விநாயகனின் ‘மர்ம’ விளையாட்டுகள்

ganesha_games

கிராமங்களில் ‘இந்துக்கள்’ என்ற அடையாளத்தோடு தலித் மக்கள் குடியிருக்கும் ‘சேரி’க்குள்ளும் வரச் சொன்னால், தனக்கு தீண்டாமை ஒட்டிக் கொள்ளும் என்று சிலிர்த்துக் கொண்டு போகும் இந்து கடவுள்கள்…

நகரங்களில் தலித் இளைஞர்களுக்கு ‘இந்துக்கள்’ என்று முக்கியத்துவம் கொடுத்து;
இந்துக்கள் அல்லாத இஸ்லாமியர் தெருவழியாக அதுவும் மசூதிகள் வழியாகத்தான் போவேன் என்று பிள்ளையார் அடம் பிடிப்பதின் மர்மம் என்ன?

*

சென்னை மீனவர்களை இந்துக்கள் என்று அடையாப்படுத்தி, விநாயகரை மீனவர் குடியிருப்புகளுக்கும் மீனவரை விநாயகர் ஊர்வலத்திற்கும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்துச் செல்லும் இந்து அமைப்புகள்;

திருவல்லிக்கேணி அக்ரஹாரத்தைச் சுற்றி, அடிக்கடி பல்லக்கில் உலா வரும் பார்த்தசாரதியையும்,
மயிலாப்பூர் கோயிலை சூத்திர பக்தர்கள் சும்மா சும்மா சுற்றி சுற்றி வருவதைப் போல், அடிக்கடி அக்ரஹாரத்தைச் சுற்றி வருகிற மயிலை கபாலிஸ்வரனையும்,

மிக அருகில் இருக்கும் மீனவர் குப்பத்திற்குள் வீதி உலா அழைத்துச் செல்லாமல் இருப்பதின் மர்மம் என்ன?

*

2004 டிசம்பர் 26 அன்று சென்னை மண்ணின் மைந்தர்களான மீனவர்களை பலி கொண்டது சுனாமி.

எஞ்சியவர்கள் உயிர் தப்ப அருகிலிருந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலிஸ்வரர் கோயில்களை நாடி ஓடினார்கள்;
ஆனால் அந்த பிரம்மாண்ட இந்துக் கோயில் கதவுகள் மீனவ ‘இந்துக்களுக்கு’ திறந்து தங்க இடம் தந்தால் அசுத்தம் செய்து விடுவார்கள் ‘தீட்டாகி’ விடும் என்று மூடியே இருந்தது.

100 சதவீதம் இந்துக்களான சென்னை மீனவர்களுக்கு சுனாமி தாக்குதல்களின் போது, கிறிஸ்த்துவ சாந்தோம் சர்ச் கதவுகளே திறந்து அடைக்கலம் தந்தது.

‘அடைக்கலம் தந்தவன் மீனவர்களுக்கு அந்நிய மதக்காரன்.’ விரட்டி விட்டவன் சொல்கிறான்.

சுனாமியின் போது விரட்டி அடித்தவர்கள் இப்போது விநாயகன் சிலையோடு மீனவ குப்பங்களுக்குள் ‘இந்து’ விளையாட்டு விளையாட வருவதின் மர்மம் என்ன?

*

கோயில்களில் விநாயகர் உட்பட சமஸ்கிருத மந்திரங்கள் சொல்லி வணங்கும் கடவுள்களுக்கு, வழக்கமாக மிருதங்கம், கடம், வீணை, புல்லாங்குழல் போனறவைதான் இசைக்கப்படும்; வீதி உலா புறப்படும்போது நாதஸ்வரம், தவில் கொண்டு தான் வாசிப்பார்கள்.

ஆனால் இப்போது விநாயகர் நகர் உலா புறப்படும்போது ‘பறை’ அடித்து கொண்டாடுவதின் மர்மம் என்ன?

September 7

விநாயகனே வினை செய்பவனே – வேழ முகத்தோனே வீண் வம்பனே

சிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்

7 thoughts on “விநாயகனின் ‘மர்ம’ விளையாட்டுகள்

 1. இந்த ஆளின் பதிவுகளைப் பார்க்க சிரிப்புத் தான் வருகிறது. தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிலும் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. அண்மையில் தமிழ்நாட்டில் பிரிக்க முடியாத பகுதியான தென்குமரியைப் பிரித்து, மலையாளிகளிடம் கொடுக்க வேண்டுமென ஒரு மந்திரி உளறுகிறார். அதைப் பார்த்ததும், உண்மையான தமிழ்ப்புலவனுக்கும், எழுத்தாளனுக்கும் இரத்தம் கொதித்திருக்கும், அதைப் புலவர் இராமனுசர் தனது உள்ளக்குமுறலைக் கவிதையில் காட்டி விட்டார். ஆனால் இவர் என்னடாவென்றால் பிள்ளையார் குளிக்கப் போனாரா, முருகன் எப்படி மூத்திரம் பெய்வார் என்பது பற்றியே தொடர்ந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரும் தமிழரல்லாத திராவிடராக இருப்பாரோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இப்படிச் சில “தமிழ் எழுத்தாளர்கள்” இருந்தால் தமிழ்நாடு உருப்பட்ட மாதிரித் தான்.

 2. 1. வியாசன் என்ற இந்த சூத்திரனின் ஊரில் மட்டுமல்ல, எங்களின் நாட்டிலும் கூட சூத்திரர்கள் எல்லாம், தமிழ்நாட்டுச் சூத்திரர்களைப் போல் தங்களின் முன்னோர்கள் கட்டிய கோயில்களைப் பார்ப்பனர்களின் கைகளில் கொடுத்து விட்டு ‘ஞே’ என்று எருமை மாதிரிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை.

  2. சும்மா வெளியே நின்று கடவுள் இல்லைஎன்று கூச்சலிட்டுக் கொண்டு, அந்தக் கடவுளையே இழிவு படுத்திக் கொண்டே எங்களுடைய குப்பத்துக்கு ஏன் அதே கடவுளைக் கொண்டு வரவில்லை என்று கேட்பதைப் பார்க்கச் சிரிப்புத் தான் வருகிறது.

  3. இலங்கையில் மீனவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் தமது முன்னோர் கட்டிக்காத்த கோயில்களையும்,. கடவுள்களையும் கைவிடவில்லை, மாறாக கைவசப்படுத்திக் கொண்டார்கள். சிலபிரபலமான கோயில்களில் பார்ப்பனர்களை வெளியேற்றி விட்டு, அவர்களே பூசைகளையும் செய்கிறார்கள். அங்கு சமக்கிருதமுமில்லை, பார்ப்பனர்களுமில்லை, மீனவர்கள் பூசை செய்ய மற்றவர்கள் அவர்களின் முன்னால் கைகட்டி நிற்கிறார்கள்.

  4. எங்களின் நாட்டில் ஒவ்வொரு கடலோரக் கோயில்களிலும் உள்ள பெருமாளும் சிவனும், முருகனும், பிள்ளையாரும், அம்மனும் (காளியும்), ஒவ்வொரு வருடமும் தவறாமல் கடல் தீர்த்தமாடுதல் என்ற பெயரில் மீனவர்களிடம் செல்கிறார்கள் அல்லது கப்பல் திருவிழா என்று கூடச் சுவாமியைப் படகிலேற்றி ஊர்வலம் போகும் திருவிழாவுமுண்டு.

  5. அதனால், இந்த விடயத்தில் எல்லாமே பார்ப்பனர்களின் தவறல்ல, தமிழ்நாட்டில் தமது முன்னோர்களின் கோயில்களில் தமதுரிமையை விட்டுக் கொடுத்த தமிழர்களின் தவறு. காபாலீச்சரரும் பார்த்தசாரதியும், வருடத்தில் ஓருமுறை தீர்த்தமாட மரினா பீச்சுக்கும் வரவேண்டும், அதாவது மீனவர் குப்பத்திலும் திருவிழா நடத்த வேண்டும் என ஒற்றுமையாகக் கேட்டால், கோயில் நிர்வாகம் அதைச் செய்யத் தான் வேண்டும்.

  6. அதை விட்டு, ஒரு நாளைக்கு முருகன் எப்படி மூத்திரம் பெய்வார் அவருக்குப் பன்னிரண்டு தலையிருக்குதே எத்தனை ‘அது’ இருக்குமென்றெல்லாம் இழிவு படுத்தி விட்டு, அதே முருகனைக் குப்பத்துக்கும் கொண்டு வரவேண்டுமென்றால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அங்கெல்லாம் கொண்டு போவதைத் தவிர்க்க வேண்டுமென்று நான் கூடத் தான் கூறுவேன்.

  7. இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் பல இந்துக் கோயில்களில் திருவிழாக்களில் பறை முழங்கும் வழக்கம் உண்டு. மதிமாறன் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்தவர் போல் தெரிகிறது. 🙂

 3. 1.’வியாசன் என்ற சூத்திரன்’ என்று தவறுதலாக ‘ஆதிக்க சாதி மேல் தட்டு இந்துவாகிய’ உங்களை உங்களின் பார்வையில் எருமைகளாக உள்ளவர்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டதை முதல் பத்தியிலேயே வக்கிரமாக வெளிப்படுத்தி உறுதிப்படுத்தியதற்கு நன்றி. தந்திரமான ஆன்மீகக் கருத்துக்களால் வஞ்சகமாக பறித்து விட்டு ஆடு நனைகிறதே என்று அழுவதைப்போல உள்ளது உங்கள் “உரிமை” கலந்த அக்கறை.

  2.சும்மா வெளியே நின்று…:- உங்களுடைய ஞானம் மிக ஆச்சரியமாக உள்ளது நண்பரே. உள் குத்து அரசியலை சுட்டிக் காண்பித்தால் உன் வேலையை மட்டும் பார்த்துட்டு போ என்று கொக்கரிக்கும் உங்களின் ஆணவச்சிரிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை நண்பரே.

  3. இலங்கையில் மீனவர்களும்…:- “மாறாக கைவசப்படுத்திக் கொண்டார்கள்” “வெளியேற்றிவிட்டு” என்று நீரே போட்டு கொடுத்து விட்டீரே சேம் சைடு கோலாக..!. நடராசன் கோயிலுக்க்காக சுப்ரீம் கோர்ட் வரை நாதாரிகள் உள்ளடி வேலை செய்ததை வசதியாக குடுமிக்குள் வைத்து விட்டீரே வழக்கம் போல..? சபாஷ்!

  4.எங்களின் நாட்டில்..:- உங்கள் நாட்டில் அதுவும் ஏதாவது மூலையில் நடப்பதாகவே வைத்துக் கொண்டாலும் தமிழ் நாட்டில் நடப்பது அநியாயம் என்று சொன்னால் மதிமாறன் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்தவர் என்று சிண்டு முடிய ஆரம்பித்து விட்டீரே..குலத்தொழில் பற்றோ?

  5. அதனால் இந்த விடயத்தில் எல்லாமே பார்ப்பனர்கள் தவறல்ல..:- மனுதர்மத்தையும் இதிகாசங்களையும் அவிழ்த்து விட்டு அரச அதிகாரத்தின் மூலம் தந்திரமாக பிரிவினையை உருவாக்கி விட்டு ஒற்றுமையை பற்றி பேசி நையாண்டி செய்யும் உமக்கு என்னதான் வேண்டும்? ராமதாஸ் உருவாக்கின சமூகக் கூட்டணி தானே?

  6. அதை விட்டு..:- லாஜிக்காக கேள்வி கேட்டால் பண்டிதர்கள் பதில் சொல்லுவதை
  விட்டு பாதுகாப்பை குறித்த அக்கறை மெய் சிலிர்க்க வக்கிறது சார். அக்ரஹாரம் மட்டுமல்ல சாமி சன்னதியே எவ்வளவு பாதுகாப்பானது என்று சங்கரராமன் ஐயர் குடும்பத்தாரிடமே கேளுங்களேன்.

  7. இலங்கையிலும் தமிழ் நாட்டிலும்…:- பறை முழங்கும் வழக்கம் இருக்கென்று தான் நாங்களும் சொல்லுகிறோம். பார்த்தசாரதி கோயிலிலோ கபாலீஸ்வரர் கோயிலிலோ இல்லை தாழ்த்தப்பட்ட சாமி கோயிலிலே தானே?

  தாழ்த்தப்பட்ட இந்துக்கள் கோயிலில் நுழைய தடை உங்கள் ஊரிலும் உண்டு ராசா…போ போயி புள்ள குட்டிய படிக்க வை. தண்ணியக் குடி..தண்ணியக்குடி…!

 4. viyasan இவர் ஈழத்து சூத்திரனா? தமிழக சூத்திரனை விட தீவிர அடிமைகள்இவர்கள் பார்ப்பனர்களுக்கு. இப்படிப்பட்ட பார்ப்பன அடிமைள் தான் தலைவர் பிரபாகரனையே இல்லாமல் செய்தவர்கள்.

Leave a Reply

%d bloggers like this: