‘ HAPPY குரு உத்சேவ்’
தத்துவத்திற்கான அடிப்படை தகுதிகூட இல்லாத வேதங்களை, புராணங்களை, இதிகாசங்களை இந்திய தத்துவங்களாக உலகெங்கும் பிரச்சாரம் செய்த ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டுமொத்த ஆசிரியர்கள் தினமாக அறிவித்தது முதல் தவறு.
அந்த தவறின் சரியான தொடர்ச்சிதான் ‘குரு உத்சவ்’
*
சும்மா ஒரு பெயருக்கு… மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட காரணத்திற்காகவே வேடன் ஏகலைவனின் கட்டைவிரலை காணிக்கையாக பலி வாங்கியவன் ‘துரோணாச்சாரி’.
இந்த ‘நாலுவர்ண நியாயஸ்தனை’ புனித குருவாக போற்றி, அவன் பெயரில்,
சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருது – ‘துரோணாச்சாரியா விருது’.
இப்ப வௌங்குதா, நாட்ல விளையாட்டும் வௌங்காம போனதுக்குக் காரணம்?
‘குரு உத்சேவ்’ வாழ்த்துகள்.
*
இந்திய தத்துவ மேதையும் ரஷ்ய சிறுமியும்
*
தலைவர் ஸ்டாலின் ஆட்சியின்போது ‘தத்துவமேதை’ ராதாகிருஷ்ணன் ரஷ்யாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சென்றிருக்கிறார்.
ஒரு பள்ளியில் ஒரு மாணவியிடம் ‘ஒரு ரூபாய்க்கு வாங்கிய பேனாவை அய்ந்து ரூபாய்க்கு விற்றால் நமக்கு என்ன கிடைக்கும்?’ என்பது போன்ற ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த குழந்தை, ‘இப்படி அதிக லாபம் வைத்து விற்றால் எங்கள் நாட்டில் ஜெயில் தான் கிடைக்கும்’ என்றதாம்.
Congratulations Guru Utsav
HAPPY GURU UTSAV ! தோழர் 😉
Fantastic View, He doesnt deserves to be named for Teachers day.