சைமனா சீமான்?

‘சைமன் என்கிற சீமான் இந்து மதத்தை திட்டி பேசுகிறார்’ என்று பி.ஜே.பியை சேர்ந்த எச். ராஜா சொல்லியிருக்கிறாரே?

-எல். சுரேஷ்.

Mathi Book intro function

 

சீமான் – சைமன் இல்லை. அவர் கிறித்தவரும் இல்லை.

அவருடைய பாஸ்போர்ட்டிலிருந்து அவரை பற்றிய ஆவணங்கள் எல்லாமே சீமான் என்கிற பெயரில்தான் இருக்கிறது.

 

அவர் பெரியார் கொள்கையில் ஊறிய நாத்திகர்.

 

கோவை கூட்டத்தில், ‘இந்துக்களின் ஆண்குறியை வெட்ட வேண்டும். பெண்களை கற்பழிக்க வேண்டும்’ என்று சீமான் பேசியதாக ஒரு பச்சை பொய்யை பரப்பினார்கள் அல்லவா? அதுபோன்ற ஒரு பொய்தான் அவர் சைமன் என்பதும்.

 

(இஸ்லாமியர்களை பற்றி ஆர்எஸ்எஸ் காரர்கள் தங்கள் மேடையில் இப்படிதான் அநாகரீகமாக, காட்டுமிராண்டித்தனமாக பேசுவார்கள், அதையே சீமான் இந்துக்களை பற்றி பேசியதாக மாற்றிச் சொல்கிறார்கள்.

பெரியார் தொண்டன் ஒருபோதும் இதுபோன்ற இழிச் சொற்களை பயன்படுத்தமாட்டான்.)

 

சைமனோ, அம்ஜத்கானோ யாராக இருந்தாலும் அவர் நாத்திகராக இருந்தால் அவருக்கு எந்த மதத்தையும் திட்டி பேசுவதற்கு உரிமையுண்டு.

 

சீமான் இந்து மதத்தை திட்டி டி.ஜி.எஸ். தினகரன் கூட்டத்திலா பேசினார்?

பெரியார் கூட்டத்தில் பேசினார்.

 

அது இருக்கட்டும், எச். ராஜா என்கிற பார்ப்பன இந்து மத- ஜாதி வெறியன், இஸ்லாம் – கிறித்துவ மதங்களை திட்டி பேசிக் கொண்டு,

அப்படி திட்டி பேசுவதற்காகவே, பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் போன்ற கட்சிகளை நடத்திக் கொண்டு ‘அடுத்த மதக்காரன் இந்து மதத்தை திட்டி பேசுகிறான்’ என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

 

பார்ப்பன இந்து மத வெறியர்களின் மூலதனமே பச்சை பொய்தான்.

14 thoughts on “சைமனா சீமான்?”

 1. தோழர். மதிமாறன்,

  காந்தியை கொலை செய்வதற்கு முன்னர் இஸ்மாயில் என்ற இஸ்லாமிய பெயரை கோட்சே பச்சை குத்திக்கொண்ட நினைப்பில் பேசியிருப்பார் ராஜா. கோட்சேயும், ராஜாவும் சங்க்பரிவார ஆட்கள் தானே. மற்றவர்களையும் அதேபோல நினைக்கிறார். கலவரங்களை உருவாக்க இரகசிய சுற்றறிக்கைகளை ஆர்.எஸ்.எஸ் அனுப்பிய உத்தரவின் நகல்களை வெளிப்படையாக விவாதித்தால் சங்பரிவாரின் யோக்கியதை நாறும்….ஆர்வமுள்ளவர்கள் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ் ஒரு அபாயம்’ என்னும் புத்தகத்தில் காணலாம்.

 2. “எந்த தமிழனும் இந்து அல்ல” என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும்.

  இந்து அல்ல என்பதற்காக தமிழர்கள் கிருத்துவனாகவோ, இசுலாமியனாகவோ மாறவேண்டும் என்ற அவசியம் இல்லை. மூடத்தனங்களும் மட்டாள்தனங்களும் அனைத்து மதங்களிலும் நிறைந்துள்ளன.

  தமிழன் என்ற உணர்வோடு தன் மண்ணையும் மக்களையும் உறவுகளையும் நேசித்தாலே தமிழன் தன்மானத்தோடு வளமாக வாழமுடியும்.

  தோழர் சீமானைப்போன்ற தமிழின உணர்வாளர்கள் தமிழ்நாட்டில் பல்கிப் பெருகவேண்டும்.

 3. // அ.முஹம்மது இஸ்மாயில் (02:49:12) :

  ‘ஆர் எஸ் எஸ் ஒரு அபாயம்’ – கி வீரமணி அவர்கள் எழுதியது அல்லவா?//

  நான் கூறிப்பிட நினைத்த புத்தகம் ‘இந்துத்துவத்தின் அரசியல் பரிணாம வளர்ச்சி’ கே.ஈ.என் மற்றும் கே.எஸ்.ஹரிஹரன் எழுதியது. அறிவொளி பதிப்பகம், 81 அங்கப்பன் தெரு, சென்னை – 1

  ‘ஆர்.எஸ்.எஸ் ஒரு அபாயம்’ புத்தகத்திலும் இந்துத்துவவியாதிகளின் அடாவடித்தனத்தை அறிந்து கொள்ளலாம்.

  எல்லாவற்றையும் விட நாட்டின் பல பகுதிகளில் இந்துத்துவ வியாதிகளால் நடத்தப்படும் கலவரங்களும், வெறியாட்டங்களுமே அவர்களை பற்றி சொல்லும்.

 4. ‘ஆர் எஸ் எஸ் ஒரு அபாயம்’ இதை எழுதியது விடுதலை ராசேந்திரன். வீரமணியெல்லாம் இதை எழுதியிருப்பார் என்பது குதிரை கொம்பு போன்ற விசயம்

Leave a Reply