வைரமுத்துவிற்கு வாழ்த்துகள் சொல்லலாமா?

ஆறாவது முறையாக கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது, வாழ்த்துக்கள் சொல்லுங்களேன்.
-எஸ். பிரேமா, சென்னை.

வைரமுத்துவின் சினிமா பாடல்களில் உள்ள சிறப்பான வரிகளை பாராட்டினால், ‘அதற்கு முழு பொறுப்பும் தனக்கே’என்று பெருமையுடன் ஒத்துக்கொண்டு, அந்தப் பாடல்களைப் பற்றி சிலாகித்து பெருமை பொங்க பேசுகிற வைரமுத்து,

தான் எழுதிய ஆபாசப் பாடல்களுக்கும், ஆங்கிலம் கலந்து எழுதிய பாடல்களுக்கும் மட்டும், ‘அது இயக்குநரின் விருப்பம், கதாபாத்திரத்தின் கருத்து, என்னை நீங்கள் என் கவிதைகளில்தான் காணவேண்டும், திரைப்பாடல்களில் அல்ல, அந்தப் பாடல் வரிகள் கதைக்கான சூழல்’ என்று கதையளப்பார்.

அதனால், அவர் எழுதிய ஆபாசப் பாடல்களுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டு அவர் வருத்தம் தெரிவித்தால், அடுத்த வினாடியே அவர் தேசிய விருது பெற்றதற்காக நாம் வாழ்த்துச் சொல்வோம்.

(‘போயா… யோவ்… உன் வாழ்த்த எடுத்து குப்பையில போடு’ என்று நினைக்கிறீர்களோ?)

*

தங்கம் 2011 சூன் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

‘கண்ணதாசன் சிறந்த கவிஞர்’; தமிழர்களின் மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

6 thoughts on “வைரமுத்துவிற்கு வாழ்த்துகள் சொல்லலாமா?

 1. அடுத்தவன் வாழ்த்தை எதிர்பார்த்து யாரும் உழைப்பதில்லை.
  தன் வயிற்றுப்பசியை தணிக்கவே உழைக்கத் தொடங்குகிறான்.
  பின்னர் தான் ஏதோ மக்களுக்காகவே வாழத் தொடங்கியதாக பீலா விடத் தொடங்குகிறான்.
  உண்மையான நோக்கமே முதலாவதுதான்.

  வேதிமாறன் எழுதும் இணையம் தமிழன் உருவாக்கியதல்ல.
  நீங்களெல்லாம் ஏட்டில் எழுதுங்கள்.
  உங்களையும் வாழ்த்துவோம்.

  அதை விட்டு உங்கள் இணையத்தின் வலது மூலையில் உள்ள தொகுப்பு என்பதற்கு கீழே
  தமிழிலும் , ஆங்கிலத்திலும் மாதங்கள் எழுதப்பட்டுள்ளதே? கவனித்தீர்களா?

 2. அறிவு ஆசான் பெரியார் சொல்லுவது போல வாழ்த்துவது என்பது முட்டாள் தனமே ஆகும்……ஒரு பெரியாரியவாதி நன்றாகத்தான் பதில் சொல்லியுள்ளார்

 3. //அதை விட்டு உங்கள் இணையத்தின் வலது மூலையில் உள்ள தொகுப்பு என்பதற்கு கீழே
  தமிழிலும் , ஆங்கிலத்திலும் மாதங்கள் எழுதப்பட்டுள்ளதே? கவனித்தீர்களா?//

  அதுக்கு அவர் என்ன பண்ண முடியும்? http://www.ajeevan.com/ இந்த வெப் தளத்தோட முகப்பில இருக்கது எல்லாம் எந்த மொழில இருக்குதாம்?

 4. thamizhargallin muda numbikkai kalil ondru kannadasan, irendu vairamuthu, iniyum thodarum soranai ketta thamizhan.

Leave a Reply

%d