பா.ஜ கூட்டணி: களிமண்ணும் உமியும் கலந்து செய்து கலவை
ஒருத்தன் களிமண்ணை துணியில் கட்டி சோத்து மூட்டை போல்… எடுத்துக் கொண்டு காட்டுக்கு வந்தான். இன்னொருத்தன் உமி யை அதுபோலவே கட்டிக் கொண்டு வந்தான். இருவரும் மதிய உணவு நேரத்தில் தற்செயலாக சந்திக்கிறார்கள்.
உடனே அவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு பேச்சு வார்த்தையை தொடங்கினார்கள்.
”நீ என்ன சாப்பாடு?“ என்றான் உமி வைத்திருந்தவன்.
அதற்கு களிமண்ணு மூட்டையை காட்டி ”தயிர் சோறு.. தினமும் அதை சாப்பிட்டு சலிச்சுப்போச்சு… அதான் சாப்பிடாம இருக்கேன்“ என்றான்.
அதைக் கேட்ட ‘உமி’, தன்னுடைய உமி மூட்டையை காட்டி, “நான் புளிசோறு கொண்டு வந்திருக்கேன். எனக்கு அது புடிக்காது.. அதான் நானும் சாப்பிடமா இருக்கேன்..’ என்றான்.
உடனே இருவரும் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள்.
”அப்போ நீங்க தயிர் சோறு சாப்பிடுங்க.. நான் புளி சோறு சாப்பிடுறேன்..”
மகிழ்ச்சியோடு மாற்றிக் கொண்டு அவசர அவசரமாக பிரிந்தார்கள்.
*
ஒரு வழியாக பா.ஜ.க கூட்டணி சுமுகமாக முடிவுக்கு வந்து, அவரவர் பங்கை பிரித்துக் கொண்டு அவசர அவசரமாக தலைவர்கள் பிச்சாரத்திற்கு கிளம்பி விட்டார்கள்.
March 21 அன்று எழுதியது.
‘உதிரிப்பூக்கள்’ விஜயனும் வைகோ வை ஆதரிப்பதும்..
அம்மா வியூகமும் காங்கிரஸ் – கம்யுனிஸ்ட்டுகளின் கையறுநிலையும்
தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: வைகோவின் சீற்றம்!
//ஒரு வழியாக பா.ஜ.க கூட்டணி சுமுகமாக முடிவுக்கு வந்து, அவரவர் பங்கை பிரித்துக் கொண்டு அவசர அவசரமாக (“புளுகு மூட்டையை கட்டிக்கொண்டு”)தலைவர்கள் பிச்சாரத்திற்கு கிளம்பி விட்டார்கள்.// என எழுதி இருக்க வேண்டும். இனி இந்த புளுகு மூட்டைகளை நம்பி ஏமாறப் போவது வாக்காளர்கள்தான்.
// இனி இந்த புளுகு மூட்டைகளை நம்பி ஏமாறப் போவது வாக்காளர்கள்தான்.//
I don’t think so. This front will not get even a single seat in TN. The fight is between JJ and MK, as usual. But this time JJ will gain more seats.
I enjoyed the post very much. Thanks to ‘thozhar’ Mathimaran.
M. Nithil
Sathiyai ethirppavargal Thalith enthu een sollukrirgal.? Thanithokuthiyil mattumanthi pothu thokuthiyil avargalai niruthalame?
குறைந்த பட்சம் சில தொகுதிகளில் டெபாசிட் தொகை வாங்கலாம். மற்றபடி ஒரு மண்ணும் கிடைக்காது.
2009 மே 17 ல் ஈழதமிழர்களுக்கு சிங்கள ராணுவம் முடிவெழுதியது
2014 மே 17 ல் தமிழகத் தமிழர்கள் வைக்கோ எனும் பொய்க்கோவிற்கு முடிவு எழுதுவார்கள்.