உண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்?
டாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது – 5
–
‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’- டாக்டர் அம்பேத்கர்- 6
–என்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன் -7 – ‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை -8
–
மார்க்சியத்திற்கு-முஸ்லீம்களுக்கு எதிரானவரா அம்பேத்கர்? -9
தொடர் – 10
“அம்பேத்கர் காலத்தில் தீண்டாமை இருந்திருக்காலம் ஆனால் இப்போதெல்லாம், யாரும் ஜாதி பார்ப்பதில்லை. அதெல்லாம் அந்தக் காலம்.” என்று தங்களை பெருந்தன்மையான முற்போக்காளர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள் ஜாதி இந்துக்கள். ஜாதி பார்க்காத பெருந்தன்மையான இந்த முற்போக்காளர்கள் யாரும் அண்ணல் அம்பேத்ரை ஒரு பொதுத் தலைவராக கொண்டாடுவதுமில்லை, குறிப்பிடுவதுமில்லை என்பதே இவர்களின் ஜாதி உணர்வை, தலித் மக்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிற சாட்சியாக இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் தலைவராக டாக்டர் அம்பேத்கரை கொண்டாடுவதால், அவர்கள் மீது கடும் வெறுப்புக் கொண்ட ஜாதி இந்துக்கள், பதிலுக்கு ஜாதி வெறி கொண்ட, தன் ஜாதியில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கே எதிராக இருக்கிற ஒரு முட்டாளை ஒரு கிரிமினிலைகூட தங்கள் தலைவராக அறிவித்துக் கொண்டு, அந்த நபரை உலகம் வியக்கிற அறிவாளியான டாக்டர் அம்பேத்கருக்கு இணையாக அல்லது அதற்கும் மேலும் கொண்டாடுகிறார்கள். இதுபோன்ற சதி இந்தியா முழுக்க ஜாதி இந்துக்களிடம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
அம்பேத்கர் பெயரை குறிப்பிட வேண்டிய இடங்களில் அதைத் தவிர்த்து தன்ஜாதியைச் சேர்ந்த தலைவரின் பெயரை குறிப்பிடுவதும், பொதுத் தலைவராக டாக்டர் அம்பேத்கரை கொண்டாடும்போது, அதே போல் தன் ஜாதி தலைவரையும் கொண்டாட வேண்டும் இல்லையேல் அம்பேத்கர் பெயரை நீக்கு என்றும் அடம்பிடிப்பதும், அடாவடித்தனம் செய்வதும்தான் ஜாதி இந்துக்களின் குறிப்பாக பிற்படுத்தப்பட்டவர்களின் ‘ஜாதி உணர்வற்ற’ நிலையாக இருக்கிறது.
நாம் முதல் அத்தியாத்தில் பார்த்த ஒரு வண்டி ஒட்டியான ஜாதி இந்து, பாரிஸ்டரான டாக்டர் அம்பேத்கருக்கு வண்டி ஓட்ட மறுத்தானே, அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம இருக்கிறது.
ஆனாலும், “அதெல்லாம் அந்தக் காலம்” என்கிற வசனத்தை ஜாதி இந்துக்கள், வெட்கமில்லாமல் கம்பீரமாகத்தான் பேசுகிறார்கள். இருக்கட்டும்.
***
டாக்டர் அம்பேத்கர் ஆங்கிலம், பெரிசியன் மொழிகளை இந்தியாவில் பட்டப்படிப்பாகப் படிந்திருந்தார். அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைகழகத்தில் அரசியல், விஞ்ஞானம், நீதியியல், தத்துவம், மானிடவியல், சமூகவியல், பொருளாதாரம் போன்றவற்றில் பட்டம் பெற்றார். 1915 ஆம் ஆண்டு, ‘Ancient Indian commerce’ (பண்டைய இந்தியாவில் வாணிபம்) என்ற தன்னுடைய ஆய்வு கட்டுரையின் மூலம் எம்.ஏ பட்டம் பெற்றார். 1916 ஆம் ஆண்டு ‘மனித இன வரலாறு’ என்ற கருத்தரங்கத்தை டாக்டர் கோல்டன் வெய்சர் என்பவர் நடத்தினார். அதில் ‘இந்தியாவில் சாதிகள்; அவற்றின் இயக்கம் தோற்றம் வளர்ச்சி’ என்ற ஆய்வுக் கட்டுரையை வாசித்தார். இந்தக் கட்டுரை ஜாதிகள் குறித்து, மனுவின் சதிகள் குறித்து உலகளவில் அம்பலப்படுத்தியது. உலகப் புகழ்பெற்ற இந்தக் கட்டுரையை எழுதியபோது அம்பேத்கருக்கு வயது 23தான் முடிந்திருந்தது.
‘National dividend of India: A Historic and Analytical Study’ (இந்தியாவின் ஆதாயப்பங்கு ஒரு வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டம்) என்கிற அம்பேத்கரின் ஆய்வுக் கட்டுரையை கொலம்பியா பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டது. பிறகு எட்டாண்டுகள் கழித்து, இங்கிலாந்து பதிப்பகம் ஒன்று இதைநூலாக இங்கிலாந்தில் வெளியிட்டது. இந்த நூலுக்காக கொலம்பிய பல்கலைக்கழகம் டாக்டர் அம்பேத்கருக்கு ‘Doctor of Philosophy’ பட்டத்தை அளித்தது. பல்கலைக்கழகமே அம்பேத்கரை கொண்டாடியது. இந்த நூலில், பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தையும், இந்தியப் பிற்போக்கு கும்பலையும் அம்பலப்படுத்திருந்தார் அம்பேத்கர்.
அம்பேத்கருக்கு பொருளாதார பாடம் கற்பித்தப் பேராசியரிர் எட்வின் ஆர்.ஏ. செலிக்மன், “நான் அறிந்தவரையில் அடிப்படை ஆதாரமாக இருக்கின்ற கோட்பாடுகள் இந்த அள்விற்கு விரிவாக ஆராயப்பட்டதேயில்லை’ என்று எழுதினார். அம்பேத்கர் இந்த நூலை தன்னைப் படிக்க வைத்த, பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாடு அவர்களுக்கு காணிக்கையாக்கினார்.
நியூயார்க்கில் படிக்கும் போது பல நாட்கள் பாதிபட்டினியில் இருந்தபோதும், 2000 நூல்களை வாங்கினார்.
இந்தியாவிற்கு திரும்பிய பிறகு ‘Small-holdings in india and thier Remrdies’ (இந்தியாவில் சிறு நிலங்களும், அவற்றிற்கான தீர்வுகளும்) என்ற நூலை எழுதினார்.
1918 ஆம் ஆண்டு முதல் 1920 வரை மும்பை சைடன்ஹாம் கல்லூரியில் அரசியல் பொருளாதாரத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆரம்பத்தில் தாழ்த்தப்பட்டவர் என்று அலட்சியமாக பார்த்த மாணவர்கள், அவர் பாடம் நடத்துகிற விதம், மாணவர்களிடம் காட்டுகிற அக்கறை போனறவைகள் மாணவர்களை பெருமளவில் கவர்ந்தது. மற்ற வகுப்பில் உள்ள மாணவர்கள் தனி அனுமதி பெற்று, இவர் வகுப்பில் கலந்து கொண்டனர். ஆனால் சில பேராசிரியர்கள் (குஜராத்திய) தீண்டாமையின் காரணமாக ஆசிரியர்களுக்கான பொது இடத்தில் அம்பேத்கர் தண்ணீர் குடிப்பதை அனுமதிக்கவில்லை.
1920 சனவரி 31ஆம் நாள் ‘ஊமைகளின் தலைவன்’ (மூக் நாயக்) என்ற பத்திரிகையை தொடங்கினார்.
லண்டனில் 1921 ஆம் ஆண்டு சூன் மாதம் ‘Provincal Decentralization of Imperil Finace in British India’ (பிரிட்டிஷ் இந்தியாவில் பேரரசின் நிதியை மாகாணங்களுக்குப் பிரித்தளித்தல்) என்ற ஆய்வு நூலுக்காக எம்.எஸ். (Master of scirnce) பட்டம் பெற்றார்.
1923 ஆம் ஆண்டு ‘The Problem of the Rupee’ (ரூபாயின் சிக்கல்) என்ற தனது ஆய்வு நூலுக்கு டி.எஸ். .(Docotor of Science)பட்டம் பெற்றார்.
லண்டனில் மாணவர் சங்கத்தில், ‘Resposipilities of Responsible Goverment in India’ (இந்தியாவில் பொறுப்பு வாய்ந்த அரசின் பொறுப்புகள்) என்ற தலைப்பில் கட்டுரைப் படித்தார். ஹெரால்டு.ஜெ. லஸ்கி என்கிற இங்கிலாந்து பேராசிரியர் ‘அம்பேத்கரின் கருத்துக்கள் புரட்சிகரமானவை’ என்று குறிப்பிட்டார். அதன்பிறகு பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.
குதூகலமாக கொண்டாடடி பொழுதைக்கழிக்கிற இளைஞர்கள் மத்தியில் அம்பேத்கரின் இளமை இப்படி அர்த்தப்படும்படி இருந்தது. இது அம்பேத்கர் வாழ்க்கையின் ஒரு முன்னோட்டம்தான். இதன் பிற்பகுதியில் தான் இருக்கிறது அவரின் விஸ்வரூபம்.
இடஒதுக்கீட்டை எதிர்க்கிற பார்ப்பனர்கள் அதற்கான காரணமாக சொல்வது “தகுதி, திறமையைப் பார்த்துதான் ஒருவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். ஜாதியை பார்க்கக்கூடது. பிராமணர்களாக இருந்தாலும் தகுதியானவரா என்று பார்த்துதான் பொறுப்புகளை கொடுக்க வேண்டும். படித்தவர்களை, அறிவாளிகளை மதிக்க வேண்டும்” என்று சொல்கிறார்கள்.
மேம்போக்காக பார்க்கும்போது இந்த வாதம் ‘நியாயமாக’ தெரிந்தாலும் இது மிகுந்த தந்திரமானது. ஆப்பத்தானது.
சரி, அவர்கள் சொல்லுகிற இந்த ‘நியாயப்படி’ முதலில் அவர்களே நடந்து கொள்கிறார்களா?
உலகம் முழுக்க அறிவாளிகளால் மதிக்கப்படுகிற அறிவாளியாகவும், நிறையப் படித்த படிப்பாளியாகவும், அவர்கள் சொல்லுகிற ‘தகுதி-திறமை’ என்பது இவரோடு ஒப்பிடுவதற்குக்கூட பார்ப்பன சமூகத்தில் ஒருவரும் இல்லை என்றபோதும், எத்தனை பார்ப்பனர்கள் டாக்டர் அம்பேத்கரை, ‘மாபெரும் மேதை, இவரால் இந்தியர்களுக்குப் பெருமை, தகுதி திறமை நிரம்பி வழிகிற பிராமணர்கள் உட்பட்ட அனைவருக்கும் இவர்தான் தலைவர் அல்லது முன்மாதிரி’ என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மாறாக, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், சில்வர்டங் சீனவாசசாஸ்திரி, ராஜகோபாலஆச்சாரியார் (ராஜாஜி), அனந்தசயனம் அய்யங்கார் போன்ற ஆங்கிலம் மட்டும் தெரிந்த, அதே பார்ப்பனியம் என்கிற குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிய இந்த நபர்களைத்தான் பார்ப்பனர்கள், ‘அறிவாளிகள்’ என்று இன்னும் பொய்சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அதைவிட வெட்கக்கேடு, ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் மொழி பெயர்த்து, அதில் ஆபாசம் கலந்து (அதான் அவரு சொந்தமா எழுதுறது) தன் பெயரில் போட்டுக் கொள்கிற ‘சுஜாதா’ என்கிற முட்டாளை, கழிசடையை ‘அறிவிஜீவி’ என்று கொஞ்சமும் கூச்சமில்லாம்கொண்டுகிறவர்கள், டாக்டர் அம்பேத்கரை அறிவாளியாக அல்ல, அவரை அவமானமாகத்தான் பார்க்கிறார்கள்.
இதைவிடப் பெரிய வெட்கக்கேடு, ‘தகுதி, திறமை, சுத்தம், ஒழுக்கம், நேர்மை இவைகள்தான் மனிதர்களுக்கு அழகு. அவர்கள்தான் மதிக்கப்படவேண்டியவர்கள்’ என்று நமக்கு போதிக்கிற இவர்கள், இவைகள் அனைத்தும் நிரம்பியிருக்கிற அண்ணல் அம்பேத்கரை அலட்சிப்படுத்திவிட்டு, ஒழுங்காக பல்லைக்கூட விளக்காத படிப்பறிவற்ற, கிரிமனல் ஜெயேந்திரன் முன், இடுப்பில் துண்டுகட்டி, வாய்பொத்தி, மண்டியிட்டு கிடக்ககிறார்கள் அதிகம் படித்த தகுதி, திறமையானவர்கள்.
இதுதான் பார்ப்பன உளவியல்.
-தொடரும்.
தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.
Ennanga Mathimaran, there has to be a limit to exaggeration. Ananthasayanam Iyengar is more well known than Ambedkar among brahmins? First time I am hearing of Ananthasayanam Iyengar – and I am born in the brahmin caste and reasonably well read. Among the list you have given, Rajaji is well known – Silver tongue Srinivasa Sastri, Alladi Krishnaswami etc. are barely known.
Of course, Sujatha is much better known. Rajeshkumar, Ramani Chandran etc. are even better known. Fewer people have read Sathya Sodhanai than say, Meendum Jeeno. Fewer people have heave heard of Thoreau than John Grisham. BTW, I disagree with your assessment of Sujatha – feels like you are saying it just because he was a brahmin.
And why only Ambedkar? Which leader/thinker’s thoughts are widely read today? Which leader is remembered today other than Gandhi & Nehru? Do you want special treatment for Ambedkar because he was born in the Dalit caste? I haven’t heard of anyone denigrating Ambedkar in these days. (Don’t say that law college incident was denigrating him) His place in the national pantheon is as secure as leaders like Tilak, Gokhale, Lajpat Rai, Netaji, Maulana Azad, Bhagat Singh, Patel, Rajaji and so on. In fact, it is probably a little better – nobody writes a blog dedicated to these leaders!
You started off describing how Ambedkar is not accepted among caste hindus – I disagree with that, as described above. And then it goes on to why brahmins don’t accept Ambedkar. It feels like your main grouse is not that Ambedkar is not given a higher position in the national psyche, but Ambedkar is not given a higher position in the brahmin psyche. Why, do you think brahmins are more special than the other castes?
மிக மிக அற்புதமான கட்டுரையை கொடுத்து வருகிறீர்கள்.
அண்ணல் அம்பேத்கர் மிகப் பெரிய அறிவுஜீவியாக விளங்கி இருக்கிறார் என்பதை உங்கள் கட்டுரை மூலம் படிக்க கிடைத்தமைக்கு நன்றி.
இந்தியாவின் மிகச்சிறந்த அறிவுஜீவியான அண்ணலை அனைத்து சாதியினரும் போற்றவேண்டும்.
வாழ்க அவர் புகழ்……
இந்த பார்ப்பன ஊத்த வாயன்களை பற்றிய விளக்கம்அருமை. இதை படித்தாவது அவன்களின் பின்னால் செல்லும் அறிவிலிகள் திருந்தட்டும்.
//உண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்?//
முதலில் தகுதியானவர்கள் என்பவர்கள் யார்? உண்மையை உணர்ந்தவர்களா? உணராதவர்களா?
கொலை குற்றவாளியை (ஜெயேந்திரனை) கடவுளாக பார்ப்பதும்,
கடவுளாக பார்க்க வேண்டியவர்களை (அம்பேத்கர்) மனிதராக கூட மதிக்காததும் யார் குற்றம்?
உண்மையை உணராத மக்களுக்கு யாரேனும் உண்மையை உணர்த்த முற்பட்டால், அவர்கள் மீது இறையாண்மை என்னும் கழிசடைச்சட்டம் பாய்கிறது.
இந்நிலை மாற நாம் என்ன செய்ய போகிறோம்?
Senthil,
Which “unmai” are you talking about? Are you saying that if you try to talk about Ambedkar, “Iraiyanmai” law jumps on you? Please clarify.
அம்பேத்கர் பற்றிய இந்தத் தொடர் மிகச்சிறப்பாக, பெரிய அளவில் ஒரு
தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து எழுதவும்.
ஜெயேந்திரன் பற்றிய எடுத்துக்காட்டு மிகவும் சரியானது, பொருத்த மானது. எக்கேடு கெட்டாலும் பார்ப்பனன் பார்ப்பனனே! இது தான் மனுவின் மாறாக்கோட்பாடு! ஜெயேந்திரன் இன்றும் மடாதிபதியாக திகழ்வதே, இவர்களின் யோக்கியதைக்கு அப்பட்டமான சான்று. இதைத் தவிர வேறொன்று தேவையில்லை.