பிரபாகரன்+வீரப்பன்=கலைஞர் எதிர்ப்பு தமிழ்த்தேசியம்

பெரியார் எதிர்ப்பு பிரபாகரனிஸ்ட் பெரியார் ஆதரவு பிரபாகரனிஸ்ட் இருவரும் ஒரு சேர கொண்டாடியது தமிழ்த்தேச சந்தனக்கடத்தல் வீரப்பனை.

காரணம் பிரபாகரனை முன்னிறுத்திப் பேசியது அரசியல் அல்ல. சீமானைப்போல் சாகசம்.
அந்த சாகசத்தின் நீட்சிதான் வீரப்பனின் வேட்டை சாகசமாகக் கொண்டாடப்பட்டது.
அவர் சிங்களவர்களுக்கு எதிரானவர். இவர் கன்னடர்களுக்கு எதிரானவர்.

வீரப்பனுக்கு ஜாதிய பின்புலத்தில் ஆதரித்தவர்கள் கூட அவருக்கு தமிழ்த்தேசிய அடையாளத்தை அள்ளி வழங்கினர்.
தமிழ்தேசிய சூழலியல் போராளிகள்கூட வீரப்பன் காடுகளை வன உயிர்களை பாதுகாத்தான் என பட்டம் தந்தனர்.

ஆனாலும், வீரப்பன் ஆதரவாளர்கள் பிரபாகரன் விசயத்தில் என்ன செய்தார்களோ அதையேதான் வீரப்பன் விஷயத்திலும்.

வீரப்பனுக்கு பொது மன்னிப்பு தந்து அவர் உயிரை பாதுகாக்க முயற்சி எடுத்த கலைஞருக்கு எதிராக வீரப்பனை நிறுத்தியதும்;

வீரப்பனைப் போட்டுத் தள்ளிய ஜெயலலிதாவைப் புரட்சித்தலைவி என்பதும் அல்லது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இன்றுவரை பார்ப்பதும்-வே. மதிமாறன்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading