உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…

திரை இசைப் பற்றி நிறைய எழுதுகிறீர்கள். இனிமையான இசை என்பது மிகவும் இசை நுட்பங்கள் நிரம்பியதாகத்தான் இருக்க வேண்டுமா?
-எஸ். பிரேமா, சென்னை.

நல்ல பாடல், திறமையான அதாவது நிறைய டெக்னிக்ஸ் உள்ளவையாக இருந்தால் மட்டும் போதாது; கேட்பவனின் ஆன்மாவை தொடுவதாக இருக்க வேண்டும்.

திரையிசை திலகம் என்று புகழப்பட்ட கே.வி. மகாதேவனின் பாடல்கள் எதை கேட்டாலும் கர்நாடக சங்கீத நுட்பம் நிறைந்ததாக இருக்கும். கேட்கவும் இனிமையாக இருக்கும்.

குறிப்பாக ‘மன்னவன் வந்தானடி..தோழி..’ இந்தப் பாடல், நுட்பமான இசை, மிக நேர்த்தியான கர்நாடக சங்கீத வடிவத்தில் அமைந்த பாடல் என்று இசை வல்லுநர்கள் சிலாகிக்கிறார்கள்.

இந்தப் பாடலின் இடையில்; வீணையின் கொஞ்சல், ஆணின் குரலில் நடனத்துக்குரிய ‘ஜதி’ மையமாக சுசிலாவின் குரல் இவைகள் ஒரு குவியமாக ஒன்றிணைந்து, உன்னத உலகத்தை சிரிஷ்டிக்கும்.

ஸ, ரி, க, ம, ப, த, நி இந்த ஏழு சுரங்களையும் தனி தனியாக சொல்லி, அதற்கு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒருவரி என்று பின்னியிருப்பார் கே.வி. மகாதேவன்.

உதாரணமாக, … கருணையின் தலைவா… … மதிமிகு முதல்வா…

இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக இருக்கும். ஆனால்,இதுபோன்ற சிறப்பான இசை நுட்பங்கள் இல்லாமல் எளிமையான இசை வடிவத்தில் அவர் உருவாக்கிய,

‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…’ ‘நலந்தானா..’ போன்ற பாடல்கள்தான் கேட்பவரை உருக வைத்து ஆன்மாவை தொட்டது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம்மே மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தங்கம் இதழை  ஆன்லைன் வழியாக பார்க்க:

http://ebook.thangamonline.com/may2011/

தொடர்புடையவை:

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு

இசைஞானி இளையராஜா மீதான அவதூறு!

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?

பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்

பார்ப்பன எதிர்ப்பா?இளையராஜா மீதான வெறுப்பா?

6 thoughts on “உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…

  1. Pingback: Indli.com
  2. இந்த பதில் நீங்கள் எழுதியது தானா? அதென்ன ’ஆன்மா’வைத் தொடுவது? கொஞ்சம் விளக்கினால் நன்றாயிருக்கும். பகுத்தறிவாளர்கள் வார்த்தை பிரயோகத்தில் கவனமாய் இருக்க வேண்டாமா?

  3. செத்தப் பிறகு, ‘அவர் ஆன்மா சாந்தியடைய’ என்று சொல்கிறார்களே, அதுவல்ல இது. ‘உளப்பூர்வமான, ஆத்மார்த்தமான அன்பு’ என்கிறார்களே அதன் நுட்பமான வார்த்தைதான் இது.

    விளக்கம் கேட்டுவிட்டு அதன் பிறகு அறிவுரையும் சொல்லியிருக்கீறர்களே பிர்ன்ஸ்…. அறிவுரை சொல்பவர் எப்படி விளக்கம் கேட்க முடியும்?

  4. isai kurithu niraya ezhuthukkal. therinthu kolla nallathu niraya seithigal ungalidam ethir parkinren. nandrigal.

Leave a Reply

%d bloggers like this: