‘வாங்க ஜாலியா உண்ணாவிரதம் இருக்கலாம்’- ட்ரைனிங் சென்டர்ஸ்; அன்னா அசாரே அழைக்கிறார்!
அன்னா அசாரே, மோடி எல்லாம் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டார்கள்?
-க. மதிவாணன், திருநெல்வேலி.
வறுமைக்கோட்டிற்கு கீழ் கோடிக்கணக்கான மக்கள் மூன்று வேளை உணவுக்கு வழியில்லாமல் பட்டினியால் சாகும் நாட்டில், உண்ணாவிரதத்தை ஒரு போராட்டமாக கடைப்பிடிப்பது எவ்வளவு மோசடியானது.
சோத்துக்கு வழியில்லாமல் சுருண்டு சாகுற சோமாலியா மக்கள் மத்தியில் இருந்து கொண்டு தினமும் தின்று கொழிக்கிற ஒருவன், ‘உண்ணாவிரத போராட்டம்’ என்று அறிவித்தால் அவனை எவ்வளவு கேவலமாக பார்ப்பார்கள். அதுபோல்தான் இந்தியாவிலும் உண்ணாவிரதத்தை பார்க்க வேண்டும்.
ஆனாலும், காந்தியால் பிரபலபடுத்தப்பட்ட இந்த அநாகரீகம், உண்ணாவிரதத்திற்கு எதிரான கருத்துக் கொண்டவர்களையும், வேறு வழியில்லாமல் உண்ணாவிரத முறைக்கு தள்ளியிருக்கிறது.
அப்படித்தான், தான் கொண்ட கொள்கைக்காக, திலீபன் உண்ணாமல் தன் உயிரை தியாகம் செய்தார்.
சமீபத்தில் மூவரின் தூக்கிற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள், உண்ணாமல் சுருண்டு கிடந்தார்கள்.
அணு உலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த மீனவர்கள், மயக்கமாகி கிடந்தார்கள்.
ஆனாலும், அந்தக் காலத்து காந்தியிலிருந்து, இந்தக் காலத்து அன்னா அசாரே, மோடி வரை, ஒரு வேளைக்கு இரண்டு FULL MEALS சாப்பிட்டா மாதிரி, உற்சாகமா உண்ணாவிரதம் இருக்கிறார்களே எப்படி? சைடுல எதாவது சப்ளை ஆவுதோ என்ன கர்மமோ?
அன்னா அசாரே மாதிரி காந்தியவாதிகள், ‘ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்தாலும் உற்சாகமாக இருப்பது எப்படி?’ ‘காந்தி பாணி உண்ணாவிரதம் – வாங்க ஜாலியா உண்ணாவிரதம் இருக்கலாம்’
இது போன்ற புத்தகங்களையும், உண்ணாவிரத ட்ரைனிங் சென்டர்களையும் ஆரம்பித்தால், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நம்மளும் போய் கத்துக்கணுங்க.
ஏன்னா எதிர்காலத்துல உண்ணாவிரதம் முக்கியமான உபசரிப்பாகவும், பொழுது போக்கு அம்சமாகவும் மாறிடும்.
“ஒரு நாள் நீங்க எங்க வீட்டுக்கு குடும்பத்தோடு வந்து கண்டிப்பா ஒரு வேளை உண்ணாவிரதம் இருக்கனும். மறந்துடாதீ்ங்க, நிச்சயம் வரணும்”
“என்னங்க இந்த லீவுக்கு நீங்க பசங்கல கூட்டிக்கிட்டு சுற்றுலா போறிங்களா? இல்ல உண்ணாவிரதம் இருக்கப் போறிங்களா?”
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் அக்டோபர் மாத இதழ்களுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
அன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ!
‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்
மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை
அன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்
ஓஷோவின் பார்வையில் அம்பேத்கார் நிலை… காந்தியின் சூழ்ச்சிதனம்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி ஓட்டு உரிமை வேண்டும் என்று டாக்டர்.அம்பேத்கார் வாதாடினார். நான் இதை முழுமையாக ஆதரிக்கிறேன் முக்கியகாரணம், இந்த இனம் மக்கள், சுமார் 5000 வருடங்களாக அடக்கி வைக்கப்பட்டவர்கள், எந்த உரிமையும் இல்லாதவர்கள், அவர்களுடைய சுமரியாதை அழிக்கப்பட்டது. அவர்களது ஜனத்தொகை கிட்டத்தட்ட இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் கால்பாகம் அவர்கள் செய்யும் வேலைகள் மிகவும் கீழ்த்தரமானது அதற்காக அவர்களை நாம் போற்ற வேண்டும், மதிக்க வேண்டும், அதற்கு பதிலாக , நாம் என்ன செய்தோம்.? அவர்களுடைய நிழல்கூட நம்மேல் படக்கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக இருந்தோம்.! அப்படி நிழல் பட்டால் நம்மை சுத்தம் செய்துகொள்ள, உடனே குளிக்க வேண்டுமாம்.!! என்ன ஆணவம்!!
அம்பேத்கார் கேட்டது மிகவும் சரியானதுதான் ஏனேனில், அப்பொழுத்தான், பார்லிமெண்டில் உள்ள அங்கத்தினர்களில் கால்பாகம் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரிதிநிதியாக இருப்பார்கள் இல்லாவிட்டால், அவர்கள் தங்களது குரலை எழுப்ப வாய்ப்பே கிடைக்காது. மனு ஏற்படுத்திய மட்டமான ஜாதி வேற்றுமைகள் களைவது எனபது முடியாத காரியம். இந்த நட்டு சரித்திரத்தில் மனு ஒரு சாபக்கேடு, பல லட்சம் மக்களின் சுயமரியாதையை, மனித பண்பை அழித்தவன் இவன்தான், அவர்கள் அனைவரும் ஆடு, மாடு போல் நடத்ப்பட்டார்கள் ஏன் அதை விட மோசமாக நடத்ப்பட்டர்கள்.
அம்பேத்கார் கேட்டது மிகவும் சரி ஆனால் காந்தி, அம்பேத்கார், தன் வேண்டுகோளை கை விடவேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். காந்தி கடைபிடித்த முறை தர்க்க ரீதியாகச் சரியில்லை தன்னுடைய பட்டினிப் போராட்டத்தால் மக்களின் அனுதாபத்தைப் பெற்று, ஒரு காரியத்தில் வெற்றி பெறலாம். அதற்காக அந்த காரியம் சரியாகிவிடாது இதை நன்றாக சிந்தியுங்கள். இது ஒரு சாத்வீக மன மிரட்டல் தான் பய முறுத்தல்தான் அதாவது “நீங்கள் நான் சொல்வதற்க்கு இனங்காவிட்டால் நான் சாப்பிடாமல் இருந்து தற்கொலை செய்து கொள்வேன்”. இது பயமுறுத்தல் இல்லாமல் வேறென்ன..? …..
http://rkguru.blogspot.com/2010/05/blog-post.html
//“ஒரு நாள் நீங்க எங்க வீட்டுக்கு குடும்பத்தோடு வந்து கண்டிப்பா ஒரு வேளை உண்ணாவிரதம் இருக்கனும். மறந்துடாதீ்ங்க, நிச்சயம் வரணும்”//
மிக அருமை
Quite interesting and informative.
சைடுல எதாவது சப்ளை ஆவுதோ என்ன கர்மமோ?
பார்ப்பனியத்தின் முக்கிய கண்டுபிடிப்பான ‘கருமம்’ நீங்களும் நம்புரீங்களா?
Anna Hazare is a fake, a mask of hindu fundamentalists. Lok pal is a draconian law which favoours corporates and NGOs. Why is RSS so keen to support and actively spread the AANA HAZARE movement against courruption? Think of it. Tamil Vazhga. pls contribute and help Tamils.
மூனு வேளையும் நல்லா தின்னுபுட்டு இடையில் கேப்பு
விடுவதற்காகத்தான் உண்ணாவிரதம். அதனால்தான் அவர்கள் கெல்தியா இருக்கமுடியுது. உண்ணனாவிரதம் முடிந்தபின்னும்
நல்ல ஊட்டம். கூடங்குளத்துல உண்ணனாவிரதம் முடிந்த பின்
நல்ல ஊட்டமெல்லாம் கிடைக்கலீங்கோ.