‘என்னடா நியாயம் இது?’

cimg7544d1
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இயங்கியவர்கள், அல்லது பிரிட்டிஷ் அரசைப் பார்த்துப் பயந்தவர்கள்; தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் பிரான்ஸ் அரசுக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த புதுச்சேரி போன்ற பகுதிகளில் தஞ்சம் அடைந்தார்கள். பாரதியைப் போல்.

‘பயந்தவர்கள்’ என்று சொல்வதற்குக் காரணம், பாரதியை விட அதிக வழக்குகளில் சம்பந்தப்பட்ட வ.உசி., புதுச்சேரியில் சென்று ஒளிந்து கொள்வதற்கு ஒருபோதும் முயற்சித்ததுகூட இல்லை.

சரி. பிரிட்டிஷ் அரசு மட்டும் தான் இந்தியாவை அடிமை படுத்தியது, மற்றப்படி பிரான்ஸ் அரசு, புதுச்சேரியின் மண்ணின் மைந்தன் அரசா? அதுவும் பிரிட்டிஷ் அரசு போலவே.. இந்தியப் பகுதிகளை அடிமை படுத்திக் கொள்யைடித்த அரசுதான்.

ஆனால், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இயங்கியவர்கள் தங்களைத் தற்காலிகமாக அல்லது குறைந்தப்பட்சம் பாதுகாத்துக் கொள்ள, ஆதிக்கப் பிரான்ஸ் அரசுக்கு எதிராக ‘பாரதமாதா’ வசனமெல்லாம் பேசாமல் உண்மையாக வாழ்ந்தார்கள்.

அதுபோல் மிகக் கொடுமையான இந்து – பார்ப்பனிய ஜாதிகளுக்கு எதிராகவும் கல்வி – வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இயங்காத ‘சமூகநீதி’ அரசியல் தளத்தில் இயங்கியவர்களை, ‘தேசத் துரோகிகள்’ என்று அன்றைய பாரதியும், அவரைப்போலவே தேசப்பக்தர் வேடத்தில் இருக்கிற இன்றைய பாரதிகளும் சொல்கிறார்கள்,

என்னடா நியாயம் இது?

‘சூத்திரனுக்கொரு நீதி-தணடச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி’

பாரதிப் பாட்டு; பாரதிக்கும் பாரதியார்களுக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது!

20 December at 22:10

புதிய தலைமுறையின் ‘நவீன’ பார்ப்பனியம்

புரட்சிகர பாரதியும் பிற்போக்கு பெரியாரும்

பாரதியும் பாரதிதாசனும் சின்ன விவாதமும்

பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்

5 thoughts on “‘என்னடா நியாயம் இது?’

  1. சுப்பரமணியன் எழுதிஉள்ள சாதி மறுப்புகள் அனைத்தும் தற்கால ஹிந்து அமைப்புகள் செய்யும் அதே யுத்தி என்று நான் நினைக்கிறேன் உங்கள் கருத்துகளை அறியலாமா?

Leave a Reply

%d bloggers like this: