தோழர் மதிமாறனுடன் ஓர் உரையாடல்
2012 ஆம் ஆண்டில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மனுசாஸ்திர எரிப்பு விளக்கமாநாடு நடத்தப்பட்டது. அதன்பிறகு மாவட்டங்கள்தோறும் கழகத்தோழர்கள் மனுசாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவத்துக்கு எதிரான, பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் பகுதிகளை எரிக்கும் போராட்டம் நடத்தி கைதானார்கள். ஈழப்போராட்டம், மரணதண்டனை ஒழிப்பு, முல்லைப்பெரியாறு உரிமை, அணுஉலை எதிர்ப்பு என பல களங்களில் நம்முடன் இணைந்து நின்ற சில இயக்கங்களைச் சார்ந்தவர்கள் கூட மனுசாஸ்திர எரிப்புப்போராட்டத்தில் ஒதுங்கி நின்றார்கள்.
அதேபோல பிராமணாள் கபே பெயரழிப்பு போராட்டத்தில் களமிறங்கிய தந்தை பெரியார் திராவிடர்கழகத் தோழர்களும் பல விமர்சனத்திற்கு உள்ளானார்கள். அன்று விலகிநின்றவர்களும் விமர்சனம் செய்தவர்களும் இன்றைய அரசியல் போக்கைப் பார்த்து நமது போராட்டங்களின் தேவையை உணரத்தொடங்கிவிட்டார்கள்.
பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த, சமத்துவமற்ற நிலையைத் தக்கவைத்துக் கொள்ள வேதங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றின் மூலம் மக்களின் மனங்களில் அடிப்படைவாத மூடக்கருத்துக்களைப் பரப்பினார்கள். அவை வழக்கொழிந்துவிட வில்லை. இன்றளவும் சமயச்சொற்பொழிவாகவும், நவீனத்துவ, பின்நவீனத்துவ கலைஇலக்கிய வடிவங்கள் வழியாகவும் பரப்பப்பட்டு வருகின்றன. அச்சு, காட்சி ஊடகங்களில் அறிவியலின் முன்னேற்றம், கருவிகளாகப் பரிணமித்திருக்கிறதே தவிர, அதைப் பயன்படுத்தும் மனிதர்களில் பலர் ஆயிரமாண்டு பழமையான அடிப்படைவாதிகளாகவே உலவிவருகின்றனர். இன்னும் சொன்னால் இப்படிப்பட்டவர்களை நம்பியே ஊடகங்களின் வணிகமும் செழித்திருக்கிறது.
இந்த நிலைமையை மாற்றாமல் இதை நாகரீக சமூகமாக நாம் கருதமுடியாது என்பதால்தான், பெரியாரியக்கத் தோழர்கள் எந்த விமர்சனம் வந்தாலும் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்கள். அமைப்பாகவும் தனிமனிதக் கடமையாகவும் ஜாதி, மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக கருத்தியல் தளத்திலும் செயல்பட்டு வருகின்றனர். அப்படியான பெருமைக்குரிய பெரியாரியக் கருத்தாளர்களில் ஒருவர்தான் தோழர் மதிமாறன்.
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் அண்மையில் நடைபெற்ற திராவிடர் திருநாள் நிகழ்வில் தோழர் மதிமாறனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டிருப்பது மிகப்பொருத்தமானது. அவருக்கு சுயமரியாதை கலை பண்பாட்டுக்கழகம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும், தற்கால கலை இலக்கிய மற்றும் அரசியல் போக்கு குறித்தும், அதைத் தொடர்ந்து நாம் கவனம் கொள்ள வேண்டியவை பற்றியும் தோழர் மதிமாறனுடன் ஓர் உரையாடலுக்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
பிப்ரவரி 15 ல் திண்டுக்கல்லில் உரையாடல் நடைபெறஉள்ளது. அவரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை முன்னதாகவே அனுப்பலாம். கேள்விகள் தேர்வு செய்யப்பட்டு அரங்கில் அவரிடம் கேட்கப்படும். கேள்விகளை சுயமரியாதை கலை பண்பாட்டுக்கழகத்தின் முகநூல் பக்கத்திற்கு அரட்டை செயலியில் (CHAT) அனுப்பலாம். சு.க.ப.க மின்னஞசலிலும் அனுப்பலாம். sukapaka@gmail.com
தோழமையுடன்
கொளத்தூர் குமார் 98427 57550
செல்லையா முத்துச்சாமி 94456 82092
அ.ப.சிவா 98430 68294
நன்றி: சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம்
எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’
நல்ல பதிவு…உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி…
மலர்
malar akka thinanamum pathivu podarathaala thina malar akkannu per vaikap padukradu….mathi illamal maaran brotheres pola pesuvaathaal indru mudal nee mathi illatha verum maaran endru alaikapaduvaai….
நாடார்தாசன் உங்களுக்கு பெரியார்தாசன் என்ற பெயர்தான் சரியாக இருக்கும் ஏன் என்று. குமரி மாவட்டத்தில் இருக்கும் உங்கள் உறவுமுறைகளில் கேட்டு பாருங்களேன்..