இயக்குநர் சீமானைக் கண்டு நடுங்குகிறது ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பல்

கு.ராமகிருஷ்ணன், சீமான், ஆறுச்சாமி

24 ஆம் தேதி கோவையில் ‘வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா’ பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில், இயக்குநர் சீமானின் சிறப்புரையோடு சிறப்பாக நடந்து முடிந்தது.

ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் நமது நிகழ்ச்சியை நடத்தவிடாமல் இருப்பதற்காக, காவல் துறையிடம் பொய் புகார் கூறியும், அரங்க உரிமையாளர்களை மிரட்டியும் இருக்கிறார்கள். அதையும் மீறி 600 க்கும் மேற்பட்டவர்களின் பங்களிப்போடு விழா சிறப்பாக நடந்ததில் மதவெறி கும்பலுக்கு கடுப்பு.

`ராம. கோபலான் பெரிய வீரன்` என்று இல. கணேசன் சொல்வது போல, `கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் ஆர்.எஸ்.எஸ் காரர்களின் கோட்டை` என்ற ஒரு பச்சைப் பொய்யை பரப்பி வைத்திருந்தார்கள், பா.ஜ.க. காரர்களே.

(‘பெருமாள், திருமால், விஷ்ணு, கண்ணன், ராமன்’ என்று ஒரே ஆளே பல பெயரில் இருப்பது போல், ஒரே கும்பல்தான் ‘பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத்’ என்கிற பெயரில், பெரிய கூட்டம் தன் பின்னால் இருப்பது போன்ற ஒரு `பில்டப்பை` தந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில்.)

‘உங்கள் கோட்டையிலேயே வந்து எங்கள் கொடியை ஏற்றுகிறோம்’ என்று அண்ணன் ராமகிருஷ்ணன் தலைமையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ‘கோட்டையிலேயே’ பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சீமானின் எழுச்சி உரை மக்களை மகிழ்ச்சியிலும், ஆர்.எஸ்.எஸ். காரர்களை ஆத்திரத்திலும் ஆழ்த்தியது.

துப்பாக்கியில் இருந்து தோட்டக்கள் சீறுவதுபோன்ற சீமானின் பேச்சால், ஆர்.எஸ்.எஸ். காரர்களின் ‘மண் கோட்டை’ சிதறி தெரித்தது.

‘நமது பகுதியில் வந்து மக்களை தன் வயப்படுத்தி, நமது கோட்டையை தரைமட்டும் ஆக்குகிறானே சீமான்’ என்கிற இயலாமை ஆர்.எஸ்.எஸ். காரர்களின் வெற்று கோபமாக வெளிப்பட்டது.

15 பேர் கொண்ட மதவெறி கும்பல் கூட்டத்தில் வந்து குழப்பம் விளைவிக்க, பார்த்து கொண்டிருந்த பொதுமக்களும், சில பெரியார் தொண்டர்களும், அவர்களை நன்கு ‘கவனித்து’ விரட்டி அடித்தார்கள்.

இந்த எதிர்ப்புக்குப் பிறகும் இன்னும் எழுச்சியோடு பேசிய சீமானின் உரை, மதவெறி கும்பலை ஆத்திரமூட்டியது. அருகில் போய் எதிர்ப்பு தெரிவித்தால் பொதுமக்களிடம் அடிவாங்க வேண்டி இருக்கும் என்பதால், தூரத்தில் இருந்து ராமனை போன்ற ‘வீரத்தோடு’, மறைந்திருந்து கற்களையும், சோட பாட்டில்களையும் வீசிவிட்டு ஓடியது அந்த ‘வீர’ கும்பல்.

தமிழகம் முழுக்க சீமான் எங்கு போய் பேசினாலும், அவர் பேச்சை கேட்டு திகில் அடைகிறது இந்து மதவெறி கும்பல்.

காரணம், மக்களிடம் மிக பிரபலமான ஒருவர், பார்ப்பனியத்தையும் இந்து மதத்தையும் சவால் விட்டு பேசுவதும், சீமானின் பேச்சு மிகுந்த வீச்சோடு பல இளைஞர்களை ஒரு பௌதிக சக்தியாக பற்றி கொள்வதையும் அதனால் தங்கள் இருப்பு கால் நழுவி போவதையும் உணர்கிறார்கள் மதவெறி கும்பல்.

அதன் பொருட்டேதான் சீமான் எங்கு போய் பேசினாலும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.

சீமானின் தமிழ் தேசிய கருத்துகளோடும் ‘எவனோ ஒருவன்’ என்கிற படத்தில் அவருடைய பங்களிப்பு குறித்தும் நமக்கு விமர்சனங்கள் இருந்தாலும் –

பிரபலமானவராக இருந்து கொண்டு, அதுவும் சந்தர்ப்பவாதிகளும், சூதாடிகளும், சுயமோகிகளும், சமூகவிரோதிகளும், பதவி வெறியர்களும் நிறைந்த சினிமாவில் இருந்து கொண்டு – பெரியாரின் கருத்துகளுகாகவும், பார்ப்பனிய இந்து மதவெறி கும்பலை எதிர்த்தும் வீதியில் இறங்கி சமரசம் இல்லாமல்,

தகறாறு செய்ய வந்த ரவுடிகளை நோக்கி, “வாடா, தில்லு இருந்தா மோதி பாருடா, நீயா நானா பாத்துருலாம்” என்று நெஞ்சு நிமிர்த்தி நின்ற சீமானின் துணிச்சல் மரியாதைக்குரியது.

இந்து பாசிச கும்பலை எதிர்த்து தீவிரமாக இயங்குகிற சீமானுக்கு, வாழ்த்துகளை சொல்லிக் கொள்வதோடு அவரின் இந்த செயலுக்கு நாம் தீவிர ஆதரவும் அளிப்போம்.

– வே.மதிமாறன்

37 thoughts on “இயக்குநர் சீமானைக் கண்டு நடுங்குகிறது ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பல்

 1. அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இது போல் முன் மாதிரியாக, துணிச்சலாக களமிறங்க பெரியார் தொண்டர்கள் ஆய்ததமாவார்களானால் எதிர்காலம் நம் கையில்

 2. //`ராம. கோபலான் பெரிய வீரன்` என்று இல. கணேசன் சொல்வது போல, `கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் ஆர்.எஸ்.எஸ் காரர்களின் கோட்டை` என்ற ஒரு பச்சைப் பொய்யை பரப்பி வைத்திருந்தார்கள், பா.ஜ.க. காரர்களே//

  நல்ல உவமை

  //தகறாறு செய்ய வந்த ரவுடிகளை நோக்கி, “வாடா, தில்லு இருந்தா மோதி பாருடா, நீயா நானா பாத்துருலாம்” என்று நெஞ்சு நிமிர்த்தி நின்ற சீமானின் துணிச்சல் மரியாதைக்குரியது.//

  அதுதான் சீமான்

 3. மகிழ்ச்சிக்குரிய செய்திதான், இம்மாதிக்கூட்டங்கள் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் நடத்தி இவர்களின் யோக்கியதையை தோலுரிக்க வேண்டும்.

  http://redsunrays.blogspot.com/

 4. //தூரத்தில் இருந்து ராமனை போன்ற ‘வீரத்தோடு’, மறைந்திருந்து கற்களையும், சோட பாட்டில்களையும் வீசிவிட்டு ஓடியது அந்த ‘வீர’ கும்பல்.
  தூரத்தில் இருந்து ராமனை போன்ற ‘வீரத்தோடு’, மறைந்திருந்து கற்களையும், சோட பாட்டில்களையும் வீசிவிட்டு ஓடியது அந்த ‘வீர’ கும்பல்.// – 🙂

 5. சீமானுக்கு, வாழ்த்துகளை சொல்லிக் கொள்வதோடு அவரின் இந்த செயலுக்கு நாம் தீவிர ஆதரவும் அளிப்போம்.

 6. ஒரு வேண்டுகோள்! தற்போது குமரி மாவட்டத்தில் பார்ப்பனதாசர்களின் தொல்லை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது சீமான் அவர்கள் இங்கும் வந்து பகுத்தறிவு கருத்துக்களை பிரச்சாரம் செய்தால் இளைஞர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும், முயற்சி செய்வார்களா?

 7. அண்ணன் சீமான் சிவகங்கை சிங்கம் இதனிடம் சிறு நரிகளின் ஊளை எடுபடுமா? மருது வீரர்கள் பிறந்த மண்ணில் பிறந்த மாவீரன் முன்னால் இந்த பாசிச கும்பலின் படை சிதறு கொண்டு ஓடும் என்பதே உண்மை. ராம கோபாலனின் கூலி படை சீமானை அச்சுறுத்தி பார்க்கும் இந்த வேளையில் பெரியாரிய தோழர்கள் ஒன்றை உணர வேண்டும். நாம் பிரிந்து கிடப்பது எதனால்?. ஏன் நாம் தேங்கி போய் விட்டோம்?. பெரும் நதியாய் பெருக்கெடுத்து ஓடவேண்டிய நாம் சாக்கடை போலே ஒரே இடத்தில் தேங்கி கிடப்பது முறையா? வெறும் பத்து பேர் சேர்ந்து நம் அண்ணனை மிரட்டி பார்க்கும் போது பல லட்சம் இளைஞர்கள் அமைதி காக்கலாமா?

  என்னடா அது இந்து மதம் எப்படி வந்தது எங்கள் தமிழ் மண்ணில்? துரோகிகள் விதைத்த விச விதை இன்று வளர்ந்து நம் திராவிட ஆணிவேரை அசைத்து பார்க்கிறது பார்!. அந்த நஞ்சு பயிரை நசுக்கி எடுத்திட வேண்டாமா? நம்மை பஞ்சமன் சூத்திரன், அரக்கன் அசுரன் என்று அறிமுகப்படுத்திய துரோகிகளை துரத்தி அடித்திட வேண்டாமா? சீமான் ஒருவன்தான் முகத்தில் உமிழ்ந்தது போலே பல உண்மைகளை உலகிற்கு சொல்லுகிறான். அவன் குரல்வளை நெறித்திட முயலும் சில நாசகார சக்திகளை தமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்திட வேண்டாமா?

 8. வணக்கம் நண்பா

  நாங்க யாரையும் கண்டு பயக்க தேவை இல்லை
  நாங்க சுத்தமான சமுக சேவை செய்பவர்களை
  ஹிந்து மததிருக்கு ஆபத்து வரும் பொது மட்டும் நங்கள் ஹிந்டுகளாக இருப்போம் சுனாமி புஜ் புகம்பதின் பொது எல்லாம் நங்கள் மதம் பார்க்கவில்லை மனிதம் மட்டுமே பார்த்தோம் இனும் சில வருடங்களில்
  இந்து மதம் என்று இலாமல் போய்விடும் உங்கள் சீமான் திராவிடன் தானே கிருத்துவம் மட்டும் என்ன திராவிட மதமா ? இளிச்சவாயன் இந்து அவனுக்கு வக்காலத்து வாங்குபவன் முட்டாள் இந்துவை எபடயும் திட்டலாம் எங்கே ஒரு முஸ்லிம் அல்லது கிருத்துவரை அல்லது அந்த அமைப்பை எதாவது ஒன்றை விமர்சனம் செய்ய சொல்லுங்கள் பார்போம்
  எதனை தவறுகள் அங்கே நடக்கிறது என்று தெர்யுமா நண்பா ஹிந்து என்பது மதம் அல்ல அது ஒரு வாழ்வியல் முறை அழிந்து போகாமல் க்கப்பது மட்டுமே நம் செய்ய வேண்டியது நீங்கள் இனும் வரலாறை நிறைய படிக்கணும் நண்பா ராஜபுத்திரர் ல இருந்து நம்ம மருதநாயகம் வரை எவங்க எல்லாம் எப்படி வந்தாங்க நம்ள எப்படி வசுருகங்கனு அப்பதான் தெரியும்
  நன்றி எனை மதித்து இதனை நேரம் ஒதிக்கி இதனை படித்தமைக்கு

 9. தமிழன் தமிழன் என்று உரக்ககத்தி கொண்டு தமிழன் மானத்தை காற்றில்
  விடுவது போல் இருக்கிறது சீமான் {சைமன் } பேச்சு

 10. சீமான் இன்னும் பல வெற்றி படங்களை தர வேண்டும். அப்போது அவரது பேச்சு மற்றும் கருத்துக்கள் நிறைய மக்களை சென்றடையும். சீமான் மற்றும் மதிமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  நித்தில்

 11. இயக்குநர் சீமானைக் கண்டு ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பல் உண்மையிலேயே நடுங்குகிறது.

 12. இராமயணம், மகாபாரதம் இவையெல்லாம் அந்த காலத்தில் வட இந்தியர்களால் பரப்பிவிட்ட கட்டு கதை ஆனால் அதை கம்பன் மொழி பெயர்த்தலால் அது நமக்கு ஓரு விருப்பான கதையாயிட்ரு அவ்வளவே, ஆரியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே தமிழ் இருந்திருக்கிறது என்பது வரலாறு கூற்று அப்படி இருக்கையில் இராமன், கிருஷ்னன் பெரிய கடவுள் என்றால் அவன் ஏன் தமிழ் பேசவில்லை?(இது எப்பொழுதும் எனக்குள் இருக்கும் ஐயம்)
  முருகன் மிது மட்டும் ஒரு ஈர்ப்பு உண்டு ஏன்னென்றால் அவன் தமிழ் கடவுள் என்பதால்.
  தமிழ் மொழி மிக பழமையான மொழி, உலகிலேயே முதல் முதலில் தோன்றிய மூத்த மொழி தமிழேதான் என்று பலநாட்டு ஆராய்ச்சியார்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.இவ்வாறு நமது தாய்மொழி பழமைக்குப் பழமையாக இருக்கிறது. புதுமைக்குப் புதமையாகவும் இருக்கிறது. என்றும் இளமையாக இருக்கிறது. அதனால் நமக்குப் பெருமையாக இருக்கிறது. அப்படிபட்ட மொழியில் பேச மறந்த பேச தெரியாத யாரையும் கடவுள் என்று ஏற்றுகொள்ள படமாட்டாது, மேலும் தமிழர்கள் கும்பிடும் கோயில்களில் தமிழ் ஓலிக்கபடுகிறதா இல்லையே ஏன்? தமிழை இழிவாகவும்,சமஸ்கிருத்தையும், ஹிந்தியையும் பெருமையாக பேசும் பார்பனனை என்று நம் தமிழ்நாட்டில் இருந்து துரத்துகிறோமோ அன்றுதான் தமிழ் கோயில்களில் ஓலிக்கபடும்
  ஏன்டா மதத்துக்கு ஒரு கட்சி இருக்கு, சாதிக்கு ஒரு கட்சி இருக்கு
  கண்ட கலிசலுக்கு எல்லாம் கட்சி/சங்கம் இருக்கு ஆனா நம்ம பேசுர தாய்மொழியில் ஆங்கிலம்,பல மொழி கலந்து நாய்மொழியா மாறிகிட்டு வருது அத காப்பாத்த ஒரு இயக்கம் இருக்குதா?
  வடநாட்ல ஒரு இயக்கம்/பண்டிகை உருவாகும் அதுக்கு அப்படியே ஒரு நகல் இயக்கம்/பண்டிகை தமிழ்நாட்டில் உருவாகும், உதாரணத்திர்க்கு ரக்சா பந்தன், ஹாலி, RSS,VHP etc
  இப்படி இருப்பதால்தான் நம் உரிமை பலவற்றை நாம் இழந்தோம்
  பாஸ்ஃபோட்டில்(Pass Port) தமிழ் மொழியை இழந்தோம்,
  ப்பேன் கார்டுடில் (Pan Card) தமிழ் மொழியை இழந்தோம்,
  விமான நிலயத்தில் தமிழ் மொழியை இழந்தோம்,
  எடி எம்மில் தமிழ் மொழியை இழந்தோம், போததாத குறைக்கு
  தமிழ் நாட்டில் குக்கி கிராமத்தில் உள்ள ரெயில் சந்திப்பில் கூட ஹிந்தி திணிப்பு.
  எப்ப நம் மக்களுக்கு, நம் மொழிக்கு ஒரு பாசறை/இயக்கம் தொடங்குரியோ அப்பதான் வடநாட்டு அடிமை
  உன்னைவிட்டு அகலும் உனக்குனு ஒரு தனித்துவம் பிறக்கும்
  தமிழனே அன்று நீ(என்னையும் சேர்த்துதான்)
  ஆஙகிலேயனுக்கு அடிமை இன்று
  வடநாட்டானுக்கு அடிமை
  தமிழனே ஆகஸட் 15 சுதந்திர தினம் உனக்கு அல்ல,
  நீ இன்றும் அடிமைதான்
  இதுபோல் உங்கள் கருத்தை கேட்க ஆவலாக உள்ளேன்,இதில் பிழையிருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்வேன் சரி என்றால்!!!

 13. ஒரு கிருத்துவன் சீமான் முதலில் தன் மதத்தை கிழிக்கட்டும் , அப்புறம் ஹிந்துக்கள் பக்கம் வரலாம்////

 14. பெரியார் வாழ்ந்த பூமி..

  இது பெரியார் பிறந்த மண். தம்பிகள் நாங்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.

  பகுத்தறிவு என்றால் என்ன என்றே தெரியாமல், மதத்தைச் சொல்லி, கடவுளைச் சொல்லி, ராமர் பெயரால் கட்சியை நடத்தி மத உணர்வுகளை தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் காட்டு மிராண்டிக் கும்பலைச் சேர்ந்தவர்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்…..

  சீமான் அவர்களின் பின்னால் நாங்களும் வரிசையாக….

 15. அவரது உரையை நானும் கேட்டிருக்கிறேன். சொல்லில் ‘பொறி’பறக்கும் உரையாக இருந்ததென்றால் மிகையில்லை. இத்தகையதொருவர் ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றித் தொடர்ந்து நீதியான குரலில் பேசிவருவதும் நிறைவைத் தருகிறது.

 16. ராமனை போன்ற ‘வீரத்தோடு’, மறைந்திருந்து கற்களையும், சோட பாட்டில்களையும் வீசிவிட்டு ஓடியது அந்த ‘வீர’ கும்பல்… 🙂 🙂 🙂

 17. அந்த நிகழ்சியில் நானும் கலந்துகொன்டேன்…….

  நிகழ்சியின் முடிவில் சீமான் பேசும் போது……

  …. இங்க தகராறு பன்ரவன் யாரு?
  என்னொட அண்ணன் தம்பிகதான்…..
  என்ன் பார்பான் மூத்தரத்த குடிச்சிட்டு
  இப்படி தகராறு பன்னுரானுக….

  இனியாது யோசிங்கட அறிவொட…..

 18. சீமானுக்கு, வாழ்த்துகளை சொல்லிக் கொள்வதோடு அவரின் இந்த செயலுக்கு நாம் தீவிர ஆதரவும் அளிப்போம்.

 19. “இந்து பாசிச கும்பலை எதிர்த்து தீவிரமாக இயங்குகிற சீமானுக்கு, வாழ்த்துகளை சொல்லிக் கொள்வதோடு அவரின் இந்த செயலுக்கு நாம் தீவிர ஆதரவும் அளிப்போம்”

  தீவிர ஆதரவு

 20. பெரியாரிய இயக்கங்கள் இப்படி களத்தில் இறங்கி, ஆர்.எஸ்.எஸ். காரர்களோடு, களத்தில் இறங்கி சண்டையிட்டால், பெரியார் கண்ட கனவு தமிழகத்தில் நிறைவேறும்.

  மற்றபடி, தமிழகம் ‘பெரியார் பிறந்த மண்’ என்று சொல்லிகொண்டு இருந்தால்… “செயல்களற்ற வெறும் நல்லெண்ணம் நரகத்திற்கு கொண்டு செல்லும்”.

  ஆர்.எஸ்.எஸ். காரர்களோடு சண்டை போட்ட பெரியார் தொண்டர்கள் தான் பெரியாரின் அன்புத் தம்பிகள். அவர்களோடு என்னுடைய அன்பு வாழ்த்துக்கள்.

 21. நான் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன். தமிழ் சினிமாவை பற்றியும் சில நடிகர்களை பற்றி உண்மையான கருத்துக்களை பேசியது மிகவும் துனிச்சலான் விசயம். நன்றி சீமான். நன்றி பெரியார் தி. க.

 22. வலையில் செய்தி தளங்களில் இதை படித்தபோது நினைத்தது => காலி(வி)கள் அவர்களை அறியாமலே, அவர்களின் வன்முறை கலாச்சரத்தின் மூலம், இந்நிகழ்விற்கு நல்லதொரு விளம்பரத்தை தந்துள்ளார்கள் < என்பதாக. 🙂

  விழாவை வெற்றி பெற வைத்த காலி கும்பலுக்கு நன்றியும், உங்களுக்கு வாழ்த்துக்களும்.

  விழா நிகழ்வுகளையும், உரைகளையும் பதிய முடியுமா?

  வாழ்துக்களுடன், நன்றி.

 23. முந்தைய மறுமொழியில் சொல்லாமல் விட்டது:

  இயக்குநர் சீமான் உண்மையில் பாராட்டுக்குரியவர்.

  //பிரபலமானவராக இருந்து கொண்டு, அதுவும் சந்தர்ப்பவாதிகளும், சூதாடிகளும், சுயமோகிகளும், சமூகவிரோதிகளும், பதவி வெறியர்களும் நிறைந்த சினிமாவில் இருந்து கொண்டு – பெரியாரின் கருத்துகளுகாகவும், பார்ப்பனிய இந்து மதவெறி கும்பலை எதிர்த்தும் வீதியில் இறங்கி சமரசம் இல்லாமல்,

  தகறாறு செய்ய வந்த ரவுடிகளை நோக்கி, “வாடா, தில்லு இருந்தா மோதி பாருடா, நீயா நானா பாத்துருலாம்” என்று நெஞ்சு நிமிர்த்தி நின்ற சீமானின் துணிச்சல் மரியாதைக்குரியது.//

 24. சீமானுக்கு, வாழ்த்துகளை சொல்லிக் கொள்வதோடு அவரின் இந்த செயலுக்கு நாம் தீவிர ஆதரவும் அளிப்போம்

 25. சீமானின் பேச்சும் வீச்சும் சென்னையில் கேட்டேன். மிகச் சாதாரணமாக இயல்பாய் பேச்சை வீச்சுகிறார். அவரது திறமைக்கும், துணிவுக்கும் வாழ்த்துக்கள்

  என்றும் நட்புடன்,
  நிலவன்

  http://eerththathil.blogspot.com

 26. சீமானின் புரட்சிகரக் கருத்துக்கள் தமிழ் உலகிற்கு தேவையானவை. ஆனால், சீமான் அவர்களின் சமீபத்திய சில செய்கைகள் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு – அது அவர் தன்னை இன்னும் பண்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

  1. சீமான் அவர்கள் தன்னுடைய வீட்டில் முத்துராமலிங்கத் தேவருடைய படம் வைத்துக் கொண்டிருப்பதாகப் படித்து இருக்கிறேன். இது உண்மையானால், அவருடைய தமிழ் தேசியம் சாதிய தேசியமா ?

  2. சமீபத்தில், ரஜினியின் குசேலன் பட விவகாரத்தில், ரஜினிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர், இது அப்பட்டமான சந்தர்ப்பவாதம். இது மேலும் ரஜினி, தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைய விடமாட்டார் என்ற ‘அல்வாவினை’ நம்பியதால் ஏற்பட்டது என்று நினைக்கிறேன். சினிமாவில் இவ்வளவு காலம் இருந்தவர், இப்படி அப்பிராணியாக இருப்பது தேவையற்றது.

  அறிவுடைநம்பி.

 27. சீமானின் பேச்சுக்கு என்னுடய ஆதரவும் உண்டு. தோழரே மறக்காமல் சீமானின் பேச்சை பதிவிடவும் எதிர்பார்க்கிறோம் . நன்றி
  அன்புடன்
  மகாராஜா

 28. // `ராம. கோபலான் பெரிய வீரன்` என்று இல. கணேசன் சொல்வது போல, `கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் ஆர்.எஸ்.எஸ் காரர்களின் கோட்டை` என்ற ஒரு பச்சைப் பொய்யை பரப்பி வைத்திருந்தார்கள், பா.ஜ.க. காரர்களே.//

  //‘உங்கள் கோட்டையிலேயே வந்து எங்கள் கொடியை ஏற்றுகிறோம்’ என்று அண்ணன் ராமகிருஷ்ணன் தலைமையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ‘கோட்டையிலேயே’ பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.//

  //துப்பாக்கியில் இருந்து தோட்டக்கள் சீறுவதுபோன்ற சீமானின் பேச்சால், ஆர்.எஸ்.எஸ். காரர்களின் ‘மண் கோட்டை’ சிதறி தெரித்தது.
  ‘நமது பகுதியில் வந்து மக்களை தன் வயப்படுத்தி, நமது கோட்டையை தரைமட்டும் ஆக்குகிறானே சீமான்’ என்கிற இயலாமை ஆர்.எஸ்.எஸ். காரர்களின் வெற்று கோபமாக வெளிப்பட்டது.//

  அவங்களோட சேர்ந்து நீங்களும் காமெடி பண்ணிட்டு.
  கவுண்டம்பாளையம் ஊர் யாரோட கோட்டையும் இல்லை.

 29. முதல்ல காவிக் கும்பல வீடு கட்டி அடித்த பெரியாரிய தமிழ்த் தேசியத் தோழர்களுக்கு வாழ்த்துகள்!!!!!

  //சீமானின் தமிழ் தேசிய கருத்துகளோடும் ‘எவனோ ஒருவன்’ என்கிற படத்தில் அவருடைய பங்களிப்பு குறித்தும் நமக்கு விமர்சனங்கள் இருந்தாலும் //

  ஆமாமா, அவர்களுக்கும் உங்க வறட்டு மார்க்சிய, கற்பனைவாத சர்வதேசிய, பாத்திகட்டி எடுக்கப்பட்ட பெரியாரிய கதையாடல்கள் மேல நிறைய விமர்சனம் இருக்கு. என்ன உங்க மேடைகள்ல பேசறதுக்கு மட்டும் அவங்க வேண்டி கெடக்கிறாங்க. உங்களுக்கு சீமான், இன்னும் சிலருக்கு தியாகு, சிலருக்கு சு.ப.வி. , ம.க.இ.க இசைவிழாக்களுக்கு அருளி போன்றோர் எப்பவும் தேவை. தேவைக்குப் பயன்படுதிட்டு அவங்க மேல விமர்சனம் இருக்குன்னு ஒரு வரியையும் சேர்த்துடுவீங்க.

 30. அன்பு தோழர் மதிமாறன் அவர்களுக்கு
  தங்களின் பணிகள் தொடரட்டும்.
  அண்ணன் சீமான் அவர்களின் பணியும் வெல்லட்டும்.
  தோழர் மதிமாறனிடம் மேலும் வலுவான கருத்தியல் நூல்களையும்
  அண்ணன் சீமானிடம் தீவிர கருத்திய பேச்சுகளையும் எதிர்பார்க்கிறோம்

  தோழமையுடன்
  இசாக்
  துபாய்

 31. அன்பு தோழருக்கு,
  தங்கள் கட்டுரைகள் கண்டேன்.நன்றாக இருந்தது.தொடர்ந்து எழுதுங்கள்.
  வாழ்க தமிழுடன்…
  என்றும் அன்புடன்,
  அ.முத்துக்குமார்.

 32. மதசார்பின்மை என்பது ஹிந்துகளை எதிர்ப்பது பெரும்பான்மை நலனை கெடுப்பது ஹிந்துவை பற்றி பேசினால் அது மதவாதம் என்ன கொடுமைங்க இது

 33. ஆரியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே தமிழ் இருந்திருக்கிறது என்பது வரலாறு கூற்று அப்படி இருக்கையில் இராமன், கிருஷ்னன் பெரிய கடவுள் என்றால் அவன் ஏன் தமிழ் பேசவில்லை?(இது எப்பொழுதும் எனக்குள் இருக்கும் ஐயம்////

  ஒரு சிறு திருத்தம் தோழர் …. “ஆரியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே தமிழ் இருந்திருக்கிறது என்பதல்ல”….. ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்பு தமிழ்மட்டுமே இங்கு இருந்துள்ளது இது வரலாறு இதுதான் உண்மையும் ஆயினும் ஆரியர்கள் தங்களை இங்கு வாழ்ந்த மண்ணின் மைந்தனை அகதியாக்கவும் மேலும் மண்ணுரிமை கோரவும் தங்களை கடவுளாகவும் உயர் குடி பிறப்பாகவும் உருவகப்படுத்தி இங்கு வாழ்ந்த மக்களையே அகதியாக்கினர் அதில் போர் குணம் படைத்தோரை அரக்கர் என்றனர் இதுபோல பல ….

 34. ஆரியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே தமிழ் இருந்திருக்கிறது என்பது வரலாறு கூற்று அப்படி இருக்கையில் இராமன், கிருஷ்னன் பெரிய கடவுள் என்றால் அவன் ஏன் தமிழ் பேசவில்லை?(இது எப்பொழுதும் எனக்குள் இருக்கும் ஐயம்////

  ஒரு சிறு திருத்தம் தோழர் …. “ஆரியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே தமிழ் இருந்திருக்கிறது என்பதல்ல”….. ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்பு தமிழ்மட்டுமே இங்கு இருந்துள்ளது இது வரலாறு இதுதான் உண்மையும் ஆயினும் ஆரியர்கள் இங்கு வாழ்ந்த மண்ணின் மைந்தனை அகதியாக்கவும் மேலும் மண்ணுரிமை கோரவும் தங்களை கடவுளாகவும் உயர் குடி பிறப்பாகவும் உருவகப்படுத்தி இங்கு வாழ்ந்த மக்களையே அகதியாக்கினர் அதில் போர் குணம் படைத்தோரை அரக்கர் என்றனர் இதுபோல பல ….

 35. Weldone Mr.Manimaran & Mr.Seeman.
  We are with you. Rss will be burried in India very Soon

 36. சீமானின் பேச்சுக்கு என்னுடய ஆதரவும் உண்டு

Leave a Reply

%d bloggers like this: