கதை திரைக்கதை ‘வசனம்’ மயக்கம்
வடிவேலுவும் பார்த்திபனும் பேசும் வசன முறையையே எல்லா பாத்திரங்களுக்கும் விரிவாக்கியிருக்கிறார்.
முதல்பாதியில் சுவாரஸ்யமற்ற காட்சிகளை வைத்துக் கொண்டு. முழு முழுக்க புத்திசாலித்தனமான வசனங்களாலேயே பார்வையாளர்களை வசப்படுத்துகிற பார்த்திபன்;
படத்தில் எதை விமர்சிக்கிறாரோ அதாவது வழக்கமான சினிமாவாக இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு வழக்கமானதேயே ஒரு முறையல்ல, இரண்டு முறை செய்கிறார்.
படத்தில் நாயகனாக வரும் இயக்குநர் தன் சொந்த வாழ்க்கையில் நடக்கிற விசயத்தை, ஆர்யா-அமலாபால் இருவரையும் வைத்து கதை சொல்வதாக மீண்டும் அதே சம்பவங்களை நிகழ்த்திக் காட்டுகிறார். முதல் முறையே ‘ஜவ்’ மிட்டயாக இழுத்தது, அதையே மீண்டும் பார்க்கும்போது ‘பம்புள்காம்’ அளவிற்கு.
முதல்பகுதிப் போன்ற புத்திசாலித்தனமான வசனங்களும் பிற்பகுதியில் இல்லை. அது போலவே பிற்பகுதியும் இருந்திருந்தால்.. படம் இன்னும் பெரிய சூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.
விரும்பம்போல் வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து துவங்கிய படத்தை, எப்படி முடிப்பது என்ற குழப்பமே இரண்டாம் பகுதி.
என்னுடன் படம் பார்த்த என் சித்தப்பா மகன் கார்த்திகேயன் சொன்னான்:
அய்யா படத்துல வடிவேலு தியேட்டர் ஓனரா வருவார். ரஜினியின் அருணாசலம் படத்தின் கடைசி ரீல் பெட்டியை குரங்கு தூக்கிட்டு ஓடிடும். அதை மீட்க முடியாமல் வடிவேலு, தியேட்டர் ஆப்ரேட்டரிடம் சொல்லுவார்,
அடுத்த வாரம் நம்ம தியேட்டர்ல பாட்சாதானே. அதுல யாரு வில்லன் ரகுவரன். இதுல யாரு வில்லன் ரகுவரன். எடுத்து ஓட்றா அந்த ரீல என்பார்.
அதுகூட வித்தியாசனமான முயற்சிதான். அதுபோல் இருக்கிறது இந்தப் படத்தின் பிற்பகுதி, என்றான்.
August 25
World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் அமெரிக்க மூடத்தனமும்
2 thoughts on “கதை திரைக்கதை ‘வசனம்’ மயக்கம்”