சிவாஜி-கமல்-சேரன்-இளையராஜா-எம்.எஸ்.வி-ராகுல் காந்தி
கமல்ஹாசனை தொடர்ந்து விமர்சிக்கிறீர்களே ஏன்? அவர் பிராமணர் என்பதாலா?
–எஸ். அப்துல்காதர், சேலம்.
யாரையும பிறப்பின் அடிப்படையில் பார்ப்பதுதான் பார்ப்பனியம். ‘ஒருவர் பிறக்கும் போது, அவருடன் சேர்ந்து அவருக்குரிய ஜாதியும் பிறக்கிறது; அதை அவர் விருமபினாலும் மாற்றிக் கொள்ளமுடியாது’ என்பதுதான் இந்து ஜாதிய முறை.
அதுபோன்ற மோசடியையே நான் எப்படி செய்யமுடியும்?
மற்றபடி, கமல்ஹாசனை ஏன் விமர்சிக்கிறேன் என்பதற்கு அந்த விமர்சனங்களிலேயே பதில் இருக்கிறது.
80களில் வந்த சிவாஜி கணேசன் நடித்த சினிமாக்களைப் பற்றி..?
–சி. ராதாகிருஷ்ணன், விருதுநகர்.
70 வதுகளின் இறுதியிலும் 80 களிலும் வந்த தமிழ் சினிமாவில் மிக மோசமான சினிமாக்களை கொடுத்ததில் சிவாஜி கணேசனின் பங்கும் அதிகம். தில்லான மோகனாம்பாள், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்று பல படங்களில் மிக சிறப்பாக நடித்து ‘நடிகர் திலகம்’ என்று பெயர் பெற்ற அவருக்கு எதிராக, அவரே வைத்துக் கொண்ட சூனியங்களுக்கு பலபெயர்கள் உண்டு. அதில் குறிப்பாக ஒன்றுக்கு பெயர் ‘லாரி டிரைவர் ராஜாகண்ணு.’
அந்தப் படத்தின தயாரிப்பாளர், நடிகர் ஏ.வி.எம். ராஜன். தீவிர இந்து மத உணர்வாளராக இருந்த, முருகன் அடிமை ஏ.வி.எம். ராஜனையே, இயேசுவின் அடிமை ஏ.வி.எம். ராஜனாக மதம் மாற வைத்துவிட்டார் சிவாஜி கணேசன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில், அவர் அடைந்த நஷ்டத்தால், ‘இனி சிவாஜி கணேசன் இருக்கிற இந்து மதத்தில் நான் இருக்க மாட்டேன்’ என்பதுபோல் மதம் மாறி கிறிஸ்டியனா போயிட்டாரு ஏ.வி.எம்.ராஜன்.
தமிழ் சினிமாவால் தமிழர்களுக்கு நன்மை என்று எதை குறிப்பிடுவீர்கள்?
–தினகரன், பாண்டிச்சேரி.
தமிழ் சினிமாவால் தமிழர்களுக்கு இதுவரை எந்த நன்மையும் நிகழ்ததில்லை. தீமைதான் நிகழ்ந்திருக்கிறது.
மாறாக, ‘தமிழ் சினிமாவின் சிறப்பு எது?’ என்று கேட்டிருந்தால், என்னுடைய பதில் இப்படி இருந்திருக்கும்:
தமிழ் சினிமாவின் சிறப்பு, பாடல்கள். பாடல்கள் என்றால் அதன் சிறப்புக்குரியவர்கள் பாடலாசிரியர்கள் அல்ல; இசையமைப்பாளர்கள்.
தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து சுப்பராமன், ஜி. ராமநாதன், சுப்பையா நாயுடு, கே.வி. மகாதேவன், ராஜேஸ்வரராவ், சுதர்சனம், ஏ.எம். ராஜா, சி.ராமச்சந்திரா (வஞ்சிக்கோட்டை வாலிபன்) விஸ்வநாதன்-ராமமூர்த்தி, ஆர். கோவர்த்தனம், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா.
பாடாவதி படங்களின் கதைகளைத் தாண்டி, அதன் கதாநாயகர்களின் பிம்பங்களை உடைத்து, இன்னும் உயிர்ப்புடன் இருப்பது இந்த இசைமேதைகளின் பாடல்கள்தான். இன்றைக்கு அந்தப் படங்களின் கதாநாயகர்களாக உயர்ந்து நிற்பவர்கள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்.
தமிழ் சினிமாவின் அறிவாளிகள் என்றால், இவர்களைத்தான் நான் சொல்வேன். இவர்கள் இசையமைத்த பாடல்கள் அப்போது வெளியான காலத்தைவிடவும், இப்போதுதான் அதன் சிறப்புகள், இனிமைகள் கூடுதல் கவனம் பெறுகிறது.
கர்நாடக சங்கீதத்திற்கு இருக்கிற ஒரு ‘கிளாசிக்கல் அந்தஸ்தை’ தகர்த்து, இந்த மேதைகள் இசையமைத்த தமிழ் சினிமா பாடல்கள் அந்த இடத்தை கைப்பற்றும். கைப்பற்றிக் கொண்டிருக்கிறது.
பல இனிமையான பாடல்களை கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டே, எல்லா இசையமைப்பாளர்களும் தந்திருக்கிறார்கள். அதிலிருந்து அடுத்தக் கட்டம் வளர்ந்தது எம்.எஸ். விஸ்வநாதன் காலத்தில்தான்.
வாத்தியக் கருவிகளின் இனிமையை, குறிப்பாக மேற்கத்திய வாத்தியக் கருவிகளான வயலின், கிட்டார், பியானோ மற்றும் வெஸ்டன் கோரஸ் (குரலிசை) இவைகளின் பங்களிப்பை சேர்த்து குழைத்து, தமிழ் சினிமாவின் பாடல்களை கூடுதல் இனிமையாக்கிவர் எம்.எஸ். விஸ்வநாதன். (‘பொன் மகள் வந்தாள்..’, ‘எங்கே… நிம்மதி..’, ‘யார் அந்த நிலவு?..’, பார்த்த ஞாபகம் இல்லையோ?..’, அழகிய தமிழ்மகள் இவள்…’ இதுபோல் நிறைய)
தமிழ் சினிமாவின் இசையை இந்தியத் தரத்திற்கு உயர்த்தியவர் எம்.எஸ். விஸ்வநாதன் என்றால், அதை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர் இசைஞானி இளையராஜா.
நாட்டுப்புற இசை இவரின் ஊற்று என்றாலும், இவரின் உன்னதம் மேற்கத்திய கிளாசிகல். ‘கர்நாடாக இசையோ இவருக்கு சாதாரணம்’ என்பது என்னைப் போன்ற கேள்வி ஞானத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல… கர்நாடக சங்கீதத்தில் கரை கண்டவர்களே ஒத்துக் கொண்ட ஒன்று.
எந்தப் பொறுப்பும் அற்று எடுக்கப்பட்ட ஒரு சாதாரண ரஜினி படத்திற்குக்கூட, இவரின் பின்னணி இசை உலத் தரம் வாய்ந்த சிம்பொனியின் இசைக் கோர்வையை ஒத்து இருக்கும.
இவரின் மெட்டுகளில் உள்ள அசாத்தியமான கற்பனை, அதன் பின்னிணியில் இனிக்கும் வாத்தியக் கருவிகள், பாடல்களில் இடையில் வரும் இடையிசை (அதுஒரு உன்னத உலகம்) இப்படி ஒவ்வொரு பாடலையும், ஒரு தனி இசை ஆல்பம் போல் அவர் உருவாக்கியிருக்கிற பாடல்களைக் கேட்கும் போது, மனித மூளை இவ்வளவு ஆற்றல் உள்ளதா? என்ற வியப்புத்தான் ஏற்படுகிறது.
உலகின் அரிதான இசைஅறிஞர்களில் ஒருவர்தான் இசைஞானி இளையராஜா.
இவை எல்லாவற்றையும் விட அவரின் கூடுதல் சிறப்பாக நான் உணர்வது, இநதிய மற்றும் மேற்கத்திய கிளாசிக்கல் இண்ஸ்டுருமெண்ட்ஸ் என்று சொல்லப்படுகிற வீணை, டிரம்ஸ், வயலின், சித்தார், மிருதங்கம், கிட்டார், தபேலா, பியானோ மற்றும் வெஸ்டன் கோரஸ் (குரலிசை) இவைகளை எந்தத் தரத்தில் உபயோகப்படுத்தினாரோ,
அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அவைகளுக்கு இணையாக;நாட்டுப்புற இசைக் கருவிகளான உடுக்கை, பறை, பம்பை போன்ற தோல் வாத்தியக் கருவிகளையும் மற்றும் கிராமிய மெட்டில் ஹம்மிங், குலவை(குரலிசை) கும்மி (கை தட்டல்) போன்றவைகளையும் பயன்படுத்தி இருக்கிறார். (‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே..’ ‘உச்சிவகுந்தெடுத்து..’ ‘ஆகாயத் தாமரை..அருகில் வந்ததோ..’ ‘வாங்கோண்ணா.. அட வாங்கோண்ணா..’ ‘ஏரியிலே எலந்தமரம்.. தங்கச்சி வைச்ச மரம்..’ இப்படி பல பாடல்கள்.)
அதேப்போல், பாடலின் இடையிசைக்கு பதிலாக நாட்டுப்புறப் பாடல் பாணியில் பாடல்களையும் பயன்படுத்தியிருக்கிறார். (பிள்ளை நிலா.. இரண்டும் வெள்ளை நிலா.. பாடலின் இடையில், ‘ஆவாரங் காட்டுகுள்ளே…’ என்று வருமே, அது போன்ற பாடல்கள்)
கர்நாடக மற்றும் இந்துஸ்தானிக்கு பயன்படுத்தப்படுகிற தபேலா, மிருதங்கம் போன்ற தோல் வாத்தியக் கருவிகள் எழுப்புகிற தாளத்தை, பறை, உடுக்கையிலும் எழுப்பி இவைகளை விட அவைகள் உயர்ந்ததில்லை என்றும் நிரூபித்திருக்கிறார்.
நாட்டுப்புற இசையை, கிராமிய சூழலுக்கு மட்டும் பயன்படுத்தாமல், மற்ற இசைகளைப் போல் பொதுதளத்திலும் பயன்படுத்தியது அவர் சாதனைகளில் மிக முக்கியமான ஒன்று.
ஆக, தமிழ் சினிமாவின் சிறப்பு இசை; இசை உலகின் சிறப்பு இளையராஜா.
சேரனின் பாரதி கண்ணம்மா பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அவருடைய வெற்றிக்கொடிக்கட்டு படமும் சிறந்த படம்தானே?
–விஜய ராஜன், சென்னை.
‘வேலைக்காக வெளிநாடு சென்று சிரமமப்படுவதைவிட, நம்நாட்டிலேயே வேலை செய்வது அல்லது தொழில் செய்வது சிறந்தது; உயர்வு, தாழ்வு பார்க்காமல், தொழில் ரீதியாக எதையும் மட்டமாக நினைக்காமல் எந்த வேலையாக இருந்தாலும் மகிழ்ச்சியோடு செய்யவேண்டும்’ என்பதுதான் அந்த படம் சொல்ல வந்த செய்தி.
ஆனாலும், அந்தப் படத்தின் வடிவேலு – பார்த்திபன் காமெடி காட்சிகள், மலம் அள்ளும் தோழர்களை கேவலப்படுத்தி, கேலி செய்து அவமானப்படுத்தியது.
மையமாக சொல்லவருகிற கருத்துக்கு எதிராக அந்தப் படத்திலேயே, நேர் எதிரான கருத்தை காமெடியாக காட்டுவது; கேலிக்குரியது மட்டுமல்ல, கண்டனத்திற்குரியதும்கூட. அதிலும் குறிப்பாக குறிப்பிட்ட தொழில் செய்பவர்களை இழிவாக சித்தரிப்பது தண்டனைக்குரியது.
ராகுல்காந்தி திடீர் என்று இறங்கி ரோட்டு கடைகளில், கையேந்தி பவனில் எல்லாம் சாப்பிட்டு விட்டு செல்கிறாரே?
–சுலைமான்
ஆமாம், பார்சல் வேற வாங்கிட்டுப்போறாராம்.
அதெல்லாம் நல்லாதான் இருக்கு. சாப்பாட்டதுக்கு காசு குடுக்குறாரா? இல்லை அலாட் ஆறுமுகம் மாதிரி எஸ்கேப் ஆயிடுறாரான்னு தெரியலையே.
ஏன்னா, நமக்கெல்லாம் ஒரு கணக்கு இருக்கு. காங்கிரஸ்காரர்களுக்கு வேற கணக்கு, அதாங்க காந்தி கணக்கு.
ஒருத்தரோட எளிமை, அடுத்தவரோட வறுமைக்கு காரணமாயிடக்கூடாது.
அப்படிஆயிட்டா, ‘அய்யையோ… ராகுல்காந்தி வறாராம் கடைய காலிபண்ணுங்கடா…’ என்று கையேந்திபவன்காரர்கள் அலறி ஓட ஆரம்பிச்சிடுவாங்க.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விகளுக்கு நான் எழுதிய பதில்.
ராகுல்ல பத்தி மட்டமா பேசாதிங்க. அடுத்த பிரதம மயிரு அவருதான்
ராகுல் காந்தி நடிப்பு மக்களிடம் எடுபட வில்லை
மிக நீண்ட இடைவெளீக்குப் பிறகு மீண்டும் தோழர்களை மிகவும் மகிழ்வுடன் சந்திக்கிறேன்..
நண்பர் மதிமாறனின் இசைஞானி குறித்தான இந்தப் பதில் உண்மையிலேயே கண்ணில் மகிழ்ச்சி நீர் ததும்ப வைத்து விட்டது. அந்த இன்ப உணர்வை, மெய்மறந்த உணர்வை இசைஞானியின் இசையோடு ஒன்றி அந்த இசையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மைப் போன்றோர் சிந்தையால் உணர்வர். மிகவும் உன்னதமான, யாரோடும் ஒப்பிடவே முடியாத உயர்ந்த நிலையில் உள்ளவர் இசைஞானி அவர்கள். மதிமாறனின் பதில் மிகவும் அருமையான ஒன்று, முழுமையான பாராட்டுக்கு தகுதி படைத்தது அவரின் இந்த பதில். இராகுல் காந்தியைப் பற்றிய மதிமாறனின் பதில் நெற்றியடி போன்றது. குறிப்பாக \\ஒருத்தரோட எளிமை, அடுத்தவரோட வறுமைக்கு காரணமாயிடக்கூடாது.// இந்தக் கருத்து மிகவும் உணர்ந்து எழுதிய கருத்து, மதிமாறன் சிந்தனியாளர் வரிசையில் விரைவில் இடம் பிடிக்கத் தகுதியானவர்.
இராகுல் காந்தியின் குடிசைக்குள் நுளையும் எளிமை நாடக அரங்கேற்றம், மண்ணைக் கவ்வி உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா ங்கிற கதையா ஆயிடுச்சு இப்ப! கொலைகாரக் காங்கிரசுக் கயவாளிகளுக்கு நாடகம் கூட ஒழுங்கா போடத் தெரியல்ல… வேறென்னத்தச் சொல்ல…!
காசிமேடு மன்னாரு.
isaignanikku nigar yarumillai thozhar.