பெரியாரை விட சிறந்தவர் சுஜாதா

2
//மனுஷ்யபுத்திரனை மறுத்துவிட்டு தான் உங்களை வாசிக்கனுமா தோழர்?// – Ansari Thameemull.

என்னை வாசிப்பதை விடுங்கள்…

திராவிட இயக்க உணர்வு பொங்குகிற மனுஷ்யபுத்திரன், தனது உயிர்மை பதிப்பகத்தின் சார்பாக எழுத்தாளர்களுக்கு தருகிற விருதின் பெயர் ‘பெரியார் விருதா?’ இல்லை, அவர் அதிகம் கொண்டாடுகிற ‘கலைஞர் விருதா?’

இவர்கள் பெயரில் விருது இல்லை என்பது கூட பிரச்சினையில்லை. ஆனால், பெரியாரை விரோதியாக, திராவிட இயக்கத்தை கேவலமாகப் பார்த்த இந்து, பார்ப்பன ஜாதி வெறியர் சுஜாதா பெயரில் தான் அந்த விருது.

சரி, திராவிட இயக்க உணர்வை விடுங்கள். இலக்கியத்தில் தகுதி குறித்து அதிகம் பேசுகிற மனுஷ்யபுத்திரன்,

தனக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்தவர் என்ற ஒரே காரணத்திற்காக தகுதியற்ற எழுத்தாளர் சுஜாதா பெயரில் விருது வழங்குவதுதான் இலக்கியத்திற்கான தகுதியா?

இஸ்லாமியர்களை துரோகிகளாக சித்திரித்து கமல் எடுத்த உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம் படங்களுக்கு அவர் தெரிவித்த ஆதரவு;

இந்துக் கண்ணோட்டம் கொண்ட சுந்தர ராமசாமி, கமல் போன்ற பார்ப்பன அறிவாளிகளுக்கு ஒரு இஸ்லாமிய துருப்புச் சீட்டாக தன்னை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து, அதன் மூலம் அவர் அடைந்த இலக்கிய அந்தஸ்து;

அண்ணாதுரை, கலைஞர் போன்ற திராவிட இயக்க எழுத்தாளர்கள் குறித்து ‘நவீன’ எழுத்தாளர்கள் குறிப்பாக ஜெயமோகனும் சாருநிவேதிதாவும் மிக, மிக, மிக இழிவாக (எத்தனை மிக, மிக வேண்டுமானலும் போட்டுக் கொள்ளலாம்.) பேசும்போது அவர் காத்த கள்ள மவுனம்;

இது குறித்தெல்லாம் தவிர்த்து விட்டு நீங்கள் அவரை வாசிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

*
June 6  அன்று facebook ல் எழுதியது.

எழுத்தாளனுக்கு மரியாதை: ஜெயமோகர்-மனுஷ்யபுத்திரர் கோபம்

சாரு நிவேதிதா:இலக்கிய உலகின் பவர்ஸ்டார் சீனிவாசன்; ஜெயமோகன்? திமுகவால் நேர்ந்த..

8 thoughts on “பெரியாரை விட சிறந்தவர் சுஜாதா

 1. No human mind could be filled with so much hatred. I sincerely pity you. Please take care and grow up.

 2. Dear Mathimaran,

  i am really impressed by your beautiful writing in Tamll. Your command in the language is simply great. I do not accept your views. However I am delighted to read your articles. I think you have hatred on many things. If possible try to look at different way.

 3. பெரியாரும் அம்பேத்கரும் சமுதாயத்தில் மக்களிடையே காணப்பட்ட தீண்டாமை பிரிவினையை நீக்கி சமத்துவமான சமுதாயம் உருவாக பாடுபட்டார்கள்.
  ஆனால் அவர்களை நன்கு அறிந்ததாக (அவரே சொல்லிகொள்ளும்)அவர்களின் தீவிரமான தொண்டர்கள் இருவருள் ஒருவரானதிரு.மதிமாறன் (மற்றொருவர் திரு. ராசாவாம் ) அவற்றிற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார் என்பதை அவர் உணர்வதாக தெரியவில்லை.

  அவாளுக்கு இருக்கும் உயர் சாதி திமிருக்கும் தீட்டு குணத்திற்கும் சற்றும் சளைத்தவரில்லை திரு.மதிமாறன்.

  வேண்டுமாயின் திரு. மதிமாறன் அவர்கள் தன்னை அவாளுக்கு போட்டியாக கண்முடித்தனமாக அவர்களை எதிர்ப்பது என்ற விதத்தில்மட்டும் தீவிரமாக செயல்படுபவர் என்று மட்டும் தன்னை சொல்லிகொள்ளலாம்.

  மற்றபடி பெரியார்,அம்பேத்கார் கொள்கைகளுக்கும் திரு மதிமாறனுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை

 4. பெரியார் பெயரால் விருது ஏற்படுத்தி அதை பால ஜோதிடம் கோபாலுக்கு தருவதை விட, சுஜாதா பெயரால் தொ பரமசிவன் அவர்களுக்கு விருது தருவது மேலானதல்லவா?

 5. அன்பு மதிமாறன், காலச்சுவடில் அவர் பணியாற்றிய போது பார்ப்பன நுணுக்கங்களை அங்கு கற்றிருக்கலாம். ஆனால் அவர் மிகச் சிறந்த கவிஞர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இன்று கவிஞர்கள் வியாபாரிகளாக, அரசியல்வாதிகளாக மாறிப்போய் இருப்பதை பற்றி என் முகநுால் பக்கத்தில் கூட எழுதியிருந்தேன். நேர்மையான பதிவு.

 6. Nobody needs garuxl’s pity. Mathimaran loves Truth. If that be so he can not but hate falsehood.

Leave a Reply

%d