ஆனாலும், அப்பவே.. எனக்கொருடவுட்டு, ‘கமுக்கம’ இருக்காங்களேன்னு..

குண்டு ராஜபக்சேவிற்கா? சமச்சீர் கல்விக்கா?

‘தமிழினப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளி’ என்ற புரட்சித் தலைவி அம்மாவின் வரலாறு காணாத சட்டசபை தீர்மானத்தை பெருமையோடு நினைச்சிக்கிட்டே அப்படியே கண்ணயர்ந்து, ராஜபக்சேவின் கை, கால்களில் விலங்கிட்டு வீதிகளில் இழுத்துவருதுபோல கனவு கண்டுகொண்டிருந்தேன்.

தெளிந்து பார்க்கிறேன்… ராஜபக்சே அப்படியேதான் இருக்கிறார்; மாறாக, ராஜாஜிதான் அம்மா உருவில் வந்து,

‘ஏன்டா, என்னுடைய குலக்கல்வித் திட்டத்தையா ஒழிச்சிங்க, இருங்கடா உங்க சமச்சீர் கல்வியை ஒழிச்சிக் கட்றேன்’ என்று வரிந்துக் கட்டிக் கொண்டு நிற்கிறார்.

பழிக்கு பழி. சும்மாவா பின்ன… எத்தன வருச பகை இது!

ஆனாலும், அப்பவே… எனக்கொரு டவுட்டு…. என்னடா இது…ஈழ மக்களுக்கு ஆதரவா, இலங்கை அரசுக்கு எதிரா சின்ன துரும்பு அசைஞ்சாக்கூட… துக்ளக் சோ, இந்து ராம் இவுங்க எல்லாம் கொதித்து எழுவாங்களே, இப்ப ராஜபக்சேவை கண்டித்து சட்டசபையில் போட்ட தீர்மானத்திற்காக அம்மாவை கடுமையா விமர்சிக்காம ‘கமுக்கம’ இருக்காங்களேன்னு..

அதான் சமசீர் கல்வியிலே வேலைய காம்சிட்டாங்க. என்னமா யோசிக்கிறாங்க.. நமக்குத்தான் விவரம் பத்தல…

ஏமாந்துட்டேன்… அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் சீடான இருந்துக்கிட்டு, இப்படி கனவு கண்டது என் தப்புதான்.

எனக்கும் வெறும் தமிழ்த்தேசியவாதிய இருக்கிறவங்குளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போச்சு பாருங்க….ச்சே… ரொம்ப வேதனையா இருக்கு.

என்னடோ இந்த நிலையை நினைச்சு பாக்கும்போது, பல வருசத்துக்கு முன்னால படிச்ச வைரமுத்துக் கவிதைதான் ஞாபகத்துக்கு வருது,

பட்டு வேட்டி பற்றிய

கனாவில் இருந்தபோது,

கட்டியிருந்த

கோவணம் களவாடப்பட்டது.

தொடர்புடையவை:

சமச்சீர் கல்வியா? சர்ச் பார்க் கல்வியா?

தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்

ஈழமக்கள் துயரம்; திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான்

காமராஜரின் சிறப்பு எது? எளிமையா? பெரியாரா?

யாரையும் விட மாட்டீர்களா?

13 thoughts on “ஆனாலும், அப்பவே.. எனக்கொருடவுட்டு, ‘கமுக்கம’ இருக்காங்களேன்னு..

  1. தமிழ்தேசியவாதிகளுக்கும் உங்களுக்கும் எப்போதும் வேறுபாடு இருக்கிறது, பாசிச ஜெயாவையும் தமிழினவாதிகளின் நேர்மையான மற்றும் நேர்மையற்ற சந்தர்பவாதத்தை இங்கு நன்றாக அம்பலமாக்கியுள்ளீர்கள்.

  2. சமச்சீர் கல்வி தொடர்பாக விமர்சனம் செய்யுங்கள்.
    ஈழம் தொடர்பான தீர்மானம் குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.
    ஆனால் இரண்டையும் முடிச்சுப் போடாதீர்கள். அது அரசியல்வாதிகள் செய்கிற வேலை.

  3. பத்த வச்சிட்டியே பரட்ட ….

  4. சரியான பார்வை!
    எதிரிகளை விட முட்டாள் துரோகிகளின் தொல்லைதான் நம் இன அழிவுகளுக்கு முதன்மைக் காரணமாக உள்ளது!

  5. karunanidhi, jayalalitha iruvarum oruvare. thamizhina thurogikale. unervom seyelpaduvom. nandri

  6. பட்டு வேட்டி பற்றிய

    கனாவில் இருந்தபோது,

    கட்டியிருந்த

    கோவணம் களவாடப்பட்டது.// ஏகப் பொருத்தமான கவிதை தான்,

  7. யார் அவரை அதிகாரத்தில் அமர்தினார்களோ அவர்களுக்கு எதிராக அதிகாரம் செலுத்தும் புத்திசாலி அவர். .
    அவரது அரசியல்ஆலோசகர்கள் யாரென்று தெரிந்தபின்னும் அவரை தங்களைப் போன்றவர்கள் நம்பியது ஆச்சரியம்

    இன்னும் என்னனென்ன நடக்கப்போகுதோ…இப்போதுதானே ஆரம்பம்

  8. பழிக்கு பழி. சும்மாவா பின்ன… எத்தன வருச பகை இது

  9. eelappirachanaiyai muzhusa therinnjukkaama aalaalukku pottu kulappureenga…….

  10. //எனக்கும் வெறும் தமிழ்த்தேசியவாதிய இருக்கிறவங்குளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போச்சு பாருங்க//

    nach….

    seemaan vaazhka

  11. ஏண்ணே! கடந்த 10 வருசமா நாம காட்டாத கமுக்கமா இவங்க இப்போ காட்டறாங்க?

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading