கால்டுவெல்லுக்கு நேர்ந்த அவமானம்!

10330480_753416194679182_7761847912043421482_n
ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 200 வது பிறந்த நாள் விழாவை, ‘பெரியாரை தமிழரல்ல’ என்று புறக்கணிக்கும் உலகத் தமிழர் பேரமைப்பபின் சார்பாக அதன் தலைவர் பழ.நெடுமாறன் 22-05-2014 அன்று பெங்களூரில் கொண்டாடியிருக்கிறார்.

‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுதியதோடு ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்று ஆரியத்திற்கு எதிராக திராவிடம் என்பதையும் உறுதியோடு பதிவு செய்தவர் மரியாதைக்குரிய கால்டுவெல்.

சமஸ்கிருத கலப்பில்லாமல் தமிழ் தனித்து இயங்கும் தன்மை கொண்டது என்பதோடு, தமிழை திராவிட மொழி என்றே உறுதி செய்தார்.

அதனாலேயே, அவருக்கு பின் வந்த பாரதியார், ‘திராவிடம்’ என்பதையும் கால்டுவெல்லையும் திட்டமிட்டுத் தவிர்த்தார். கால்டுவெல் உட்பட, வெள்ளை கிறித்துவப் பாதிரிகள் பாரத நாட்டுக்குத் தீங்கு செய்து விட்டதாக சபித்தார்.

நீதிக் கட்சிக்கார்களை கடுமையாக விமர்சிப்பதற்கு மட்டுமே ‘திராவிடம்’ என்ற பெயரை பயன்படுத்தினார். திராவிடத்திற்கு பதில் ‘ஆரியம்’ என்பதையே பாரதியார் பெருமையோடு பறை சாற்றினார்.

இப்படியாக கால்டுவெல்லுக்கு எதிராகவும், தமிழை விட சம்ஸ்கிருதம் உயர்வானது என்ற கருத்தும் கொண்ட பாரதியாரை தமிழராக சித்திரிப்பவரும், பெரியாரை தமிழரல்ல என்று புறக்கணிப்பவரும்,

திராவிட இயக்க எதிர்ப்பாளருமான பழ. நெடுமாறனுக்கு; திராவிட கருத்தியலுக்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் தந்த ராபர்ட் கால்டுவெல் பிறந்த நாளைக் கொண்டாட, யோக்கியதை இல்லை. இது பச்சையான சந்தர்ப்பவாதம்.

பழ. நெடுமாறன், கால்டுவெல் பிறந்த நாளைக் கொண்டாடியது அவரை அவமானப்படுத்தியதற்கு சமம்.

*

May 23 facebook ல் எழுதியது

காங்கிரசை முற்றிலுமாக ஒழிக்க எளிய வழி

இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்

14 thoughts on “கால்டுவெல்லுக்கு நேர்ந்த அவமானம்!

  1. //தமிழை விட சம்ஸ்கிருதம் உயர்வானது என்ற கருத்தும் கொண்ட பாரதியாரை//

    அப்படி எதையும் இதுவரை கேள்விப்பட்டதில்லையே. பாரதியார் எங்கே, எந்தப் பாட்டில் “தமிழை விட சம்ஸ்கிருதம் உயர்வானது” என்று கூறியிருக்கிறார் என்பதைத் தயவு செய்து கூறவும். நன்றி.

  2. //பெரியாரை தமிழரல்ல என்று புறக்கணிப்பவரும்,//

    பெரியார் தமிழரல்ல என்ற உண்மையைக் கூறுவது பெரிய தவறா? 🙂
    பெரியார் எங்கேயாவது அல்லது எப்பொழுதாவது தன்னைத் தமிழனாக அடையாளப்படுத்தியிருக்கிறாரா? அதாவது எனது பெற்றோர் தமிழர்கள், அவர்களின் தாய் மொழி தமிழ் அல்லது எனது முன்னோர்கள் தமிழர்கள், அதனால் நானும் தமிழன் என்று கூறியிருக்கிறாரா என்பதை அறிய ஆவலாக உள்ளது.

  3. viyasan பெரியார் பற்றி குறைசொல்வதற்கு உங்களுக்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. ஆனால் பாரதியார் பற்றி மட்டும் ஆதாரம் வேணும்?
    போய் பாரதியாரை படிச்சிட்டு வந்து அதுக்கு பிறகு கேளுங்கள்?

  4. பாரதியாரை நானும் படித்திருக்கிறேன். அதனால் தான் ஆதாரம் கேட்கிறேன். பெரியாரோ அல்லது அவரது முன்னோர்களோ தமிழர்களல்ல என்பது தெரியும் ஆனால் அவர் தன்னைத் தமிழனாக அடையாளப்படுத்தினாரா என்று எனக்குத் தெரியாது. பெரியார் தமிழனல்ல என்ற உண்மையைக் கூறுவது, அவரைக் குறை சொல்வதாகுமா?

    “தமிழை விட சம்ஸ்கிருதம் உயர்வானது என்ற கருத்தும் கொண்ட பாரதியார்” என்று கூறிய நீங்கள், ஆதாரமில்லாமல் எழுத மாட்டீர்கள் என்ற ஒரு நம்பிக்கை தான். ஆனால் அது உங்களின் வெறும் கற்பனை, சும்மா உணர்ச்சிவசப்பட்டு அப்படிக் கூறி விட்டீர்கள் என்றால் பரவாயில்லை. 🙂

  5. சிங்களத் தீவுக்கோர் பாலம் அமைப்போம் என பாடிய பாரதியாரை நானும் பாராட்டுகின்றேன். அதைத் தானே இன்றுள்ள தமிழீன தேசியவாதிகளும் புலி பீனாமிகளும் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர். ஆகையால் பாரதியாரே சிறந்தவர். அவ்வ்வ்வ்.

  6. வியாசன் போன்ற சில ஈழத்து புலம் பெயர் சைவ வெள்ளாள வியாதியஸ்தர்களும், அவர்களோடு சேர்ந்து கும்மியடிக்கும் இந்து சூத்திர சாதி வெறியாள தமிழ்நாட்டு புலி பீனாமிகளும் தமிழை வளர்க்கின்றேன் என்ற போர்வையில் பார்ப்பனியத்தின் புட்டங்களைக் கழுவிக் கொண்டிருக்கின்றார்கள். பெரியாரை அவர் கன்னட வம்சாவளித் தமிழர் என்பதற்காக விமர்சிக்கும் பேமானிகள் இந்துத்வா சக்திகளோடும், சாதிய வாந்திகளோடும் ஒன்றாக சேர்ந்து கும்மியடிக்கின்றதை கவனித்து தான் வருகின்றோம். புலிப் பீனாமிகளின் ஆசை தமிழக மக்களை சாதி, மதம், இன வகையாக பிரித்து அரசியல் பண்ண வேண்டும். அதன் முதற்கட்டமாகவே தலித் விரோதம், இஸ்லாமிய விரோதம், இந்துத்வா அபிமானம் என பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

  7. தமிழ் வழி ஆரம்ப கல்வியை தடை செய்த அம்மணியார், போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் எனவும், ஈழத்து அகதிகளை புலிகள் என பிறாண்டியவர், தலித் மக்களின் நிலங்களை அபகரித்து பங்களாக்கள் கட்டியவர், மத மாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்து இந்து அபிமானம் காட்டியவர், கயமைத் தனமாக சிதம்பரம் கோவிலில் தமிழ் பாடக் கூடாது என தீக்சிதக் கூட்டங்களுக்கே கோவிலை தாரை வாத்தவர் இன்று புலிப் பீனாமிகளுக்கும் ஈழத்து வெள்ளாள பேமானிகளுக்கும் தாயாகிவிட்டார். அவ்வ்வ்..

  8. 100% Truth

    “வியாசன் போன்ற சில ஈழத்து புலம் பெயர் சைவ வெள்ளாள வியாதியஸ்தர்களும், அவர்களோடு சேர்ந்து கும்மியடிக்கும் இந்து சூத்திர சாதி வெறியாள தமிழ்நாட்டு புலி பீனாமிகளும் தமிழை வளர்க்கின்றேன் என்ற போர்வையில் பார்ப்பனியத்தின் புட்டங்களைக் கழுவிக் கொண்டிருக்கின்றார்கள். பெரியாரை அவர் கன்னட வம்சாவளித் தமிழர் என்பதற்காக விமர்சிக்கும் பேமானிகள் இந்துத்வா சக்திகளோடும், சாதிய வாந்திகளோடும் ஒன்றாக சேர்ந்து கும்மியடிக்கின்றதை கவனித்து தான் வருகின்றோம். புலிப் பீனாமிகளின் ஆசை தமிழக மக்களை சாதி, மதம், இன வகையாக பிரித்து அரசியல் பண்ண வேண்டும். அதன் முதற்கட்டமாகவே தலித் விரோதம், இஸ்லாமிய விரோதம், இந்துத்வா அபிமானம் என பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.”

  9. // தமிழை வளர்க்கின்றேன் என்ற போர்வையில் பார்ப்பனியத்தின் புட்டங்களைக் கழுவிக் கொண்டிருக்கின்றார்கள். //

    எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பது தெரியாமல் உளறுவதற்கு கோணங்கிச் செல்வனை வெல்ல யாராலும் முடியாது. பார்ப்பனீயத்தை எதிர்த்ததால் பார்ப்பனர்களாலேயே ஒதுக்கி வைக்கப்பட்டது மட்டுமன்றி “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்ற தமிழ்ப் புலவனை அவதூறு பேசுகிறார் ஒருவர், அதற்கு அவரிடம் ஆதாரம் கேட்டதற்கு பார்ப்பனீயம், புட்டம் என்று புலம்புகிறார் கோணங்கிச் செல்வன். இதில் வேடிக்கைஎன்னவென்றால் வேறொரு இணையத்தளத்தில் பார்ப்பனர்கள் என்னைத் “துலுக்கக்கூலி” என்கிறார்கள். 🙂

  10. //பெரியாரை அவர் கன்னட வம்சாவளித் தமிழர் என்பதற்காக விமர்சிக்கும் பேமானிகள் //

    எப்படித் தான் கற்பனை செய்து பார்த்தாலும் பெரியார் தமிழனல்ல, அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பல சேவைகளைச் செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் சாதியொழிப்பு விடயத்தில் போராடி ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார். அதை யாரும் மறுப்பதில்லை, ஆனால் அதற்காக அவர் ஒரு தமிழன் என்று எதற்காக பொய் சொல்ல வேண்டும். தமிழ்பேசும் கன்னடர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல.

    தமிழ்நாட்டு மக்கள் – இந்தியர்கள் சம்பந்தமான விடயங்களில் மட்டும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் எப்படியான தீர்மானங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொண்டு கும்மியடிக்கலாம். ஆனால் தமிழ் -தமிழர் சம்பந்தமான விடயங்களில் தமிழ்நாட்டிலுள்ள ஒரு சிலர் மட்டும் உலகத் தமிழர்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த முடிவையும் மாற்றங்களையும் தீர்மானிக்கவோ, ஏற்படுத்தவோ முடியாது. உதரணமாக, அப்படியான அவசரக் குடுக்கை முடிவு தான் தைமாதத்தை தமிழர்களின் வருடப் பிறப்பாக, ஒருதலைப்பட்சமாக ஒரு சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அறிவித்ததும். அதே போன்று யார் தமிழர், யார் தமிழரல்ல என்ற முடிவை பெரியாரியத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டுத் திராவிட எச்சங்களும் பெரியாரிஸ்டுக்களும் மட்டும் தீர்மானிக்க முடியாது. அவர்களின் முடிவுகளை மதிக்கவோ அல்லது ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவையோ, கட்டாயமோ உலகத்தமிழர்கள் அனைவருக்கும் கிடையாது.

  11. //சிங்களத் தீவுக்கோர் பாலம் அமைப்போம் என பாடிய பாரதியாரை நானும் பாராட்டுகின்றேன்//

    அதில் கூட பாரதியார் தான் தமிழன் என்பதை நிரூபித்திருக்கிறார் என்று தெரியாதவர்கள் தான் இப்படி உளறுவார்கள். அவ்வ்வ்வ். 🙂

    பண்டைத் தமிழர்கள் எவ்வாறு ஊர்களுக்கும், நிலப்பரப்புகளுக்கும் பெயர்களை இட்டார்கள் என்று அவதானித்தால் பாரதியார் சிங்களத் தீவு என ஏன் கூறினார் என்பதை அறியலாம். ஒவ்வொரு நிலத்திலும் எந்த வகையான செடி, கொடிகள், உயிரினங்கள் அல்லது இயற்கை வளங்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனவோ அந்த அடிப்படையில் தான் பழந் தமிழர்கள் ஊர்களுக்கும், நாட்டுக்கும் பெயரிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்த வழக்கத்தை இன்றும் ஈழத்தில் காணலாம். உதாரணமாக, காக்கை தீவு எனும் யாழ்ப்பாணத்துக்கு அண்மையிலுள்ள தீவொன்றில் உள்ள மரங்களில் தான் காக்கைகள், பறவைகள் எல்லாம் இரவில் போய்த் தங்கும். அங்கு போய்த் தங்கும் பறவைகளில் பெரும்பான்மை காக்கைகள் தான். அதனால் அதற்கு காக்கைதீவு எனப்பெயரிட்டனர் அதன் கருத்து அங்கு வேறு பறவைகள் இல்லை என்பதல்ல. அது போன்றே இலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் இலங்கை சிங்களத்தீவென அழைக்கப்பட்டது. அதன் கருத்து அங்கு தமிழர்களில்லை சிங்களவர்கள் மட்டும் தான் வாழ்கிறார்கள் என்பதல்ல. இது கூட விளங்காது விட்டால் கோணங்கிச்செல்வனுக்கு sock puppet மூலம் விளக்கினாலும் விளங்காது. 🙂

  12. படத்தின் கீழே “ROBERT” என்பதை ROBORT” என அச்சடித்து இருக்கிறார்களே. அந்தக்கால வழக்கமா?

Leave a Reply

%d bloggers like this: