழுதியது

Leave a Reply

%d bloggers like this: