அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்

`டாக்டர் அம்பேத்கர்‘ இந்த பெயர் எப்போதும் இந்திய அரசியலில் ஒரு அதிர்வை உண்டு பண்ணுகிற பெயராகவே இருக்கிறது. அவரின் வீச்சான அரசியல் நடவடிக்கைகளால், பாதிக்கப்பட்டு பதில் சொல்ல வக்கற்ற அரசியல் ஈடுபாடற்ற ஜாதி வெறியர்கள் அவர் சிலையை சேதப்படுத்தி ஆறுதல் அடைந்தார்கள்.

அரசியல் அறிவுள்ள ஜாதி உணர்வாளர்கள், டாக்டர் அம்பேத்கரை புறக்கணிப்பதின் மூலமாகவும், நெருக்கடியான நேரத்திலும் மவுனம் சாதிப்பதின் மூலமாகவும தாங்கள் யார் என்பதை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.

டாக்டர் அம்பேத்கர் என்கிற மாபெரும் அரசியல் எழுச்சி, இப்படி பல தலித் விரோதிகளை மட்டுமல்ல, தலித் துரோகிகளையும்கூட அம்பலப்படுத்தியிருக்கிறது.

அந்தக் காலத்தில், டாக்டர் அம்பேத்கர், காந்தியை அம்பலப்படுத்தியது போல், இந்தக் காலத்தில், டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் தமிழக அரசியல் சூழலில் காந்தியைப் போல் இருக்கிற பலரை அம்பலப்படுத்தி இருக்கிறது.

டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட பலர் முயற்சித்தார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர் தோழர் மதியவன்.

குறிப்பாக ஜாதி வெறியும், தலித் விரோதமும் தீவரமாக கொண்ட தேனி மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை திரையிட தீவிர முயற்சி செய்தவர். அதிலும் குறிப்பாக தலித் அல்லாத இளைஞர்களிடம் டாக்டர் அம்பேத்கரை கொண்டு சேர்க்கிற மாபெரும் பணியில் தீவிரமாக இருப்பவர் தோழர் மதியவன்.

டாக்டர் அம்பேத்கர் படம் வெளியிடுவதற்காக அவர் செய்த முயற்சிகளையும் அதற்கு எதிராக நடந்த சதிகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

-வே. மதிமாறன்.

*

“டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்” எப்படி இத்திரைப்படத்தை தயாரிக்க மத்திய சமூக நீதித்துறை முன்வந்த்தது என்பது தெரியவில்லை! . NFDC யும்கூட  இதற்காக நிதியுதவி வழங்கியுள்ளது.

ஒரு தலைவரின் வரலாறு இது போன்று மக்களின் பணத்தில் தயாரிக்கப்படுவது, ஆச்சர்யமான விஷயம் இல்லையென்றாலும். அந்தத் தலைவர் அம்பேத்கராக இருப்பதால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.

ஒருவேளை வழக்கமான தலைவர்களின் வரலாறு போல, ‘ சிறுவயதிலிருந்தே அவருக்குள் பல திறமைகள் ஒளிந்துகிடந்தன… கண்ணை மூடித்திறப்பதற்குள் எந்த வேலையானாலும்  செய்து முடித்துவிடுவார்… ஆசிரியருக்கே பாடம் எடுப்பார்… அநியாயங்களை கண்ட இடத்தில் தட்டிக்கேட்பார்’ என்கிற பாணியில் எதிர்பார்த்து இருந்திருக்கலாம்.

ஆனால் இத்திரைப்படத்திலோ, அம்பேத்கரின் வரலாறு  2000 வருடங்களாக இந்துமதத்தால் நாறிக்கிடந்த இந்திய துணைக்கண்டத்தில்  ஒரு மிகப்பெரிய சமூக மாற்றத்தை எதிர்நோக்கியது என்பதையும், அந்த சமத்துவ சமுதாயதிற்கு தடைக்கல்லாக இருந்தது வைசிய மகாத்துமாவும், காங்கிரசும்தான் என்பதை பதிவு செய்ததைப் பார்த்து சமூக நீதித்துறையே அதிர்ந்திருக்கும். என்ன செய்ய இவைகள் அனைத்தும் அரசே வெளியிட்ட அம்பேத்கரின் எழுத்துக்களில் உள்ளதே! (சபாஷ் ஜாபர் படேல்).

இந்துத்துவவாதிகள் பயப்படவேண்டாம், பாடப் புத்தகத்திலெல்லாம்  சேர்த்துவிடமாட்டார்கள். பிறகு சட்ட அமைச்சராகவே அடையாளம் காட்டப்பட்ட அம்பேத்கர் ஒரு மிகப்பெரிய போராளி என்று தெரிந்தால் , எதற்காகப் போராடினார்? எதை எதிர்த்துப் போராடினார் என்று தேவையில்லாமல் கிளறி இந்துத்துவத்தின் வாயில் மண்ணு விழுந்துவிடாதா? அப்படி இந்துத்துவமும், காங்கிரசும் மண்ணைக் கவ்விவிட, இத்திரைப்படம் ஒரு வாய்ப்பாக இருந்துவிடும் என்று பயந்துதான், மற்ற தலைவர்களின் படத்தை விளம்பரம்செய்த அரசு அம்பேத்கர் திரைப்படத்தை தீண்டப் பயப்படுகிறது.

எப்படியோ 1999 ம் ஆண்டே ஆங்கிலத்தில் வெளியான அம்பேத்கர் திரைப்படம் , 2000 ல் இந்தியிலும், தொடர்ந்து மராட்டி , மலையாளம் என இந்தியாவிலுள்ள 9 தேசிய மொழிகளில்  வெளியாகிவிட்டது. ஆனால் பகுத்தறிவு பற்றியெரிந்த தமிழ்நாட்டில் இத்திரைப்படம் 12 ஆண்டுகளாகத்  தலைகாட்ட  முடியவில்லை.

1800 திரையரங்குகளை வைத்துக்கொண்டு 200 கோடி 300 கோடி என்று மார்தட்டிப் படங்களை வெளியிடும் தமிழ்நாட்டில்தான் விநியோக உரிமை வாங்கியும் 5 வருடங்களாக கிடப்பிலேயே போடடப்பட்டிருந்தது அம்பேத்கர் திரைப்படம்.

தோழர்கள் மதிமாறன் மற்றும் லெமுரியன், வேந்தன், சசி, சுவன், கலாநிதி, அசோக், விவேக் போன்றோர் படத்தை வெளியிடக்கோரி  NFDC யை முற்றுகையிட்டனர். SC /ST ஊழியர்கள் கூட்டமைப்பு தேனி மாவட்டத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது. இறுதியாக மதிப்புமிகு வழக்கறிஞர் சத்தியச்சந்திரன் தொடர்ந்த வழக்கின் பயனாக, அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட உயர் நீதிமன்றம் NFDC க்கு ஆணையிட்டது. இதற்கெல்லாம்  பிறகுதான், பாராட்டு விழாக்களில் படுத்திருந்த நமது மாண்புமிகு முதல்வர் விளீரென எழுந்துவந்து 10லட்சம் நிதி உதவி தந்து உணர்ச்சிவசப்பட்டார். NFDC யும் டிசெம்பர் 3 ல் படத்தை வெளியிடுவதாக அறிவித்தது.

ஒருவழியாக படம் வெளியாகிவிட்டது என்று, தேனியில் அம்பேத்கர் திரைப்படத்தை மக்களைப் பார்க்க வலியுறுத்தியும், படம் வெளியாக காரணமாக இருந்த வழக்கறிஞர் சத்தியச்சந்திரன், லெனின் , த.மு.எ.ச ஆகியோருக்கு நன்றி என்றும் தட்டி (flex hoarding) வைத்துக் காத்திருந்தோம். தேனியில் படம் வெளியாகவில்லை, விசாரித்ததில் பெரும்பாலான மாவட்டங்களிலும் இதே நிலைதான்!

NFDC யை தொடர்புகொண்டோம், எந்தத் திரையரங்கும் முன்வரவில்லை என்றனர். திரையரங்கு உரிமையாளர்களைக் கேட்டால் அப்படி ஒரு படம் வந்ததே தெரியாது என்றனர்! (பயம் புரிகிறதா?)

உயர் நீதிமன்ற ஆணையை மறுக்க முடியாத NFDC யும் தமிழக அரசும் கடமைக்கு 4 திரையரங்குகளில் படத்தை திரையிட்டுவிட்டு  விளம்பரமே  செய்யாமல்  இருட்டடிப்புச் செய்திருந்ததை  உணர்ந்தோம்.

விடவில்லை. மறுபடியும் NFDC யை தொடர்பு கொண்டு, படத்தை நாங்களே வாங்கித் திரையிட விதிமுறைகள் கேட்டோம். திரையரங்கு உரிமையாளராக இருக்க வேண்டுமாம்! திரையரங்கை வாடகைக்கு எடுத்துத் திரையிடலாம் என்று முடிவு செய்தோம். தேனியில் உள்ள ஒரு திரையரங்கு உரிமையாளரைச் சந்தித்தோம். திரையரங்கு வாடகைக்கு வேண்டும் என்றதும் வரவேற்பு பலமாகவே இருந்தது.  ‘அம்பேத்கர் திரைப்படம்’ என்றதும் தலை தொங்கிவிட்டது. ‘உரிமையாளர் உயிருடன்தான் உள்ளார்’ என்பதை உறுதி செய்து கொண்டு திரும்பினோம்.

தொடர்ந்து பல திரையரங்குகளை நாடினோம். இதுவரை ஓடிய திரைப்படங்களைவிட அதிக பணம் தருகிறோம் என்றோம். ஒன்றும் நடக்கவில்லை. அவர்களின் தயக்கத்திற்கு பணம் காரணமில்லை என்பது புரிந்தது. நாங்களும் அந்த முயற்சியைக் கைவிட்டோம்.

கோவை

கோவையில் உள்ள தோழர்களை தொடர்புகொண்ட போது, பணம் கொடுத்தால் shakthi films உரிமையாளர் கோவையில்  தன் கட்டுப்பாட்டில் உள்ள திரையரங்கிற்கு ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. தோழர்கள் இரண்டே நாட்களில் 1 .75 இலட்சதுடன் அவரைச் சந்தித்த போது, நாளை கற்பகம் திரையரங்கை உறுதி செய்து தருவதாகக் கூறிவிட்டுச் சென்றார் . விடிந்தபிறகுதான் தெரிந்தது, ‘பணத்தை இவர்களால் திரட்ட முடியாது’ என்று நினைத்து தவிர்ப்பதற்காக அப்படிச்  சொல்லியிருக்கிறார் என்பது. ஆம்! ஆள் மாயமாகிவிட்டார்.

கோவையில் இத்திரைப்படத்தை திரையிட பெரியார் திராவிடர் கழகம் முயற்சித்து வருவதை அறிந்து அதன் பொதுச் செயலாளர் தோழர்.இராமகிருட்டிணனை சந்தித்த போது, கோவை சென்டிரல் திரையரங்கு தயாராக இருப்பது தெரிந்து மகிழ்ச்சியடைந்த தோழர்கள் பெ.தி.க விற்குப் பற்றாக்குறையாக இருந்த 60 ஆயிரம் ரூபாயை தந்து உதவினர்.

படம்  இரண்டுகாட்சிகளாக ஒருவாரம் திரையிடப்பட்டது, நல்ல வரவேற்பைப் பெற்றது அம்பேத்கர் திரைப்படம். வந்த லாபத்தில், மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு,  பணம் கொடுத்தவர்களுக்கு திருப்பிக்கொடுக்கப்பட்டது. இரண்டுகாட்சிகள் மட்டுமே திரையிட்டு இரண்டு வாரத்திற்குள்   அதிகபட்சமாக 7000 பேருக்குமேல் படம் பார்த்தனர்; படம் ஓடாது என்று சவடால் அடித்தவர்களுக்கு பதிலாக அமைந்தது மக்களின் ஆதரவு.

இந்த வெற்றியை சாத்தியமாக்கிய கோவை தோழர்கள் தமிழ்ச்செல்வன், கதிரவன் , மகேந்திர குமார், தினேஷ் ,அரவிந்த், வழக்கறிஞர் கார்கி மற்றும் பெரியார் திராடவிடர் கழகத் தோழர்களுக்கும் நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.

மறுபடியும் தேனி…

இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு முயற்சித்ததாக சென்னை த.மு.எ.ச வை நம்பி, தேனி த.மு.எ.ச. தலைவர் தோழர் காமுத்துரையை  சந்தித்தோம். அவர் ஒரு தமாசுக் குண்டைத்தூக்கிப் போட்டார், “த.மு.எ.ச. தான் தேனியில் படத்தை நிறுத்தி வைத்துள்ளது” என்பது.

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு நெருங்கி விட்டதாம், அதனால் விடுமுறையில் தேனியில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் திரையிடப் போகிறார்களாம். இதற்கு மாவட்ட ஆட்சியரும்  ஆதரவாம்!

“அனைத்துத் திரையரங்கிலும் என்பது சாத்தியமானதாகத் தெரியவில்லை, உறுதிசெய்து கொள்ளலாமே தோழர்” என்றோம். உடனே, “தமிழ்நாட்டில் அம்பேத்கர் படத்தை வெளியிடுவதே த.மு.எ.ச தான் கலெக்டரிடம் பேசியாச்சு, இதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாது” என்றார். ஓடி வந்துவிட்டோம்.

அடுத்து என்ன தலித் கட்சிகள்தான்…

முதலில் விடுதலை சிறுத்தைகள்…

அவர்களுக்கெல்லாம் இதைப்பற்றிப் பேசக்கூட நேரமில்லை. அதைவிடக் கொடுமை அங்கு தலித்கள் யாரும் இல்லை! சாதியை உடச்சுட்டாங்கலாமாம்! எந்த சாதியன்னுதான் தெரியல! ‘அம்பேத்கர் படம் வந்தா, தேவையில்லாம கலவரம் உண்டாகி ரத்த ஆறு ஒடும்ல….’ என்றவர்களிடம் என்னதான் பேச…  சுருக்கமாகவே முடிந்ததில் திருப்தி.

அடுத்து புதிய தமிழகம். அம்பேத்கர் திரைப்படம் என்பதைத் தாண்டி அவர்களிடம் எதுவும் பேச முடியவில்லை. டவர் சரியா கெடைக்கல….

த.மு.எ.ச, திரைப்படத்தை திரையிடுவதாகக் கூறியிருந்த டிசம்பர் 17 ,18 ,19 தேதிகளைக்கடந்து பல நாட்களாகிவிட்டது. படத்தை திரையிடுவது தொடர்பாக தேனியில் 24 -12 -2010 ல், அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்களை அழைத்து ஒரு கலந்தாலோசனைக் கூட்டத்தை  நடத்தினோம். த.மு.எ.ச வையும் அழைத்தோம். அவர்கள் அரையாண்டுத்தேர்வு எழுதிக்கொண்டிருந்ததால் கலந்துகொள்ள முடியவில்லை.

கூட்டத்தின் முடிவில் அம்பேத்கர் திரைப்படத்தை திரையிடுவதற்கான போராட்டங்களை நடத்த “அம்பேத்கர் திரைப்படம் பரப்புரைப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு” உருவாக்கப்பட்டது.

முதல் கட்டமாக, அம்பேத்கர் திரைப்படத்தை இருட்டடிப்புச் செய்யும் தமிழக அரசைக் கண்டித்து, தேனி மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டது. விழுப்புரத்திலும், தோழர்கள் டேவிட் மற்றும் ராசா கண்டன சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.

அடுத்த கட்டமாக போராட்டக் குழு ஒரு மாபெரும் தொடர் முழக்கப் போராட்டத்திற்குத் தயாரானது!

போராட்டத்திற்கு அழைக்கப்பட்ட பெரும்பாலான கட்சிகளும் இயக்கங்களும் த.மு.எ.ச. படத்தை, இந்தமுறை ஜனவரி 3 .4 .5 . தேதிகளில் அனைத்துத் திரையரங்குகளிலும்  திரையிட உள்ளதாகக் கூறி விலகிக்கொண்டன. ஆம் இந்தப் புரளியை தேனி மாவட்டம் முழுவதும் பரப்பியிருந்தது த.மு.எ.ச. மேலும் போராட்டம் தேவையில்லாதது எனவும், ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு அழுத்தம் கொடுக்கவேண்டியதில்லை எனவும் பரப்பியிருந்தது.

ஆனால் போராட்டக் குழு “ஒடுக்கப்பட்ட மக்கள், ஒரு திரைப்படத்திற்குக் கூட இவ்வளவு தூரம்  போராடவேண்டியுள்ளது” என்பதை உணர்ந்திருந்தது!

த.மு.எ.ச விற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அவர்கள் படத்தை திரையிடுவதாகப் பரப்பியிருந்த தேதிக்கு அடுத்த தேதியில் அதாவது ஜனவரி 4ஐ போராட்டத் தேதியாக அறிவித்தது போராட்டக் குழு.  த.மு.எ.ச விற்கும் அழைப்புக் கொடுக்கப் பட்டது. இப்பொழுது அவர்கள் படத்தை வெளியிட 7 ,8 ,9 என்ற தேதிகளுக்கு மாறியிருந்தனர்.

தேனி மாவட்டத்தில் போராட்டக்குழு ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் பார்த்து சில கட்சிகள், பேருக்கு மட்டும் தங்களையும் போராட்டத்தில் இணைத்துக் கொண்டன. இதுவும் வெற்றிதான்!

போராட்டக்குழு அறிவித்திருந்த அதே தேதியில் AIYF ம் AISF ம் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது. மற்ற மாவட்டங்களில் நடந்ததா இல்லையா தெரியவில்லை தேனியில் நடக்கவில்லை.

‘அம்பேத்கர் திரைப்பட பரப்புரைப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு’ அறிவித்திருந்த தேதியில் “தொடர் முழக்கப் போராட்டத்தை” காலை 11 மணி முதல் மாலை 5 .30 மணி வரை சிறப்பாக நடத்தி அம்பேத்கர் திரைப்படம் தொடர்பாக மிகப்பெரிய தாக்கத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது .

மக்களின் போராட்டங்கள் ஒருபக்கம் இருக்க , அம்பேத்கர் திரைப்படத்திற்கான விமர்சனங்கள் இணையத்தை ஆக்கிரமித்திருந்தன. விமர்சனங்களும் அதில் அவர்கள் உச்சுக்கொட்டிக்கொண்டதும், தங்களின்  மேதாவித்தனத்தை தம்பட்டம்போடும் பாணியிலேயே இருந்தது. படம் மக்களைச் சென்றதா, இல்லையா என்றெல்லாம் யோசிக்க நேரமில்லாமல் ‘சிக்குச்சுடா அம்பேத்கர் படம்’ என எழுதித்தீர்த்தனர்.

அம்பேத்கரின் வரலாற்றில் இயல்பாகவே காங்கிரசு எதிர்ப்பு இருப்பதாலோ என்னவோ, நமது முதல்வர், திரையுலக வெங்கல வெளக்கு, பிட்டுப்பட விழாக்களிளெல்லாம் வாயடித்துவிட்டு , அம்பேத்கர் திரைப்படம் பற்றி வாய்திறக்கவே இல்லை. ஆரிய திராவிட யுத்தக் களத்தில் பிசியாக இருப்பதாகவே காட்டிக்கொண்டார்.

அம்பேத்கரையும், அவரின் எழுத்துகளையும் தமிழில் அறிமுகம் செய்யப் பாடுபட்ட தந்தைப் பெரியாரின் கைத்தடியைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவந்து ஆட்சியமைத்த தி.மு.க. அரசு, அம்பேத்கரை  மக்களிடம் எளிமையாக கொண்டுசெல்லவிருந்த  இத்திரைப்படத்தை திட்டமிட்டே தடுத்துவிட்டது.

முதல்வரின் மூச்சிரைப்பைக்கூட விமர்சிக்கிற ஜெயலலிதா, அம்பேத்கர் படம் பற்றிய அரசின் அலட்சியம் குறித்து வாய் திறக்கவே இல்லை. காரணம், அதே அலட்சியம் அவரிடமும் இருந்ததால். இவர்கள் இந்த நாட்டின் மிகப் பெரிய தலைவர்கள்.

என்ன செய்ய… கேனப்பய ஊர்ல கிறுக்குபய நாட்டாம…!

மதியவன்

அடுத்ததாக, தமிழ்த்தேசியவாதிகள்

இவர்களைப் பொறுத்தவரை, அம்பேத்கர் படத்தை விடுங்கள்.

தமிழ்நாட்டிற்கு உள்ளே  நடக்கும் எந்தப் பிரச்சனைகளும் இவர்கள் கண்ணுக்குத் தெரிவதேயில்லை , குறிப்பாகத் தமிழர்களைப் பிரிக்கும் சாதியப் பிரச்சனைகள். காரணம் இதெற்கெல்லாம் பெரிய மார்க்கெட் கிடையாது என்பதுதான்! பெரியாரை விமர்சிக்கிற மூத்த தமிழ்த் தேசியவாதிகளிலிருந்து, புதுசா முளைக்கிற குட்டிகள்வரை இப்படித்தான் இருக்கிறார்கள்.

முத்துராமலிங்கத்தின் ருத்ராசக் கொட்டையும் , அவர் பேசிய இந்து தேசியமும், சாதி வெறியும் தமிழ்தேசியத்திற்கு எதிராக இல்லை! ஆனால், தமிழரல்லாத அம்பேத்கர் தமிழ்தேசியம் பேசாததுதான் இவர்களுக்கு உறுத்துகிறது.

கூத்து என்னன்னா, தற்பொழுதுள்ள பெரும்பாலான தமிழ்ப்பட இயக்குனர்கள் தமிழ்தேசியம் பேசும் முற்போக்காளர்கள்தான்! அதான் தாடி , தொப்பி , கண்ணாடின்னு  மேக்கப்போட வந்து மேடைல கொதுச்சுப்போயிடுராங்க.  முற்போக்காளனாக அல்ல ஒரு சினிமாக்காரனாகக்கூட அம்பேத்கர் திரைப்படம் குறித்து இவர்கள் வாய் திறக்கவே இல்லை.

மீண்டும் தமுஎச…

‘தேனியில் மார்ச் 1 ம் தேதி  அம்பேத்கர் திரைப்படத்தை  திரையிடுவதாக த.மு.எ.ச அறிவித்தது. போராட்டக்குழு த.மு எ.ச வைத் தொடர்புகொண்டு, ’ படம் ஓடுவதற்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்யலாம்’ என்றது. ’இல்லை இல்லை அது சிறப்புக் காட்சிதான்‘ என்றனர்.அதாவது ஒரே ஒரு காட்சி!

மறுநாள் நேரில் சந்தித்தோம். ‘காட்சியை நீட்டிக்க வாய்ப்பே இல்லை’ என்றனர். ஒரு துண்டறிக்கையைக்  கையில் தந்து, மாவட்ட ஆட்சியரும் , வருவாய்த்துறை அதிகாரியும், அந்த “ஒரு காட்சியைத்” துவக்கி  வைப்பதாகவும் மற்றும் த.மு.எ.ச பொறுப்பாளர்கள் அனைவரும் சிறப்புரை ‘ஆத்த’ இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் , வருவாய்துறை அதிகாரி மற்றும் த.மு.எ.ச பார்க்கவிருந்த அந்த ‘சிறப்புவாய்ந்த’ காட்சிக்குத் தயாரானது ‘அம்பேத்கர் திரைப்பட பரப்புரைப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு’! திரையரங்குமுன் ஏராளமான மக்களுடன் திரண்டு நின்றது, மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிடுவது போராட்டக்குழுவின் திட்டம்.

மாவட்ட ஆட்சியர் வரவில்லை, வருவாய்துறை அதிகாரியை முற்றுகையிட்டு, “படத்தை அனைத்து மக்களும் பார்த்துப் பயன்பெறும் வகையில் தொடர்ந்து திரையிட வேண்டும்” என கேட்டது போராட்டக் குழு, அதற்கு அவர் “நேற்றே ஏன் சொல்லவில்லை” என்றார். சிரிப்புதான் வந்தது.

அந்த சிறப்புக்காட்சிக்கு வருவாய்துறை அதிகாரியை ‘அம்பேத்கர் திரைப்பட பரப்புரைப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு’ அனுமதிக்கவில்லை, திருப்பியனுப்பப்பட்டார். தோழர்கள் வருவாய்த்துறை அதிகாரியிடம் காட்சியை நீட்டிக்ககோரி வாதத்தில் இருந்த போது த.மு.எ.ச குறுக்கே வந்து சமரசம்தான் பேசியது.

மறுபடியும் NFDC யை தொடர்புகொண்ட பிறகுதான் மார்ச் 6 ம் தேதியோடு, அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதற்கான உரிமம் முடிந்துவிட்டது என்பது தெரியவந்தது.

டிசம்பர் மாதம் வெளியிடாததற்கு, ‘அரையாண்டு தேர்வு நெருங்குகிறது அதனால்தான் நிறுத்தி வைத்துள்ளோம்’ என்று சாக்குச் சொல்லிய த.மு.எ.ச, முழு ஆண்டுத் தேர்வு நடக்கும் போது, அவசர  அவசரமாக  சிறப்புக் காட்சிகள் நடத்தியதன்  கள்ளத்தனமும் தெரியவந்தது.

கட்சி மற்றும் அமைப்புகளைக் கடந்து போராட்டக்குழுவில் தங்களை இணைந்த்துக்கொண்டு போராடிய அனைத்துத் தோழர்களுக்கும், குழு உறுப்பினர்களான தோழர்கள், பா.சி முத்துக்குமார், செந்தில்குமார், ஸ்ரீதர், தமிழ்ப்புலிகள் மாவட்டச் செயலாளர் தலித்ராயன், மாநில பொறுப்பாளர் அருந்தமிழரசு,சந்தோஷ் மற்றும் டார்வின் கலை ஊடக நண்பர்களுக்கும் … நெஞ்சார்ந்த நன்றிகள். போராட்டம் தொடரும்..

சாதியம்தான் சமூகம் என்றால்,

வீசும் காற்றில் விஷம் வீசட்டும்.

– டாக்டர் அம்பேத்கர்.

தோழமையுடன்

மதியவன்

தொடர்புடையவை:

எம்.ஆர். ராதாவும் – கே.பி. சுந்தராம்பாளும் – தமுஎசவும்

கே.பி.சுந்தராம்பாள், தமுஎசவிற்காக-சிபிஎம் டி.கே.ரங்கராஜனும்-எம்.ஆர்.ராதாவிற்காக கலைவேந்தனும்

அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?
*
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
*
டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி

டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?
*
‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

டாக்டர் அம்பேத்கர் இந்த பெயர் எப்போதும் இந்திய அரசியலில் ஒரு அதிர்வை உண்டு பண்ணுகிற பெயராகவே இருக்கிறது. அவரின் வீச்சான அரசியல் நடவடிக்கைகளால், பாதிக்கப்பட்டு பதில் சொல்ல வக்கற்ற அரசியல் ஈடுபாடற்ற ஜாதி வெறியர்கள் அவர் சிலை சேதப்படுத்தி ஆறுதல் அடைந்தார்கள்.

அரசியல் அறிவுள்ள ஜாதி உணர்வாளர்கள், டாக்டர் அம்பேத்கரை புறக்கணிப்பதின் மூலமாகவும், நெருக்கடியான நேரத்திலும் மவுனம் சாதிப்பதின் மூலமாகவும தாங்கள் யார் என்பதை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.

டாக்டர் அம்பேத்கர் என்கிற மாபெரும் அரசியல் எழுச்சி, இப்படி பல தலித் விரோதிகளை மட்டுமல்ல, தலித் துரோகிகளையும்கூட அம்பலப்படுத்தியிருக்கிறது.

அந்தக் காலத்தில், டாக்டர் அம்பேத்கர், காந்தியை அம்பலப்படுத்தியது போல், இந்தக் காலத்தில், டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் தமிழக அரசியல் சூழலில் காந்தியைப் போல் இருக்கிற பலரை அம்பலப்படுத்தி இருக்கிறது.

டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட பலர் முயற்சித்தார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர் தோழர் மதியவன்.

குறிப்பாக ஜாதி வெறியும், தலித் விரோதமும் தீவரமாக கொண்ட தேனி மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை திரையிட தீவிர முயற்சி செய்தவர். அதிலும் குறிப்பாக தலித் அல்லாத இளைஞர்களிடம் டாக்டர் அம்பேத்கரை கொண்டு சேர்க்கிற மாபெரும் பணியில் தீவிர் முயற்சியில் இருப்பவர் தோழர் மதியவன்.

டாக்டர் அம்பேத்கர் படம் வெளியிடுவதற்காக அவர் செய்த முயற்சிகளையும் அதற்கு எதிராக நடந்த சதிகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

வே. மதிமாறன்.

“டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்” எப்படி இத்திரைப்படத்தை தயாரிக்க மத்திய சமூக நீதித்துறை முன்வந்த்தது என்பது தெரியவில்லை! . NFDC யும்கூட  இதற்காக நிதியுதவி வழங்கியுள்ளது.

ஒரு தலைவரின் வரலாறு இது போன்று மக்களின் பணத்தில் தயாரிக்கப்படுவது, ஆச்சர்யமான விஷயம் இல்லையென்றாலும். அந்தத் தலைவர் அம்பேத்கராக இருப்பதால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.

ஒருவேளை வழக்கமான தலைவர்களின் வரலாறு போல, ‘ சிறுவயதிலிருந்தே அவருக்குள் பல திறமைகள் ஒளிந்துகிடந்தன… கண்ணை மூடித்திறப்பதற்குள் எந்த வேலையானாலும்  செய்து முடித்துவிடுவார்… ஆசிரியருக்கே பாடம் எடுப்பார்… அநியாயங்களை கண்ட இடத்தில் தட்டிக்கேட்பார்’ என்கிற பாணியில் எதிர்பார்த்து இருந்திருக்கலாம்.

ஆனால் இத்திரைப்படத்திலோ, அம்பேத்கரின் வரலாறு  2000 வருடங்களாக இந்துமதத்தால் நாறிக்கிடந்த இந்திய துணைக்கண்டத்தில்  ஒரு மிகப்பெரிய சமூக மாற்றத்தை எதிர்நோக்கியது என்பதையும், அந்த சமத்துவ சமுதாயதிற்கு தடைக்கல்லாக இருந்தது வைசிய மகாத்துமாவும், காங்கிரசும்தான் என்பதை பதிவு செய்ததைப் பார்த்து சமூக நீதித்துறையே அதிர்ந்திருக்கும். என்ன செய்ய இவைகள் அனைத்தும் அரசே வெளியிட்ட அம்பேத்கரின் எழுத்துக்களில் உள்ளதே! (சபாஷ் ஜாபர் படேல்).

இந்துத்துவவாதிகள் பயப்படவேண்டாம், பாடப் புத்தகத்திலெல்லாம்  சேர்த்துவிடமாட்டார்கள். பிறகு சட்ட அமைச்சராகவே அடையாளம் காட்டப்பட்ட அம்பேத்கர் ஒரு மிகப்பெரிய போராளி என்று தெரிந்தால் , எதற்காகப் போராடினார்? எதை எதிர்த்துப் போராடினார் என்று தேவையில்லாமல் கிளறி இந்துத்துவத்தின் வாயில் மண்ணு விழுந்துவிடாதா? அப்படி இந்துத்துவமும், காங்கிரசும் மண்ணைக் கவ்விவிட, இத்திரைப்படம் ஒரு வாய்ப்பாக இருந்துவிடும் என்று பயந்துதான், மற்ற தலைவர்களின் படத்தை விளம்பரம்செய்த அரசு அம்பேத்கர் திரைப்படத்தை தீண்டப் பயப்படுகிறது.

எப்படியோ 1999 ம் ஆண்டே ஆங்கிலத்தில் வெளியான அம்பேத்கர் திரைப்படம் , 2000 ல் இந்தியிலும், தொடர்ந்து மராட்டி , மலையாளம் என இந்தியாவிலுள்ள 9 தேசிய மொழிகளில்  வெளியாகிவிட்டது. ஆனால் பகுத்தறிவு பற்றியெரிந்த தமிழ்நாட்டில் இத்திரைப்படம் 12 ஆண்டுகளாகத்  தலைகாட்ட  முடியவில்லை.

1800 திரையரங்குகளை வைத்துக்கொண்டு 200 கோடி 300 கோடி என்று மார்தட்டிப் படங்களை வெளியிடும் தமிழ்நாட்டில்தான் விநியோக உரிமை வாங்கியும் 5 வருடங்களாக கிடப்பிலேயே போடடப்பட்டிருந்தது அம்பேத்கர் திரைப்படம்.

தோழர்கள் மதிமாறன் மற்றும் லெமுரியன், வேந்தன், சசி, சுவன், கலாநிதி, அசோக், விவேக் போன்றோர் படத்தை வெளியிடக்கோரி NFDC யை முற்றுகையிட்டனர். SC /ST ஊழியர்கள் கூட்டமைப்பு தேனி மாவட்டத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது. இறுதியாக மதிப்புமிகு வழக்கறிஞர் சத்தியச்சந்திரன் தொடர்ந்த வழக்கின் பயனாக, அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட உயர் நீதிமன்றம் NFDC க்கு ஆணையிட்டது. இதற்கெல்லாம்  பிறகுதான், பாராட்டு விழாக்களில் படுத்திருந்த நமது மாண்புமிகு முதல்வர் விளீரென எழுந்துவந்து 10லட்சம் நிதி உதவி தந்து உணர்ச்சிவசப்பட்டார். NFDC யும் டிசெம்பர் 3 ல் படத்தை வெளியிடுவதாக அறிவித்தது.

ஒருவழியாக படம் வெளியாகிவிட்டது என்று, தேனியில் அம்பேத்கர் திரைப்படத்தை மக்களைப் பார்க்க வலியுறுத்தியும், படம் வெளியாக காரணமாக இருந்த வழக்கறிஞர் சத்தியச்சந்திரன், லெனின் , த.மு.எ.ச ஆகியோருக்கு நன்றி என்றும் தட்டி (flex hoarding ) வைத்துக் காத்திருந்தோம். தேனியில் படம் வெளியாகவில்லை, விசாரித்ததில் பெரும்பாலான மாவட்டங்களிலும் இதே நிலைதான்!

NFDC யை தொடர்புகொண்டோம், எந்தத் திரையரங்கும் முன்வரவில்லை என்றனர். திரையரங்கு உரிமையாளர்களைக் கேட்டால் அப்படி ஒரு படம் வந்ததே தெரியாது என்றனர்! (பயம் புரிகிறதா?)

உயர் நீதிமன்ற ஆணையை மறுக்க முடியாத NFDC யும் தமிழக அரசும் கடமைக்கு 4 திரையரங்குகளில் படத்தை திரையிட்டுவிட்டு  விளம்பரமே  செய்யாமல்  இருட்டடிப்புச் செய்திருந்ததை  உணர்ந்தோம்.

விடவில்லை. மறுபடியும் NFDC யை தொடர்பு கொண்டு, படத்தை நாங்களே வாங்கித் திரையிட விதிமுறைகள் கேட்டோம். திரையரங்கு உரிமையாளராக இருக்க வேண்டுமாம்! திரையரங்கை வாடகைக்கு எடுத்துத் திரையிடலாம் என்று முடிவு செய்தோம். தேனியில் உள்ள ஒரு திரையரங்கு உரிமையாளரைச் சந்தித்தோம். திரையரங்கு வாடகைக்கு வேண்டும் என்றதும் வரவேற்பு பலமாகவே இருந்தது.  ‘அம்பேத்கர் திரைப்படம்’ என்றதும் தலை தொங்கிவிட்டது. ‘உரிமையாளர் உயிருடன்தான் உள்ளார்’ என்பதை உறுதி செய்து கொண்டு திரும்பினோம்.

தொடர்ந்து பல திரையரங்குகளை நாடினோம். இதுவரை ஓடிய திரைப்படங்களைவிட அதிக பணம் தருகிறோம் என்றோம். ஒன்றும் நடக்கவில்லை. அவர்களின் தயக்கத்திற்கு பணம் காரணமில்லை என்பது புரிந்தது. நாங்களும் அந்த முயற்சியைக் கைவிட்டோம்.

கோவை

கோவையில் உள்ள தோழர்களை தொடர்புகொண்ட போது, பணம் கொடுத்தால் shakthi films உரிமையாளர் கோவையில்  தன் கட்டுப்பாட்டில் உள்ள திரையரங்கிற்கு ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. தோழர்கள் இரண்டே நாட்களில் 1 .75 இலட்சதுடன் அவரைச் சந்தித்த போது, நாளை கற்பகம் திரையரங்கை உறுதி செய்து தருவதாகக் கூறிவிட்டுச் சென்றார் . விடிந்தபிறகுதான் தெரிந்தது, ‘பணத்தை இவர்களால் திரட்ட முடியாது’ என்று நினைத்து தவிர்ப்பதற்காக அப்படிச்  சொல்லியிருக்கிறார் என்பது. ஆம்! ஆள் மாயமாகிவிட்டார்.

கோவையில் இத்திரைப்படத்தை திரையிட பெரியார் திராவிடர் கழகம் முயற்சித்து வருவதை அறிந்து அதன் பொதுச் செயலாளர் தோழர்.இராமகிருட்டிணனை சந்தித்த போது, கோவை சென்டிரல் திரையரங்கு தயாராக இருப்பது தெரிந்து மகிழ்ச்சியடைந்த தோழர்கள் பெ.தி.க விற்குப் பற்றாக்குறையாக இருந்த 60 ஆயிரம் ரூபாயை தந்து உதவினர்.

படம்  இரண்டுகாட்சிகளாக ஒருவாரம் திரையிடப்பட்டது, நல்ல வரவேற்பைப் பெற்றது அம்பேத்கர் திரைப்படம். வந்த லாபத்தில், மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு,  பணம் கொடுத்தவர்களுக்கு திருப்பிக்கொடுக்கப்பட்டது. இரண்டுகாட்சிகள் மட்டுமே திரையிட்டு இரண்டு வாரத்திற்குள்   அதிகபட்சமாக 7000 பேருக்குமேல் படம் பார்த்தனர்; படம் ஓடாது என்று சவடால் அடித்தவர்களுக்கு பதிலாக அமைந்தது மக்களின் ஆதரவு.

இந்த வெற்றியை சாத்தியமாக்கிய கோவை தோழர்கள் தமிழ்ச்செல்வன், கதிரவன் , மகேந்திர குமார், தினேஷ் ,அரவிந்த், வழக்கறிஞர் கார்கி மற்றும் பெரியார் திராடவிடர் கழகத் தோழர்களுக்கும் நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.

மறுபடியும் தேனி…

இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு முயற்சித்ததாக சென்னை த.மு.எ.ச வை நம்பி, தேனி த.மு.எ.ச. தலைவர் தோழர் காமுத்துரையை  சந்தித்தோம். அவர் ஒரு தமாசுக் குண்டைத்தூக்கிப் போட்டார், “த.மு.எ.ச. தான் தேனியில் படத்தை நிறுத்தி வைத்துள்ளது” என்பது.

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு நெருங்கி விட்டதாம், அதனால் விடுமுறையில் தேனியில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் திரையிடப் போகிறார்களாம். இதற்கு மாவட்ட ஆட்சியரும்  ஆதரவாம்!

“அனைத்துத் திரையரங்கிலும் என்பது சாத்தியமானதாகத் தெரியவில்லை, உறுதிசெய்து கொள்ளலாமே தோழர்” என்றோம். உடனே, “தமிழ்நாட்டில் அம்பேத்கர் படத்தை வெளியிடுவதே த.மு.எ.ச தான் கலெக்டரிடம் பேசியாச்சு, இதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாது” என்றார். ஓடி வந்துவிட்டோம்.

அடுத்து என்ன தலித் கட்சிகள்தான்…

முதலில் விடுதலை சிறுத்தைகள்…

அவர்களுக்கெல்லாம் இதைப்பற்றிப் பேசக்கூட நேரமில்லை. அதைவிடக் கொடுமை அங்கு தலித்கள் யாரும் இல்லை! சாதியை உடச்சுட்டாங்கலாமாம்! எந்த சாதியன்னுதான் தெரியல! ‘அம்பேத்கர் படம் வந்தா, தேவையில்லாம கலவரம் உண்டாகி ரத்த ஆறு ஒடும்ல….’ என்றவர்களிடம் என்னதான் பேச…  சுருக்கமாகவே முடிந்ததில் திருப்தி.

அடுத்து புதிய தமிழகம். அம்பேத்கர் திரைப்படம் என்பதைத் தாண்டி அவர்களிடம் எதுவும் பேச முடியவில்லை. டவர் சரியா கெடைக்கல….

த.மு.எ.ச, திரைப்படத்தை திரையிடுவதாகக் கூறியிருந்த டிசம்பர் 17 ,18 ,19 தேதிகளைக்கடந்து பல நாட்களாகிவிட்டது. படத்தை திரையிடுவது தொடர்பாக தேனியில் 24 -12 -2010 ல், அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்களை அழைத்து ஒரு கலந்தாலோசனைக் கூட்டத்தை  நடத்தினோம். த.மு.எ.ச வையும் அழைத்தோம். அவர்கள் அரையாண்டுத்தேர்வு எழுதிக்கொண்டிருந்ததால் கலந்துகொள்ள முடியவில்லை.

கூட்டத்தின் முடிவில் அம்பேத்கர் திரைப்படத்தை திரையிடுவதற்கான போராட்டங்களை நடத்த “அம்பேத்கர் திரைப்படம் பரப்புரைப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு” உருவாக்கப்பட்டது.

முதல் கட்டமாக, அம்பேத்கர் திரைப்படத்தை இருட்டடிப்புச் செய்யும் தமிழக அரசைக் கண்டித்து, தேனி மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டது. விழுப்புரத்திலும், தோழர்கள் டேவிட் மற்றும் ராசா கண்டன சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.

அடுத்த கட்டமாக போராட்டக் குழு ஒரு மாபெரும் தொடர் முழக்கப் போராட்டத்திற்குத் தயாரானது!

போராட்டத்திற்கு அழைக்கப்பட்ட பெரும்பாலான கட்சிகளும் இயக்கங்களும் த.மு.எ.ச. படத்தை, இந்தமுறை ஜனவரி 3 .4 .5 . தேதிகளில் அனைத்துத் திரையரங்குகளிலும்  திரையிட உள்ளதாகக் கூறி விலகிக்கொண்டன. ஆம் இந்தப் புரளியை தேனி மாவட்டம் முழுவதும் பரப்பியிருந்தது த.மு.எ.ச. மேலும் போராட்டம் தேவையில்லாதது எனவும், ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு அழுத்தம் கொடுக்கவேண்டியதில்லை எனவும் பரப்பியிருந்தது.

ஆனால் போராட்டக் குழு “ஒடுக்கப்பட்ட மக்கள், ஒரு திரைப்படத்திற்குக் கூட இவ்வளவு தூரம்  போராடவேண்டியுள்ளது” என்பதை உணர்ந்திருந்தது!

த.மு.எ.ச விற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அவர்கள் படத்தை திரையிடுவதாகப் பரப்பியிருந்த தேதிக்கு அடுத்த தேதியில் அதாவது ஜனவரி 4ஐ போராட்டத் தேதியாக அறிவித்தது போராட்டக் குழு.  த.மு.எ.ச விற்கும் அழைப்புக் கொடுக்கப் பட்டது. இப்பொழுது அவர்கள் படத்தை வெளியிட 7 ,8 ,9 என்ற தேதிகளுக்கு மாறியிருந்தனர்.

தேனி மாவட்டத்தில் போராட்டக்குழு ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் பார்த்து சில கட்சிகள், பேருக்கு மட்டும் தங்களையும் போராட்டத்தில் இணைத்துக் கொண்டன. இதுவும் வெற்றிதான்!

போராட்டக்குழு அறிவித்திருந்த அதே தேதியில் AIYF ம் AISF ம் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது. மற்ற மாவட்டங்களில் நடந்ததா இல்லையா தெரியவில்லை தேனியில் நடக்கவில்லை.

‘அம்பேத்கர் திரைப்பட பரப்புரைப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு’ அறிவித்திருந்த தேதியில் “தொடர் முழக்கப் போராட்டத்தை” காலை 11 மணி முதல் மாலை 5 .30 மணி வரை சிறப்பாக நடத்தி அம்பேத்கர் திரைப்படம் தொடர்பாக மிகப்பெரிய தாக்கத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது .

மக்களின் போராட்டங்கள் ஒருபக்கம் இருக்க , அம்பேத்கர் திரைப்படத்திற்கான விமர்சனங்கள் இணையத்தை ஆக்கிரமித்திருந்தன. விமர்சனங்களும் அதில் அவர்கள் உச்சுக்கொட்டிக்கொண்டதும், தங்களின்  மேதாவித்தனத்தை தம்பட்டம்போடும் பாணியிலேயே இருந்தது. படம் மக்களைச் சென்றதா, இல்லையா என்றெல்லாம் யோசிக்க நேரமில்லாமல் ‘சிக்குச்சுடா அம்பேத்கர் படம்’ என எழுதித்தீர்த்தனர்.

அம்பேத்கரின் வரலாற்றில் இயல்பாகவே காங்கிரசு எதிர்ப்பு இருப்பதாலோ என்னவோ, நமது முதல்வர், திரையுலக வெங்கல வெளக்கு, பிட்டுப்பட விழாக்களிளெல்லாம் வாயடித்துவிட்டு , அம்பேத்கர் திரைப்படம் பற்றி வாய்திறக்கவே இல்லை. ஆரிய திராவிட யுத்தக் களத்தில் பிசியாக இருப்பதாகவே காட்டிக்கொண்டார்.

அம்பேத்கரையும், அவரின் எழுத்துகளையும் தமிழில் அறிமுகம் செய்யப் பாடுபட்ட தந்தைப் பெரியாரின் கைத்தடியைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவந்து ஆட்சியமைத்த தி.மு.க. அரசு, அம்பேத்கரை  மக்களிடம் எளிமையாக கொண்டுசெல்லவிருந்த  இத்திரைப்படத்தை திட்டமிட்டே தடுத்துவிட்டது.

முதல்வரின் மூச்சிரைப்பைக்கூட விமர்சிக்கிற ஜெயலலிதா, அம்பேத்கர் படம் பற்றிய அரசின் அலட்சியம் குறித்து வாய் திறக்கவே இல்லை. காரணம், அதே அலட்சியம் அவரிடமும் இருந்ததால். இவர்கள் இந்த நாட்டின் மிகப் பெரிய தலைவர்கள்.

என்ன செய்ய… கேனப்பய ஊர்ல கிறுக்குபய நாட்டாம…!

அடுத்ததாக, தமிழ்த்தேசியவாதிகள்

இவர்களைப் பொறுத்தவரை, அம்பேத்கர் படத்தை விடுங்கள்.

தமிழ்நாட்டிற்கு உள்ளே  நடக்கும் எந்தப் பிரச்சனைகளும் இவர்கள் கண்ணுக்குத் தெரிவதேயில்லை , குறிப்பாகத் தமிழர்களைப் பிரிக்கும் சாதியப் பிரச்சனைகள். காரணம் இதெற்கெல்லாம் பெரிய மார்க்கெட் கிடையாது என்பதுதான்! பெரியாரை விமர்சிக்கிற மூத்த தமிழ்த் தேசியவாதிகளிலிருந்து, புதுசா முளைக்கிற குட்டிகள்வரை இப்படித்தான் இருக்கிறார்கள்.

முத்துராமலிங்கத்தின் ருத்ராசக் கொட்டையும் , அவர் பேசிய இந்து தேசியமும், சாதி வெறியும் தமிழ்தேசியத்திற்கு எதிராக இல்லை! ஆனால், தமிழரல்லாத அம்பேத்கர் தமிழ்தேசியம் பேசாததுதான் இவர்களுக்கு உறுத்துகிறது.

கூத்து என்னன்னா, தற்பொழுதுள்ள பெரும்பாலான தமிழ்ப்பட இயக்குனர்கள் தமிழ்தேசியம் பேசும் முற்போக்காளர்கள்தான்! அதான் தாடி , தொப்பி , கண்ணாடின்னு  மேக்கப்போட வந்து மேடைல கொதுச்சுப்போயிடுராங்க.  முற்போக்காளனாக அல்ல ஒரு சினிமாக்காரனாகக்கூட அம்பேத்கர் திரைப்படம் குறித்து இவர்கள் வாய் திறக்கவே இல்லை.

மீண்டும் தமுஎச…

‘தேனியில் மார்ச் 1 ம் தேதி  அம்பேத்கர் திரைப்படத்தை  திரையிடுவதாக த.மு.எ.ச அறிவித்தது. போராட்டக்குழு த.மு எ.ச வைத் தொடர்புகொண்டு, ’ படம் ஓடுவதற்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்யலாம்’ என்றது. ’இல்லை இல்லை அது சிறப்புக் காட்சிதான்‘ என்றனர்.அதாவது ஒரே ஒரு காட்சி!

மறுநாள் நேரில் சந்தித்தோம். ‘காட்சியை நீட்டிக்க வாய்ப்பே இல்லை’ என்றனர். ஒரு துண்டறிக்கையைக்  கையில் தந்து, மாவட்ட ஆட்சியரும் , வருவாய்த்துறை அதிகாரியும், அந்த “ஒரு காட்சியைத்” துவக்கி  வைப்பதாகவும் மற்றும் த.மு.எ.ச பொறுப்பாளர்கள் அனைவரும் சிறப்புரை ஆத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் , வருவாய்துறை அதிகாரி மற்றும் த.மு.எ.ச பார்க்கவிருந்த அந்த ‘சிறப்புவாய்ந்த’ காட்சிக்குத் தயாரானது ‘அம்பேத்கர் திரைப்பட பரப்புரைப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு’! திரையரங்குமுன் ஏராளமான மக்களுடன் திரண்டு நின்றது, மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிடுவது போராட்டக்குழுவின் திட்டம்.

மாவட்ட ஆட்சியர் வரவில்லை, வருவாய்துறை அதிகாரியை முற்றுகையிட்டு, “படத்தை அனைத்து மக்களும் பார்த்துப் பயன்பெறும் வகையில் தொடர்ந்து திரையிட வேண்டும்” என கேட்டது போராட்டக் குழு, அதற்கு அவர் “நேற்றே ஏன் சொல்லவில்லை” என்றார். சிரிப்புதான் வந்தது.

அந்த சிறப்புக்காட்சிக்கு வருவாய்துறை அதிகாரியை ‘அம்பேத்கர் திரைப்பட பரப்புரைப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு’ அனுமதிக்கவில்லை, திருப்பியனுப்பப்பட்டார். தோழர்கள் வருவாய்த்துறை அதிகாரியிடம் காட்சியை நீட்டிக்ககோரி வாதத்தில் இருந்த போது த.மு.எ.ச குறுக்கே வந்து சமரசம்தான் பேசியது.

மறுபடியும் NFDC யை தொடர்புகொண்ட பிறகுதான் மார்ச் 6 ம் தேதியோடு, அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதற்கான உரிமம் முடிந்துவிட்டது என்பது தெரியவந்தது.

டிசம்பர் மாதம் வெளியிடாததற்கு, ‘அரையாண்டு தேர்வு நெருங்குகிறது அதனால்தான் நிறுத்தி வைத்துள்ளோம்’ என்று சாக்குச் சொல்லிய த.மு.எ.ச, முழு ஆண்டுத் தேர்வு நடக்கும் போது, அவசர  அவசரமாக  சிறப்புக் காட்சிகள் நடத்தியதன்  கள்ளத்தனமும் தெரியவந்தது.

கட்சி மற்றும் அமைப்புகளைக் கடந்து போராட்டக்குழுவில் தங்களை இணைந்த்துக்கொண்டு போராடிய அனைத்துத் தோழர்களுக்கும், குழு உறுப்பினர்களான தோழர்கள், பா.சி முத்துக்குமார், செந்தில்குமார், ஸ்ரீதர், தமிழ்ப்புலிகள் மாவட்டச் செயலாளர் தலித்ராயன், மாநில பொறுப்பாளர் அருந்தமிழரசு,சந்தோஷ் மற்றும் டார்வின் கலை ஊடக நண்பர்களுக்கும் … நெஞ்சார்ந்த நன்றிகள். போராட்டம் தொடரும்..

சாதியம்தான் சமூகம் என்றால்,

வீசும் காற்றில் விஷம் வீசட்டும்.

– டாக்டர் அம்பேத்கர்.

தோழமையுடன்

மதியவன்

10 thoughts on “அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்

  1. What you said its absolutely correct.

    No one here for to praise Doctor Shaheb.

    All are using his doctor Shaheb photo for vote

    But no one willing to watch and follow his words and movie

    All Indians has to salute Doctor Baba Shaheb.

  2. ///டிசம்பர் மாதம் வெளியிடாததற்கு, ‘அரையாண்டு தேர்வு நெருங்குகிறது அதனால்தான் நிறுத்தி வைத்துள்ளோம்’ என்று சாக்குச் சொல்லிய த.மு.எ.ச, முழு ஆண்டுத் தேர்வு நடக்கும் போது, அவசர அவசரமாக சிறப்புக் காட்சிகள் நடத்தியதன் கள்ளத்தனமும் தெரியவந்தது.////

    good

  3. என்ன பதில் வைத்திருக்கிறது தமுஎச

  4. தமுஎச தான் படம் வெளியிட காரணமாக இருந்தது என்று பலரின் நினைப்பில் மண்.

    காலங்காலமாக தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களின் வரலாறு என்பது ஆச்சரியக்குரியை தாங்கியே உள்ளது.

    அன்று தெருவில் செருப்பு அணிவதற்கு கூட போராட்டம்!

    கோவிலில் நுழைந்து சாமி கும்பிடவும் போராட்டம்!

    தோளில் துண்டு போடவும் கூட போராட்டம்!

    இன்று, ஒரு பொது கழிப்பிடம் கட்டுவதற்கு கூட போராட்டம்!

    ஆதி திராவிட மாணவர் விடுதியில் கழிப்பிடமாய் இருக்கும் தங்கும் விடுதியை சுத்தம் செய்வதற்கு கூட போராட்டம்!

    இப்படிப்பட்ட அடிப்படை விடயங்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் கூட போராட்டங்களை நடத்த வேண்டிய விளிநிலையில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளனர் என்பது ஆச்சரியமளிக்கக்கூடிய வேதனையான உண்மைகள்.

    – சிந்தியுங்கள்..

    http://www.Thozhare.wordpress.com

    ‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படமும் சமூக அவலமும்..

  5. சாதியம்தான் சமூகம் என்றால்,

    வீசும் காற்றில் விஷம் வீசட்டும்.

    – டாக்டர் அம்பேத்கர்.

  6. அன்று வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்ட அதே நிலை தான் இன்று அம்பேத்கர் திரைப்படத்திற்கு ஏற்பட்டிருக்கிறது ஆம் மருதுபாண்டியர், புலித்தேவன் போக்குவரத்து கழகம் சின்னமலை போக்குவரத்து கழகம் என எல்லா சாதி தலைவர்களின் பெயர்களிலும் போக்குவரத்து கழகங்கள் இயங்கிய போது நாமும் அதில் பயணித்தோம் அனால் வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகம் துவங்கியதும் மற்ற சாதியினர் பயணிக்க மறுத்தனர் பெயர் பொறிக்கப்பட்ட பேருந்துகளும் தாக்குதலுக்கு உள்ளானது நாம் விழிப்பதற்குள் நமக்கு பயந்து அரசே ஆக்கியது அனைத்தையும் அரசு போக்குவரத்து கழகங்களாக.

    இதற்கு ஒரு முடிவை நாம் போக்குவரத்து கழகங்களுக்கு கண்டது போல் திரைதுரைக்கும் முற்றுபுள்ளி வைக்க வேண்டிய நேரம் இது என்றே தோன்றுகிறது அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் தலையிட்டு எல்லா மாவட்டங்களிலும் திரையிட வில்லையெனில் இனி எந்த சாதியின் பெயாராலும் பாடல்களோ திரைபடங்களையோ திரையில் மட்டும் அல்ல அவர்களால் ஒரு வால் போஸ்டர் கூட ஓட்ட முடியாது என்பது போன்ற போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும். அது தான் அவர்களின் சாதி வெறியை அடக்க சரியான மருந்தாய் நான் கருதுகிறேன்.

  7. தேனி மாவட்டத்தில் தமுஎச அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிட்டது குறித்து உங்கள் கட்டுரை வாசித்தேன். ஒரு செய்தியை பரபரப்பாக்கி விற்றுத்தீர்க்கும் துப்பறியும் பத்திரிக்கையின் தன்மையோடு அக்கட்டுரையின் உண்மை இருந்தது.

    திரையரங்குகள் அதன் முதலாளிகளால் பெரிய நிறுவனங்களிடம் அடகு வைக்கப்பட்ட பிறகு, அம்பேத்கர் படத்தை வெளியிட விரும்பாத மத்திய அரசு, தேசிய திரைப்படக் கழகம் என்று திரையிடலுக்கு எதிரான சூழலை உங்கள் கட்டுரை விவரித்துள்ளது. தலித் தோழர்களின் இடைவிடாத முயற்சியும் சரியாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒருபுறம் அரசின் விருப்பமின்மை, மறுபுறம் திரையரங்கு தராத முதலாளிகள், இடையில் திரையிட முயன்று தோல்வியைத்தழுவிய தலித் அமைப்புகள் என்ற சூழலில் எப்படி தமுஎச அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிட்டது? கட்டுரையில் தேனி தமுஎச வின் பெரு முயற்சிகள் வெறுமனே புறந்தள்ளப் பட்டிருக்கின்றன. அரையாண்டுத் தேர்வு காரணமாக அம்பேத்கர் திரையிடலை தள்ளிப்போட்டது என்பது உண்மையிலேயே காமெடிதான். ஏனெனில் நீங்கள் கட்டுரையில் இப்படி தள்ளிப்போட்ட செய்தி தமுஎச விற்கே தெரியாது. படப்பெட்டி திரைப்படக்கழகத்தால் அனுப்ப படாததே தாமதத்திற்கு காரணம்.

    டிசம்பரில் குறிக்கப்பட்ட தேதியில் படப்பெட்டி கிடைக்கவில்லை. அதன் பிறகு மார்ச்சில் 1,2,3 தேதிகளில் படப்பெட்டியை வாங்குவதற்கு தமுஎச எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்னவென்பதை கட்டுரையாளர் குறிப்பிடவில்லை. பல அமைப்புகள் பல ஆண்டுகளாக போராடி கிடைக்காத திரையரங்கமும், படப்பெட்டியும் முயற்சியற்று கிடைத்ததாக நீங்கள் நம்புவீர்களாயின் உங்கள் புரிதலுக்கு வாழ்த்துக்கள்.

    திரையரங்க உரிமையாளர்கள் அம்பேத்கர் படத்தை வெளியிட மறுத்த பின்பு தேனி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு டிசம்பரில் அனுமதி பெற்றுத்தந்தது. படப்பெட்டி வராததால் அது தள்ளிப்போடப்பட்டது. ( தேசிய திரைப்படக்கழகம் தமிழில் ஒரே ஒரு படப்பெட்டியைத்தான் தயார் செய்து வைத்திருந்தது பற்றி தெரியுமா தோழர்?)

    பின்பு தொடர் முயற்சிகளுக்குப் பிறகு மார்ச்சில் 1,2,3 தேதிகளில் மூன்று காட்சிகளுக்கு மட்டுமாக திரைப்படக்கழகம் அனுமதியளித்து தேனிக்கு அனுப்பியது. திரையரங்கில் பல விநியோக நிறுவனங்களால் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த படங்களை நிறுத்திவிட்டு இந்த மூன்று காட்சிகளை திரையிட்டது தமுஎச. தேனியில் அரசு அதிகாரியை வழிமறித்து நடத்தப்பட்ட போராட்டம் நியாயமானது தான். அது நடைபெற்றிருக்க வேண்டிய இடம் அரசு அலுவலகமாக இருந்திருந்தால் போராட்டத்தின் தன்மை மாறியிருக்கும். தேனி திரையரங்கில் நடைபெற்ற போராட்டம் ஒரு வழியாக கிழித்தெறியப்பட்ட திரையரங்க பேனரோடு, தலித் அமைப்புக்களின் கொடிகள் திரையரங்க வாசலின் உயரத்தில் வலுக்கட்டாயமாக கட்டப்பட்டு அமைதியாக முடிவுற்றது. மார்ச் 1 அன்று தேனியில் திரையிட்ட முதல் காட்சியிலேயே இந்த சம்பவம் நடந்ததால் பின்பு திரையிடப்பட வேண்டிய போடி, கம்பம் திரையரங்க உரிமையாளர்கள் படம் வேளியிடுவது குறித்து மறுபடி யோசிக்க ஆரம்பித்தனர். மறுபடியும் தமுஎசவின் தொடர் முயற்சியில் திட்டமிட்டவாறே திரையிடப்பட்டது. ஒரு வேளை போராட்டத்திற்கு பயந்து இரு திரையரங்க உரிமையாளர்களும் அனுமதி மறுத்திருந்தால் தமுஎச முழு ஆண்டுத்தேர்வுக்கு போய்விட்டதாக தகவல் வெளிவந்திருக்கும். நல்ல வேளை அது நடக்கவில்லை.

    போடியில் தலித் தோழர்கள் அரசை எதிர்த்து ஒரு அடையாள போராட்டத்தை நடத்தி விட்டு படம் வெளியிட துணைநின்றனர். கம்பத்தில் தலித் அமைப்புக்களின் சார்பாக தமுஎச நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    அம்பேத்கர் படத்தை திரையிடுவதில் உள்ள அனைத்துவிதமான தடைகளை உணர்ந்த தலித் தோழர்கள் தமிழகத்தின் பல ஊர்களில் திரையிட்ட தமுஎசவின் முயற்சிகளை பாராட்டக்கூட வேண்டாம். புரிந்துகொண்டால் போதும்.

    கடைசியாக ஒரு தகவல் . .
    மார்ச் 6 ஆம் தேதி அன்று படப்பெட்டி டெல்லிக்கு அனுப்பப்பட்டு விடும் என்ற தகவல் மார்ச் 3 ஆம் தேதிவரை திரைப்படக்கழகம் தமுஎசவிற்கும் சொல்லவில்லை. தஞ்சாவூரில் நடைபெற்ற தமுஎச வின் மாநிலக்குழுக்கூட்டத்தில் அம்பேத்கர் திரைப்பட பெட்டியை சென்னை திரைப்படக்கழக அலுவலகத்திற்கு திருப்பிக்கொண்டுவரும் முயற்சிகளுக்கான ஆலோசனை நடைபெற்றது. தேசிய திரைப்படக்கழகத்தை கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அம்பேத்கர் திரைப்படத்தை அடர்தகடாக வெளிக்கொண்டு வரும் முயற்சியில் திரைப்படக்கழகத்தோடு தமுஎச பேசி வருகிறது.

    நன்றி.

    அ.உமர் பாரூக்
    மாநிலக்குழு உறுப்பினர்
    தமுஎச
    கம்பம். தேனி மாவட்டம்.

  8. mathiyavanukku vazhthukkal. tha.mu.a.sa vai nambathirgal echarikkai.

Leave a Reply

%d bloggers like this: