சிவனடியார் தாக்கப்பட்டிருக்கிறார்- இப்போதாவது பொங்குமா தமிழனுக்கு வீரம்?

https://i0.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2009/07/photo06l.jpg?w=1170

சிவனடியார் பெரியவர் ஆறுமுகசாமி சிதம்பரம் கோயிலில் தீட்சதப் பார்ப்பனர்களால் மீண்டும் தாக்கப்பட்டிருக்கிறார்.  தீட்சதர்களால் அவர் தாக்கப்படுவதற்கான சூழல் இருக்கிறது என்று      முன்பே       (சிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும்) (இனி ‘தமிழறிஞர்களை’ சும்மா விடக் கூடாது…) எழுதியிருந்தோம்.

நாம் எழுதிய ஒரு மாதத்திற்குள் அவர் தாக்கப்பட்டிருக்கிறார். ‘தமிழன் ஆண்ட பரம்பரை, வீரபரம்பரை, தமிழன் மீது கை வைத்தால் நடப்பதே வேறு. ரத்த ஆறு ஓடும்.’ என்ற தமிழனவாதிகளின் அனல் பறக்கும் வசனங்களை, தீட்சதப் பார்ப்பனர்கள் ஏதோ காமெடி வசனம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

சைவ சமயத்தில் வீர சைவர்கள் என்று ஒரு பிரிவு இருக்கிறார்கள். அவர்கள் எப்போது வீரமாக இருந்தார்கள் என்று அறிவதில் நாம் மிகுந்த ஆர்வமாக இருக்கிறோம். இப்போதும் அவர்கள் இருக்கிறார்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை?

‘சைவ மட ஆதினமாக வருவதற்கு பார்ப்பனர்களை உள்ள விடமாட்டோம்’ என்று மார் தட்டுகிறார்கள் முதலியார்கள்.

சிதம்ரபம் கோயிலில் ஒரு சிவனடியாரை பார்ப்பனர்கள் தாக்கியிருக்கிறார்கள். எங்கே போய் மார்அடித்துக் கொண்டிருக்கிறார்கள், முதலியார்கள் அல்லது ஆதினங்கள் அல்லது பிள்ளைமார்கள்.

‘வன்னியருன்னா நெருப்பு’ என்று தாழ்த்தப்பட்டவர்களிடம் அனல் கக்குகிற வீர வன்னியர்கள், தங்கள் சமூதாயத்தைச் சேர்ந்த ஒரு சிவனடியார், தீட்சிதப் பார்ப்பனர்களால் தாக்கப்பட்டிருக்கிறார் என்றவுடன், பார்ப்பனர்களுக்கு எதிராக வன்னிய வீரம் பொங்க மறுக்குதே ஏன்?

(சும்மா இருங்க. இவுங்களயும் கிளப்பி விடாதீங்க… இவுங்க எல்லாம் ஒன்னு சேந்து வெளிப்படையா வந்தா அதுக்கப்புறம் தீட்சதர்களுககு ஆதரவு பெருகிகிட்டே இருக்கும். ஏற்கனவே ஒரு தமிழின அமைப்பு சிதம்பரத்துல தீட்சதர்களோடு இணைந்து ‘ஒன்னா சேந்து சுமுகமா நடராஜர் கோயில்ல புழங்கலாம்…’ என்று திட்டம் வைத்து கருத்தரங்கம் எல்லாம் நடத்தி இருக்காங்க… அவுங்க போதாதுன்னு… இவுங்க வேறவா?

ஏதோ கோயிலுககுப் போனமா சுண்டலா சாப்பிட்டமா என்று இவர்கள் இருப்பதினால்தான், ஓரளவுக்கு தீட்சிதர்களை எதிர்த்து போராட முடியுது. இவுங்க களத்துல இறங்குனாங்க… ஆபத்து தீட்சிதர்களுக்கு இல்ல… நமக்குத்தான்.   – யாராவது இப்படி ஒரு பின்னூட்டம் போடுங்களேன்.)

‘எந்த ஜாதிக்காரராக இருந்தாலும், சுயஜாதி அபிமானியாக  இருந்தால், அவர் தனக்குக் கீழ் உள்ள ஜாதிக்காரர்களை கீழானவர்களாகவும், தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரர்களை மேலானவர்களாகவும் நிச்சயம் நினைப்பார். இதுதான் ஜாதி நிலையின் உளவியலும் செயல்பாடும்.’ என்று     தமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு – தொடரும் ஜாதியின் நிழல் என்ற கட்டுரையில் எழுதியிருந்தேன். அதை இதோடு பொறுத்திப் பார்த்து புரிந்து கொள்ளவும்.

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

16 thoughts on “சிவனடியார் தாக்கப்பட்டிருக்கிறார்- இப்போதாவது பொங்குமா தமிழனுக்கு வீரம்?

 1. எல்லாம் எங்கே போனீர்கள்? பாப்பான் வீட்டு கழிவுகளை சுவைக்கவா? என்ன இப்படி சிவ பக்தர்களை திட்டலாமா என தோன்றலாம். சிவனுக்கு முன் காமகளியாட்டங்கள் , பார்களும் நடந்து கொண்டிருக்கும் போது அந்த சிவன்தான் பேசமாட்டான் . கல்லிலே இருக்கும் தேரைக்கு இரை தரும் ஈசன் எனக்கு தரமாட்டானா என வியாக்கியானம் பேசத்தெரிந்த உனக்கு அந்த சிவனைப்பற்றி திருச்சிற்றம்பலத்தில் பேச மனமுருகி பாட என்னகேடு? சீந்த ஆளின்றி தெருவில் பாடுமுனக்கு பாடலோடு சிவனை நடராசனை காப்பாற்றுங்கள் என கதற என்னத்தடை?

  ஆம் மிகப்பெரிய தடை இருக்கிறது அது பொருளாதாரத்தடை.பார்ப்பானை ஒட்டி சோப்பு போட்டு அவன் மனம் நோகாது அவன் தின்றுபோட்ட எலும்பினை நக்கிகொண்டிருக்கும் ஆதினங்கள் தானே அடுத்த குறி.சாமியை வைத்து பார்ப்பான் செய்வதைத்தானே நீயும் செய்து கொண்டு இருக்கிறாய்?

  தில்லையில் பார்ப்பன சதிராட்டம்
  அடிவருடிகளின் ஒயிலாட்டம்

  http://kalagam.wordpress.com/

 2. (சும்மா இருங்க. இவுங்களயும் கிளப்பி விடாதீங்க… இவுங்க எல்லாம் ஒன்னு சேந்து வெளிப்படையா வந்தா அதுக்கப்புறம் தீட்சதர்களுககு ஆதரவு பெருகிகிட்டே இருக்கும். ஏற்கனவே ஒரு தமிழின அமைப்பு சிதம்பரத்துல தீட்சதர்களோடு இணைந்து ‘ஒன்னா சேநது சுமுகமா நடராஜர் கோயில்ல புழங்கலாம்…’ என்று திட்டம் வைத்து கருத்தரங்கம் எல்லாம் நடத்தி இருக்காங்க… அவுங்க போதாதுன்னு… இவுங்க வேறவா? ஏதொ கோயிலுககுப் போனமா சுண்டலா சாப்பிட்டமா என்று இவர்கள் இருப்பதினால்தான், ஒரளவுக்கு தீட்சிதர்களை எதிர்த்து போராட முடியுது. இவுங்க களத்துல இறங்குனாங்க… ஆபத்து தீட்சிதர்களுக்கு இல்ல… நமக்குத்தான். – யாராவது இப்படி ஒரு பின்னூட்டம் போடுங்களேன்.)/////

  பட்டைய கிளப்புங்க!!!!

  /////சைவ சமயத்தில் வீர சைவர்கள் என்று ஒரு பிரிவு இருக்கிறார்கள். அவர்கள் எப்போது வீரமாக இருந்தார்கள்/////

  எல்லோரும் பாத்துக்க……. நாங்களும் ரவுடி தான், ரவுடி தான், ரவுடி தான் 🙂

 3. /////சைவ சமயத்தில் வீர சைவர்கள் என்று ஒரு பிரிவு இருக்கிறார்கள். அவர்கள் எப்போது வீரமாக இருந்தார்கள்/////

  எல்லோரும் பாத்துக்க……. நாங்களும் ரவுடி தான், ரவுடி தான், ரவுடி தான் 🙂

  Neenga sonna saathi Pasangam elm yaar Tiruppi adikka mattangalo avangalukku dhan Rowdy…AVAL elm Tiruppi adippen adhan ivang elm aamaithiya irukanga…

  Ippo soluren

  Tamilzr ellam Viramppranbarai………………….!!!!!!!!!!!!!

 4. என்னன்னு சொல்லுறது இவங்க‌ வீரத்த? ஒரே வரியில சொல்லுனும்னா, சுறுக்கமா :’வீட்டுல புலி, வெளியில எலி’. இந்த வன்னி, ஜன்னி, தேவரு ரவுடி கும்பலுங்க, முதலி இன்னும் இதர பல ஜமாக்களும் கயர்லாஞ்சி மாதிரி செத்த பொணத்த அடிகிறவங்க வகைதான். எதுக்கும் நாம கொஞ்சம் காபந்தாவே இருக்கனும். ஏன்னாக்கா… பாப்பானுங்க எழுதி குடுத்த‌ மனு சாக்கட்டைய வெச்சி அவனுங்களையே ஒரு பக்கம் ஓரங்கட்டி, இன்னொரு பக்கம் தலித் மக்களை வஞ்சித்து இடையில இவங்க என்னமோ மக்களை காக்க சிறப்பு பிறப்பெடுத்து வந்த மவ‌ராசனுங்க‌ மாதிரி வேசம் போட்டு கூத்ததாடி ஓசியில சவாரி செய்து வர்ரவங்க‌, நாளைக்கே பாப்பானுக்கு எதிரா சும்மா கெடக்குற தலித் மக்களை உசுப்பேத்திவிட்டு நெல‌மைய ரணகளமாக்கி அதிலையும் குளுரு காய்வாங்க.

 5. “இப்பெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்? இப்போது சமூகம் வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. பார்பனர்கள், படிப்பு உத்தியோகம்னு வேற திசையில் போய் கொண்டிருக்கிறார்கள். வெறும் பார்ப்பான் பார்ப்பான் என்று நீங்கள் திட்டுவதும் அதை பற்றியே பேசுவதும் காலத்தை வேணாக்கும் செயல். அதெல்லாம் அம்பேத்கர் பெரியார் காலத்தோட முடிஞ்சிருச்சு. நீங்க போய் வேளைய பாருங்க” எனும் சிலர், நாம் கோமாவில் 50 வருடம் இருந்தது போலவும், நமக்கு சமூகத்தின் Update தெரியவில்லை எனவும் நம்மை ஏற இறங்கி பார்க்கும் பல படித்த மேதாவிகள், நாம் விவாதிக்கும் கருத்துக்கள் ஏதோ நாம் கற்பனையில் உளறுகிறோம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

  இப்போதும் சமூகத்தில் சாதிய ஏற்றதாழ்வுகள் உள்ளன என்று நடைமுறை நிகழ்வை படம் பிடித்து காட்டி, அதை பற்றி ஏற்கனவே எழுதியிருந்ததும், அதில் ஒலிந்துள்ள வீர தமிழர் பறம்பரையினரின் வீர சாகசத்தை அலசியதும், கற்பனை உலகில் வாழும் படித்த மேதாவிகளுக்கு, மறுக்க இயலாத பார்பனர்களின் கோர குடுமியையும், சைவபற்றுள்ள தமிழரிஞர்களின் தாய்மொழி பாசத்தை, சாதி தமிழரின் வீரத்தையும் இவ்வொரே கட்டுரை பளிச்சென காட்டுகிறது.

 6. சிவனடியார் தாக்கப்பட்டது இது முதல் முறையல்ல. அவர் பாடத் தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து நடைபெரும் ஒன்றுதான்.

  தமிழனுக்கு கோபம் வருகிறதோ இல்லையோ அவன் கோதாவில் இறங்க மறுக்கிறான் என்பது ஒரு ஆய்வுக்குறிய விடயம். இந்த மன்னின் தன்மையும் அதுதான். பொருப்பவர்கள். மன்னிப்பவர்கள். பயந்தவர்கள். சோம்பேரிகள். அசையதவர்கள் என்று பலவகை.

  ஈழத்தில் தனது இனத்தை அழிக்க அத்தனையும் செய்த அயோக்கிய இந்தியாவுக்கெதிராக என்ன செய்துவிட்டான் தமிழன்? மூன்று நாட்களில் இந்திய மளையாளி, வங்காளிகளின் துனையோடு கொல்லப்பட்ட 50,000 தமழருக்காக என்ன செய்துவிட்டான் தமிழன்?

  இலங்கை முன்னாள் தலைமை நீதிபதியே, இலங்கைச் சட்டங்கள் தமிழரைக்காக்காது என்று வௌிப்படையாகப் பேசியும், இந்து ராம் அன்று முதல் இன்று வரை, தமிழனின் உப்பைத்தின்று கொண்டே, இந்த ஊரிலிருந்து கொண்டே, ஒட்டுமொத்த தமிழருக்கெதிராக எழுதியும், பேசியும் வருகிறானே! இவனை என்ன செய்தது தமிழினம்?

  ஆனால், ஒன்று சொல்கிறேன் தோழர்களே! நிலைமைகள் மாறிக்கொண்டுள்ளன. விரைவில் இதற்கெல்லாம் பதிலுண்டு! உணர்வாளர்களின் நாடி பார்ப்பவன் என்ற முறையில் இதைச் சொல்கிறேன். களம் சூடேறிக்கொண்டுள்ளது.

 7. சாதி அடையாளத்தால், தான் மட்டும் பொருளியல் மேம்பாடு அடைய வேண்டும் என்ற மாபெரும் கொள்கை வெறியோடு தான் இந்த வீரர்கள் களமாடி வருகின்றனர். தமிழ், தமிழன், தமிழறிஞர் என்று சாதியை வைத்து அடிமை வணிகம் என்பதைத்தவிர இவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

  சிவனடியார் பெரியவர் ஆறுமுகசாமி சிதம்பரம் கோயிலில் தீட்சதப் பார்ப்பனர்களால் மீண்டும் தாக்கப்பட்டிருக்கிறார். எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் நிறை என்னும் நாத்திகர்களும் உண்மை விரும்பிகளும் மட்டுமே ஆதிக்க சக்திகளை உலுக்கி வருகின்றனர்.

  சிவன் மற்றும் அவன் தொண்டர்களுக்கும் குண்டர்களுக்கும் வேறு வேறு வேறு முக்கிய பணிகள் இருப்பதால் அவர்கள் தற்போது மிகத்தீவிரமான ஓய்வில் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்.

  சிவனடியார் பெரியவர் ஆறுமுகசாமி அவர்களைப் பாதுக்காக்க வேண்டியது மானுடம் பேசும் நமது கடமை. கடவுள், சாதி, மதம் என்று மக்களை ஏமாற்றும் வெறியர்களின் வெறியாட்டத்தைத் தோலுரிக்கும் உங்களின் பணி காலத்தின் கட்டாயம்.

  மானுடம் வெல்க!
  சாதி வெறி சாய்க!
  மத வெறி மாய்க!

  மா.தமிழ்ப்பரிதி
  http://www.thamizhagam.net/

 8. வீரமாது வெங்கையமவாது இவங்களுக்கு அதெல்லாம் கிடையாது. தமிழன் என்ற அடையாளமே ஒடுக்குவதற்கும் சுரண்டுவதுற்கும் மட்டும் பயன்படுத்தபடுது. வரலாற கண்ட மேனிக்கு புரட்டி போட்டு தமிழ் தான் உயர்ந்த மொழின்னு சொல்லுவான் ஆனால் தலித் மக்களுக்கு இழைத்த இழைகின்ற அநீதியை மட்டும் எக்காலும் ஒரு பேச்சு கூட ஒத்துக்கமாட்டான்.
  தமிழன் அடையாளங்களை தொலைத்து எப்பொழுது ஒரு மனிதனாக மாற முயல்கிறானோ….அது வரை அது வரை வீண் பெருமை பேசும் தமிழா பேசாதே…

 9. மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
  நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
  இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
  ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

  இங்கே சொடுக்கவும்

  ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
  அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

  அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
  தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

 10. வன்னியர்களை சீண்டும் வெண்ணைகளா கொஞ்சம் நிறுத்துங்கப்பா !!!! ஆறுமுகசாமி என்கிற ஓதுவார் தமிழ் திருமுறையிலும், சைவ சித்தாந்தங்களிலும் கரைகண்டவர். அவர் அங்கு தனக்கு துணையாக வைத்துப்போராடுவது தமிழ் மீட்புக்குழுவை மட்டும்தான்.( இதன் தலைவர் வி எம் சவுந்திரபாண்டியன். பாமக மாநில துணை தலைவர். மு. நகரசபை தலைவர்) எனவே வன்னியர்கள் யாரும் அவரை கை விட்டுவிட வில்லை. திக வனர் போராடுவது ஆமு சாமிக்காக அல்ல. தீட்சிதர்களின் ஆளுமையை எதிர்த்துத்தான். இதில் அந்த முதியவர் எவ்விடத்ிலும் கலந்து கொள்ளவேயில்லை. போங்கையா பொய் எங்கயாவது உண்டி குலுக்கி அடுத்த வேலை சோத்துக்கு வழிய பாருங்கையா !!

 11. கடவுள் இல்லைன்னு சொல்ற உங்களுக்கு கோவில் யார் கட்டுப்பாட்டில் இருந்தா உங்களுக்கு என்ன? அங்கெ தமிழில் பாடக்கூடாது என்று யாரும் கூறவில்லை, ஆகம விதிகளின்படி அதற்கென்று ஒதுக்கப்படும் நேரத்தில் பாடினால் யாரும் தடை செய்வதில்லை. இந்து மத நம்பிக்கையையும், இந்துக்களையும் மட்டும் இகழ்பவர்கள் கோவில் விவகாரங்களில் தலையிட எந்த அருகதையும் அற்றவர்கள்…

Leave a Reply

%d bloggers like this: