இலக்கியவாதி கும்பலில் சேர்த்ததால் வருத்தமா தான் இருக்கு

ISwares

பிறப்படிப்படையில் ஜாதி, மதம் வழியாக நட்புகள், தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் ‘அரசியல்’ செய்பவனும் ‘தொழில்’ செய்பவனும் அல்ல நான்.

தனிப்பட்டமுறையில் ஒருவரை ஒரு விசயத்தை விமர்சிப்பதால், ஆதரிப்பதால் ‘பணம், பொருள், ஊடக வெளிச்சம்’ என லாப, நஷ்டம் கணக்குப் பாரத்து எழுதுகிற ‘கணக்காளன்’ அல்ல நான்.

வெறும் தேர்தல் அரசியலும், அற்ப இலக்கியப் பின்னணியையும் கொண்டு எழுதுவபன் அல்ல நான்.

எதை ஆதரிப்பதாக,எதிர்ப்பதாக இருந்தாலும் பெரியார், டாக்டர் அம்பேத்கர், மார்க்ஸ் இவர்களின் சிந்தனையின் பின்னணியில் தான் செய்கிறேன். அதற்காக நான் நிறைய மெனக் கெடுகிறேன்.

டாக்டர் அம்பேத்கர், பெரியார் மீது அவதூறு செய்தால் அதற்கு எதிராக தொடர்ந்து இயங்குகிறேன். அதனால் தோழமையானவர்களிடமும் நிறைய விரோதமும் தேடிக் கொள்கிறேன்.

ஜாதி, இந்து மதம் குறித்த என்னுடைய எழுத்துக்கள் ஆய்வு கண்ணோட்டம் கொண்டவை.

கலை, இலக்கியம் குறிப்பாக திரைப்படம், இசை குறித்த என்னுடைய ரசனையும், விமர்சனமும் அத்தகையதே.

உறுதியாக சொல்வேன் அவை தனித் தன்மை கொண்டவை. அதுவரை யாரும் பார்க்காத கண்ணோட்டமும் கூட.
அப்படி எழுத வேண்டிய தேவையிருந்தால்தான் எழுதுவேன்.

இப்படி எழுதுகிற, இயங்குகிற என்னை கொண்டுபோய், சுஜாதா ரசிகர் மன்றத் தலைவரும் பிரபல எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் கூட சேர்த்துப் பட்டியல் போட்டா வருத்தமா இருக்காதா?

*
June 6  அன்று facebook ல் எழுதியது.

உங்களின் உலகத் தரம் வாய்ந்த பட்டியலில் தயவு செய்து சேர்த்து விடாதீர்கள்

சுஜாதாவும் சுஜாதா வைப் போன்றவர்களும்..

சாரு நிவேதிதா:இலக்கிய உலகின் பவர்ஸ்டார் சீனிவாசன்; ஜெயமோகன்? திமுகவால் நேர்ந்த..

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

5 thoughts on “இலக்கியவாதி கும்பலில் சேர்த்ததால் வருத்தமா தான் இருக்கு

  1. உதாரணதிற்கு ஒரு குழந்தை ஒரு குச்சியை வைத்துகொண்டு அழிச்சாட்டியம் பண்ணிகொண்டிருந்தால் அக்குழந்தையின் பாதுகாப்பு மற்றும் அடுத்தவர் பாதுகாப்பு கருதி நாம் முதலில் அக்குழந்தையிடமிருந்து அந்த குச்சியைதான் பிடுங்குவோம்.
    பிறகு அக்குழந்தையின் வயது மற்றும் குழந்தையை கையாள்பவரின் அனுபவத்தை பொறுத்து அக்குழந்தையை கண்டித்தல்,செயலின் விபரீதத்தை உணர்த்துதல்,பாதுகாப்பாக கையாள கற்றுத்தருதல் முதலியனவற்றை செய்வோம்.
    பாதுகாப்பை முன்னிட்டு அமையும் முதல் காரணியான குச்சியை பிடுங்குதல் என்பது எந்நிலையிலும் மாறாது நடைபெறக்கூடியது.
    மேற்குறிப்பிடப்பட்ட இரண்டாம் முன்றாம் காரணிகள் சூழ்நிலைகளைப் பொறுத்து வேறுபடும்.
    அதுபோல பெரியார் அன்றைய சுழலில் சமுதாயத்தின் ஏற்ற தாழ்வுகளுக்கு மிக முக்கிய காரணமாக இருந்த கடவுள் கொள்கையை எதிர்த்தார்.
    ஏனெனில் கடவுள் பெயரை சொல்லித்தான் ஒரு சிலர்மட்டும் தங்களை கடவுளுக்கு மிக நெருக்கமானவர்களாகவும் பலரை தீண்டதகாதவர்களாகவும் பிரிவினையை உண்டாக்கி சுக போக வாழ்வை பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வந்தார்கள்.
    குச்சியால் பிரச்சனையில்லை அதை கையாளும் குழந்தையால்தான் அக்குழந்தைக்கும் அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கும் பிரச்னை என்பதுபோல இங்கே கடவுளால் பிரச்னை இல்லை அதை கொண்டு சிலர் சுயநலமாக செயல்பட்டதால்தான் பிரச்சனை என்பதை உணர்ந்த பெரியார் குச்சியை பிடுங்குவதுபோல கடவுள் மறுப்பு கொள்கையை கைகொண்டார்.
    அச்சுழலில் கடவுளைப்பற்றி தெளிவாக விளக்கி இறைவன் முன் அனைத்து மக்களும் சமம் என்று சமத்துவம் கொண்டுவருவது அவ்வளவு எளிதில் நடைபெறும் காரியமல்ல என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
    காலம் காலமாக அடிமைபட்டு கிடந்த மக்களை அவ்வளவு சீக்கிரம் அவர்களது நம்பிக்கைகளிலிருந்து விடுவிக்க முடியாது என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
    அதனால் அவர் உடனடி நடவடிக்கையாக கடவுள் மறுப்பை அடிப்படையாக வைத்து போராட்டத்தை துவக்கினார்.
    அவர் செய்தது ஒரு ஆரம்ப கட்ட நடவடிக்கை.
    அவருக்கு பின்வந்தவர்கள் அதை படிப்படியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருக்க வேண்டும்.
    ஆனால் சோகம் என்னவென்றால் அவரின் புத்தகங்களை படித்தவர்கள்,பேச்சை கேட்டவர்கள் ,உண்மையான தொண்டர்கள் என கூறிகொண்ட பலரும் பெரியார் ஆரம்பித்த இடத்திலேதான் இன்றளவும் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
    இது தான் இன்றிருக்ககூடிய தேக்க நிலைக்கு அடிப்படை காரணம்.

    (கோவிலுக்குள் அனைவரும் செல்ல இருந்த தடையை எதிர்த்து அவர் போராடியதே அவரின் என்ன ஓட்டத்தை நமக்கு புரிய வைக்கும்.அவர் கடவுள் மறுப்பை மட்டும் முழுமையாக செயல்படுத்துபவராக இருந்தால் மக்களிடம் கடவுளே இல்லை.ஆதலால் கோவிலுக்குள் உங்களை விடாததால் நமக்கு கெட்டுபோவது ஒன்றும் இல்லை .போய் அவரவர் வேலையை பாருங்கள் என்றுதான் சொல்லிருப்பார்.அல்லது இவர்கள் விடாவிட்டால் என்ன உங்களுக்கு தனியாக ஒரு கோவில் கட்டிக்கொண்டு வழிபடுங்கள் என்று சொல்லி இருப்பார்.ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.(என்ன செய்தார் என்பது உங்களுக்கு தெரியும்)ஆதலால் அவரது பிரச்சனை கடவுள் அல்ல.கடவுளை வைத்து பிறரை ஏமாற்றி பிழைத்துகொண்டிருந்தவர்களைதான் அவர் எதிர்த்தார்.கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் அடிமைப்படுத்துவதையும்,ஏமாற்றப்படுவதையும் தான் அவர் எதிர்த்தார்.)

    எலி தொல்லைதவிர்க்க பூனை வளர்த்து தியானத்திற்கு இடையுறு நேராமலிருக்க அப் பூனையை ஓரிடத்தில் கட்டிபோட்டுவிட்டு தியானத்தை தொடர்வதை பழக்கமாக கொண்ட குருவின் செயலை மட்டும் பார்த்து அவருக்குபின்வந்த சீடர்களும் தியானத்திற்கு முன் ஒரு பூனையை கட்டிபோடுவதை காலம் காலமாக ஒரு சடங்காகவே கொண்டதுபோல தான் பெரியாரின் இன்றைய சீடர்களது நடவடிக்கைகள் இருக்கின்றன.
    நீங்கள் படித்தவர் திரு.மதிமாறன்.சிந்தியுங்கள்

    உங்களது கடவுள் மறுப்பு பற்றி கூட நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை.

    ஆனால் (பிறர்)ஆரம்பித்தபுள்ளியிலேயே நீங்கள் இன்னமும் நின்றுகொண்டு அடுத்தவரின் பயண கட்டுரையை வாசித்து அதை உங்கள் அனுபவமாக எண்ணிக்கொண்டு உங்களை நீங்கள் உலகம் சுற்றிய வாலிபனாய் கருதிகொண்டிருக்கிரீர்கள் திரு.மதிமாறன்.

    உங்கள் சொந்த பயணத்தை துவக்குங்கள் திரு.மதிமாறன்.

  2. you can not be considered as a writer at all. purely hatred politics. manushya puthran only should feel shame.

  3. //ஜாதி, இந்து மதம் குறித்த என்னுடைய எழுத்துக்கள் ஆய்வு கண்ணோட்டம் கொண்டவை.

    கலை, இலக்கியம் குறிப்பாக திரைப்படம், இசை குறித்த என்னுடைய ரசனையும், விமர்சனமும் அத்தகையதே.

    உறுதியாக சொல்வேன் அவை தனித் தன்மை கொண்டவை. அதுவரை யாரும் பார்க்காத கண்ணோட்டமும் கூட.
    அப்படி எழுத வேண்டிய தேவையிருந்தால்தான் எழுதுவேன்.//

    ha ha ha! இதுக்கு வாயால சிரிக்க முடியாது!!

  4. எல்லா எழுத்தாளர்களும் இதான் சொல்லிகிட்டு அலையிறாங்க…மனுஷ்ய புத்திரன் பேரு வச்சிகிட்டு அலையிற அப்துல் ஹமீது உட்பட

  5. கனத்து, கசந்து, வெறுத்து என எதிர்மறை எண்ணங்களின் அழுத்தங்களால் மனம் தவித்துக்கொண்டிருக்கும்போது இதுபோன்ற அதீத நகைச்சுவை மிளிரும் எழுத்துக்கள்தான் ஒரே உதவி.

    உங்கள் பேருதவிக்கு மிக்க நன்றிகள்.

Leave a Reply

%d bloggers like this: