அறிவையெல்லாம் பாதிரிகள் விஷமாக்கி விடாதவாறு…
‘பாரதி‘ ய ஜனதா பார்ட்டி‘ – 22
ஆறாவது அத்தியாயம்
பெண் கல்வி, பெண் உரிமை, ஜாதிய ஒற்றுமை (ஜாதி ஒழிப்பல்ல) பற்றி தீவிரமாக கவிதைகளிலும், கட்டுரைகளிலும் எழுதித் தள்ளிய சுப்பிரமணிய பாரதி, படித்த பெண்கள் , இந்து மதத்தைத் தவிர்த்து, கிறித்துவ மதத்தில் நாட்டம் கொள்ளும்போது அல்லது கிருஸ்துவைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கும்போது,
கிறித்துவ பள்ளிகளில் பாதிரிகள் கிருஸ்துவைப் பற்றி போதிக்கும்போதும், ஜாதிய ஏற்றத் தாழ்வுகளுக்குப் பார்ப்பனர்கள்தான் காரணம் என்று சொல்லும்போதும்,
இந்தப் பெண்ணுரிமை சிந்தனையாளர் , ஜாதிய ஒற்றுமையாளர் – ஒரு வைதீகப் பார்ப்பனருக்குரிய வெறியோடு பாய்ந்து கிழிக்கிறார் ,
‘நமது வாலிபர்கள் பாடசாலைகளிலே மஹான்களைப் பற்றி “மிகவும் இழிவான எண்ணங்கொண்டு வளர்கிறார்கள். முக்கியமாகக் கிறிஸ்துவப் பாடசாலைகளில் இவ்விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவில்லை.
……
நாம் குழந்தைப் பருவத்திலே ஒரு கிறிஸ்துவப் பாடசாலை உபாத்தியருடன் பேசிக் கொண்டிருந்தபோது, வியாஸபகவானைப்பற்றி விவரிக்க நேரிட்டது. அப்போது அந்த உபாத்தியாயர் நம்மை நோக்கி “நோக்கி உனக்குத் தெரிந்த விஷயங்கள் கூட வியாஸருக்குக் தெரியாதே! பூமி தட்டையாக ஒரு பாம்பின் தலைமீது நிற்கிறதென்று வியாஸன் நினைத்து வந்தான். உங்கள் முன்னோர்கள் எல்லாம் அநாகரிக ஜனங்கள்” என்று கூறினார்.
அவர் தெய்வ அவதாரமென்று தொழும் கிறிஸ்துவும் மஹானிகளென்று கருதும் ஸெயின்ட்பால் முதலிய நூற்றுக் கணக்கான மனிதர்களும் அதே மாதிரிதான் என்பதை அந்த உபாத்தியாயர் மறந்து விட்டார். இப்படி பட்ட உபாத்தியாயர் கீழ் நமது குழந்தைகளிருக்குமானால், எத்தனை தீமை உண்டாக்க மாட்டது ? உபநிஷத்துகளைப் பற்றிப் பாதிரிகள் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களும் நமது இளைஞர்களின் மூளையிலே ஏறும்படி விட்டுவிடுவோமேயானல் , நமது நாட்டிற்கு நாமே பரம சத்துருக்களாக முடிவோம்.
கிருஸ்துவப் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்பி சிவாஜியைக் கொலையாளியென்றும், வியாசரை அறிவிலியென்றும், ஸ்ரீ கிருஷ்ண பகவானைத் தூர்த்தனென்றும் அவ்விளைஞர்களைக கற்கும்படி செய்கிற ஒவ்வொரு தந்தையும் புத்திர துரோகியாகிறான். இளைஞர்கள் அவ்வாறே நினைப்புக் கொண்டவர்களாக்கி தமது ஒழுக்கத்திற்கும், அபிவிருத்திக்கும், ஊக்கத்திற்கும் யாரையும் திருஷ்டாந்தமாகச் சொல்ல வன்மையாற்றவர்களாகி, அது காரணமாக ஒழுக்கம் முலியவற்றிலே தாழ்வடைந்து போய் விடுவார்களாதலால் மேற்கண்டவாறு தமது புத்திரர்களை மிஷன் பாடசாலைகளுக்கு அனுப்பும் தந்தையர் தேசத் துரோகிகளுமாகிறார்கள். கிருஸ்துமார்க்கத்திலே நாம் அவனாவஸ்யமான விரோதம் கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம்
ஆரியத தன்மையைப் பெரும்பாலுமிழந்து அஞ்ஞானம், மூட நம்பிக்கையென்னும் சேறுகளிலே அமிழ்த்திக் கிடக்ககும் நம்மவர், கிருஸ்துவப் பாதரிகள் நமது முன்னோரைப் பற்றிக் கூறுவதே மெய்யாக இருக்கலாமென்று கிரஹித்துக் கொள்கிறார்கள்.
அறியாமை மிகுந்த அன்னியர்கள் எழுதி வைத்திருக்கும் வாய் சரித்திரங்கைளக் கழற்றியெறிந்துவிட்டு நமது நாட்டின் தேச பக்தியும் நவீன அறிவும் கலந்து மேலோர்கள் சரியானபடி ஆராய்ச்சிகள் புரிந்து உண்மயான சரித்திரங்களெழுந்தத் தலைப்பட வேண்டும்.
அதற்கிடையே இளைஞர்களின் அறிவையெல்லாம் பாதிரிகள் விஷமாக்கி விடாதவாறு அவர்களின் பாடசாலைகளை விலக்கி வைக்க முயல வேண்டும். பொதுமானபடி பணம் குவித்து வைத்திருக்கும் மனிதர்கள் பச்சைப்பன் காலேஜ் போன்ற சுதேசிய காலேஜிகளையும் ஸ்கூல்களையும் பலப்படுத்தி பாதரிகளின் பள்ளிக்கூடங்களுக்கு நிகராக்க வேண்டும்.
– தொடரும்
ராமகோபாலனுக்கும் இவனுக்கும் ஒரு 6 “வித்யாசம்” கூட இருக்காது போல இருக்கேப்பா…
////bmurali80
ஜூன் 23, 2008 at 10:49 நான்
ஏகலைவன் – இனி உனக்கு இந்த இடத்தில் வேலைக் கிடையாது. உன் பின்னூட்டங்களை பல இடங்களில் படித்துவிட்டேன்.
என் மனத்தில் படுவது இதுவே. மிகவும் காழ்ப்புணர்ச்சியிருக்கு உன் மனசுல. பாத்துகோ!
கண்டிப்பா உன்ன பல இடங்களில் பின்னூட்டம் போடவிடாம தடுத்திருப்பாங்க. அதையே நானும் செய்ய வேண்டிய நிலை.
நீயும் ஒரு பத்திரிக்கையாளன இருந்துகிட்டு பதிவர் என்ற போர்வையில் வலம் வரியா என்பது தெரியவில்லை!/////
தோழர் மதிமாறன் அவர்களுக்கு,
இதற்கு முந்தைய பதிவில் தோழர் விஜய் சுட்டியிருந்த தளத்தில், நான் நடத்திய விவாதத்தில் என்னுடைய சில பின்னூட்டங்களை பதிவிடாமல், அதற்கு மாற்றாக அத்தளத்தின் உரிமையாளன் ‘வெஷ்ட் மாம்பல’த்து அம்பி முரளி வெளியிட்ட பின்னூட்டம் இதோ.
நம்மை இகழ்வதாகவும் அதற்கும் மாறாக பாரதியைப் புகழ்வதாகவும் நினைத்துக்கொண்டு இந்த அம்பிகள் நடத்திவரும் வார்த்தை அர்ச்சனையில் பாவம் பாரதியின் மானம்தான் கிழிந்து தொங்குகிறது.
பாரதியின் பச்சையான பார்ப்பனத் தன்மையை ஆய்வுகள் அம்பலப்படுத்தியதைவிட, இதுபோன்ற பார்ப்பன மாமாக்கள் நடத்தும் பஜனையிலிருந்தே எளிதில் அறிந்துகொள்ள முடியும்.
தோழமையுடன்,
ஏகலைவன்.
vanakkam….
BHARATHIYAR patriya thangalin KADDURAI ellame MIGA ARUMAI…
VAZHTHUGAL…
m.khathiravan
mumbai
“எல்லா சிறுமைகளையும் கண்டு பொங்கும் பாரதி, இந்த மத போதனை குழுமங்களின்
செயல் பாட்டை சரியாகக் கண்டிக்காமல், மென்மையாக விமரிசித்து விட்டு விட்டார்- சரியாகக் கண்டிக்கவில்லை ” என்று பாரதியை நான் கண்டிக்கிறேன் . இந்திய நாட்டின் பண்பாட்டின் அடிப்படையே, சகிப்புத் தன்மை, மற்றும் ஏற்றூக் கொள்ளும்
தன்மை இவைதான்! அட, ஏண்டா புறம்போக்கே, பெரிதாக சகிப்புத் தன்மை பற்றிப் பேசுகிறாய், ஆனால் எதற்க்காக மத போதகர்களைக் கண்டிக்கிறாய்? சரிதான்! இந்தியாவில் வாழும் எல்லா மக்களும் – அவர்கள் எந்த மத, இன, சாதி, மொழியைச் சேர்ந்தவறாக இருந்தாலும் அவர்களுக்கு (அவர்களின் உடமைகள் உட்பட) முழுப் பாதுகாப்பு வழங்கப் பட வேண்டும், அவர்களுக்கு சம உரிமை, சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரம், பரப்புரைச் சுதந்திரம் ஆகியவை வழங்கப் பட வேண்டும் என்பதும் நம் (என்) தெளிவான கொள்கை. மதப் பரப்புரை சுதந்திரம் என்பது, மக்களின் சிந்திக்கும் சுதந்திரத்தை ஒட்டு மொத்தமாக அழிக்கும் உரிமையைக்
கொடுக்காது! பரப்புரை சுதந்திரம் என்பது தன் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவரின் உயிரைப் பறிக்கும் உரிமையைக்
கொடுக்காது! ! உண்மையும், நன்மையும்
உள்ள கருத்துக்கள் எங்கே இருந்தாலும் அதை தேடி ஏற்றுக் கொள்வது தான் நம் பண்பாடு. ஏசு கிறிஸ்துவின் கருத்துக்கள், மனித சமுதாய்த்திற்க்கு மிகவும் நன்மை தருவதோடு, புரிந்து கொள்வதற்க்கு
எளிமையாகவும் உள்ளது. ஆனால் அவரின் கருத்துக்களை, அவருடைய பெயரால் மதப் பிரச்சாரம் செய்தவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அதற்கு முற்றிலும் மாறாக நடந்து கொண்டனர். மாறுபட்ட கருத்து உடைய இரண்டு பிரிவினர் தங்களின் இருவரின் கருத்தில் எது சரியானது என்று முடிவு செய்யிய, 1) பகுத்தறிவு(LOGIC & REASONING) 2 )வாக்கு வாதம் (debate), அனுபகப பூர்வமாக காட்டுதல் (REALISATION)- இவற்றை உபயோகப் படுத்த வேண்டும். ‘தலையிலிருந்து விடுதலை பெறுவதுதான் , துன்பத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் வழி’ என்ற வழியை விட்டு விட்டு
வேள்வி (யாக) செயல்களுக்கு, வேள்விகளினால் விளையும் பயன்களுக்கு ஆசைப்பட்டு, இந்து மதத்தை
சேர்ந்தவர், ஞான வழியை விட்டு, வேள்வி வழியை பின்பற்றி வந்தனர். இதை சரி செய்ய புத்தர் யாக மார்க்கத்தை ஒரேடியாக
தள்ளி விட்டு ஞான வழியை கொண்டு வந்தார். ஆனால் புத்தர், மனித உயிர் பல பிறவிகள் எடுத்து, கட்டுண்டு, இன்னல்
அனுப்பவிப்பதையும், இன்னலீல் இருந்து விடுபட முடியும் என்பதையும் கூறினார்- இன்னலீல் இருந்து விடுபட்ட உயிர் என்ன ஆகிறது, என்று தெளிவாக கூறாமல், சூனியமாக ஆகி விடுவதாக கூறினார். பின்னால் வந்த சங்கரர் விடுதலை பெற்ற
உயிர் அழியாமல் , அழிவற்ற நிலையை அடைவதாக கூறினார். இரண்டு பேரும், ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் தங்கள் மதத்தைப் பரப்பினார்கள். ஏன் என்றால்
புத்தரின் சீடர்களும் சரி, ஆதி சங்கரரும் சரி, எது உண்மை என்று தெரிந்து கொள்வதில் தான் அதிக ஆர்வம்
காட்டினார்களே தவிர, தான் கருத்தை மற்றவர் யெற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று முரட்டுத் தனத்தில்.
முட்டாள் தனத்தில் யீடு படவில்லை.எனவே புத்த மதம் பரப்பப் பட்ட போதும், பின்னாளில் இந்து மாதம் மீண்டும்
நிறுவப்பட்ட போதும் வாக்கு வாதம், கருத்து மோதல் நடத்தப் பட்டதே ஒழிய, ஆயுதங்கள் உபயோகிக்கப் பட்டு, பெரிய போர்கள் நடத்தப் படவில்லை. கிறுஸ்து ” வாளை உரையில் போடு, வாளை எடுத்தவன் வாளால் அழிவான்”
என்றார். ஆனால் அவர் சொன்ன முறையை விட்டு விட்டு மிகப் பெரிய போர்கள்- ” சிலுவைப் போர்கள்” என்று
அழைக்கப் படுபவை – கிறுஸ்துவரகளுக்கும், இஸ்லாமியார்களுக்கும் இடையில் நடத்தப் பட்டன.
இருவருமே, யூத மதத்தின் அடிப்படைத் தத்துவங்களான, ஆதாம் , ஏவாள், ஆண்டவன் ஏழு நாளில்
உலகைப் படைத்தது, ஒரு முறை மட்டுமே பிறந்து இறக்கும்
வாழ்க்கை (பில பிறவிகள் கிடையாது), தீர்ப்பு நாள், பிறகு நித்திய
சொர்க்கம் அல்ல்லது நரகம் – இது என்ற பொது அடிப்ப டையில் தான் கிறிஸ்தவ, இஸ்லாமியாய சமயங்கள்
இரண்டும் உள்ளனா. ஆனால், இப்படி பொது அடிப்படையை பெற்றூ இருந்தும், தங்களின் சமய கருத்து வேறுபாடுகளை
அவர்கள் வாள் முனையில் தீர்த்துக் கொள்ள முடிவு செய்தனர். ஏன் என்றால் கிறிஸ்த கூறிய ” ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரச் சொல்லி
கட்டாயப் படுத்தினால் அவனுடன் இரண்டு மைல் தூரம் செல். ஒருவன் மேலங்கியைக் குடுக்குமாறு கேட்டால்,
அவனுக்கு உன் சட்டையையும் குடு. ஒருவன் உனை ஒரு கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு
கன்னத்தையும் காட்டு” என்கிற கொள்கையை முழுவதும் புறந்தள்ளி, மற்றவர், தான் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் என்கிற காட்டுமிராண்டி கொள்கையை கையில் எடுத்தனர். இப்படி அறிவுக்கு இடம் குடுக்காமல், காட்டுமிராண்டி தனத்துக்கு இடம் குடுப்பதால் மற்ற மதங்கள் மேல் வெறுப்பு, அதைப் பின்பற்றுபவர் மேல் வெறுப்பு, வெறுப்பபு பிரச்சாரம், அடுத்து வன்முறை- என்று நடக்கிறது. கிருஸ்தவ மதப் போதகர்கள், முதலில் ஆரம்பிப்பதே, “மற்ற மதங்கள் எல்லாம் பொய்யானவை, மற்றா கடவுள்கள் வலிமை இல்லாதவர்கள்” என்று தான். இத்தகைய வெறுப்பு பிரச்சாரத்தால், முன்பு
அரேபியா, ஐரோப்பா – இப்போது பாலஸ்தீனம், ஈராக் என உலகம் முழுவதும் இரத்த ஆறு ஓட விடப் படுகிறது!
உலகம் உருண்டை என்று சொன்ன அறிங்கற்கள், உயிரோடு எரிக்கப் பட்டது, சிறையில் அடைப்பு
போன்றவை எமக்கு ஏற்ப்புடையவை அல்ல – உங்களுக்கு எப்படியோ எமக்குத் தெரியாது! மாற்றுக் கருத்தை
யெற்றுக் கொள்ளாத மதங்கள் பெரும்பானமையாக இருக்கும் இடங்களில். கடவுள் மறுப்புக்
கொள்கைக்கு இடம் இல்லை. பாகிஸ்தானில் யாராவது வெளிப்படை யாக “கடவுள் இல்லை” என அறிவித்தால், அவருக்கு
மரண தண்டனை தான் ((அரசின் சட்டப்படி, நீதி மன்றத்தால்)
வழங்க படும். மத ஆராய்ச்சியை, கடவுள் பற்றிய ஆராய்ச்சியை, சுதந்திரமான
ஆராய்ச்சியை, கடவுள் மறுப்புக் கொள்கையை, சமத்துவக் கொள்கையை – அனுமதிக்காத எந்த மதமும் ((அது இந்து மாதம் ஆக இருந்தாலும் சரி) இந்தியாவிற்க்கு
தேவையில்லை . அவ்வளவு அவசியம் என்றால் , போய் உங்கள் மதங்களின் நியதிகளைத்
திருத்திக் கொண்டு வாருங்கள்! “கடவுள் இல்லை என்று சொல்பவர்களின் கழுத்தை அறுக்க வேண்டும். உலகம் பரிணாம வளர்ச்சி தத்துவத்தின் படி உருவானது என்று சொல்பவர் உயிரோடு எரிக்கப் பட வேண்டும்” –என்று கூறுவோருக்கு இந்திய மக்கள் பல்லக்கு தூக்க வேண்டுமா? இந்த விஷயத்தில் மதிமாறன், ஏகலைவன் போன்ற ‘முற்போக்கு’
சிந்தனையாளர்கள் தங்கள் நிலையை விளக்குவார்களா? இந்து மதத்திலும் இப்போது வெறித்தனம் அதிகரித்து வருகிறது. 600 கோடி பொன்னை விட்டு விட்டு, துறவறம் பூண்ட பட்டினத்தார், சரபோஜி அரசன் குடுத்த 1000 பொன்னை வாங்க மருத்து, “பொருளை வேண் டனு, இறைவா நீ வாடனு”
என்று பாடிய தியாகராசர், விவேகானந்தர், அப்பர், அரச சுகத்தை விட்ட புத்தர், மூட நம்பிக்கை யை ஒழித்து, கடவுள் மறுப்பு கூற உரிமை உண்டு என நிலை நாட்டிய பெரியார்,
கையில் இருந்த பிடி அரிசியையும் காக்கை, குருவிக்குப் போட்டு விட்டு பட்டினி கிடந்த பாரதி இவர்களிடம் இருந்து, இப்போது இந்து மதம்-
6000 கோடி சொத்துடன், சொகுஸுக் கார், தனி விமானம் என்று கார்ப்போரெட் பில்லியனேர் கனவான்களின் கைக்கு மாறி விட்டது!இப்போது ஆன்மீகப் போரில் தியாகராசர், விவேகானந்தர், அப்பர், பட்டினத்தார் ஒரு புறமும்– ஏலக்காய் மாலை போட அருகில் வரும் பக்தைய பிடித்து இழுப்பவர்கள்,வாயிலிருந்து லிங்கம் எடுப்பவர்கள், பெண்ணுடன் சேர்ந்து நிர்வாண நிலையில் படம் பிடிக்கப் பட்டவர் புதியதாக வாழும் வழியை கண்டு பிடித்த கனவான்கள் என்று பில்லியனேர்கள் மறு புறமும் நிற்கின்றனர்! இதை சரி செய்யும் வேளையில், நாங்கள் ஈடுபடுவோம் மீண்டும் ஒரு முறை “”எல்லா சிறுமைகளையும் கண்டு பொங்கும் பாரதி, இந்த மத போதனை குழுமங்களின்
செயல் பாட்டை சரியாகக் கண்டிக்காமல், மென்மையாக விமரிசித்து விட்டு விட்டார்- சரியாகக் கண்டிக்கவில்லை ” என்று பாரதியை நான்
கண்டிக்கிறேன் ” என்று கூறி முடிக்கிறேன்!