மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

“திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. திருட்டு வி.சி.டிக்கு தருகிற பணம் மக்கள் அவர்கள் தலையில் அவர்களே போட்டுக் கொள்கிற குண்டு.” என்று சகலகலா வல்லவன் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
‘உலகநாயகனுக்கு மக்கள் மீது அப்படி என்ன அன்பு?’ என்று கேட்பதைவிடவும், ‘முஸ்லிம்கள் மீது அப்படி என்ன வெறுப்பு?’ என்று கேட்பது சரியாக இருக்கும்.
ஜக்குபாய் வி.சி.டி. விவகாரத்தில் கைதானவர்களில் ஒருவர் இஸ்லாமியர் என்பதால், இப்படி ஒரு கைகுண்டை வீச முயற்சி்த்திருக்கிறார், குமுதம் ஞாநியின் மனம் கவர்ந்த காதல் மன்னன். இதற்கு முன் இவரின் சொந்த தயாரிப்பான ‘ஹேராம்’ பட வி.சி.டி. விவகாரத்தின் போதுகூட இஸ்லாமிய பெயர் கொண்ட ஒருவரோடு பர்மா பஜார் ரோட்டில் இறங்கி டூப்போடாமல் சண்டைபோட்டார், ஹாலிவுட் நடிகர்களுக்கு சவால் விடும் ‘நம்’ நடிகர்.
ஜக்குபாய் வி.சி.டி. விவகாரத்தின் போதும் அந்த இஸ்லாமிய பெயர் கொண்டவர் ஞாபகம் வந்ததோ என்னவோ, இந்தக் கைகுண்டை வாயில் கடித்து துப்பி, வீச முயற்சித்திருக்கிறார். ஆனால், கடிக்கும்போதே அவர் வாயிலேயே வெடித்திருக்கிறது அந்த வாய்குண்டு.
உண்மையில் புதுப்பட வி.சி.டி என்பது கமல்ஹாசன் தலையில் விழுகிற குண்டு. அதை அப்படி நேரடியாக சொன்னால் எடுப்பாக இருக்காது என்பதால், இப்படி ‘உன்னைப்போல் ஒருவன்’ பாணியில் இஸ்லாமியர்களிடம் இருந்து இந்துக்களை பாதுகாக்கும் அக்கறையில் ஏற்றி சொல்லியிருக்கிறார், இந்தியன் தாத்தா கமல்ஹாசன்.
இந்திய நாட்டை பாகிஸ்தானிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால், இந்திய ராணுவ வீரர்கள், எல்லையை பாதுகாப்பதைவிட்டு இந்த வில்லையை (வி.சி.டி) தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைப்பார் போலும் இன்டலக்சுவல் நடிகர். அப்படி வைத்தால் அதையும் நிறைவேற்றி வைப்பதில் மிகுந்த அக்கறை காட்டுவார் தமிழக முதல்வர். காரணம், கமல்ஹாசன் மற்றும் தமிழ் சினிமா மீது உள்ள அக்கறையினால் அல்ல. கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி போன்ற தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் தாத்தா என்கிற முறையில்.
(ஒக்கேனேக்கல் பிரச்சினையின்போது நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்த மேடையில் வட்டாள் நாகராஜ் போன்றவர்களை, சத்தியராஜ் மிக கடுமையான வார்த்தைகளால் பேசியபோது ‘நாம் அநாகரிகமாக நடந்து கொள்ளக்கூடாது. அடிதடி வன்முறை தீர்வல்ல’ என்று விளக்கிய, கண்டித்த இந்த அகிம்சாமூர்த்தி சாகேத்ராமன், அதற்கு முன் ஹேராம் வி.சி.டி.க்காக தெருவில் இறங்கி நாகரீகமாக சண்டைபோட்டார்.
‘பொது பிரச்சினை என்றால், காந்தி மாதிரி அகிம்சையா நடந்துக்கனும். சொந்த பிரச்சினை என்றால், கோட்சே மாதிரி கொலைகாரனா கூட மாறலாம்’ என்கிற பார்ப்பனிய தத்துவத்தோடு இதை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம்)
‘இந்த திருட்டு வி.சி.டி.யால் லைட்மேன் போன்ற பல தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது.’ என்று கவலைகொள்கின்றனர் இன்னும் சில நடிகர்கள். பக்கத்து இலைக்கு பாயாசம் என்கிற பாணியிலான அக்கறையில், எப்போதுமே சம்பந்தப்பட்ட பிரச்சினையில் அதிகம் லாபம் அடைகிற அல்லது பாதிக்கப்படுகிற வசதியானவர்களால்தான் இந்த வசனம் வாசிக்கப்படுகிறது.
நடுத்தர மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மிக பெரிய அளவில் சீரழித்த, லாட்டரி சீட்டை தடை செய்தபோது, அதன் மூலமாக கோடி கோடியாக கொள்ளையடித்தவர்கள்கூட இப்படி ஆஸ்கர் நாயகன் கமல்ஹாசன் அண்டு கம்பெனி பாணியில்தான் வசனம் பேசினார்கள்.
‘இந்த லாட்டரி சீட்டை தடை செஞ்சா அதன் மூலமாக பாதிக்கப்படப்போறது, ஊனமுற்றவர்களும், பார்வையற்றவர்களும்தான். அவர்கள்தான் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு அதன் மூலமான வருமானத்தில் வாழ்கிறார்கள்’ என்று ஊனமுற்றவர்களை முன்நிறுத்தி, போராடினார்கள் லாட்டரி சீட்டின் மூலமாக பெரும் கொள்ளை அடித்த அதிபர்கள்.
புதுப்பட வி.சி.டி.யினால், சினிமா எடுக்கறதே நின்னுபோயிடுமாம். நின்னுபோன நிக்கட்டுமே அதனால் என்ன இப்போ?
உழைப்பை மூலதனமாக வைத்து பிழைக்கிற சினிமாவில் இருக்கிற கூலி தொழிலாளர்கள், அந்த உழைப்பை எங்கே போய் செய்தாலும் பிழைத்துக் கொள்வார்கள். (என்ன பொல்லாத சம்பளம் கொடுக்குறாங்க?)
ஆனால், ஊதாரி வாழ்க்கையில் ஊறிப்போன, கொள்ளை அடிக்கிற இந்தக் கும்பல் இதுபோன்ற ஒரு சொகுசான ‘தொழிலை’ திரும்ப உருவாக்கிக்கொள்வது கடினம். இந்த உல்லாசத்துக்கு ஆபத்து வந்துடுமோன்னுதான், ‘ஆடு நனையுதேன்னு அழுகிறது இந்த ஓநாய்கள்.’
இந்த தேசபக்தி கமல்ஹாசன், இவ்வளவு அக்கறையா, நேர்மையா, கோபமா வி.சி.டி பத்தி பேசுறாரே, இவருடைய உன்னைப் போல் ஒருவன் படத்தை, நான் சென்னை அம்பத்தூர் தியேட்டர் ஒன்னுல 80 ரூபா கொடுத்து பார்த்தேன். தியேட்டர்காரன் கொடுத்த டிக்கெட்டுல 10 பைசான்னு கூட பிரிண்ட் பண்ணல. வெறும் வெள்ளை பேப்பர்ல ஏதோ எழுதி கொடுத்தான். இந்த இந்தியன் தாத்தாக்களுக்கு இத எதிர்த்து கோபம் வருமா? ஹேராம் வி.சி.டி.க்கு ரோட்டுல இறங்கி சண்டைபோட்டவர், இதற்கு எதிராக போடுவாரா?
இது சட்டவிரோதம் இல்லியா? இப்படி சட்டவிரோதமாக சம்பாதிக்கிற பணம்தான் மாலேகான் குண்டு வெடிப்புக்கு பயன்படுதுன்னு சொன்னா ஒத்துப்பாரா மாலனின் மனம் கவர்ந்த மகாநடிகன்.
இந்த சட்டவிரோத விற்பனையை மையமாக வைத்துதானே கோடிக்கணக்குல கமல்ஹாசன் போன்ற நடிகர்களுக்கு சம்பளம் தரப்படுகிறது. இந்த மோசடி டிக்கெட் விற்பனையை மூலதனமாக வைத்துதானே பிரம்மாண்டமான தயாரிப்பில் படம் எடுக்கலாம்ன்னு முடிவாகுது.
எது மக்கள் தலையில் போடுகிற குண்டு? இதுவா? புதுப்பட வி.சி.டியா?
உண்மையில் தீவிரமாக சினிமா பார்ப்பவர்களுக்கு புதுப்பட வி.சி.டி ஒரு புதையல். இன்றைய அத்தியாவாசிய பொருட்களின் விலையேற்ற சூழலில், ஒரு நபருக்கு 80 ரூபா கொடுத்து பார்ப்பதைவிட, ஒரு குடும்பத்திற்கு 40 ரூபா கொடுத்து பார்ப்பது சிக்கனம் மட்டுமல்ல, அதுதான் அவர்களுக்கு சாத்தியம்.
தன்னோட படத்தை ஒருவர் பிரதி எடுத்து வி.சி.டியா விற்கிறார் என்று தெரிந்தஉடன் அவருடன் ரோட்டில் இறங்கி சண்டைபோடுகிறாரே நாயகன். இத்தனைக்கும் அது பணம் பிரச்சினை மட்டும்தான். அந்த வி.சி.டி.யில் தயாரிப்பு அல்லது கதை என்று தன் பெயரை போட்டுக்கொள்வதில்லை வி.சி.டி.காரர்கள்.
ஆனால், அடுத்தவன் படைப்பை அவன் அனுமதியில்லாமல், ஒருவன் அவன் பெயரில் எடுத்து அதன் மூலமாக கோடிகோடியாக சம்பாதித்து, பேரும், புகழும் வாங்குகிறார்களே அவர்களோடு சண்டையி்ட்டு கட்டி புரளவேண்டும் என்றால், ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடுகிற நமது இயக்குநர்களோடும், நடிகர்களோடும் கோடம்பாக்கத்து தெருக்களில் காலம் முழுவதும் ஹாலிவுட் மற்றும் வெளிநாட்டுக்காரர்கள் கட்டி உருண்டுகொண்டே இருக்க வேண்டியதுதான்.
ராபின் வில்லியம்ஸ் நடித்த, உலகப் புகழ்பெற்ற திரைப்படமான ‘mrs doubtfire’ என்ற ஹாலிவுட் படத்தை காப்பியடித்து பச்சையாக ‘அவ்வை சண்முகி’ என்று எடுத்த கமல்ஹாசனோடு, ராபின் வில்லியமஸ் ஆழ்வார்பேட்டை தெருவில் சண்டை செய்து கட்டி உருண்டு இருக்கவேண்டும். யார் போய் சொல்றது ராபின் வில்லியம்ஸ்கிட்ட.
உலக சினமாவை டப்பாவில் போட்டு குலுக்கி எடுக்குற மதன் போய் வில்லியம்ஸ்கிட்ட சொல்லுவாரா? அவர் கமல்ஹாசனிடம்தான் சொல்லுவார்:
“ராபின் வில்லியம்ஸ் நடிச்ச புதுப்பட சி.டி ஒன்னு இருக்கு பாக்குறீங்களா?”ன்னு.
‘‘எங்காவது திருட்டு வி.சி.டி. தயாரிப்பதோ, விற்பதோ தெரிந்தால் அவர்களை அடித்து உதைக்க வேண்டும். இதற்காக திரையுலகம் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 இளைஞர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு சம்பளம் தரலாம்’’என்று உலகத் தமிழர்களின் ஓரே துயரம் திருட்டு வி.சி.டிதான் என்பதுபோல், மிகத் தீவிரமாக கொதித்திருக்கிறார் சேரன்.
சேரன் சொன்னதையே கொஞ்சம் திருப்பிப்போட்டு பார்ப்போம். இதே யோசனையை, வெளிநாட்டு சினிமாக்காரர்கள் சொன்னால், எப்படி சொல்லியிருப்பார்கள்:
“இந்தியாவில எங்காவது திருட்டுத்தனமாக நம்ம படத்தை காப்பியடிச்சு தயாரிப்பதோ, விற்பதோ தெரிந்தால் அவர்களை அடித்து உதைக்க வேண்டும். இதற்காக வெளிநாட்டைச் சேர்ந்த திரையுலகம் சார்பாக மாநிலத்திற்கு 100 இளைஞர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் பத்து லட்சம் வரைக்கும் சம்பளம் தரலாம்”
இது உண்மையில் நடைமுறைக்கு வந்தா, எவ்வளவு பெரிய மனுசங்க எல்லாம் அடிவாங்குவாங்க…அதுவும் கடுமையா அடிபடற பெரிய மனுசங்க எல்லாம் இருக்காங்க…. நினைச்சாலே நமக்கு பயமா இருக்கு.
‘ஒரு சினிமாவை எடுப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறோம்? கடன வாங்கி, ராத்திரி பகலா, கண்முழுச்சி பாடுபட்டு, சிரமப்பட்டு எடுக்குறோம். அதபோய் திருட்டு வி.சி.டி. போடுறானுங்களே?’ என்று ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட துயரத்தை விடவும், இதுபெரிய துயரம் என்பதுபோல் மிகவும் மனம் ஒடிந்துபோகிறார்கள் சினிமாக்காரர்கள்.
கஷ்டப்படுறதுனாலேயே ஒரு விசயம் நியாயம் ஆகிவிடுமா?
அப்படி பார்த்தால், பெரும் பணக்காரர்கள்தான் சினிமா எடுக்க வருகிறார்கள். பெரும்பான்மையான சினிமாக்கள், கருப்பு பணத்துலதான் தயாராகிறது. நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும் கொடுக்கப்படுகிற சம்பளம் வெளிப்படையாக இல்லைங்கறதே அதற்கு சாட்சி.
ஆனால், புதுப்படத்தை வி.சி.டி.யில் கொண்டுவருகிறவர்கள், தன் பொண்டாட்டி தாலிய அடகு வைச்சோ இல்ல 10 வட்டிக்கு பணம் வாங்கியோ கொண்டுவருகிறவர்கள்போல்தான் தெரிகிறார்கள். போலிசுக்கு பயந்து, மாட்டுனா குண்டர் சட்டத்துல் கைதாகி… பல வருடங்கள் உள்ள இருக்க வேண்டிய சூழல் வேற…
ஒப்பிட்டளவில் பாத்தா, சினிமாக்காரர்களைவிடவும், புதுப்பட வி.சி.டிபோடுகிறவர்கள்தான் அதிக பிரச்சினைகளை, சிரமங்களை சந்திக்கிறதா தெரியுது. சிரமம் மட்டும்தான் ஒரு விசயத்திற்கான உரிமைய தீர்மானிக்கிறது என்றால், அப்போ புதுப்பட வி.சி.டி.காரங்க சிரமத்தை ஒத்துக்கிட்டு அமைதியாக இருக்கவேண்டியதுதானே? எதுககு ஒப்பாரி.
சரி, அதெல்லாம் இருக்கட்டும்.
இந்த மாமேதைகள் எடுக்கிற படங்கள், பல நேரங்களில், திருட்டு வி.சி.டிகளில் கூட சரியா ஓட மாட்டேங்குது. அந்தப் படத்தோட தயாரிப்பாளர் மட்டுமல்ல. அதை திருட்டு வி.சி.டி போட்டவர்கள்கூட நஷ்டம் தாங்காம நடுத்தெருவுக்கு வந்துடுறதா சொல்றாங்க.
இதுயார் தப்பு? இதுக்கு யார் பொறுப்பு?
*
ஜனவரி19, 2010 அன்று எழுதியது.
//பொது பிரச்சினை என்றால், காந்தி மாதிரி அகிம்சையா நடந்துக்கனும். சொந்த பிரச்சினை என்றால், கோட்சே மாதிரி கொலைகாரனா கூட மாறலாம்’ என்கிற பார்ப்பனிய தத்துவத்தோடு இதை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம்//
அருமையான பதிவு.
அருமையான பகுத்தறிவான பதிவு. மக்களுக்கு இந்த ஆஸ்கார் நாயகனின் நடிப்பு நிஜத்திலும் உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. தன்னால் வாங்கவே முடியாது என்று தெரிந்தும் ஆஸ்காரை தம்முடன் சேர்த்துக்கொள்வதுடன், இதனால் உண்மையானத்தமிழன் ஏ.ஆர். ரஹுமானுக்குரிய மரியாதையை இந்த தமிழக அரசு செலுத்தவில்லை. இவர்கள் தங்களது கோடி கோடியாக வாங்கும் சம்பளத்தைக் குறைத்தால் நாட்டில் தீவிரவாதம் குறையும்.
nuchhunu nadu mandaila adicha madhiri iruku ungal padivu!!!!!!!
nice points
நேர்மையான பதிவு. இந்த சினிமாக்காரங்களோட கொசுத்தொல்லை தாங்க முடியல. கலைஞர் வீட்டுக்கு வீடு இலவச டீவி கொடுத்துட்டு, டீவில டிவிடில படத்தப் பாக்குறாங்கன்னு புலம்புனா எப்படி
மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் ரசித்து படித்த அருமையான கட்டுரை.
மதி,
வரிக்கு வரி அருமையான பதிவு.
Enaku therinja vai V.C.D pottu dhan loss aagi irukurantha…
80,,100,, rs kooduthu padam paarkka Mudiyala
romba kevalama iruku ipo vara padam elm V.C.D la kooda paarka mudiyala
thanga mudiyala intha tamil padam bore…
ஈழத்தமிழன் இந்த சினிமாவால் ஐரோப்பாவில் உழைத்த காசை புலிக்கு அனுப்பி அவர்கள் ராஜீவின் தலையில் குண்டு போட்டார்கள் என சுப்பிரமணியன் சுவாமி, தங்கபாலு, இளங்கோவன் கோஷ்டி ஆரம்பிக்க போறாங்க!!!!
நல்ல பதிவு. இதே நாங்கள் அதாவது முஸ்லிம் இதை எல்லாம் எழுதினால் நாங்கள் தீவிர வாதிகள் ஆகிவிடுவோம். உலக நாயகனுக்கு எப்போதும் ஒரு தனி “அன்பு” முஸ்லிம்கள் மேல். அது அவருடைய தப்பு இல்லை. அவர் இருக்கும் இடம் அப்படி. ( மதன், ஞாநி, மாலன்…) ஜக்குபாயக்காக ஒரு வி.சி.டி தயாரிப்பவர் பாண்டிச்சேரியில் தற்கொலை செய்துகொண்டார் காவல் துறையால். மிக்க நன்றி.
ஊடகங்களிலின் சுரணையில்லாத தோலுக்கு உரைக்கும் வரைக்கும் உங்கள் பதிவுகளின் பறை……….
ஓங்கி ஒலிக்கட்டும்
“உழைப்பை மூலதனமாக வைத்து பிழைக்கிற சினிமாவில் இருக்கிற கூலி தொழிலாளர்கள், அந்த உழைப்பை எங்கே போய் செய்தாலும் பிழைத்துக் கொள்வார்கள். (என்ன பொல்லாத சம்பளம் கொடுக்குறாங்க?)”
– மதிமாறன் சார், இங்கே சிங்கப்பூர் உள்ளூர் தொலைகாட்சில ‘ஆசை முகம்’னு ஒரு நிகழ்ச்சி வருது. உள்ளூர் பிரபலம் திரு வடிவழகன் அவர்கள் சினிமாக்காரர்களுடன் உரையாடுவது தான் அந்த நிகழ்ச்சி.
என் ஞாபக்த்துக்குட்பட்டதை நான் எழுதுகிறேன், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் பேட்டியை எடுத்தார், அப்போ அவர் பேசும் போது படையப்பா சூட்டிங்கில் ஒரு சாதாரண தொழிலாளியை இவர் அடித்து விட்டாராம், அதை பார்த்த சிவாஜி ரஜினியிடம் ‘இவன் என்ன ரவுடி மாதிரி இருக்கான்னு’ சொன்னாராம், அப்புறம் ஏதோ ஒரு காட்சியை விளக்கிய பிறகு அதே சிவாஜி இவரை பாராட்டினாராம்.
அது எப்படியும் பாராட்டி தொலைக்கட்டும் நான் வேணாங்கலை, எனக்கு கோபம் வந்தது ஒரு தொழிலாளியை அடிச்சதை என்னமோ பெரிய வேலையில கரெக்டா இருப்பாராமாம் அதுக்காக யாரா இருந்தாலும் அடிச்சிடுவாராமாம், என்ன அநியாயம் சார் இது?
இவர்கள் சம்பளம் கொடுத்து தொலைக்காட்டியும் ஒழுங்கா மரியாதையாவது கொடுக்கலாம் இல்ல..
என் ஞாபகத்துக்குள் உள்ளதை
நல்ல தொரு கட்டுரை…
உண்மையிலேயே இவனுங்க எடுக்கிற படத்தை தியேட்டரில் பார்ப்பதை விட திருட்டு விசிடியில் பார்ப்பதுவே பெரிய வேதனையா இருக்கு. இந்த பண்ணாடைகள் படம் பார்க்குர மாதிரியா எடுக்கிறானுங்க. எங்கயாச்சும் சுட்டு அதையும் சரியா பண்ணாம படம் எடுத்து கொல்லுரானுங்க.
எட்டணாவுக்கு பேராத இவனுங்க படத்த படத்த தியேட்டர்ல 80 ரூபா 100 ரூபா கொடுத்து எப்படி பார்க்கிறது.
ஏதோ விசிடி கிடைக்கிறதனால ஒரு 30 ரூபாய் ல இவனுங்க படத்த குடும்பத்தோட ஓட்டி ஓட்டி பார்த்துகிடலாம்.
nalla pathivu,… melum yethirparkirom…
திருட்டு டிவிடி பணம் தீவிரவாதத்துக்கு துணை போவது உண்மைதான் நண்பரே. நீங்கள் கமல் மேல் உள்ள வெறுப்பினால் அந்த உண்மையை திசை திருப்பாதீர்கள். எப்போதும் ஒரு கருத்தை மட்டும் விமர்சனம் பண்ணுங்கள், அந்த கருத்துக்கு சொந்தகாரர்களை அல்ல. அது நாகரிகம் அன்று. சாத்தான் வேதம் ஓதினாலும், அந்த வேதத்தில் ஒரு நல்ல கருத்து இருந்தால் ஏற்றுகொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. அதை விட்டு சாத்தானுக்கு தகுதியில்லை என்றால், நமக்கும் பக்குவம் இல்லை என்றே அர்த்தம். உண்மையை புரிந்து கொள்ளுங்கள் தோழரே!
தப்பை நியாய படுத்தாதிகள்.what ever they do is illegal. we should not support crime.
அன்புடன் மதிமாறன் அவர்களுக்கு, அருமையான கட்டுரை. மிகத் தெள்ளத் தெளிவாக எழுதியுள்ளீர்கள். எல்லா இடத்திலும் பாதிக்கப்படுவது அடித்தட்டு உழைப்பாளிகள் தான்.
அருமையான கட்டுரைபடித்த நிறைவுடன்
இளங்குமரன்
ஹஹஹ நல்ல காமெடி பதிவு.. அப்ப உங்க வீட்டுல நீங்க அரசாங்கத்தை ஏமாத்தி வெச்சிகிட்டு இருக்குற கருப்பு பணத்தை யாராச்சும் வந்து திருடிட்டு போனா விட்டுடலாமுன்னு சொல்றீங்க.. ரைட்டு விடுங்க… எல்லா திருடனும் தான் செய்யும் தப்புக்கு ஒரு நல்ல காரணம் வெச்சிகிட்டு தான் திருடரான்.. அவன் தப்பு செய்றான்னு நாமும் தப்பு செய்யணுமா என்ன?
Dear Thozhar,
I have read your blog regularly it is very interesting , useful and meaningful and to be continue your work same.
Best wishes and long live.
your Thozhar
P.Selvaraj
Neelangarai,Chennai-600 041.
Ippo ellam thirai padangallukku makkalidam moonrey vimarasanamthaan.
1. Thirai arangukallil paarkalaam,
2. VCD-il paarkalaam,
3. VCD-il kooda paarka veandaam…
enbathuthaan…. Ithu therinthu padam edukkattum intha paavi makkaaa……….
Sumar
தெனாலி – What About Bob (Ultimate Copy)
Anbe Sivam – Planes, Trains & Automobiles (Utter Copy)
Nayagan – God Father (Typical Acting as Brando’s performance) eg: crying , thalai sorithal
Aalavanthan – 10 monkey’s la oru monkey
that’s all for now…
Dont Miss to see all the above English movies
சினிமா ஒழிந்தால் தான் மக்கள் திருந்துவார்கள். அரசாங்கமே சினிமாவை வளர்த்து மக்களை மூடர்களாகவே வைத்து கொள்ள விரும்புகிறது. இந்த சினிமா கார களவாணிகளுக்கு மக்கள் பணத்தில் இருந்து கோடிகணக்கில் வாரி இறைகின்றனர். மக்கள் நல்ல அறிவியல் ,உலக வரலாறு புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை வளர்த்து கொண்டால் இந்த சினிமா மோகம் குறையலாம்.
அருமையான பதிவு மதிமாறன். பின்னிவிட்டீர்கள்.
சினமாக் காரர்கள் நினைத்தவுடன் முதல்வரைப் போய்ப் பார்க்கிறார்கள்.
விவேக், கமல், ரஜினி, குஸ்பு இவர்கள் எல்லாம் மிக எளிதாக முதல்வரை அடிக்கடி சந்திக்கிரார்கள்.
சாதாரண விடயத்தை பற்றி எல்லாம பேசி விட்டு வருகின்றனர்.
மக்கள் பிரச்சினைகளை பற்றிப் பேச யாராவது செல்ல நினைத்தால் அனுமதி கிடைக்குமா?
Bold one! Thinking to start a Blog in my name?!
//இந்தக் கைகுண்டை வாயில் கடித்து துப்பி, வீச முயற்சித்திருக்கிறார். ஆனால், கடிக்கும்போதே அவர் வாயிலேயே வெடித்திருக்கிறது அந்த வாய்குண்டு.//
இது மட்டும் நடந்துருந்தா நம்ம ஊருல மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.. இன்னும் என்ன என்ன கலவரங்களை அந்த வாய் ஏற்ப்படுத்தப்போதோ!!!!!!!!!! அவாளுக்கு தான் வெளிச்சம்!!
//தன்னோட படத்தை ஒருவர் பிரதி எடுத்து வி.சி.டியா விற்கிறார் என்று தெரிந்தஉடன் அவருடன் ரோட்டில் இறங்கி சண்டைபோடுகிறாரே நாயகன். இத்தனைக்கும் அது பணம் பிரச்சினை மட்டும்தான். அந்த வி.சி.டி.யில் தயாரிப்பு அல்லது கதை என்று தன் பெயரை போட்டுக்கொள்வதில்லை வி.சி.டி.காரர்கள்..//
உண்மையிலயே பாராட்டவேண்டியது வி.சி.டி போடுபவர்களைதான்..
//உழைப்பை மூலதனமாக வைத்து பிழைக்கிற சினிமாவில் இருக்கிற கூலி தொழிலாளர்கள், அந்த உழைப்பை எங்கே போய் செய்தாலும் பிழைத்துக் கொள்வார்கள். (என்ன பொல்லாத சம்பளம் கொடுக்குறாங்க?)//
அதானே.. இந்த பண ஓநாய்கள் செய்யும் சேட்டை தாங்கமுடியல.. லாபம் வந்தா அவங்களுக்கு நட்டம் வந்தா கூலித்தொழிலாளர்களுக்கு..
//ராபின் வில்லியம்ஸ் நடித்த, உலகப் புகழ்பெற்ற திரைப்படமான ‘mrs doubtfire’ என்ற ஹாலிவுட் படத்தை காப்பியடித்து பச்சையாக ‘அவ்வை சண்முகி’ என்று எடுத்த கமல்ஹாசனோடு, ராபின் வில்லியமஸ் ஆழ்வார்பேட்டை தெருவில் சண்டை செய்து கட்டி உருண்டு இருக்கவேண்டும். யார் போய் சொல்றது ராபின் வில்லியம்ஸ்கிட்ட.//
ம்ம்ம்… அதுல கூட அம்புஜம் கெட்டப்புதான்.. நம்ம ஊரில சேலை கட்டுற பொம்பலைங்களே இலலையோ என்னமோ.. இந்த திருட்டு தொழில்தானே இந்த கூட்டங்களின் பரம்பரை பரம்பரையாக முதலீடே இல்லாமல் செய்து வருகிறது..
// “இந்தியாவில எங்காவது திருட்டுத்தனமாக நம்ம படத்தை காப்பியடிச்சு தயாரிப்பதோ, விற்பதோ தெரிந்தால் அவர்களை அடித்து உதைக்க வேண்டும். இதற்காக வெளிநாட்டைச் சேர்ந்த திரையுலகம் சார்பாக மாநிலத்திற்கு 100 இளைஞர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் பத்து லட்சம் வரைக்கும் சம்பளம் தரலாம்” இது உண்மையில் நடைமுறைக்கு வந்தா, எவ்வளவு பெரிய மனுசங்க எல்லாம் அடிவாங்குவாங்க…அதுவும் கடுமையா அடிபடற பெரிய மனுசங்க எல்லாம் இருக்காங்க…. நினைச்சாலே நமக்கு பயமா இருக்கு.//
இது தொடர் கதையா இருக்கும்…..
//புதுப்படத்தை வி.சி.டி.யில் கொண்டுவருகிறவர்கள், தன் பொண்டாட்டி தாலிய அடகு வைச்சோ இல்ல 10 வட்டிக்கு பணம் வாங்கியோ கொண்டுவருகிறவர்கள்போல்தான் தெரிகிறார்கள். போலிசுக்கு பயந்து, மாட்டுனா குண்டர் சட்டத்துல் கைதாகி… பல வருடங்கள் உள்ள இருக்க வேண்டிய சூழல் வேற…
ஒப்பிட்டளவில் பாத்தா, சினிமாக்காரர்களைவிடவும், புதுப்பட வி.சி.டிபோடுகிறவர்கள்தான் அதிக பிரச்சினைகளை, சிரமங்களை சந்திக்கிறதா தெரியுது. சிரமம் மட்டும்தான் ஒரு விசயத்திற்கான உரிமைய தீர்மானிக்கிறது என்றால், அப்போ புதுப்பட வி.சி.டி.காரங்க சிரமத்தை ஒத்துக்கிட்டு அமைதியாக இருக்கவேண்டியதுதானே? எதுக்கு ஒப்பாரி. //
எதார்த்தம் தோழர்..
//சரி, அதெல்லாம் இருக்கட்டும். இந்த மாமேதைகள் எடுக்கிற படங்கள், பல நேரங்களில், திருட்டு வி.சி.டிகளில் கூட சரியா ஓட மாட்டேங்குது. அந்தப் படத்தோட தயாரிப்பாளர் மட்டுமல்ல. அதை திருட்டு வி.சி.டி போட்டவர்கள்கூட நஷ்டம் தாங்காம நடுத்தெருவுக்கு வந்துடுறதா சொல்றாங்க. இதுயார் தப்பு? இதுக்கு யார் பொறுப்பு? //
நல்ல கட்டுரை தோழர் உங்கள் முயற்சிக்கும் உழைப்பிற்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்..
இவங்க எடுக்கிற திருட்டு படத்தை ஒழுங்கா எடுக்காமல் சொதப்பிப்புட்டு நம்ம மக்களுக்கு ரசனையில்லைனு இலவசமா பட்டம் வேறு கொடுப்பானுங்க பாருங்க அப்படியே பொசு பொசுனு வரும் இந்த முழு மூட பசங்க மேல
இந்த நவீன மூட நம்பிகையான திரைபடங்கள் ஒழித்தால் தான் நாம் அடுத்த கட்டதிற்கே நகர முடியும்..
நச்சுன்னு உச்சந்தலையில கொட்டியிருக்கீங்க. திருட்டு டி.வி.டி யில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தீவிரவாத செயல்களுக்கு துணை போகிறார்கள் என்பதெல்லாம் ஒரு ஆவேசத்தின் வெளிப்பாடு. என்னமோ சி.பி.ஐ வைத்து கண்டுபிடித்தவர் போல் பேசுகிறார் உ.நா. இஸ்லாம் நண்பர்களுக்கு எதிரான அவரது கருத்துக்களை உ.போ.ஒ வனிலேயே பார்த்து விட்டோம்.
எனினும் ஒரு அரசு திருட்டி வி.சி.டி விஷயத்தில் இத்தனை மெத்தனமாக இருப்பது நிச்சயமாகவே கண்டிக்கத்தக்கது(நம்மளால அத மட்டும் தான செய்யமுடியுது) இத்தனை நாள் சும்மா இருந்து விட்டு இப்போ இவர்களுக்கு என்று வரும் போது மட்டும் நடவடிக்கை என்பதெல்லாம் பத்தாம்பசலித்தனமன்றி வேறென்ன!
அதே நேரத்தில் தவறை நியாயப்படுத்துதலும் தவறு தான். சரிதானே தோழரே
speech of maravan.
superb sir should accept it from u. wel don
சும்மா சுர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு ஏறுர மாதிரி இருக்கு உங்க பதிவு! வாழ்த்துக்கள். ஆனா இத சம்பந்தப்பட்டவங்க படிச்சாதான் அந்த எஃபெக்டு!? அதெ கெடக்கட்டும், உங்க பதிவிலிருந்து நிதர்சனம் எங்களுக்கு புரியுது, அதுக்காக உங்களுக்கு நன்றிகள்!
எவன் கோமனதுள்ளும் காசு இருக்க கூடாது .. அதான் , அவங்களோட குறிக்கோள்.
கமலஹாசன் என்ன படங்களில் இருந்து காப்பியடித்தார் என்பதை மிக தெளிவாக எழுதியிருக்கிறார் ஜெகன் தமிழ்மணி. இதை அவசியம் படியுஙகள்.
‘உலக’ நாயகன் கமல்.!?
http://jegankarur.blogspot.com/2009/06/blog-post_25.html
மக்களை சிந்திக்க வைக்கும் நகைச்சுவை கலந்த ஒரு உண்மை கட்டுரை
மிகவும் அருமையாக இருந்தது … 🙂
i completely agree with you in this !
திருட்டு V.C.D விடயத்தில் சாதாரணமான கேள்விகளை சினிமாக்காரர்களின் பாணியிலேயே திருப்பிபோட்டு தாக்குகிறீர்கள். நன்று. இந்த சினிமாக்காரர்கள் ஏன் இப்படியொரு கூட்டம் போட்டு எல்லா நடிகர்களும் அரசுக்கு, “ஒழுக்கா வரியை கட்டுங்கப்பா”, என்று சொல்லக்கூடாது? 🙂
wel done sir
first he married his illegal life partner
he follow western culture in his life style
pls send him to us or uk wiht that lady
நச் நச் நச்…..
சொன்னதில் ஒரு வார்த்தை கூட மிகை இல்லை.
விமர்சிக்காது விட்ட இடம் என்று ஏதுமில்லை.
…..நச் நச் நச்.
vazhthukal mathimaran! kamali veluthitinga.
Sir,
Simply Superb!!!
Excellent article!!!
Every person who involved in film industry should read and hang themselves!!
Hats off to you sir!
anna,
panippalu kaaranamaaga neenda naatgalukkupiragu indruthan ungal pathivai padikka mudinthathu. nalla pathivu ithu. enakkum ithu kuritha mosamana anupavangal undu.
durai
Avvai shunmugi Mrs. Doubtfire copy a?? Antha padathula avarukku rendu pasanga.. gemini romance appadi ellam ethuvum kidayathe. Athula vara Brosnan charecter intha padathula kidaiyave kidayathe?? Ennavo. Anga oruthar ponnu vesham potta, antha padathoda copy copy nu kathuratha?? Enna kodumai saravanan?
Prasanna
Innumonnu kavanicheengala.. Mrs. Doubtfire gown pottiruppanga.. Avvai shanmugi saree.. Super kandupudippu Saravanan idhu.
Nammala yevanaaliyum yemaatha mudiyadungannaaa!!!
mika sirantha katturai. ullaga nayaganukku seruppadi. eppa than thirunthuvakkalo ….
காலவதியான் மருந்து மாத்திரையை விற்றால் சாதாரண தண்டனை. ஆனால், திருட்டு வி.சி டி விற்றால் குண்டர் சட்டம். “மாண்புமிகு கருணாநிதி’ ஒரு கூத்தாடி என்பதை நிரூபிக்கிறார்.
அருமையான கட்டுரை தோழர்,
சாதிய பாகுபாடுகள் நிலைக்கும் வண்ணம் ஒரு குறிப்பிட்ட சாதியை மைய்யப்படுத்தி படம் எடுப்பதும் அதனை உயர்வாக காட்டுவதும், சாதியத்தை உயர்த்திப்பிடிக்ககூடாது என்ற நிலை யில் உலகதரத்துக்கு சினிமா எடுக்குரேனுட்டு அந்த சாதி அடயாலங்களை அப்படியே காட்டுரதும் இன்னும் இந்த சினிமா இருக்கும் வரை பேசும்படி ஒரு குறிப்பிட் சாதி பெருமை பேசவச்சிகிட்டு மற்ற சாதியை இழிவாக பார்க்க வைப்பதும் , ஏன் இவ்வாறு எடுக்கீறிர்கள் கேட்டால் எனக்கு சாதியில் எல்லாம் நம்பிக்கையில்லை நான் அவ்வாறு பார்பதும் இல்லை என்று தன்னை ஒரு பகுத்தளிவாளனாக காட்டிக்கொண்டு உண்மையை உண்மையாக எடுத்து கட்டாவேண்டும் அப்போதுதான் அந்த கதை களம் நன்றா இருக்கும் என்றும் கூறும் இந்த உலக நாயகன் தன் கதை உண்மையாக காட்ட வேண்டும் என்று கொஞ்சம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கின்ற கொடுமைகளை அப்படியே உண்மையை உண்மையாக காட்டுகின்ற கதை அல்லது எம் தமிழினம் சிங்கள பேடிகளால் கொல்லப்படுவதை உண்மையை காட்டுகின்ற படி படம் எடுக்க உன்னால் முடியாமா- முடியாத ஆரியத்தை அடிமனதிலும் பகுத்தறிவை தேவைக்கேற்ப் பயன்படுத்துவதிலும் உன்னைபோல் ஒருவன் யார், நீ மட்டும்தான் இருக்க முடியும்
miga sirentha katturai thozhar. serupalla adithar pola ullathu. nandri
thiruttu CD ellai Thiruttu CINEMA
YES
kalla nottu adippavankalum avankalai aatharippeerkalaa? ulaippaliyin ulaippai suranduvathu eththanai kodumaiyo aththanai padaippaliyin moolathanaththai kollaiyadippathum. matravar meethu kurai koori pukal theduvathai viduththu matravarkalukku uthaaramay vaalnthu kaatta vendum
Mathimara if a Muslim trespass your home and indulge with your family will you forgive him because he is a Muslim. There is no religion for criminals and all the criminals must be punished whether Brahmin or Muslim or Christian
See these massive copy-cats from Tamil cinema. And write a new bigger post about this topic.
http://karundhel.com/2011/07/tamil-copies-velayudham.html
http://karundhel.com/2010/09/copies-kamalhassan-evidences.html
http://karundhel.com/2010/09/blog-post_12.html
http://karundhel.com/2010/10/copies-kamalhassan-videos.html
http://karundhel.com/2010/11/blog-post_30.html
http://karundhel.com/2010/12/manmadhanambu-review.html
http://karundhel.com/2014/08/plagiarism-vs-inspiration-practical-note.html