தமிழன்; வர்க்க உணர்வும் – ஜாதி உணர்வும் கலந்து செய்த கலவை


வர்க்க உணர்வு, ஜாதி உணர்வு எது தமிழர்களிடம் அதிகம் இருக்கிறது?
-கே. அப்துல் காதர், கோவை.

இரண்டும் பின்னிபிணைந்துதான் இருக்கிறது.

ஒருவர் மிகவும் ஏழ்மையில், குடிசைப் பகுதியிலிருந்து படித்து உயர் வருவாய் உள்ளவராக மாறினால், அவர் குடிசைப் பகுதியிலிருந்து விலகி, தன்னைப்போலவே அதிக வருவாய் உள்ளவர்கள் குடியிருக்கும் பகுதியில் குடியேறுகிறார் அல்லவா?

இதுதான் வசதி வந்தப் பிறகு மாறுகிற வர்க்க உணர்வு.

அப்படி உயர்வருவாய் உள்ளவர்களோடு சேர்ந்து வாழ விரும்பி இடம் பெயர்கிறவர் தலித்தாக இருந்தால், அவருக்கு அந்தப் பகுதியில் வாடகைக்கு வீடு தர மறுக்கிறானே, அதுதான் ஜாதி உணர்வு.

வர்க்க உணர்வுதான் உண்மையானது. புறத்தில் உள்ளது. ஐம்புலன்களால் உணரக் கூடியது. சூழலுக்கு ஏற்ப மறைக்க முடியாதது. எல்லோருக்கும் ஒர் வர்க்க அடையாளம் உண்டு.

ஜாதி உணர்வு கற்பனையானது, புறத்தில் இல்லாதது. அய்புலன்களால் உணர முடியாதது. சூழலுக்கு ஏற்ப வெளிப்படுத்த, மறைத்துக் கொள்ளக்கூடியது. மனிதர்களுக்கு தேவையில்லாதது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம்மே மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தங்கம் இதழை  ஆன்லைன் வழியாக பார்க்க:

http://ebook.thangamonline.com/may2011/

தொடர்புடையவை:

 எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது

ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?

தன்னைத்தானே சுரண்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்கம்

9 thoughts on “தமிழன்; வர்க்க உணர்வும் – ஜாதி உணர்வும் கலந்து செய்த கலவை

  1. மறைந்த, மூத்த பத்திரிகையாளர் சின்னக் குத்தூசி அவர்களைக் குறித்து ஒரு கட்டுரை வெளியிடுங்களேன். நக்கீரன் மற்றும் முரசொலி ஏடுகளின் கட்டுரையாளர் என்பதைத் தவிர்த்து வேறு வகையில் அறிந்திராத என் போன்றோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Leave a Reply

%d bloggers like this: