கத்தி: நிறைய விமர்சனங்களோடு அதிகமாக பிடித்திருக்கிறது

Vijay-AR-Murugadoss-Movie

இந்திய சினிமாவில் பன்னாட்டு நிறுவனத்தை வில்லனாக்கி ஒரு தமிழ் சினிமாவா?

மல்டி நேஷன் கம்பெனிகளுக்கு 50 பேர்கள் மட்டுமே அடியாட்கள் அல்ல; அவர்களுக்கு அடியாள் வேலை பார்ப்பதே அரசாங்கம் தான்.

‘சிறுத்தை’ சினிமா பாணியில் ஒரே உருவம் கொண்ட இருவர் ஆள் மாறாட்டம் மூலமாக தனிமனித சாகசம் செய்து, ‘பங்கஜ்லால் அடகு கடையை’க் கூட ஒழிக்க முடியாது.. அப்படியிருக்க..?

‘இவ்வளவு ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு’ என்கிற பாணியில் காதல் காட்சிகள்,

இன்னும் பன்னாட்டு கம்பெனிகளின் விளம்பர மாடலும் இயக்குநருமே இந்தப் படத்தை எடுத்து இருக்கிறார்கள்..
என்பது போன்ற கேள்விகளையும் தாண்டி இந்தப் படம் எனக்கு பிடித்திருக்கிறது.

காரணம். ‘மல்டி நேஷன் கம்பெனிகள் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும்`என்றும் `அதற்குள் இடஒதுக்கீடு வேண்டும்’ என்றும் பல அறிவாளிகளே வவேற்று, கோரிக்கை வைத்திருக்கிற இன்றைய சூழலில், அது முற்றிலுமாகவே ஆபத்து நிறைந்தது என்று எளிய ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தற்கும்,

துணிச்சலோடு ஊடகங்களின் ஊதாரித்தனத்தை அம்பலப்படுத்தியதற்கும்.

நட்சத்திர இயக்குநரும், நட்சித்திர நடிகரும் இதை செய்திருக்கிறார்கள் என்பதினால் ‘கத்தி’ இன்னும் கூடுதல் கவனம் பெறுகிறது.

ஆகவே எனக்கு ‘கத்தி’ நிறைய விமர்சனங்களோடே அதிகமாக பிடித்திருக்கிறது.
வாழத்துகள் இயக்குர் ஏ.ஆர். முருகதாசுக்கு.

23 October காலை எழுதியது.

Rush: ஒளி ஒலியின் உன்னதம்

World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் அமெரிக்க மூடத்தனமும்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம்

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

5 thoughts on “கத்தி: நிறைய விமர்சனங்களோடு அதிகமாக பிடித்திருக்கிறது

  1. Mr V . Mathimaran.

    you are absolutley correct. I support Kathi,because i am a farmer son who seen all the sufferings of farmers

  2. மதிமாறன்,

    ஆச்சர்யப்பட்டேன்- உங்களுக்கு பாராட்டக்கூடத் தெரியுமா என்று.

Leave a Reply

%d bloggers like this: