‘கோகோ கோலா, ரஜினி போன்றவைகளிடமிருந்து மக்களை போலிகள்தான் பாதுகாக்கிறது

எல்லாவற்றிலும் போலிகள் வந்து விட்டன. அதிலும் நிஜத்தை விட நேர்த்தியான வடிவத்தில். போலிகளினால் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவே இல்லை. போலிகளை ஒழிக்கவே முடியாதா?

-ஜான்சன், களியக்காவிளை.

போலிகளினால் எப்போதுமே கெடுதல் என்று சொல்லிவிட முடியாது. நிஜங்கள் தீங்கு செய்யும் போது, போலிகள்தான் குறைந்தபட்ச , தற்காலிக பாதுகாப்பையே தருகின்றன.

‘கோகோ கோலாவில் அதிகமான பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப்பட்டிருக்கிறது. அதை குடிப்பதினால் உடல் நலத்திற்கு தீங்கு’ என்று விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் அந்த நிறுவனம் தன்னுடைய சக்தி வாய்ந்த விளம்பரத்தினால், ‘கோக் குடிப்பது நவீன நாகரிகத்தின் அடையாளம்’ என்று மீண்டும் மீண்டும் மக்களை குடிக்க வைக்கிறது.

கோக்கில் போலி வந்தால் அது மக்களை பூச்சிக் கொல்லி மருந்திலிருந்து காப்பாற்றுகிறது.பன்னாட்டு நிறுவனத்தின் கொள்ளையையும் குறைக்கிறது.

கோக்கைப் போலவே மக்களுக்கு கெடுதலை செய்கின்ற ‘சிவாஜி’ போன்ற படங்களை மக்கள் பார்க்க ஆசைப்பட்டால், ஒரு டிக்கெட் 1000 ரூபாய் கொடுத்து பார்க்க வேண்டியிருக்கிறது. அதையே திருட்டு வீசிடியில் பார்த்தால் ஒரு குடும்பமே 50 ரூபாயில் படம் பார்த்துவிடுவார்கள்.

குறைந்த பட்சம் ஏவிஎம் செட்டியார்கள், ரஜினிகாந்த் இவர்களின் கூட்டுக் கொள்ளையில் இருந்து மக்களை திருட்டு விசிடி போன்ற போலிகள்தானே பாதுகாக்கிறது.

சமூக விழிப்புணர்வு 2007 ஆகஸ்ட் மாத இதழுக்காக எழுதியது.

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து

தொடர்புடைய கட்டுரை:

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

புத்தகம் பெற:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்

எண்.15, எழுத்துக்காரன் தெரு

திருவொற்றியூர்

சென்னை-600 019.

பேச: 9444 337384

16 thoughts on “‘கோகோ கோலா, ரஜினி போன்றவைகளிடமிருந்து மக்களை போலிகள்தான் பாதுகாக்கிறது”

 1. கமலஹாசன் என்ன படங்களில் இருந்து காப்பியடித்தார் என்பதை மிக தெளிவாக எழுதியிருக்கிறார் ஜெகன் தமிழ்மணி. இதை அவசியம் படியுஙகள்.

  ‘உலக’ நாயகன் கமல்.!?
  http://jegankarur.blogspot.com/2009/06/blog-post_25.html

 2. கோககோலா நிறிவனம் இந்தியாவில் சரியான சுத்திகரிப்பு இல்லாமல் பயன்படுத்திய நீரின் விளைவாகவே நிலத்தடி நீரின் வழியாக பூச்சிக்கொல்லிமருந்து வந்தது. அதற்காக தாங்கள் போலியை பரிந்துரைப்பது வருத்ததிற்குரிய விடயம்.

  ஒருவேளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் OS-ஐ வேண்டுமானால் காசிற்கு வாங்குவதற்கு பதிலாக Piracy செய்யலாம்.

  //கோக்கைப் போலவே மக்களுக்கு கெடுதலை செய்கின்ற ‘சிவாஜி’ போன்ற படங்களை மக்கள் பார்க்க ஆசைப்பட்டால், ஒரு டிக்கெட் 1000 ரூபாய் கொடுத்து பார்க்க வேண்டியிருக்கிறது. அதையே திருட்டு வீசிடியில் பார்த்தால் ஒரு குடும்பமே 50 ரூபாயில் படம் பார்த்துவிடுவார்கள்.//

  என்னைக்கேட்டால் சிவாஜி படம் பார்ப்பதே உபயோகமற்ற செயல். அதற்கு 50 கூட தேவையில்லை.

 3. தீங்கு தரும் நிஜங்களுக்கு போலிகள் தான் சரியான தீர்ப்பு என்று ஒரு பெரியார், அம்பேத்கார் சீடனிடம் இருந்து நான் பதிலை எதிர் பாக்கவில்லை.

  போலி கடவுள், மூட நம்பிக்கை, ஒரு மனிதனை இன்னொருவன் தாழ்த்துவது, பெண் அடிமை மற்றும் பல கீழ்த்தரமான் வேலைகளை செய்த நிஜ மனிதர்களை தான் பெரியாரும் அம்பேதகரும் எதிர்த்தார்கள்.

 4. நண்பர் அவர்களே, கட்டுரயாசிரியர் அவர்கள் நமக்கு போலிகள்தான் மாற்றுத்தீர்வு என்று பரிந்துரய்க்க வில்லய், மாறாக கோக், இரசினி போன்ற நச்சுக்கேடுகள் மக்களிடம் வந்து செரும் அளவயக் கொஞ்சம் குறய்க்கும் அக்கறய்தானே ஒழிய வெறல்ல…
  போலி கடவுள் என்ற ஒன்று உண்டா நண்பரே..? கடவுள் என்பதே போலிதானே .., வெறும் நம்பிக்கய்தானே கடவுள் நம்பிக்கய்…
  தமிழன், கோடிமுனய்.

 5. எல்லாம் சரிதான். அரசியல்வாதிகள் என்றாலே போலிகள் தான். ஆனாலும், அந்த போலிகளை மக்களுக்கு இனம்காட்ட ஏதாவது போலிகள் இருக்கிறதா? இருந்தால் நல்லது.

 6. ‘கோகோ கோலாவில் அதிகமான பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப்பட்டிருக்கிறது. அதை குடிப்பதினால் உடல் நலத்திற்கு தீங்கு’ என்று விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள்.

  அதை தெரிஞ்சு குடிக்கிற முட்டாள் ஜனங்கள குத்தம் சொல்லாம்ம, விழிப்புணர்வு ஏற்படுத்தாம்ம யார் யாரையோ குத்தஞ் சொல்றதுல இருந்து உங்க தெளிந்த புத்தி தெரியுது. முதலில் உங்க முதுகுல உள்ள அழுக்கை தொடைங்க. பிறகு அடுத்தவனை பத்தி பேசுங்க. தமிழனோட வளத்தை சுரண்டற வட நாட்டு கும்பல பத்தி எழுதுங்க. ….. உண்மையிலேயே தமிழன் மேல அக்கறை இருந்தா.

Leave a Reply