பொங்கல் தமிழர் திருநாளா? அப்படியா? பரவாயில்லையே!


mattu-vandi.jpg

சென்னை லயோலா கல்லூரி, மாணவர் பேரவையால் நடத்தப்பட்ட ‘விழி’ என்ற மாத இதழுக்காக 2007 ஆம் ஆண்டு கடைசியில் எழுதியது. இரண்டாண்டுகளுககு முன் பிரசுரிததை மீண்டும் பிரசுரிக்கிறேன்.

***

யிரம்தான் பொங்கலை தமிழர் திருநாள் என்று உரக்கக் கூவி பார்த்தாலும், தீபாவளிக்கு இருக்கிற மவுசு பொங்கலுக்கு இல்லைதான்.

என்ன காரணம்?

முதலாளித்துவமும் பார்ப்பனியமும்தான் காரணம்.

உங்களுக்கு வேற வேலை இல்லையா? எதற்கெடுத்தாலும் பார்ப்பனியம்… முதலாளி…இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க. சரி எப்படி காரணம்?

தீபாவளி கொண்டாடப்படுவதற்கு காரணமாக சொல்லப்படுகிற கதைகளில் பல முரண்பாடுகள் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் முழுக்க முழுக்க பார்ப்பன நலன் அல்லது அதன் உயர்வு சார்ந்ததாக இருக்கிறது.
பார்ப்பனரல்லாதவர்கள் தீபாவளியை தங்கள் பண்டிகையாக விரும்பி விசேஷமாக  கொண்டாடுவதற்கு, மத ரீதியாக பல கவர்ச்சிகரமான மத்தாப்புகள் கொளுத்திப் போடப்படுகின்றன.

சரி. இதுல முதலாளித்துவம் எங்கிருந்து வந்துச்சு?

பார்ப்பனியம் முதலாளித்துவத்தோடு கைகோர்த்து, அதிகார மட்டத்தில் இருப்பதால்தான், தொழிலாளர்களுக்கு ‘போனஸ்’ பொங்கலுக்கு தரமால், தீபாவளிக்கு தரப்படுகிறது.

தீபாவளி விசேஷமாக கொண்டாடப்படுவதின் 100 சதவீத காரணம் இதுதான்.
தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முதலாளிகளும், வர்த்தக நிறுவனங்களும் தொழிலாளர்களின் ‘போனசை’ குறிவைத்து தங்களின் விளம்பரங்களின் மூலம் ‘தீபாவளி கொண்டாட்டத்திற்கு’ மக்களை தயார் செய்கிறார்கள். தனது தள்ளுபடி மோசடியையும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.

சரி, அதுக்கு என்ன செய்யிறது?

தீபாவளிக்கு இருக்கிற மவுசை குறைத்து அதை பொங்கலுக்கு கூட்ட வேண்டும் என்றால், தீபாவளிக்கு தருகிற ‘போனசை’ நிறுத்தி, அதை பொங்கலுக்கு  மாற்றவேண்டும்.

மாற்றினால்?

“விழாக்கள், பண்டிகைகள் எல்லாம் முதலாளிகளின் வேட்டை நாய்கள்” என்றார் காரல் மார்க்ஸ். அந்த வேட்டை நாய்கள் எல்லாம் பச்சை தமிழனாக மாறி பொங்கலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ‘தமிழர் திருநாளை கொண்டாட எங்களிடம் வாருங்கள்’ என்று பொங்க ஆரம்பித்துவிடும்.

அப்புறம் என்ன ஆகும்?

வழக்கம் போல தாழ்த்தப்பட்ட மக்களை தள்ளிவைச்சிட்டு, ‘தமிழர் திருநாள்’ விசேஷமாக கொண்டாடப்படும்.

என்னங்க இது புது கதையா இருக்கு? தாழ்த்தப்பட்ட மக்களை யாருங்க தள்ளிவைச்சா? எதையாவது சொல்லி குழப்பத்தை உண்டு பண்ணிக்கிட்டே இருங்க.

jalli.jpg

நீங்க என்ன சந்திர மண்டலத்துல இருந்து வந்திருக்கீங்களா? தமிழர்களின் ‘வீர விளையாட்டு’ என்று சொல்லப்படுகிற, ஜல்லிகட்டில் – மாட்டை அடக்குற போட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிப்பதில்லை, என்பது உங்களுக்குத் தெரியாதா?

‘மாட்டுபொங்கல்’ என்று ஒரு நாளை தீர்மானிச்சு, அந்த நாளில் தனக்கு உழைத்தவர்கள் என்கிற அடிப்படையில் மாட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒரே நிலையில் வைத்து ‘மரியாதை’ செய்கிற பழக்கம் என்ன ஜப்பான்காரன் பழக்கமா?

பார்பபனர்களை திட்டுன சந்தோஷபடுறீங்க. உங்க கதையை எடுத்து உட்டா உடனே, நீங்களும் பார்ப்பனரா மாறிடிறீங்க? என்னங்க நியாயம் இது?

-வே. மதிமாறன்

‘விழி’ மாத இதழுக்காக 2007 எழுதியது.

12 thoughts on “பொங்கல் தமிழர் திருநாளா? அப்படியா? பரவாயில்லையே!

 1. யாரு தாழ்த்த பட்டுருக்காங்கனு கொஞ்சம் கண் தொறந்து பாருங்க அண்ணா..

  பணமில்லாதவர்கள் .. இதில் சாதி எதுக்கு…
  அடிப்படை இல்லாமல் பேசாதீங்க

  துட்டு இருந்தால் மரியாதையே தனி.
  துட்டு இல்லாட்டி ….. கேக்கவே வேண்டாம்.

  என் பக்கது வீட்டுகாரர் என்ன சாதி என இன்றைக்கும் தெரியாது. ஆர்வமும் இல்லை.
  நான் மேல்வகுப்பில் பிறந்தவராம். அதனால் என்ன ——- லாபம் எனக்கு .. நீங்க தான் சொல்லணும்.

  நான் அப்படி (உயர் வகுப்பில்) பிறந்ததால்
  . பீஸ் கட்ட காசுக்கு கஷ்டம். இருந்தாலும் உதவித்தொகை கிடையாது. (நாங்க உயர் வகுப்புங்கோ)
  . என்ன மார்க் எடுத்தாலும் எனக்கு சீட் (டோட்-1) கிடைக்காது. பி.எஸ்.சி சீட் கிடைத்தாலே பெரிய விஷயம். (நான் என்பது சதம் மார்க் வாங்குபவன்).
  . துட்டு கொடுத்து படிப்பு/வேலை. வாய்ப்பே இல்லை.
  . என் அண்ணன் வாரம் ஏழு நாள் வேலை (14hrs a day), மூவாயிரம் ரூபா சம்பளம்….. ஒரு கடையில் வேலை செய்றான். என் எதிர்காலம் எப்படி இருக்குமோ. (நாங்க உயர் வகுப்புங்கோ).. (அரசு வேலை செய்பவர்களுக்கு மாதம் அறுபது ஆயிரம் ரூபா சம்பளமாமே.??)

  அண்ணா., கொஞ்சம் கண் திறந்து பாருங்க. ப்ளீஸ்.

 2. லீணா மணிமேகலை, வினவு இவர்களிடையேயான விவாதத்திற்குத் தொடர்பாக உங்களுடைய “மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேயா” என்ற கட்டுரை இருக்கிறது. இதைக் குறித்த முன்னுரையுடன் அக்கட்டுரையின் இரண்டு பாகங்களையும் மீள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 3. நீங்க சொல்றது செரி அதுக்காக சாதி பேர் சொல்லி விளையாடதிங்க nithil

 4. தோழர் தமிழர்களை அழிக்க எவனும் வெளியிலிருந்து வரத் தேவையில்லை தமிழ் திரைஉலகமே போதும்..

  உங்களுடைய பேராண்மை பட விமர்சனத்தில் நீங்கள் கூறிய

  //உண்மையில் தமிழ் சினிமாக்களில் மிகச் சிறந்த பொழுதுபோக்கு படம் ‘தில்லானா மோகனாம்பாளும்’ அதையே உல்டா செய்து, அதைவிட எளிய மக்களை கதாபாத்திரங்களாக வைத்து எடுத்த ‘கரகாட்டக்காரனும்’தான்//

  இந்த கருத்து எக்காலத்திற்கும் பொருந்தும்..

 5. திரு. பாருக் நீங்கள் குறிப்பிடுவது புரியவில்லை. இன்னும் விவரமாக எழுதுகிறீர்களா?
  இந்த பதிவுக்கும் நீங்கள் குறிப்பிடுகிற இதற்கும் உள்ள தொடர்பையும் விளக்கினால் நன்றாக இருக்கும்.

 6. இந்த போனசைக் கொடுத்து முதலாளிகள் என்னமா ஏமாற்றுகிறார்கள்! போங்கடா நீங்களும் வேண்டாம் உங்க போனசும் வேண்டாம் என்று எல்லாரும் மறுத்து விட்டால் சமத்துவத்தையும் நிலை நாட்டி விடலாம், முதலாளிகளையும் பழி வாங்கி விடலாம்!

  http://kgjawarlal.wordpress.com

 7. //இந்த போனசைக் கொடுத்து முதலாளிகள் என்னமா ஏமாற்றுகிறார்கள்! போங்கடா நீங்களும் வேண்டாம் உங்க போனசும் வேண்டாம் என்று எல்லாரும் மறுத்து விட்டால் சமத்துவத்தையும் நிலை நாட்டி விடலாம், முதலாளிகளையும் பழி வாங்கி விடலாம்//

  இந்த பதிவில் இம் மாதிரி பொருள் படும்படி எங்கே எழுதிஇருக்கிறார். பதிவில் உடன்பாடு இல்லையென்றால் உங்கள் விவாதத்தை நேர்மையாக முன் வைப்பதுதான் அழகு, உங்களை போன்றவர்களுக்கு –

  நித்தில்

 8. வள்ளுவன் போன்றோருக்காக ….

  பக்கத்து வீட்டுக்காரன் என்ன சாதின்னு தெரியாதது ஒன்னும் முற்போக்கு சிந்தனை அல்ல, அது மற்ற சாதிகளின் மேலுள்ள அக்கறையின்மையே! அதாவது எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்பதுதான். இவர்கள் யாரும் திருமணம் என்று வரும்போது சம்மந்தி வீட்டார் என்ன சாதின்னே எனக்குத் தெரியாது என்று சொல்லமுடியாது, நடக்கின்ற ஓரிரு கலப்புசாதி திருமணங்கள் கூட எதிர்ப்பிக்குப் பின்னால்தான் நடக்கிறது. அதுவும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று அல்ல, சாதி தெரியாமல் காதலித்துத் தொலைத்துவிட்டோமே என்றுதான். அப்படியும் முற்போகாகச் சிந்தித்து சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களில் கூட தாழ்த்தப்பட்டவர்களின் பக்கம் நெருங்க எந்தக் கொம்பனுக்கும் தைரியம் இல்லை. (சிற்றரசு கொலை தற்பொழுது நடந்ததுதானே?) “தாழ்த்தப்பட்டவன்” என்றால் பணம் இல்லாதவன் எனும்போதே இவர்களின் சமூகவியல் அறிவும் அக்கறையும் தெரிந்துவிடுகிறது. இட ஒதுக்கீடு பொருளாதாரரீதியில்தான் வேண்டும் என்று இவர்களுக்கே உரிய அறிவினால் எழும் இவர்களின் கேள்விகளுக்கு பதில் எத்தனை முறை சொன்னாலும் அவர்களுக்கே உரிய அறிவிற்குப் புரியமாட்டேங்குது. எப்படிப் புரியும்? முயச்சிப்போம்!. “தாழ்த்தப்பட்டவர்கள்” தாழ்ந்தவர்கள் அல்ல பிறரால் தாழ்த்தப்பட்டவர்கள். ஆரியர்களின் சூழ்ச்சியில் சிக்கித் தன்னை இந்துக்கள் என்று பெருமையுடன் கூறிக்கொண்டு தன் இனமே அழிவதற்குத் துணைபோன தமிழர்களை உயர்சாதிக்காரர்களாக்கப்பட்டனர் , கடைசிவரை தங்களின் மொழி , பண்பாடு, கலாச்சார அழிப்பை எதிர்த்து நின்ற பச்சைத் தமிழர்கள் இழிவுசெய்து தாழ்த்தப்பட்டனர். படிப்பு , சமூக அந்தஸ்த்து இவர்களுக்கு மறுக்கப்பட்டது. தன் இன அழிப்பிற்கே துணைபோன உயர்சாதி இந்துக்களுக்கு கிடைத்ததெல்லாம் பச்சைத் தமிழர்களான தாழ்த்தப்பட்டவர்கள் மீது ஏறி நின்று கொண்டு பார்பானியத்தைச் சுமக்கும் வேலை மட்டுமே. பணம்தான் எல்லாம் என்றார்கள், மறுக்கவில்லை, திடீரென இவர்களுக்கு வந்த இந்த மார்க்சியச் சிந்தனை ஆதிக்கத்திற்கு எதிரானது அல்ல, அப்பாவிகளுக்கு எதிரானது. வெறுமனமே பொருளாதாரரீதியிலான இட ஒதுக்கீடு என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ஏனென்றால் பொருளாதாம் என்பது மாறக்கூடியது (its flexible என்பார்கள்). எதைவைத்து ஒருவன் ஏழை பணக்காரன் என்று கணக்கெடுப்பீர்கள் (இந்த ஏழைகளில் கமலஹாசனும் வந்தாலும் வருவார் ) , 6 மாதங்களில் பொருளாதாரநிலை மாறிவிடமுடியும். ஆனால் ஒருவன் செத்தாலும் சாதி மாறவே மாறாது (சுடுகாட்டில்கூட நடத்துவார்கள் இந்தச் சண்டையை) . தாழ்த்தப்பட்டவர்களில் பணக்காரர்களாகவும் , எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகவும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் உயர்சாதி ஏழைகளில்கூட எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இல்லை.

  சாதிக்குள்ளேயே பொருளாதார அடிப்படையில் என்று CPI ஒரு பரிந்துரை அளித்துள்ளது. இது வரவேற்கக் கூடியதுதான்
  போதும் என்று நினைக்கிறேன்.. அவர்களுக்குத்தான் புரியாதே..

  (இரும்பொறை குணசேகரன் அவர்களின் கட்டுரையில் இருந்து சில செய்திகளை எடுத்துப் பயன்படுத்தியுள்ளேன்)
  தோழமையுடன்- தும்பையன்

Leave a Reply

%d bloggers like this: