குஷ்புவும் நமீதாவும் செம்மொழி மாநாடும்

ஏ.ஆர். ரகுமானின், வன்இசையின் துணையோடு மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சவ்ராஸ்டிரம், தமிழ்  பாடகர்கள் ஒன்றிணைந்து, முக்கி… முக்கி…. பாடி செம்மொழி மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார்கள்.

இவர்களின் கூக்குரலில் தமிழர்களின் காது் செவிடாகிவிடும் அளவிற்கு தெருவெங்கும் திரும்ப, திரும்ப ஒலித்தது ‘தமிழ் மொழியாம்… தமிழ் மொழியாம்…’ என்கிற அபயக்குரல்…

கூக்குரலோடும், அபயக்குரல் பாணியிலும் இசையமைத்து, ஈழத்தமிழர்களின் துயரங்களை மறைமுகமாக உணர்த்திருக்கிறார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் என்று யாராவது ஒரு புண்ணியவன் விளக்கம் எழுதாமல் இருந்தால் அவர்களுக்கு புண்ணியமாக போகும்.

ஒலிப்பதிவை ஏ.ஆர். ரகுமான் ‘சிறப்பாக’ செய்ய, அதற்கு எற்றாற் போல் ஒளிப்பதிவை  கவுதம் மேனன் செய்திருக்கிறார்.

சிதம்பரம் பத்மினி, சிறுமி ரீட்டா மேரி, சின்னாம்பதி கிராமத்து பெண்கள் இவர்களை எல்லாம் பாலியல் வன்முறை செய்த காவல்துறையின் வீரதீர தியாக செயல்களை நியாயப்படுத்தி  என்ன தப்பு பண்ணாலும் அவர்களை ‘காக்க…காக்க…’என்கிற பெயரில் படம் எடுத்தவர்தான் இந்த கவுதம் மேனன். அதற்காகத்தான் செம்மொழி விளம்பர பிராஜக்ட் அவரிடம் தரப்பட்டதோ என்னவோ? (அவரு பத்து பைசாகூட வாங்கலியாமே அவரே சொல்லியிருக்கார்)

கவுதம் என்பது அவரு பேரு. மேனன் என்பது அவரு படிச்சு வாங்குன பட்டமா? (வசனம் உபயம் ‘வேதம் புதிது’திரைப்படம்)

எப்படியோ… பல மொழி பேசுற மக்களை ஒண்றிணைத்து தமிழுக்கு மாநாடு நடக்குது. வாழ்க தேசிய ஒற்றுமை.

***

போன ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய கலைமாமணி விருது விழாவின் தொகுப்புரையை தங்க தமிழச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின போர்முரசு குஷ்பு தொகுத்து வழங்கினார்.

அந்த மேடையில் குஷ்பு, ‘பெரியாரின் கொள்கைகள்’ என்பதற்கு பதில், ‘பெரியாரின் கொள்ளைகள்’ என்று பேசினார்.

அதுபோல் செம்மொழி மாநாட்டு தொகுப்புரையை கலைஞர் டி.வி. புகழ் நடிகை நமீதா தொகுத்து வழங்குவாரோ என்னவோ? தெரியல.

ஒருவேளை அவருதான் நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தா?!

அந்தம்மா வழக்கமா கலைஞர் டி.வியில பேசுறமாதிரி …

‘நம்ம கலைஜர் மச்சான்… செம..மொலி மாநட்டை..சூப்பரா.. நடத்துறாரு… நம்ம கலைஜர் மச்சானுக்கு உடன் பிரப்பு எல்லாம் ஒரு ஓ…போடு…’ ன்னு பேசுனா?’

நினைக்கவே நமக்கு சங்கடமா இருக்கு. உடன்பிறப்புகளுக்கு எப்படி இருக்குமோ தெரியலையே?

தொடர்புடையவை:

பாரத் மாத்தாக்கி ஜே…


கம்பராமாயணத்தில் அறிவியல்!

14 thoughts on “குஷ்புவும் நமீதாவும் செம்மொழி மாநாடும்

 1. சிரிக்கவும் சிந்திக்கவும் என்றாலும்
  சிரிச்சு மாலளை..

 2. Very good article, i have expect to you more details about this “Tamil semmozhi maanadu ” .

 3. நீங்களும் கலைஞரை எதிர்ப்பீர் என்று நினைக்கவில்லை. பெரியாரின் பெயரில் ஏகப்பட்ட அநீதிகள் அவர் ஆட்சியில்தான் நடக்கின்றன.

  செம்மொழி தமிழ் மாநாடு விருது என்பதில் கலைஞர் செம்மொழி தமிழ் மாநாடு விருது என்று அறிவித்திருக்கின்றார்கள்.

  இதில் தமிழ் செம்மொழியா கலைஞர் செம்மொழியா என ஒன்றுமே புரியவில்லை.

  – ஜெகதீஸ்வரன்.
  http://sagotharan.wordpress.com

 4. நண்பரே எப்படியோ கோடி கணக்கில் மக்களின் வரிப்பணம் ………………
  எங்கே இந்த மஹா நாடு தனது சொந்த செலவில் நடத்தட்டுமே ஊருல ஆயரம் ப்ரிசினை
  உள்ளது அதை கவனிக்க தேரமில்லை..சரி அப்படியாவது பள்ளி
  படிக்கும் மாணவர்களுக்காக தொழில் நுட்ப தமிழ் மொழி அகராதி தயார் செயலாமே ஒரு வேளை இருக்குது சரி அதை இலவசமாக
  படிக்க கொடுங்களேன்…. ..

 5. அற்பர்களுக்கு பவுசு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பாளர்களாம். கலைஞர் கருணாநிதிக்கு இது பொருந்தும். தனக்கு விழா எடுக்கவும், துதிபாடவும் ஒரு பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இதில் எதை எடுத்துக்கொண்டாலும் தன்னையே முன்னிலைப்படுத்துகிற ஜெயலலிதாவுக்கும் இவருக்கும் வேற்றுமை அதிகம் இல்லை. செம்மொழி மாநாட்டுப் பாடலில் ரகுமான் பாடும்போது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்குப் பதில் யாதும் ஊரே யாவரும் கேளீர் எனப் பாடியிருக்கிறார். இந்தப் பாட்டைப் பதிவு செய்ய எடுத்த முயற்சி எல்லாம் வீண் விரயம்.

 6. The great A.R. Rahman மீது எனக்கு ஒரு காண்டும் இல்லை. 🙂 ஆனால், அவர் ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் கனடாவில் Jai Ho சர்வதேச இசை நிகழ்சிக்கு வந்தபோது அப்பாவி ஈழத்தமிழர்களுக்கு இவர் “செம்மொழி” மாநாட்டுக்கு இசையமைத்த அந்த சரித்திரப்புகழ் பெற்ற நிகழ்வை வானொலியில் விமர்சித்தபோது எரிச்சலுக்கு நடுவேயும் எனக்கு சிரிப்புத்தான் வந்தது.

  அடுத்து குஷ்புவும், நமீதாவும் செம்மொழி மாநாட்டில் இப்படியும் பேசக்கூடும், “கிளி (கிழி), கிளி செம கிளி, மச்சான்”. தமிழை சாக்காட்ட…ச்சீ..ச்சீ… காப்பாற்ற இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் கிளம்பி வருகிறார்கள். பிறகேன், தமிழும், எட்டுக்கோடி தமிழனும் இன்னும் அனாதையாய்…. புரியவில்லை?

  மதி, உங்கள் பாணியில் கட்டுரை நன்றாயுள்ளது.

 7. அன்பின் மதி
  இன்னமும் இதை கூர்ந்த அவதானிப்புடன் எழுதுதல் மட்டுமே சரி

  இதன் பின்னான நுண்அரசியல் இதன் பின்னான சுயமோகம் இதன்பின்னான வணிகம் இப்படி ஒட்டி ஒரு நீள் கட்டுரையாக எழுதுங்களேன்.
  அன்பின்
  துரை

 8. இந்த மாநாடும் மாநாட்டுக்கான செலவும் ,கருணாநிதியின் சுய விளம்பரமும், இவற்றையெல்லாம் பார்க்கும் போது எனக்கு சிரிப்பு வரவில்லை, வேதனை தான் வருகிறது. கருணாநிதி,ஜெயலலிதா, இருக்கும்வரை தமிழ்நாட்டுக்கு விடிவு இல்லை.

 9. நண்பர்களே… நீண்ட இடைவெளிக்குப் பின்னால உங்களை சந்திப்பதில் உண்மையாகவே மகிழ்சியா
  இருக்கு…! இழவு வீட்டில் நடந்து முடிந்த விழா என்றொரு சரியான விமர்சனம், முதல்வர் கருணாமேல்
  பலமாக இருக்கிறது. தமிழ் மொழியையும் தமிழ் உணர்வையும் பிரித்து மேய்ந்த கருணா அவர்கள், தமிழ் உணர்வாளர்கள் எல்லோருமே ஏறக்குறைய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்தான் என்பதை தோதாக மறந்து விட்டார். தமிழ் உணர்வாளர்கள் அந்த விடுதலை இயக்கத்தை ஆதரிப்பது ஒன்றே தன் மொழி உணர்வின் முதன்மையான அடையாளம் என்று கருதியே அவர்களை ஆதரித்து வந்தனர். இது கருணாவுக்கும் தெரியும், ஆனால், பினாங்கு துணைமுதல்வர் திரு இராமசாமி அவர்களுக்கு மாநாட்டில் அனுமதி இல்லை என்று முந்திக்கொண்டு மறுத்த கருணா, பேராசிரியர் சுப வீரபாண்டியனை மட்டும் எப்படி அனுமதித்தார்? மேலும் இந்திய அரசுடைய, எல்லோரிடமும் அம்பலப் பட்டுப் போன உளவாளி, பல முன்னணிப் போராளிகளை சரணடயும் நாடகம் நடத்தி கொன்றொழித்த உண்மையான கிறித்தவப்பாதிரி செகத்கஸ்பார் என்ற துரோகி முழங்கும் முழக்கத்தைப் பார்க்கும் போது, குச்பு நமீதா போன்ற கருணாவின் கனவுக் கன்னிகள் போன்றோருக்குத்தான் பொருத்தமாக இருக்கும், இந்த செம்மொழி நாடக விழா… அதிலும், தமிழ்வழிக் கல்விக்கு எதிராக வழக்காடிய, நளினியின் கணவன் கொலைகாரக் காங்கிரசுக் காரரான சிதம்பரம், எல்லோரும் தமிழ் மொழியில பேசுங்கன்னு சொல்லுறதுதான் வேடிக்கையா இருக்கு! தமிழர்கள் என்ன, தெலுங்கிலயா மாட்லாடுகிறார்கள்? கொலைகாரக் காங்கிரசுக் காரனுக்கும் தமிழ் மொழி உணர்வுக்கும் என்னையா தொடர்பு இருக்கப் போகுது? உண்மையிலேயே நணபர் மதிமாறனின் கிண்டலுக்கு நூறு விழுக்காடு தகுதி உள்ளதுதான், கருணாவின் இந்த செம்மொழி மாநாடு… காசிமேடு மன்னாரு.

Leave a Reply

%d bloggers like this: