பூனக்குட்டி தம்பி புலிக்குட்டியும்…
தமிழ் உணர்வோடு ஆங்கிலத்தை எதிர்க்க தெரிந்த மாவீரர்கள், சமஸ்கிருதத்தின் தமிழர், தமிழ் விரோத போக்கைப் பார்த்து வாலை சுருட்டிக் கொண்டு ஓரங்கட்டுவதை நாம் கண்கூடாக பார்த்ததே.
‘தமிழ், அரச்சனைக்கு தகுதியற்ற மொழி’ என்பதும் நாம் அறிந்ததே. அதுகுறித்து கேள்வி கேட்க, பக்தி உணர்வு கொண்ட தமிழ் உணர்வளார்களுக்கும் பலவகையான பஞ்ச் டயலாக் தமிழ்ப் பற்றாளர்களுக்கும் சூடு சொரணை கிடையாது என்பதும் நாம் நன்கு அறிந்ததே.
‘பெயர் பலகையை தமிழில் வை’ என்று போராடியவர்கள் கூட ‘தமிழில் அர்ச்சனை செய்’ என்று கெஞ்சி கேட்டுக் கொள்கிற அளவிற்குக் கூட தைரியம் இல்லாதவர்கள் தான் என்பதை அந்த வீரம் செறிந்த போராட்டங்களின் போதும் அதன் பிறகான அவர்களின் பல தியாகங்களின் போதும் கூடுதலாகவே அறிந்தோம்.
இந்த நிலையில் அரச்சனைக்கு மட்டுமல்ல, தமினுக்கு பெயராக வைத்துக் கொள்வதற்கும் கூட தமிழுக்குத் தகுதி கிடையாது என்பதையும் முதல்வர் ஜெயலலிதா பலமுறை குழைந்தைகளுக்கு சமஸ்கிருத பெயர் வைத்து நிரூபித்திருக்கிறார்.
சரி. தமிழனுக்குத்தான் தமிழ்ப் பெயர் வைக்க முடியவில்லை, வண்டலூரில் உள்ள விலங்குகளுக்காகவது தமிழ்ப் பெயர் வைப்பாரா என்று பார்த்தால் அதற்குக் கூட தமிழுக்குத் தகுதியில்லை என்பதைப்போல் தொடர்ந்து புலிகளுக்கு சமஸ்கிருத பெயர் வைத்து சாட்சியாக்கியிருக்கிறார்.
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா ஏழு புலிக் குட்டிகளுக்கு அர்ஜுனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா, நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்று பெயர் சூட்டினார்.
அதுபோலவே, வண்டலூரில் புதிதாக பிறந்த புலிக்குட்டிகளுக்கு நேற்று முதல்வர்; தாரா, மீரா, பீமா, ஆதித்யா கர்ணா என்று பெயர் சூட்டியுள்ளார்.
முதல்வரின் தமிழ்ப்புறக்கணிப்பையும் சமஸ்கிருத முக்கியத்துவத்தையும் கண்டித்து, தமிழ்நாட்டில் இருக்கிற புலிக் குட்டிகள் ‘மியாவ்’ என்று கூட சத்தம் எழுப்பாமல் பதுங்குகின்றன.
‘இந்தப் பதுங்கள் பாய்வதற்காகத்தான்’
ஏற்கனவே நாம பாக்கல…
அதான் தமிழ்ப்புத்தாண்டை திருவள்ளுவர் தினத்திலிருந்து மீண்டும் சமஸ்கிருத ஆண்டுக்கு மாற்றியபோதும், சமச்சீர் கல்விக்கு மூடுவிழா நடத்த முயற்சித்த போதும்.. அப்படியே பதுங்கி இருந்துவிட்டு,
பிறகு சட்டமன்றத்தில் இலங்கை பிரச்சினைக்காக தீர்மானம் போட்டபோது, புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் பாய்ந்ததை.
சொல்ல முடியாது… இப்போது கூட, முதல்வர் புலிகளுக்கு பெயர் வைத்ததை ஆதரித்து, ‘புரட்சித் தலைவி தீவிரமான புலி ஆதரவாளர்’ என்று அறிவித்து பாராட்டுவிழா நடத்தினாலும் நடத்துவார்கள்.
அது சரி.
புலிக்குட்டிகளுக்கு எப்பவுமே இந்து பெயர்களையே வைக்கிறாரே முதல்வர்; எல்லாமே இந்துப் புலிக் குட்டிகள்தானா?
முஸ்லீம், கிறித்துவ புலிக் குட்டிகள் ஒன்றே ஒன்று கூடவா கிடையாது?
நேற்று (10-5-2014) facebook ல் எழுதியது.
எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்
தலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…
தமிழ்நாட்டில் இருக்கிற புலிக் குட்டிகள் ‘மியாவ்’ என்று கூட சத்தம் எழுப்பாமல் பதுங்குகின்றன. – செம குத்து. இதே அம்மையார் தான் ஆரம்ப பள்ளிகளில் கட்டாயமாக தமிழை ஒரு பாடமாக பயிற்றுவிக்கும் சட்டத்துக்கு மூடுவிழா நடத்திய தமிழம்மா. இலங்கையில் போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று கூறிய ஈழத்தாய்.. அவ்வ்வ்..
மன்னிக்கவும், எனக்கென்னவோ இந்தப் பதிவைப் பார்க்கச் சிரிப்புத் தான் வருகிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் பெரும்பான்மை இளம் தலைமுறையினரின் இக்காலப் பெயர்கள் எல்லாமே இஸ், பிஷ் என்று சமக்கிருதம் கலந்த பெயர்களாகத் தானிருக்கின்றன (தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்கலந்து கொள்பவர்களின் பெயர்களைப் பார்த்தாலே புரியும்). அதனால் தமிழ்நாட்டு மக்களின் ரசனைக்கேற்றவாறு முதல்வர் புலிக்குட்டிகளுக்கு பெயர் வைத்தார் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.
அதை விட வேடிக்கை என்னவென்றால் “தமிழினத் தலைவரின் பேரன் உதயநிதியின் மகளின் பெயர் ‘Tanmaya’- ரான்மயா’. அந்தப் பெயர் தாத்தாவுக்குக் கூடப் பிடித்துக் கொண்டதாம். அவருடைய ஆசீர்வாதம் கூட அந்தப் பெயருக்குண்டாம். திராவிடத் தலைவரின் குடும்பத்தினரே பார்ப்பனர்களைத் தான் மணமுடித்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் தொண்டர்கள் மட்டும் எதற்காக சமக்கிருதத்தை எதிர்க்க வேண்டும்.
Veera Kumar
Veera Kumar’s photo.
May 11 at 10:55am · Unlike · 3
Radha Krishnan · 46 mutual friends
சொரணையில்லாம சுத்துறவனுங்களுக்கு செவிட்டுல அடிக்கிற மாதிரியான பதிவு.அருமை தோழர்..
May 11 at 11:36am · Unlike · 2
Kingsly Thomas super.
May 11 at 1:58pm · Unlike · 1
Ganeshan Ramachandran · 12 mutual friends
சன் குழுமத்தில் ஒரு சேனலுக்குக் கூட தமிழ் பெயர் வைக்க முடியவில்லையா எனக் கலைஞரிடம் (100 கோடி ரூபாய் பங்கு) கேட்கத் திராணியில்லை என்றால் அடுத்தவன் ரத்தம் தக்காளிச் சட்டினி கும்பல் என்று பொருள்
May 11 at 2:13pm · Like · 1
Rajnarayanan Veeraiyan · 6 mutual friends
@ Ganeshan Ramachandran இது கலாநிதியிடம் கேட்க வேண்டிய கேள்வி. கலைஞரிடம் அல்ல.
May 11 at 2:26pm · Like
Ganeshan Ramachandran · 12 mutual friends
கலைஞரின் பின்புலம் இல்லாமல் தான் கலாநிதி வந்தாரா? அது சரி சொந்த தொலைக்காட்சியே தன்னுடையது இல்லை என்று சொல்லும் எத்தர் கூடம் தானே!
May 11 at 2:59pm · Edited · Like
Deva Kumar · Friends with Anbu Veera and 7 others
kurai yeri koli pudikatheriyathava vanam yeri vaikuntham ponanam inga yentha anium pudunga mudiyala elaththil pudungarangalam nalla pudunga
May 11 at 3:14pm · Like
Ganeshan Ramachandran · 12 mutual friends
அதிலும் “ஆதித்யா” சேனல் பெயர் சூப்பர்! ஊருக்கு உபதேசம் எப்பவுமே நல்லாத்தன் இருக்கும் (கேக்குறவன் எல்லாம் கேனை என்ற மனோபாவம் தானே)
May 11 at 3:15pm · Like
Ganeshan Ramachandran · 12 mutual friends
சாய்பாபா இருந்திருந்தாலாவது கலைஞர் மூலமாக நல்ல பெயர்களாக சூட்டச் சொல்லி நேர்ந்துகிட்டிருக்கலாம்
May 11 at 3:21pm · Like
வே மதிமாறன் Ganeshan Ramachandran தன்னுடைய டி.விக்கு ஏன் ஜெயா டி.வி என்று பெயர் வைத்தார் என்பதல்ல என் கேள்வி.
May 11 at 4:47pm · Like
Kingsly Thomas அது யாருப்பா கணேசு…சந்திரன்….சன் டிவி-யில எதாவது வேலை கேட்டு apply பண்ணியும் ஒண்ணும் கிடைக்காத கோபத்தை இங்க வந்து கலைஞர்,கருணாநிதி என்று…எதோ ஒன்று ஓலை பாயில் உச்சா போவது போல் இங்க வந்து கத்தாத….உங்க தூர்தர்சன் டிவி யில போய் வேலை பாரு…சரியா.
May 11 at 5:15pm · Like · 2
Suriyanarayanamurthi Murthi இனி தமிழ் மெல்ல சாகும் என்று பாரதியே கூறியிருக்கிறார்,
May 11 at 5:38pm · Like
Anand Sela · Friends with Prabu Kumar
சுரணை கெட்ட தமிழ் உணர்வாளர்களே பதில் சொல்லுங்க,கலைஞர் மீது பாயும் கூட்டம் செயா என்றால் பம்முவதேன்?
May 11 at 5:38pm · Like
Jaya Raman · 8 mutual friends
ஏனென்றால் ஜெ பார்பனீயத்தின் முகவரி! கலைஞர் அப்படியா?
May 11 at 5:47pm · Like
Shahul Hameed · 7 mutual friends
அருமையான பதிவு
May 11 at 6:00pm · Like
Venmani Mani · Friends with Sathish Kumar
இது பத்தாது தமிழ் தேசிய புலிகளுக்கும்,தமிழை வைத்து தொந்தி வளர்த்த பட்டிமன்ற பரதேசிகளுக்கும்… தமிழ் மொழியின் மீதான ஆங்கில ஆக்ரமிப்பை எதிர்த்தும்,மொழி தீண்டாமைக்கு எதிராகவும் போராட முன் வராத இந்த வகை தமிழர்களை ….கரைச்சி ஊத்தி அடிச்சா என்ன?
May 11 at 8:36pm · Like · 1
Ganeshan Ramachandran · 12 mutual friends
@மதிமாறன்…முன்பு தமிழ் மீது வராத அக்கறை திடீரென்று இப்போது ஏன் என்பது தான் என் கேள்வி
May 11 at 9:42pm · Like
Kingsly Thomas மதிமாறன் அக்கறைய விடு…நீயும் உன் சங்கர மடமும் தமிழுக்காக என்னத்த கிழிச்சிங்க….?
May 11 at 11:49pm · Like · 2
Haja Gani புளிய கரைக்கிறீங்க…புளியோதரை ஆ சாமிகளுக்கு…
Yesterday at 7:25am · Unlike · 1
Senthilkumar Venkatachalam · 12 mutual friends
நல்லபதிவு
Yesterday at 7:31am · Unlike · 1
Jahir Hussain அருமை அருமை
23 hours ago · Unlike · 1
Darwin Nagendran Kalaignar ippadiyana peyar soottu vlakkalil aariya peyar vaiththara?avar dravida mugavari.jeya appadiya?sun network parppanai vida oru padi mele enbathum unmai.athu kalanithi pondra corporatekalal vantha vinai.kalaignaral alla.enna kalaignar aatchiyil poli tamil unarvalargal aavarai neradiyaga kandippargal.jeya atchiyil police matrum adikarigalai kandippargal.
22 hours ago · Like · 1
Ganeshan Ramachandran · 12 mutual friends
@கிங்ஸ்லி …….இன்னும் ரெண்டு கட்டிங் ஊத்திட்டு வந்து வாந்தி எடுங்க பாஸ்…… மதிமாறன் கழுவி விடுவாரு (மதி. ஐ ஆம் சாரி….உங்களுடைய பதிவுகளில் கமெண்டுகள் தரங்கெட்டு போய்விட்டன)
18 hours ago · Like
வே மதிமாறன் அவரு வாந்தி எடுத்ததா நீங்க நினைச்சீங்கனா… அந்த வாந்திய உங்க மேலதான் எடுத்திருக்காரு…
அத நீங்க கழுவிடுவீங்களோ இல்ல வழிச்சு நக்குவீங்களோ? உங்க விருப்பம்.(ஐ ஆம் சாரி…Ganeshan Ramachandran .உங்களுடைய கமெண்டுகள் எப்போதுமே தரங்கெட்டுதான் இருக்கின்றன)
16 hours ago · Like · 5
Ganeshan Ramachandran · 12 mutual friends
நன்றி. தரமான பிரிவு…
16 hours ago · Like
Kingsly Thomas பதில் பேச முடியாவிட்டால் ஞானி யாய் இருந்தாலும் சரி கணேசுவாக இருந்தாலும் அவர்களின் கடைசி ஆயுதம் ஆபாசமாக பேசி வாதத்தை திசை திருப்புவது தான்.நான் கேட்டது இந்த பதிவுக்கு கருணாநிதியை ஏன் பிரண்டுற & சங்கரமடத்தின் தமிழ் சேவை என்ன.இதற்க்கு பதில் பேசாமல் கட்டிங…See More
15 hours ago · Like
Subash Chandra Bose · 2 mutual friends
செயலலிதா அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம் என்றெல்லாம் எப்பொழுதும் நீட்டி முழங்கியது கிடையாது. ஆனால் கருணாநிதி இவை அனைத்திற்கு தான் ஒருவர் மட்டுமே மொத்த குத்தகைதாரர் போல செயல் படுவதால் இது போன்ற கேள்விகள் அவரை நோக்கி வந்தே தீரும்.
11 hours ago · Like
Murugan Kuruswamy · 33 mutual friends
தனக்குண்டானதை , தெரிந்ததை பேசுவது தவறாகாது , ஜெ பேசவில்லை என்பதற்காக அகநானூறு புறநானூறை கலைஞர் பேசக்கூடாதா ?
Dear Admin,
You Are Posting Really Great Articles… Keep It Up…We recently have enhanced our website, “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…
To add “Nam Kural – External Vote Button” to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.
நன்றிகள் பல…
நம் குரல்
கருணாநிதி என்பதும் தமிழ்பெயர் இல்லை- அருட்செல்வர் என்பதே அந்த பெயரின் தமிழ்வடிவம்.
@ வியாசர் – தன்மயா என்பது தமிழ் பெயரில்லையா. தன்மை என்றால் என்ன என்று தெரியும் தானே. அதை விடுங்கள் இலங்கைத் தமிழர் மட்டும் என்ன பெயர் வைக்கின்றனர். மொழியிலே இல்லாத பெயர். டுனிசி, விதுசி, டிலானி, துலானி, என இலங்கைத் தமிழர்களில் 99 % பெயர்கள் தமிழே கிடையாது. அது போக தமிழகத்தில் குப்புசாமி, பச்சையம்மா, வெள்ளைச்சாமி, கருப்பையா போன்ற பெயர்களை பார்த்து நக்கல் அடிப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள். இவர்கள் தமிழகத் தமிழர்களின் பெயரை பற்றி பேச வந்துவிட்டார்கள். அவ்வ்வ்.. வியாசர் என்ற பெயரே, மாற்றான் மனைவியோடு புணர்ந்து கள்ளப் பிள்ளை பெற்று பாண்டவ கௌரவ குடிக்கு தாத்தாவான கோத்தாவான பெயர். இதை முதலில் மாற்றிவிட்டு இங்கு வந்து பேசும்..
@ சரவண குமார் – என்ற பெயரே தமிழ் கிடையாதுங்க ஐயா. ஷ்ரவண குமார் என்ற வடமொழி திரிபு. ஷ்ரவண என்றால் புகழ் குமார் என்றால் மைந்தன். புகழ் மைந்தன் என மாற்றிக் கொள்ளுங்கள்.
பெரியாரின் கொள்கையை கடைபிடிக்கும் புரட்சி தலைவி அம்மாவை குறை சொல்ல யாருக்கும் தகுதி கிடையாது