நன்றி:அதிமுக வினருக்கும் இன்னும் சில..
புரட்சித் தலைவி அம்மாவிற்கு எதிராக வந்திருக்கிற தீர்ப்பை கண்டித்து அதிமுகவினர்.. திறந்திருக்கிற கடைகளை குறிப்பாக வாழப்பழம் விற்கிற வண்டி, ஜிகர்தண்டா கடை, டிபன் கடை, கையேந்தி பவன், மெடிகல் ஷாப் எல்லாவற்றையும் அடித்து நொறுக்குகிறார்கள்.
இப்படி எல்லாம் தங்கள் கோபத்தை வெளிபடுத்துகிற அவர்களிடம் ஒரு கண்ணியம் இருக்கிறது. ‘டாஸ்மாக்’ மீது எந்த தாக்குதல்களும் நடத்தாதது… ஒரு அவசரம் என்றால் அதானே நமக்கு….
உண்மையில் பாராட்டப்படக் கூடிய பண்பு இது.
நன்றி.. நன்றி.. நன்றி..
September 27 மாலை.
‘இந்தத் தீர்ப்பு ஜெயேந்திர சரஸ்வதி, பா.ஜ.க., சுப்பிரமணிய சுவாமி, மற்றும் பார்ப்பன கும்பல்கள் செய்த சதி. இந்தத் இந்துத்துவ-தமிழர் விரோத சக்திகளிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ –
அதிமுக ஆதரவை ரகசியமாக வைத்துக் கொண்டு, திமுக எதிர்ப்பை பகிரங்கமாக செய்யும் ‘முற்போக்கு தமித்தேசிய வாதிகள்’ இப்படியாக.. இன்னும் ஏன் தமிழர்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் இருக்கிறார்கள்.
Facebook ல வழக்கமா இப்படி எழுதுறவங்கக் கூட இப்ப அமைதியா இருக்காங்களே? வேற எதாவது பயங்கரமான திட்டத்தோடு இருப்பாங்களோ? எதுக்கும் ஜாக்கிரதையா இருப்போம்.
September 27 மாலை.
எல்லாம்.. நேரம்..?
கடந்த தேர்தலில் ‘ஊழலுக்கு எதிரான கூட்டு’ என்ற ஒரே காரணத்தைச் சொல்லி அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு மிகத் தீவிரமாக முயற்சித்து தோல்வியடைந்த, கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் சொல்கிறார்,
“லஞ்சம், ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்கும் எச்சரிக்கையாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. இத்தீர்ப்பு ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு வலுசேர்க்கும்.”
நடிகர் வடிவேலுக்கு வாய்ப்பு இல்லாத கொறையே தெரியல..
September 27 மாலை.
‘அம்மா தொடர்ந்து பதவியில் இருந்தால்.. எப்படியும் தனிஈழம் வாங்கிக் கொடுத்துடுவாங்க.. அதை தடுப்பதற்கான இந்திய அரசின் சதி தான் இந்தத் தீர்ப்பு’
யாராவது ஒரு தமிழ் விஞ்ஞானி கண்டிப்பா சொல்லுவாரு..
September 27 இரவு.
பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் தாழ்த்தப்பட்ட மக்களை குறி வைத்து சுட்ட அம்மா அரசை எந்த வார்த்தையாலும் மென்மையாக கூட கண்டிக்காமல்,
தந்திரமாக போலிஸ் குறித்து மட்டும் நான்கு வார்த்தையில் ஒப்புக்குக் கண்டித்துவிட்டு, (அம்மா இலாகா) அந்த ரத்தம் காய்வதற்கு முன்பே, ‘தனிஈழத்திற்கு தீர்மானம் போட்ட புரட்சித் தலைவி வாழ்க’ என்று போஸ்டர் ஒட்டியவர்கள், அம்மாவுக்கு வழங்கிய தண்டணைக் குறித்து இப்படி சொல்கிறார்கள்..
‘ஊழலை விட, ஜாதி வெறி மிக ஆபத்தானது. மத, ஜாதி வெறி சக்திகள் நுழைந்து விடும் ஜாக்கிரதை’
September 28 காலை.
முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து தன்னை கைது செய்தபோது கூட அம்மா வை கண்டிக்காமல் காவல் துறையை மட்டுமே கண்டித்த அய்யா பழ. நெடுமாறன் கூட, அம்மாவிற்கு வழங்கிய தண்டனையை வரவேற்று இருக்கிறார். வாழத்துகள்.
அம்மா ஊர்ல இல்ல என்கிற தைரியமா?
*
தன் தலைவரின் நினைவிடத்திற்கு வண்டியில் போனவர்களை வழிமறித்து, ‘கலவரம் செய்கிறார்கள்’ என்று காரணம் காட்டி பரமக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறை,
இப்போது கலவரம் செய்கிறவர்களுக்கு பாதுகாப்பாக பந்தோபஸ்துக்கு செல்கிறது.
உண்மையில் பாராட்டப்படக் கூடிய பண்பு
‘டாஸ்மாக்’ மீது எந்த தாக்குதல்களும் நடத்தாதது… ஒரு அவசரம் என்றால் அதானே நமக்கு….
உண்மையில் பாராட்டப்படக் கூடிய பண்பு இது.//
சிறந்த பதிவு
தொடருங்கள்
யாழ்பாவாணனின் மின்நூலைப் படிக்கலாம் வாங்க!
http://wp.me/pTOfc-bj
அ௫மை தோழர்
இன்றைய தினம் வரையிலும் நண்பர் மதிமாரனும் சரி ,வினாவிலும் சரி முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாமீதான நீதிமன்ற தீர்ப்பை பற்றி வெளிப்படையாக ஒரு சத்தமும் விடவில்லை.தீர்பிலுள்ள ஓட்டை ஒடைசலைபற்றி மகா மேதாவித்தனமாக விமர்சித்து வருகிறார்களே தவிர அவர்கைது என்பதைப்பற்றி ஒரு வாசகம்கூட கிடையாது.அதற்கு ஆதரவா எதிர்ப்பா என்பதுபற்றி நேரடியாக ஒரு தெளிவான கருத்தும் கிடையாது.ஆனாலும் அடுத்தவர்கள் வீரம் பற்றி இவர்கள் வரையும் கட்டுரைகள் இருக்கிறதே ?அப்பப்பா,,,சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் தோற்றார்கள். இது நிலாவா? அல்லது சூரியனா? என இருவர் விவாதித்து அடித்துகொண்டிருக்கையில் அவ்வழிவந்த வழிபோக்கனை இருவரும் அணுகி விவாதத்தை விளக்கி தீர்வுகேட்கையில் அவன் எதுக்குடா வம்பு என “நான் வெளியூர்காரன்,எனக்கு தெரியாது” என நழுவிகொண்டதைபோலதான் இவர்களின் இன்றைய நிலையும்.அந்த வலிப்போக்கனின் சமயோசித புத்தியை கூட பாராட்டமுடிகிறது.ஆனால் அவர்களின் வீரவசனத்தை கேட்க்கையில் சிரிப்புதான் வருகிறது.