7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல

7 ஆம் அறிவு படம் பார்த்துவிட்டு அதைப்பற்றி எழுத வேண்டும் என்று தோழர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

தங்கம் ஆசிரியர் ஷேக் மொய்தீன் அக்டோபர் 26 ஆம் தேதி “படம் எனக்கு பிடித்திருக்கிறது. படத்தை பாராட்டி வரும் தங்கம் இதழில் எழுதுவதாக இருக்கிறோம். நீங்கள் அவசியம் பாருங்கள்” என்றார். சரியென்று ஒருவழியாக குடும்பத்தோடு சென்று பார்த்தேன்.

பத்தாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகன் கவின் சொன்னான், “தசாவதாரம் கதையையே எடுத்து இருக்காங்கப்பா. அதுலேயும் ஆரம்பத்துல அந்தக் காலத்து சம்பவம் வரும். இதுலேயும் அது மாதிரிதான். அதுல அமெரிக்காவிலிருந்து, ஒருத்தன் மோசமான கிருமியை தேடி இந்தியாவுக்கு வருவான். இதுல சீனாவுல இருந்து ஒருத்தன் வர்றான்.” என்றான்.

உண்மைதான். தசாவதாரம், வைணவப் பெருமையோடு அய்யங்கார் உயர்வை பேசியது. நேரடியான பார்ப்பனிய கருத்தை அய்யங்கார் Version ஆக காட்டியது. 7 ஆம் அறிவோ, இந்து பார்ப்பனிய சார்பு நிலைக்கு தமிழன் Paint அடித்திருக்கிறது.

தசாவதாரம், 7 ஆம் அறிவு இரண்டும், கதையில் மட்டுமல்ல, பவுத்தம் பற்றிய கருத்துக்களை இருட்டடிப்பு செய்ததிலும் ஒரே மாதிரி இணைந்திருக்கின்றன.

தசாவதாரம், வைணவ கோயில்களை சைவர்கள் இடித்ததாக காட்டியது. ஆனால் வரலாற்றில் பவுத்த கோயில்களை வைணவர்கள் இடித்ததே அதிகம்.

ஸ்ரீ ரங்கநாதனிலிருந்து, காஞ்சிபுரம் அத்தி வரதர், திருமலை கோவிந்தா வரை அந்த சிலைகள் இருக்கும் நிலை, உலகம் முழுக்க புத்தர் சிலைகள் இருக்கும் நிலை.

குறிப்பாக பள்ளிகொண்ட நிலையிருக்கும் புத்தர் சிலை உலகப் புகழ் பெற்றது. அதுதான் ஸ்ரீ ரங்கத்திலிருக்கிறது.

போதிதர்மன், புத்தனின் பாதங்களில் சரணடைந்தான். அவன் ஒரு பவுத்தன்.

போதிதர்மன் தமிழன் என்பதினாலோ சித்த வைத்தியனாகவோ சீனாவிற்கு செல்லவில்லை. புத்தரின் கருத்துக்களை சுமந்து கொண்டுதான் அவன் சீனாவிற்கு சென்றான். போதிதர்மன் தமிழனாக மட்டும் இருந்திருந்தால், காஞ்சிபுரத்தில் அவன் இருந்த தெருவுக்கே தெரிந்திருக்க மாட்டான். பவுத்தனாக இருந்ததினால்தான், அவன் உலகமெங்கும் உள்ள பவுத்த நாடுகளில் கொண்டாடப்பட்டு, இந்து ஜாதி வெறி பவுத்த எதிர்ப்பு மன்னர்களால், தமிழகத்தில், இந்தியாவில் இருட்டடிப்பு செய்யப்பட்டான்.

புத்தரை எந்த பிராந்திய, மொழி உணர்வுகளுக்குள் அடக்க முடியும்? அவருக்கு இந்தியாவில் என்ன மரியாதை இருக்கிறது? பிறகு அவரின் சீடனுக்கு மட்டும் என்ன மரியாதை இருக்கும்? நல்லதும் கெட்டதும் புத்தருக்கு என்ன நேர்ததோ அதுவே அவர் சீடர்களுக்கும் நேர்ந்தது.

போதிதர்மனிடம் பவுத்தத்தை கழித்துவிட்டு பார்த்தால் ஒன்றுமில்லை. ஆக, அவன் தமிழனல்ல. பவுத்தன்.

ஆனால், 7 ஆம் அறிவு பவுத்ததிடமிருந்து அவனை பிரித்து, தமிழனாக அடையாளப்படுத்துகிறது. சிக்கல் அதிலிருந்தே, அதனாலேயே துவங்குகிறது.

தமிழன் என்பதற்கு மொழியைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லுபடியான அடையாளங்கள் இல்லை. அதனால்தான் இந்து அடையாளங்களை எல்லாம் தமிழன் அடையாளமாக காட்ட வேண்டிய மோசடியும் அறியாமையும் இணைந்து, 7 ஆம் அறிவாக அவதாரம் எடுத்திருக்கிறது.

“இன்னைக்கு வந்திருக்கிற கடிகாரம் என்னங்க நேரம் காட்டுது, ஒவ்வொன்னும் ஒவ்வொரு நேரம் காட்டுது. எங்க பாட்டி சூரிய வெளிச்சத்த வைச்சே சரியான டைம் சொல்லுவாங்க. துல்லியமா இருக்கும். அதாங்க நம்ம தமிழனோட அறிவியல்” என்று சுவிஸ்லிருந்து வாங்கிய, கருணை கிழங்கு சைசு கடிகாரத்தை கையில கட்டிக்கொண்டு பேசுகிற ஒரு ……… மாதிரி,

இந்த படத்துலேயும் வாழ்க்கையை நவீன அறிவியல் வளர்ச்சியின் மீது வசதியாக வைத்துக் கொண்டு, வாயலேயே வடை சுடுகிற வசனங்கள் நிறைய இருக்கு.

“நாம இல்ல உண்மையான தமிழர்கள், ஆயிரம், ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி வீரத்தையும நாகரீகத்தையும் இந்த உலகத்துக்கே சொல்லிக்கொடுத்தாங்களே அவுங்கதான் உண்மையான தமிழர்கள்” என்று வசனம் பேசிவிட்டு, பிறகு ‘நவக்கிரகம், ஆரிய பட்டா, பஞ்சாங்கம், அமாவாசை’ என்று தமிழனின் பெருமையாக பேசுகிறது. ஆரிய பட்டா தமிழனா? பெயரிலேயே ஆரிய என்று இருக்கிறது.

பட்டறிவுக்கும், அறிவியலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களை என்னவென்று சொல்வது? நல்லா.. வருது.. சொன்னா அசிங்கமாயிடும்.

நவீன தொடர்பு சாதனங்களின் உச்சமான இணையத்தில், Face Book ல் ஜாதி பெருமை பேசுகிற படித்த ஒருவனைப் போல், கிராபிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, தமிழனின் பெருமையாக இந்துப் பெருமை பேசுகிறது 7 ஆம் அறிவு.

(எப்படியோ சிரமப்பட்டு சினிமாகாரனா ஆயிடுறாங்க. பிறகு கருத்து கந்தசாமியா மாறி கண்டத சொல்லி நம்ம தாலிய அறுக்குறாய்ங்க. இருக்குற முக்கியமான வேலையெல்லாம் உட்டுட்டு இந்த அக்கப்போருக்கு எல்லாம் விமர்சனம் எழுதி தொலைக்க வேண்டியதா இருக்கு.)

நம்ம ஊர்ல சண்டைன்னு வந்துட்டா மண்ண வாரி தூத்துறதுதான் வழக்கம். அதையே கிராபிக்ஸ்ல, அப்படியே புழுதிய கிளப்பி போதிதர்மன் எதிரி மேலே குப்பையை வாரி அடிப்பதுபோல் காட்டியிருக்கிறார்கள். இந்த முறையை சென்னை Corporation க்கு சொல்லிக் கொடுத்தா, சென்னையாவது சுத்தமாகும்.

கொடிய தொற்று நோயிலிருந்து சீன மக்களை காப்பாற்றுவதற்காக போதி தர்மன் சீனாவிற்கு போனாராம்.

ஆனால், அவர் வாழ்ந்த தமிழ்நாட்டில் பெரியம்மை, காலரா போன்ற தொற்று நோய்களால், சித்த வைத்தியத்தில் சிறந்தவர்களான தமிழர்கள் கும்பல் கும்பலாக செத்துக் கொண்டிருந்தபோது, போதிதர்மனாக வந்து தமிழர்களுக்கு  மருத்துவம் பார்த்தது வெள்ளைக்காரன்தான். (அவுனுக்கும் வந்துடுமோ என்ற பயம்தான்) வெள்ளைக்காரன் வருகைக்குப் பிறகுதான் பெரியம்மை போன்ற நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அற்ப ஆயுள் இந்தியர்களுக்கு, ஆயுள் 60 வயதை தாண்டியது.

அதுபோல், சீன மக்களின் வாழ்க்கையை மேன்மை படுத்தியது, போதிதர்மனின் குங்பூ கலையல்ல. மாவோ என்கிற மகத்தான தலைவன் கடைப்பிடித்த மார்க்சியம் என்கிற மந்திரமே.

‘மனிதர்களை கொன்று நரபலி கொடுக்கும் நிலையில் மற்ற நாடுகள் இருந்தபோது, நாம் கலைகள் பல வற்றி்லும் மருத்துவம்…’ என்று பெருமை பேசுகிறது படம்.

போன நூற்றாண்டுவரை பெண்களை உடன்கட்டை என்ற பெயரில் உயிரற்ற கணவனின் உடலோடு, ஒன்றாக வைத்துக் கொளுத்திய இந்து சமூகத்தில் இருந்து கொண்டு எப்படி இந்த ‘பெருமையை’ கூச்சமில்லாமல் எழுத முடிந்தது?

ஹாலிவுட் படங்களை பார்த்து, வில்லனுக்கு கிறிஸ்துவ பெயர்களை வைக்கிற தமிழ் பட இயக்குநர்கள், கதாநாயகனுக்கு மட்டும் இந்து பெயர்தான் வைப்பார்கள். அதுவும் விஞ்ஞானி என்றால், கண்டிப்பாக பார்ப்பனப் பெயர்தான். இந்தப் படத்திலும் சுபா சீனிவாசன்தான் ஆராய்ச்சியாளர். (சித்த வைத்தியரான சீனிவாசன், தன் பொண்ணுக்கு வச்ச பேரப் பாரு.) இதுதான் 7 ஆம் அறிவின் தமிழ் உணர்வு.

இவர்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவோ பராவயில்லை. அவரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் விஞ்ஞானிக்கு ‘முருகன்’ என்ற தமிழ் பெயரை வைத்திருந்தார்.

‘ஊழல் விஞ்ஞானியாக வருகிறவருக்கு பெயர், ரங்கராஜன்தானே. அது பிராமண பெயர்தானே’ என்று சிலர் பதில் சொல்லலாம். அது சரி, தமிழை குரங்கு என்று சொன்னவர் பெயர் நெல்சன். உளுந்தூர்பேட்டை ஊரு. அவரைத்தான் மிக அசிங்கமான வார்த்தையால் சுபா சீனிவாசன் திட்டுவார்.

தமிழுக்கு எதிராக கருத்து சொன்னவர் நெல்சன் என்கிற கிறித்துவ குறியீட்டோடு, படத்தின் கடைசியில் ‘மதம் மாற்றத்தினால் நம் அடையாளத்தை அழித்து விட்டார்கள்’ என்ற அறிவுரையை பொறுத்திப் பார்த்தால் புரியும். ஆனால், போதிதர்மனின் சிறப்பே அவர் புவுத்தனாக மதம் மாறியதுதான்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக உருவானதற்கு அவர் குடும்பத்தின் கிறித்துவ மதமாற்றம் ஒரு முக்கியக் காரணம். கிறித்துவராக இல்லாமல் இருந்திருந்தால் அவர் இசை துறைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் கிறித்துவ மதம் எந்த வகையில் தமிழனின் அடையாளத்தை மறைத்தது.

(பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெயராஜ் அதிக சத்தத்தோடு சிரமப்படுத்திட்டாரு. பாடல்களில் இளைராஜா சாயில் அமைந்த, எம்மா..எம்மா.. காதல் பொன்னம்மா… பாடல், அபூர்வசகோதரர்கள் படத்தில் வந்த ‘உன்ன நினைச்சு பாட்டு படிச்சேன்..தங்கமே..’ என்ற பாடலை நினைவுபடுத்தியது. சூழலும் அந்த படம்போன்றே சர்க்கசில் வேலை செய்பவரின் காதல் தோல்வி. அதற்காகத்தான் அதே எஸ்.பி.பியை பாட வைத்தார்களோ? சீன இசை பாடல், ‘டிவிங்கிள், டிவிங்கள் லிட்டில் ஸ்டார்…’ Rhymes யை நினைவுட்டியது.)

“நம்முடைய வீரமும், பெருமையும் நமக்கு தெரியக்கூடாது என்பதினால், நம்ம ஆண்ட ஒவ்வொருத்தரும் அத திட்டமிட்டு மறைச்சிட்டாங்க” என்று வீரமாக பேசுகிறார் போதிதர்மனோட DNA.

சரி, வீரமா இருந்த நம்மள ஒருத்தன் மட்டுமா, ‘ஒவ்வொருத்துனும்’ எப்படி அடிமையாக்கி ஆண்டான்? அப்போ நம்ம வீரம் அப்படிங்கறது என்ன?

‘மஞ்சள உடம்புல பூசிக்கிறத மருத்துவம்ன்னு சொல்லிக் கொடுங்க..’ சரி. சொல்லிக் கொடுத்துடலாம். ஆனால், பொம்பளதான் மஞ்சள் தேச்சி குளிக்கனும்னு இருக்கே, அதுக்கு என்ன சொல்றது?

இதுபோக, சீன எதிர்ப்பு, இலங்கை தமிழர்களின் துயரங்களை நினைவூட்டுவது போன்ற வசனம் இவைகள் எல்லாம் புலம் பெயர்ந்து வாழுகிற தமிழர்களை குறிவைத்து எழுதப்பட்ட எப் எம் ரைட்ஸ் வசனங்களாகத்தான் இருக்கிறது. இலங்கைக்கு 7 ஆம் அறிவு போகும்போது அந்த வசனங்களை தூக்கிட்டுதான் அனுப்புவாங்க. இல்லன்னா சிங்கள அரசு இந்தப் படம் எடுத்தவங்கள சூ…. லேயே சுடுவான்.

ஆனால், இங்கு இருக்கிற இளியச்சவாய் தமிழன்கிட்ட மட்டும் இடஓதுக்கிட்டுக்கு எதிரான வசனங்களோட திரையிடலாம். காரணம் நம்மதான் தமிழர்களாச்சே.

இதுல பெரிய கொடுமை படத்தோட தயாரிப்பாளர் இடஓதுக்கிட்டுகாகவே கட்சி நடத்துகிற திமுக தலைவரோட பேரன். கஷ்டம். யாருக்கு? யாருக்கோ!

***

பல்லவ மன்னர்களை தமிழர்களாக காட்டியிருக்கிறது 7 ஆம் அறிவு. அவர்கள் தமிழர்களா இல்லையா என்கிற பட்டிமன்றம் நடப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அவர்கள் பவுத்தர்கள் இல்லை.

களப்பிரர்கள் என்கிற சமண மற்றும் பவுத்த மன்னர்களின் காலங்கள் முடிந்த பிறகு, துவங்குகிறது பல்லவர்களின் காலம். களப்பிரர்கள் சமணர்கள் என்பதினாலேயே அவர்களின் காலத்தை இருண்ட காலம் என்று, வரலாற்று ரீதியாக பொய் சொல்லப்பட்டது.

அவர்கள் நிச்சயம் தமிழர்கள் இல்லை என்பது மட்டுமல்ல தமிழின் விரோதிகள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

பல்லவர்களின் பவுத்த வெறுப்பும், சமஸ்கிருத விருப்பும், சைவ, வைணவ சமயங்களுக்கு அவர்கள் விளக்கு பிடித்த காரணத்தினாலும் அவர்களின் ஆட்சி சிறப்பானது, அவர்கள் தமிழர்கள் என்றும் கட்டுக்கதை பரப்பப்பட்டது. பல்லவர் காலத்தில்தான் தேவாரம் எழுதிய திருஞானசம்பந்தனும், திருநாவுக்கரசும் சமண சமயத்தை கொன்று, சாகும் தருவாயில் இருந்த, சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர்.

அதேபோல் வைணவத்திற்கும் பல்லவர்கள் தீவிட்டி பிடித்திருக்கிறார்கள். ஆழ்வார்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்களை ‘மங்களா சாசனம் செய்த திருப்பதிகள்’ என பல்லவர்களால் அழைக்கப்பட்டன. பல கிராமங்கள் கோயில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் தானமாக தரப்பட்டன.

பவுத்தத் துறவிகளை கேலி செய்து மத்த விலாச பிரகசனம் என்ற நாடகத்தை மகேந்திர வர்மன் என்கிற பல்லவ மன்னன் வட மொழியில் எழுதியுள்ளான்.

எவனெல்லாம் சமண, பவுத்த சமயங்களை தீ வைத்துக் கொளுத்தி, சைவ சமயத்திற்கு தீவிட்டி பிடித்தானோ அவனை எல்லாம் வரலாற்று ஆய்வாளர்கள், தேர்ந்த கதாசிரியர்கள் போல், மகா மன்னர்கள் என்றும் பச்சைத் தமிழர்கள் என்றும் கதைகளையே வரலாறாக எழுதினார்கள்.

அப்படித்தான் நரசிம்ம பல்லவன், ராஜராஜ சோழன் போன்றவர்கள், ஆனந்த விகடன் கிருஷ்ணமூர்த்தியாக இருந்து பின் கல்கி அவதாரம் எடுத்த, கல்கி கிருஷ்ண மூர்த்திக்கு மகா மன்னர்களாக தெரிந்தார்கள். அதனால்தான் பொன்னியன் செல்வனில் ராஜராஜ சோழனையும், சிவகாமி சபதத்தில் நரசிம்ம பல்லவனையும் தமிழனின் சிறந்த மன்னர்களாக சித்தரித்தும் பவுத்த மன்னன் புலிகேசியை வில்லனாகவும் கதை எழுதினார்.

அதன் பொருட்டே இன்றுவரை ஆனந்த விகடன் போன்ற இதழ்கள், புலிகேசி மன்னர்களை கோமாளிகளாக சித்தரித்து தொடர்ந்து கார்டூன், ஜோக் என்று நக்கலடிக்கிறார்கள். ஆனந்த விகடனில் பயிற்சி எடுத்த ஒரு இயக்குரும் புலிகேசி மன்னனை கோமாளியாக படம் எடுத்தார்.

கல்கிக்கும், இந்திய வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அவர்களும் இவரைப்போல் நாவல்கள்தான் எழுதினார்கள்.

டாக்டர் அம்பேத்கர் சொல்வார், ‘இந்தியாவிற்கு ஒரு முறையான வராலாறு என்று சொன்னால், அது பவுத்ததிற்கும் பார்ப்பனியத்திற்கும் நடந்த போராட்டம்தான்’ என்பார்.

7 ஆம் அறிவில் குறிப்பிடுகிற காலம் முதலாம் மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் காலம். ஏறக்குறைய திருநாவுக்கரசு சைவ சமயம் பரப்பிய காலம்.

அதற்கு பிறகு இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேஸ்வரவர்மன் இவர்களுக்குப் பிறகு இரண்டாம் நரசிம்மவர்மன் காலம். இவன் காலத்தில்தான் தேவாரம் பாடிய சுந்தரர் இந்த மன்னனின் துணையோடு, சமண சமயத்தை சூறையாடி, சைவ சமயத்தை பரப்பிய காலம். இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட பல்லவன் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டதுதான் காஞ்சி கைலாச நாதர் கோயில்.

அந்தக் கோயில் கல்வெட்டுகளில், அவன் தன் வரலாறை முழுக்க சமஸ்கிருதத்தில் பதித்துள்ளான்.

ஆக, 7 ஆம் அறிவில் காட்டப்படுகிற போதிதருமன், பல்லவ ராஜகுமாரன் அல்ல, அவன் பல்லவர்களால் ஒடுக்கபட்ட பவுத்த போதகர். காஞ்சிபுரத்தில் இருந்த பவுத்த மடத்தில், பயின்றவர். ‘இனி இங்கு பவுத்தத்தை பரப்ப முடியாது’ என்ற காரணத்தால், சீனா சென்றவர். அவரைப் போலவே அவருடன் படித்த போதிருசி என்பவர் ஜப்பான் சென்றார்.

சரி, போதிதர்மனை தமிழன் என்றே வைத்துக் கொள்வோம். இப்போது அந்த பெருமையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இவருக்கு 500 ஆண்டுகளுக்கு  முன் வாழ்ந்த திருவள்ளுவரின் உயரிய கருத்துக்களை பின்பற்றுவதற்கு பதில், வள்ளுவரையே ‘தன் ஜாதிக்காரர்’ என்று எல்லா ஜாதிக்காரனும் உரிமை கொண்டாடுகிறான்.

இப்படி ஜாதி வெறி பிடித்த படித்த தமிழர்களிடம், போதிதர்மனை பரிந்துரைப்பதின் மூலம், இனி போதிதர்மனையும் தங்கள் ஜாதிக்காரராகத்தான் அடையாளப்படுத்திக் கொள்வார்கள். ஏனெனில் தமிழின உணர்வு, ஜாதி உணர்வில்தானே முடிகிறது.

***

இந்தப் படத்தில், நாடு கெட்டுபோவதற்கான மூன்று முக்கிய காரணங்களாக சொல்லபடுவதில் முதல் காரணம் Reservations. இடஓதுக்கீடு.

எனக்கும் கூட அப்படித்தான் தோணுது.

தந்தை பெரியார் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து, கல்வியில் இடஓதுக்கீடும் கிராமப்புற பள்ளிக்கூடமும் கொண்டு வருவதற்கு பாடுபட்டார்.

ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த சமூகத்திலிருந்து படித்த வந்த சிலர், சினிமாகக்காரனாக மாறி இப்படி சமூகத்திற்கும், ஒடுக்கபட்ட மக்களுக்கும் எதிராக வாயில வர்றத எல்லாம் வசனமா எழுதிகிட்டு இருக்காங்க. இதுக்கா இவுங்க படிச்சது?

இதுக்கு இவுங்க பெசமா ஆடு, மாடே மேய்ச்சிருக்கலாம். அதுவே இவர்கள் எடுக்கிற சினிமாவை விட மேன்மையானது. சமூகத்திற்கு பயனுள்ளது.

ஏழாம் அறிவு தமிழர்களும் அவர்களின் 4 ஆம் ‘வர்ண’ உணர்வுகளும்

சிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்

106 thoughts on “7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல

 1. Pingback: Indli.com
 2. எதையாவது பாராட்டுவீர்களா?

 3. நல்ல தகவல், நன்கு புரியும் வகையில் விளக்கமாக பதிவு செய்துள்ளீர். வாழ்த்துகள். இது போன்ற கட்டுரைகள்
  மிகவும் அவசியமானது. உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

 4. உங்கள் பதிவு சிந்திக்க வைக்கிறது, வரலாற்று ஆதாரங்களோடு பதிவு செய்து இருக்குறீர்கள், நல்ல பதிவு வாழ்த்துக்கள்,

 5. ஒருபக்க சார்பான வரலாறு படிச்சு உண்மையான வரலாறு தெரியாததால ஆளாளுக்கு அடிச்சு விட்டுகிட்டு இருந்தாங்க. தெளிவா புரிய வச்சதுக்கு நன்றி.

 6. இப்போ நல்லா புரிஞ்சது. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் என்று எல்லோரும் ஹிந்துத்வா-வாதிகள் தான். இவங்க எல்லோரும் சிவனுக்கும் பெருமாளுக்கும் கோயில் கட்டினார்கள். அப்போ திராவிடர் யாருங்க. சுத்தமா புரியலை. இந்த புலிகேசி-ன்னு சொன்னிங்களே அவரா? யாரு தான் அண்ணே திராவிடரு. அப்ப, எப்ப இந்த ஆரிய படையெடுப்பு நடந்தது? உங்க ஒரு கட்டுரையிலேயே ஆரிய – திராவிட பிரிவுகள் எல்லாத்தையும் உடைச்சு எரிஞ்சுட்டீங்களே. இந்த “திராவிட” என்கிற வார்த்தை கூட தமிழ் வார்த்தை கிடையாது. ஆர்ய என்றால் “உயர்ந்த” என்ற பொருள் தான் தராங்க. அது ஒரு இன மக்களை என்றைக்குமே குறித்து இல்லை. ஏதோ மிஷனரி பரப்பின கட்டு கதையை நம்பி நீங்களும் பெரியார் அய்யாவும் நல்லாவே ஏமாந்துட்டீங்க, எல்லாரையும் ஏமாத்துறீங்க. ஒரே ஒரு திராவிட மன்னரின் பெயர் தான் சொல்லுங்கள் அய்யா.

 7. சைவத்தை பரப்பினார்களோ, வைணவத்தை பரப்பினார்களோ, மிக நல்ல, உயர்ந்த அருட்பாக்களை தமிழில் தந்த பெரியவர்களை நல்லா மட்டம் தட்டி இருக்கிறீர்கள். எங்கிருந்தோ வந்த ஆரியம் (உண்மையில் அல்ல) மிக தவறானது என்று ஆயிரம் முறை கூறுகிறீர்கள், நீங்கள் சொல்லும் பொய்த்து போன மார்க்சியமும், மாவோவிசமும், எந்த நாட்டிலையும் இப்போ விளங்க வில்லையே ! ஏன் ? ஒன்று மட்டும் திண்ணமானது ! ஒரு ஊரில், ஒரு பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் ஒரு நெறி, எல்லா இடத்திலும், எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாகாது.

 8. ஏ.ஆர். ரஹ்மான் அவர்களும், ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களும் சிறந்த திரை இசை அமைப்பாளர்கள் ஆனதற்கு அவர்களது மத மாற்றமே முக்கிய காரணம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் மதமாற்ற குழுக்களின் கைக்கூலி என்று புரிய வைத்ததற்கு மிக்க நன்றி.
  பவுத்தமும், மார்சியமும் முரண்பட்ட கொள்கைகளே. அதனால் தான் சீனா இன்று வரை பவுத்தத்தை அடக்கி வைத்து இருக்கிறது. அதனால் நீங்கள் இரண்டையுமே இணைக்க முயலாமல், உங்களுக்கு உணவு அளிக்கும் மிஷனரி வேலையே நேர்மையாக செய்யுங்கள்.

 9. நம்ம நாட்டில் சாதிகள் என்றுமே சாகாது. பெட்ரோல் காலியா போன பின்பு அவன் அவன் நகரத்தை விட்டு மாட்டு வண்டியில் கிராமத்துக்கு திரும்பி வருவான். அவங்க அவுங்க குல தொழிலே அவுங்க அவுங்க செய்வாங்க. எல்லா சாதியினரும் ஒன்று கூடி ஊரில் தேர் இழுப்பார்கள். அவுங்கவுங்க குலத்தை, அவுங்க சாமி காப்பாத்தும். இங்க்லீஷ் இடம் தெரியாம கானா போகும்.

 10. ஆரியம் பரவி திராவிடத்தை அழித்ததாக கூறுகிறீர்கள். நீங்களோ திராவிடத்தை பரப்பாமல் வேறு நாட்டு கொள்கைகளான மார்க்சியத்தையும், கிறிஸ்தவத்தையும் பரப்புகிறீர்கள்.

 11. புலன்களை கட்டு படுத்த வேண்டும். மனம் போகிற போக்கில் விட்டால் காமத்திலும், பல உடல் சார்ந்த ஆசைகளிலும் வாழ்க்கை தறிகெட்டு போய்விடும். ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் கற்றல் வேண்டும். பற்றற்று முழு முயற்சியுடன் தொழில் புரிய வேண்டும். தொழில் அல்லது செய்கையால் தான் உலகம் உழல்கிறது. – ஹிந்துத்வமும் மிக நல்ல கருத்துகளையே முன் வைக்கிறது.
  ஆசிர்வாதம் சானலை அரை மணி நேரம் பாருகள். பாமர மக்களை எப்படி பைத்தியம் ஆக்குகிறார்கள் என்று.

 12. ”தி டாவின்சி கோட்“ என்ற ஆங்கில படத்திற்கும் 7 ஆம் அறிவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா? ஏன்னா நம்ம ஆளுகளுக்குச் சொந்தமா ஒரு சிந்தனையும் வராதே .. அதனால் தான் கேட்கிறேன்…..

 13. \\\ஹிந்துத்வமும் மிக நல்ல கருத்துகளையே முன் வைக்கிறது\\\\\

  அந்த படத்தை விட மிகச் சிறந்த 2011 ல் போற்றுதலுக்குறிய நகைச்சுவை இதுவே……

 14. padam paarthu vittu en manathil thoondriya anaithumu ungal katturaiyaka !!!

  valthukkakl , thodarungal !

 15. ஐயா ராமரே மஞ்ச தேச்சு குளிக்கிறது மருத்துவம்னு சொல்லிக்குடுங்க…. அத ஏன் பெண்களுக்கு மட்டும் சொல்லித் தர சொல்லுரீங்கனு… எழுத்தாளர் கேட்டுள்ள ஒரு கேள்விக்கு உங்களால் நேர்மையா சொல்ல முடியுமா?…..

 16. சீன மக்களின் வாழ்க்கையை மேன்மை படுத்தியது, போதிதர்மனின் குங்பூ கலையல்ல. மாவோ என்கிற மகத்தான தலைவன் கடைப்பிடித்த மார்க்சியம் என்கிற மந்திரமே.-இதுதான் முடிவான உண்மை.சுயமரியாதையள்ள சுயபுத்தியுள்ள தமிழர்கள் இல்லாமலில்லை .சிறுபாண்மைக்கு சிறுபாண்மையாக
  இருக்கிறார்கள.இதனால்தான் கண்டவனெல்லாம் தமிழன் என்று
  தட்டுகிறான்.

 17. தமிழன் என்பது இனமா மதமா? தமிழனத்தில் பிறந்த ஒருவன் எந்த மதத்தை பின்பற்றினாலும் அவன் தமிழன்தான். தமிழன் மட்டும்தான் தமிழனையே குறை கூறி திறிவான். எதையாவது சொல்ல வேண்டும் என்று அலைந்து கொண்டே இருப்பான். பாராட்ட தெரியாதவன். இவ்வளவு எழுதி உள்ளீர்களே நீங்கள் போதிதர்மன் யார் என்று ஒரு திரைப்படம் எடுத்து காண்பியுங்களேன். நம் தமிழனின் பெருமை கசக்கிறதா? தமிழனாய் வாழாதீர் இறந்து விடுங்கள். மீண்டும் வேறு இனத்தில் பிறந்து கொள்ளுங்கள். இனமானம் கெட்ட தமிழன் இறப்பதே மேல். முதலில் அதை செய்யுங்கள்

 18. //ஐயா ராமரே மஞ்ச தேச்சு குளிக்கிறது மருத்துவம்னு சொல்லிக்குடுங்க…. அத ஏன் பெண்களுக்கு மட்டும் சொல்லித் தர சொல்லுரீங்கனு… எழுத்தாளர் கேட்டுள்ள ஒரு கேள்விக்கு உங்களால் நேர்மையா சொல்ல முடியுமா?…..//

  லெமூரியன்,
  முதலில் நான் ஹிந்துத்வாவிற்கு வக்காலத்து இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன். அடுத்து.. மஞ்சள் தேய்ச்சுக் குளிப்பது என்பது மூன்று பயன்களுக்காக செய்யப்படுவது. 1. சருமப் பாதுகாப்பிற்காக 2. உடல் முடி உதிர்தலுக்காக 3. அழகுக்காக.

  //ஆனால், பொம்பளதான் மஞ்சள் தேச்சி குளிக்கனும்னு இருக்கே, அதுக்கு என்ன சொல்றது?//

  பெண்கள் மட்டும்தான் செய்யணும்னு அவங்க சொன்னாங்கன்னா நீங்க எதுக்கு கேட்கிறீங்க..? ஆண்கள் நீங்களும் தேய்ச்சுக் குளிங்களேன். ஒரு முன்னுதாரணமா இருங்களேன். ஒத்துக்குவீங்களா?

 19. அய்யா,
  உங்களால் முடிந்தால் மற்றவர்களை பாராட்டுங்க.
  இல்லாவிடில் அதை பற்றி பேசாதிங்க. அய்யா நீங்களும் ஒரு தமிழன்.
  இலங்கை தமிழர்களை கொன்று குவித்தார்களே நீங்கள் என்ன செய்தீர்கள்.
  உங்களுக்கு கதை சரியாய் புரியவில்லை என்று நான் எண்ணுகிறேன்.
  மறுபடியும் ஒரு முறை ஏழாம் அறிவு படத்தை பாருங்க.
  தமிழ் மக்களாக நாம் என்ன மறந்திருக்கிறோம் என்று கண்டுபிடியுங்கள்.

 20. hey unaku la vera velaye ellaye.. oru nalla padam vantha ungaluku la pudikatha ahhhhhhhh

 21. அதெப்படின்னு தெரியல ஒருத்தன் செய்யுறத குறை சொல்லுவதுக்கு மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு வந்துடறாங்க! எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் இவர்களுக்கு பொழப்பே இல்லையா? ஒருத்தர் இவர்கிட்ட கேட்டாராம் உடனே இவரும் படம் பார்த்தாராம் அப்புறம் வந்து கன்னாபின்னான்னு எழுதுவாராம்.நண்பா கோபப்படாமல் இருந்தால் மேல படி இல்லையென்றால் இங்கேயே நிறுத்திக்கொள். தமிழன் என்றால் யார் என்றே தெரியாத ஒருத்தர் இப்படி படு கேவலமாக எழுதுகிறார். ஒன்று கேட்கிறேன் உமக்கு எத்தனை தமிழ் வரலாறுகளை படித்த அனுபவமும் தமிழ் மருத்துவத்தின் குணங்களும் தெரியும் என்று இந்த கட்டுரையை எழுதினீர்கள் என்று எனக்கு புரியவில்லை. உனக்குள் உதயமான ஞான அறிவை (!!!) வைத்துக்கொண்டு இப்படி பேசுவதால் பெரிய புத்திசாலி என்று நினைக்காதீர்கள். உமக்கு உண்மைலேயே அக்கறை இருந்தால் முதலில் தமிழ் இலக்கணங்களையும் அதன் உண்மையான வரலாறுகளையும் படித்து முடிந்தால் மேற்கோள் காட்டி பின் எழுதவும். அது உமது விமர்சனத்துக்கும் மரியாதையும், பழமை மறந்த தமிழனுக்கு ஒரு அறிவு சார்ந்த மற்றும் அவனது பாரம்பரியம் தெரிந்த ஜீவனாகவும் மேம்படுத்த உதவும். சரி இவ்வளவு பேசுகிறாயே நீ மட்டும் என்ன பெரிய _______ ஆ என கேட்க தோன்றும் உமக்கு, நீ எழுதுற இந்த மாதிரி மொக்கதனமானத எப்ப நீ போஸ்ட் பன்னுநியோ அப்பவே இப்படி திருப்பி கேக்க எனக்கும் தகுதி வந்துடுச்சு. இன்னொன்றும் நீங்கள் சொல்லலாம் இது ஒருதரப்பு வாதம் என்று எனக்கு தெரிந்த வரையில் இந்த கட்டுரையை படிக்கும் போது அதிலிருந்து எந்த உண்மையும் ஆணித்தனமாக சான்றுகளோடு எடுத்துவைக்கபடவில்லை என்றே உணருகிறேன். நான் ஒன்றும் இந்த படம் தான் தமிழனின் வரலாறை எடுத்துகாட்டுகிறது என்று வரிந்துகட்டவில்லை. இவர்களை போல் ஒருவர் தமிழனை பற்றி தவறாக எடுப்பதற்கு முன்பாகவோ அல்லது அதற்க்கு பின்னரோ உண்மையான விஷயங்களை நீங்கள் ஏன் ஆதாரத்துடன் முன்வைக்க வராமல், குறை சொல்லுவதில் மட்டும் வந்து நிக்கறீங்கன்னு புரியல.
  “நம்ம ஊர்ல சண்டைன்னு வந்துட்டா மண்ண வாரி தூத்துறதுதான் வழக்கம். அதையே கிராபிக்ஸ்ல, அப்படியே புழுதிய கிளப்பி போதிதர்மன் எதிரி மேலே குப்பையை வாரி அடிப்பதுபோல் காட்டியிருக்கிறார்கள். இந்த முறையை சென்னை Corporation க்கு சொல்லிக் கொடுத்தா, சென்னையாவது சுத்தமாகும்.”
  “ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக உருவானதற்கு அவர் குடும்பத்தின் கிறித்துவ மதமாற்றம் ஒரு முக்கியக் காரணம். கிறித்துவராக இல்லாமல் இருந்திருந்தால் அவர் இசை துறைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் கிறித்துவ மதம் எந்த வகையில் தமிழனின் அடையாளத்தை மறைத்தது.” இது போன்ற எடுகொல்களில் இருந்து உமது புலமை மிக தெளிவாக விளங்குகிறது…

 22. மஞ்சள் தேய்த்து குளிக்கும் வழக்கம் பெண்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று.பெண்களுக்கு முகம், கை ,கால்களில் முடி வளர்வதை தடுக்கவே மஞ்சள் தேய்க்க அறிவுறுத்தப்பட்டது. இக்காலத்தில் Veet, Anne French என்று காசுக்கு விற்பதை அக்காலத்தில் வீட்டிலே செய்தார்கள்.
  அதானே……. வெள்ளைக்காரன் நமக்கு காசுக்கு எதையாவது கொடுத்தா தான் கன்னமூடிக்கிட்டு வாங்குவோம்.நம்ம ஊர்ல பாரம்பரியமா இருக்கிறத ச்சீன்னு ஒதுக்குவோம்..

 23. அப்படத்தின் வரலாற்று பகுதி குறித்த விமர்சனத்​தோடு நிறுத்திக் ​கொண்டு விட்டீர்கள். அதன் சமகால அரசிய​லை ​தே​வைக​ளோடு இ​வை எப்படி ​பொருத்தப்படுகிறது என்னும் க​தையின் கரு​வைத் ​தொடவில்​லை. ​தொடருமா கட்டு​ரை?

 24. லேமுரியாரே, மார்க்சிய முகமூடியும், பவுத்த முகமூடியும் அணிந்து, மிஷனரிக்காக அரும்பாடுபடும், மதிமிகுந்தார் பற்றி உண்மை வெளிவர நீங்க ரொம்ப துடிக்கிறீங்க போல இருக்கு. எது நகைச்சுவை, எல்லோரும் முதல் பாவிகள் என்று கூறும் ஞான புத்தகமா.

 25. லெமூரியன் அவர்களே, உங்களுக்கு சரியான விடை திரு. கார்த்தி எழுதி இருக்கிறார். ஒத்து கொள்வீர்களா

 26. எல்லோருக்கும் மறந்து பொய் விட்டது ! அந்த ஆரிய – திராவிட படையெடுப்பு கட்டு கதையை உங்கள் திருக்கரங்களால் தீட்டுங்கள் ! தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளது.

 27. முப்பது ஆண்டுகள் மார்க்சியம் கோலோச்சிய மேற்கு வங்காளத்தின் இழி நிலை தெரியுமா உங்களுக்கு ? ௧) வங்காளத்திலிருந்து சென்னைக்கும், பெங்களூருக்கும், அணைத்து தொடர் வண்டிகளிலும் அன்றாடம் எத்தனை எத்தனை நோயாளிகளை உறவினர்கள் கொண்டு வருகிறார்கள், இங்கு வந்து மருத்துவம் பார்ப்பதற்கு. சத்ய சாய் மருத்துவமனைகளில் பெரும்பாலும், அணைத்து படுக்கைகளும் வங்காளிகளால் நிரம்பி வருகின்றன. ௨) தங்கள் வோட்டு வங்கியை பெருக்குவதற்க்காக பங்களாதேஷில் இருந்து எண்ணற்ற அந்நியர்களை வரவழைத்து, இந்திய வளத்தை சுருட்டுவதற்கு உதவியவர்கள் இவர்கள் தான் ௩) அரசியல் காரணங்களுக்காக பல ஆயிரம் உயிர்களை கொன்று குவித்தவர்கள் இவர்கள் தான், அவர்களுக்கு பிடித்த நிறமும் சிகப்பு தான், அவர்களின் வேட்கையும் ரத்த வேட்கை தான்.

 28. உங்கள் பகை நாடு ஏதாவது உண்டானால் அதை அழிக்க அணு குண்டு தேவை இல்லை ! வேதிய (கெமிகல்) ஆயுதம் தேவை இல்லை ! மாவோயிசத்தையும், மார்க்சியத்தையும் அனுப்பி வைய்யுங்கள்! அதன் பின் அந்த தேசத்துக்கு என்றுமே நல்லது நிகழாது ! இது தான் இன்று சீனா இந்தியாவுக்கு கொடுக்கும் பரிசு ஆகும்.

 29. சினிமா பற்றி எழுதினா எவ்வளவு பேர் கமெண்டு எழுதுறாங்க…

  //இந்தப் படத்தில், நாடு கெட்டுபோவதற்கான மூன்று முக்கிய காரணங்களாக சொல்லபடுவதில் முதல் காரணம் Reservations. இடஓதுக்கீடு.//

  இது உண்மைனா இந்த படத்த டின் கட்டுவதில் எந்த பிரச்சனையுமில்லை. ஆனால் நாமும் குடும்ப வருவாயுடன் சமந்தமான இடஒதுக்கீட்டுக்கு நகர வேண்டும். அதே போல் மூன்று தலைமுறை (99 வருடம்) வரை இடஒதுக்கீட்டில் பங்கெடுக்கலாம் பின்னர் சமந்தபட்ட குடும்பங்கள் இடஒதுக்கீடு வேண்டுமா என முடிவெடுக்க வேண்டும்.

  ***

  //உண்மைதான். தசாவதாரம், வைணவப் பெருமையோடு அய்யங்கார் உயர்வை பேசியது. நேரடியான பார்ப்பனிய கருத்தை அய்யங்கார் Version ஆக காட்டியது. 7 ஆம் அறிவோ, இந்து பார்ப்பனிய சார்பு நிலைக்கு தமிழன் Paint அடித்திருக்கிறது.//

  பத்தாம் வகுப்புப் பையன் இதை சொல்லியிருந்தால், ‘அரசியல்’ பயிற்சியை மெச்சலாம்.

  //மாவோ என்கிற மகத்தான தலைவன் கடைப்பிடித்த மார்க்சியம் என்கிற மந்திரமே.//

  கிலோ என்ன விலை என விசாரிக்கிறாங்க, இப்ப சீனாவுல! விமர்சனத்தில் தடுமாற்றம். உழைக்கும் மக்களால் தான் சீனா உயர்ந்தது மாவோவால் அல்ல. எப்படி போதிதர்மன் தமிழனில்லை பௌத்தன் என எடுத்து இயம்பப்படுகிறதோ அதே போல் மாவோவால் சீனா முன்னேறவில்லை.

 30. பௌத்தம் என்பது மதம்… தமிழ் என்பது மொழி… எனவே இதை இரண்டையும் ஒப்பிட்டு “அவர் தமிழனல்ல… இந்து சாயம் பூசப்பட்டு இருக்கிறது” என சாடுவது, பார்பனீயம் என பேசுவது… என்ன சம்பந்தம்??? ஹிந்துக்களை திட்டுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது? எங்களைப் போன்ற ஹிந்துக்களும் ஓர் மதிக்கத்தக்க இனம்தான்… இந்த ஆசிரியரை யாராவது இனம் சார்ந்து திட்டினால் வெறும் விமர்சனமாக பார்ப்பாரா? ஒரு மதத்தின் ஒரு இனத்தின் உணர்வுகளை விமர்சிக்க இவர் யார்?

 31. நீங்கள் எந்த மொழியில் இந்த மோசமான கருத்துக்களை பதிவு செய்து இருகிரீர்களோ அதுவும் தமிழ் தான்…
  பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்த சிங்களர்களின் மதம் என்ன?
  from wikipedia, in srilanka…
  Buddhism [70%] Hinduism [15%] Christianity [7.5%] Islam [7.5%]
  அப்படியே பழைய வரலாறுக்கு போயிடீங்க…. சம கால அக்கிரமத்துக்கு என்ன சப்பை கட்டு இருக்கிறது உங்களிடம்….

 32. Arumaiyana katurai… Parpaniya karuthugalai tamilanoda peyaril, tamilonda karuthugala sollirukum padam than 7m arivu. Kuripa, reservation, panchgangam etc,,,,

 33. இப்படி கேவலமா சிந்திக்கக்கூடியவனும் அந்நிய மதங்களை புகழக்கூடியவனும் அடிமை வாழ்க்கை வாழக்கூடியவனும் சொந்த நாட்டையே பிறருக்கு காட்டிக்கொடுத்து கூட்டிவைப்பவனும் தமிழனாக மட்டுமே இருப்பான்,அதிலும் இவன் சிங்களவனுடன் கைகோத்த பாண்டியனே!!

 34. Please DO NOT Comment about Tamil Unless you know the full history.. I agree that Bodidharman went to china via Indonasia, japan, vietnam to spread Buddhism.

  He used our(Tamil) siddha(Medicine) and kalari(modern day kung fu) to spread budhism.

  By Reading this article I came to a conclusion that you are a crap(Nuts).

 35. ungaludaiya intha katuraiku nandri. ithil sila seithigalai therinthu kondane. anaal neengal therivithithrukum kutrasatugal anaithaium yetrukolla iyalathu. matham enbathu manithan thanathu vasathirkaga yerpaduthikondathu. matham enbathu manithanin sabam. tamilanana nan ippadathirkaga perumai padugrane athae nerathil sethu kondirukumn tamilukaga varunthugrane………
  ramin marumoligal arputham.

 36. நீ தமிழன் என்று பெருமை படு….. அதை நீ அறியாமல் இருந்ததுக்காக வெட்கபடு…….
  உங்களால் முடிந்தால் மற்றவர்களை பாராட்டுங்க.
  இல்லாவிடில் அதை பற்றி பேசாதிங்க

 37. thamizhana kaatti kudukka ivan oruththane podhum
  nam inaththai nee kaati kuduththaalum un kudumbam nazhamaaga vaazha em vaazhththukkal,kaaranm naam unmaith thamizhargal

 38. அவரை தமிழனாய் மட்டும பாருங்கள் உங்கள் விமர்சனம் தேவைஅட்ராது நிங்கள் ஒரு துவரம் பருப்பு ஒத்துக் கொள்ள முடியூம

 39. படத்துல அறிவியலைத்தான் கொலை பண்ணி இருக்றான் என்று நினைச்சி இருந்தேன் ஆனால் வரலாறை அதைவிட கொடுமையா கொன்னு இருக்கனுங்க

 40. ungal katturai miga thelivagavum, azhamagavum irunthathu, oru cinemakaranaka padam parthuvitu athil irukkum technical kuraigalai mattumay arainthathu manam annal ungal katturai padithapinbu than unarkiren ethanai abathamana padam endru- nadri tozharey

 41. ஐயா,
  நீங்க வாழ்கையில் ரொம்ப அடிபட்டு இருக்கிறிங்க. அதனால் தான் எல்லாத்தையும் அதிமாறாக பார்கிறீர்கள். இப்போ நீங்க பார்க்கிற இந்த பார்வையோடவே நம் முன்னோர்கள் பார்த்திருந்தால் நம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைத்திருக்க முடியாது. இந்த உலகில் எதுவுமே 100 சதவீதம் எதிபார்க்க முடியாது. அது மாதிரிதான் நீங்க சொன்ன “சரி, வீரமா இருந்த நம்மள ஒருத்தன் மட்டுமா, ‘ஒவ்வொருத்துனும்’ எப்படி அடிமையாக்கி ஆண்டான்? அப்போ நம்ம வீரம் அப்படிங்கறது என்ன?”. எல்லோரும் அடங்கி போகவில்லை. அதே சமயத்தில் அனைவரும் வீரர்களாகவும் இல்லை. இந்த படம் வீரமாக வாழ்ந்த ஒரு தமிழ் வீரனை பற்றி கூறுகிறது.

  நீங்கள் சொன்ன மஞ்சள் சம்பதமான வரிகள் //”‘மஞ்சள உடம்புல பூசிக்கிறத மருத்துவம்ன்னு சொல்லிக் கொடுங்க..’ சரி. சொல்லிக் கொடுத்துடலாம். ஆனால், பொம்பளதான் மஞ்சள் தேச்சி குளிக்கனும்னு இருக்கே, அதுக்கு என்ன சொல்றது?”//

  ஐயா மஞ்சள் ஒரு மிக சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த ஓர் அறிய வகை முலிகை. உங்களுடைய உடம்பில் காயம் இருந்தாலும் அந்த இடத்தில் நீங்கள் மஞ்சள் தடவினால் உனடே குணமாகும். இது உங்களுக்கு தெரியுமா….?

  ஐயா நீங்கள் சொன்ன வரி //”தமிழன் என்பதற்கு மொழியைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லுபடியான அடையாளங்கள் இல்லை. அதனால்தான் இந்து அடையாளங்களை எல்லாம் தமிழன் அடையாளமாக காட்ட வேண்டிய மோசடியும் அறியாமையும் இணைந்து, 7 ஆம் அறிவாக அவதாரம் எடுத்திருக்கிறது.”// உண்மை தான். ஆனால் அது உண்மையானால் நீங்கள் தமிழன் என்பதுக்கு என்ன அடையாளம் வைத்திருக்கிறீர்கள்….? இப்போ பெசுங்கையா..?

  இதுற்கு மேல் நீங்கள் ஏழாம் அறிவு படத்தை பற்றி பேசினால் நீங்கள் கண்டிப்பாக ஒரு தமிழனாக இருக்கவே முடியாது.

  சீரிய முறையில் யோசித்து, மக்களுக்கு செய்து போய் சேரவேண்டும் என்ற நோக்கோடு இந்த படத்தை உருவாக்கிய எ.ர. முருகதாஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  ALL THE BEST MURUGADASS SIR.

 42. பல்லவன், சேரன், சோழன் எல்லா வரலாறும் தப்புன்னா ராஜராஜ சோழனுக்கு நீங்க சொம்பு தூக்குனீங்களா? இல்லை சேர மன்னனுக்கு கால் அமுக்கி விட்டீங்களா? பல்லவனுக்கு துயில் வீசுனீங்களா? வைணவர்களுக்கு பட்டை போட்டு விட்டீங்களா? எல்லா காலத்துலையும் வாழ்ந்த ஞானியா நீங்க? ஊருல இருக்குறவன் எல்லாம் கேனையன், நீ மட்டும் புத்திசாலி அதானே நீ சொல்லவர்றது??
  உருப்படியா எதாவது செய். உளறாதே.

 43. Brahmin means who realized god, it is not your so called parpanars, As per baghavad gita chapter 18) brahmin is a qualification by character and not by birth,
  Today no one is brahmin (poonal potavan elaam brahmin illa, as per veda it is easy to live as sudhra but hard to live as brahmin, because if a brahmin sliped in his life he will be treated as sandaalan
  Ramanujar the great vainava leader divorced his wife and punished his students (asked them to touch the feet of dalits) for showing disrespect to dalits, In vedic stories you can find gautama muni identified a prostitutes son as brahmin as he spoke truth, because that is one of the prime quality of a brahmin, today can you show me any on brahmin, what you parpanar are sandalans.
  You cannot criticize atomic physics for nuclear bombs, only the inventors made the mistake. Hinduism is sanathaan dharma originally misued by parpanars
  Mr.Mathi if you believe reservation is the key thing to improve dalits life can you assure me a time frame in which dalits will get completely improved?
  why improved dalits are hating creamy section rule?
  why you are not questioning illegal fund transfer for spreading christianity?
  Why you are not questioning inequality in islam?
  NO SOLUTION from your side you are just a critic

 44. அக்டோபர் மாதம் விக்கிபீடியாவில் போதி தர்மர் பல்லவ அரசனின் மகனாக குறிப்பிட பட்டிருந்தது. இப்போது அவர் பார்பனனாகவும் ,சத்ரியநாக வும் இருந்திருக்கலாம் என்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. நம்புங்கள் பார்பனர்கள் அப்பாவிகள்.
  some accounts state that he was from a Brahmin family in southern India and possibly of royal lineage.[3].However Broughton (1999:2) notes that Bodhidharma’s royal pedigree implies that he was of the Kshatriya warrior caste

 45. அரை குறைத் தமிழனோட குணமே வீரத் தமிழனைக் காட்டிக் கொடுப்பதுதான்

 46. oru puthiya karuthai theriviththal athil nalu kurai irukkum theriya visayam onnu therujjukirom endru ninakkanum sir athai vittuttu suma kurai solla kudathu “hindhuvo bavuthanno tamilanatil piranthal avan tamilan” sathi matham betham innum sollathinga “tamilnatil pirantha anaivarum tamilan than
  ini varra kalathilavathu sathi mathathai vidunga otrumai udan valunga ”

  “””””””” nankal ellam varukalathi uruvakka sinthikkirom neenga innum sathi matham betham enru solrienga unga sathi madha betha unarvai ungaloda puthiunga engala ottrumaiya unmayana tamilana valavidunga””””””””

  Command by
  BBA Rockers “”nangal puthiya oru ulagam seivom”” ottrumaiye anbu
  “jaihind”

 47. தோழர் மதிமாறன் ………..வரலாறு தெரியாத உங்களுக்கு ஏழாம் அறிவு படத்தை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை ….உங்கள எழுத சொன்ன்ன அந்த மொக்கை நண்பன் நல்லவே இருக்க மாட்டன்…..

 48. என்ன இவ்வளவ விவாதம் நடந்துகொண்டு இருக்கின்றது. இதுபோன்ற விவாதம் என்றால் நம்ம திருச்சிக்காரன இல்லாமல் இருப்பது,

 49. Sir, I liked the read. One thing that appealed to me was we tamils are disgraced by everyone in our country..even our own other dravidians, telugu, malayalam and kannada people. thats bcos of the caste system. matha mozhi karanga..endha jaathi ya irundalum mothala mozhiya thaan vekuranga..aana namma alunga matum thaan jaathi ya mothala vechi pakuranga… ‘neenga solra parpanarul..naanum oruthi’…. oru thamizhana parthal..mothala avar pera vehcu, pesura mozhiya vechu..mothala avaru endha jaathi nu kandupidika thaan try panranga..aprama..athuku thaguntharpol pesa arambikarunga.. pechuvazhukala atha sila thadavai neradiyavey kekuranga… indha kodumai namma thamizhanaala matum thaan panna mudiyum…enga ponalum namma aalunga mathavanuku keezha thaan irukanga..yen apdinna..saga thamizhargalai munertha namaku aasai ilai… oru parpanara irundha matra oru parpanar thaan yethi vida parkuranga….matha jaathi karargalai kandukavathey ilai… athuvum veru mathathavara irundha inum mosam… endha mathama irundha enna thamizhan thamizhan thaana….. indha ottrumai thanatha naama malayaleenga kita irundha thaan kathukanum….athikapadiyana muslim, christians irundhalum..anga irukura hindu kal.. andha mozhiya vechu thaan onnum seruvanga..
  namma thaan inum saathi, ooru , ipadi adhichikirom.. naam oru parpaana irundhum ithey yen ezhuthirenaa.. enaku enoda thamizh pidikum… en matham pidikum…enaku kirusthuva mathamum pidikum ..nallathai solra etheyum eduthukarthula thappu ila..

 50. தமிழனாக பேசாமல் கிருஸ்துவனாக பேசி இருக்கிறீர்கள்…. ஜாதி வெறி பிடித்த தமிழ்நாடு என்று கூறிவிட்டு இங்கு எதற்காக வாழ்கிறீர்கள்…. ஜாதி வெறி இல்லாத நாட்டுக்கு போக வேண்டி தான.. உங்க கருத்தை ஆதரித்தவர்கள் அனைவரும் கிருஸ்துவர்கள்.. மத சண்டை மூட்டி விடாதே..

  உன்னுடைய மத வெறியும், அறிவு(?) சார்ந்த கட்டுரைகளையும் உன்னோடு வைத்து கொள்.. thread ல் போடதே..

  சோறு போடும் தமிழ்நாடு கு உண்மையாக நடந்து கொள்.. இல்லை என்றல் இங்கிருந்து ஓடி விடு..

 51. தமிழனாக பேசாமல் கிருஸ்துவனாக பேசி இருக்கிறீர்கள்…. ஜாதி வெறி பிடித்த தமிழ்நாடு என்று கூறிவிட்டு இங்கு எதற்காக வாழ்கிறீர்கள்…. ஜாதி வெறி இல்லாத நாட்டுக்கு போக வேண்டி தான.. உங்க கருத்தை ஆதரித்தவர்கள் அனைவரும் கிருஸ்துவர்கள்.. மத சண்டை மூட்டி விடாதே..

  உன்னுடைய மத வெறியும், அறிவு(?) சார்ந்த கட்டுரைகளையும் உன்னோடு வைத்து கொள்.. thread ல் போடதே..

  சோறு போடும் தமிழ்நாடு கு உண்மையாக நடந்து கொள்.. இல்லை என்றல் இங்கிருந்து ஓடி விடு..

 52. தமிழனாக பேசாமல் கிருஸ்துவனாக பேசி இருக்கிறீர்கள்…. ஜாதி வெறி பிடித்த தமிழ்நாடு என்று கூறிவிட்டு இங்கு எதற்காக வாழ்கிறீர்கள்…. ஜாதி வெறி இல்லாத நாட்டுக்கு போக வேண்டி தான.. உங்க கருத்தை ஆதரித்தவர்கள் அனைவரும் கிருஸ்துவர்கள்.. மத சண்டை மூட்டி விடாதே..

  உன்னுடைய மத வெறியும், அறிவு(?) சார்ந்த கட்டுரைகளையும் உன்னோடு வைத்து கொள்.. thread ல் போடதே..

  சோறு போடும் தமிழ்நாடு கு உண்மையாக நடந்து கொள்.. இல்லை என்றல் இங்கிருந்து ஓடி விடு..

 53. mokka….nalla padam onnu vantha atha epdiyellam amukkanumnu ivanunga yosippanunga!!!!! aduthavangala mothaala parata kathukonga….aparam kutram sollalaam

 54. Udhaystalin Udhay
  Ppl who cannot deal wit 7am arivus enormous success r spreading unnecessary rumors !Even in Telugu version Bodhidharman is from kanchipuram

  from udhay (producer) twitter acc.. pls stop rumours…

 55. ஆயிரக்கணக்கான வருடங்களாக பல மதங்களை சேர்ந்தவர்கள் படையெடுத்தும், அடிமைப்படுத்தியும், ஆசை காட்டி மதமாற்றம் செய்தும், கட்டாய மதமாற்றம் செய்தும் அழியாத ஒப்பில்லாத சனாதன தர்மம், உங்களைப்போன்றவர்களின் காழ்ப்புணர்ச்சி நிறைந்த கட்டுரைகளால் அழிந்திடப்போவதில்லை. உங்கள் மதமாற்றப் பணியை செவ்வனே தொடருங்கள், நல்ல வருமானம் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கேள்விப்பட்டேன்!

 56. எதிலும் எந்த விசயத்திலும் எதிர்மறை ,கருத்துகளைத் தருவது உங்கள் வழ்க்கம். ஒரு அன்பர் குறிப்பிட்டது போல இலங்க்கையில் நம் தமிழர்களைக் கொன்று குவித்தவர்கள் சார்ந்த மதம் என்னவோ?

 57. -resevation – தேவையிஇல்ல தான் 80% மக்கள் வறுமையில் வாடுகிறார்கள் அதனால் அவர்கள் பயன் பெறவில்லை ,அது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன . அனால் ரேசெர்வதியன் போனால் பயன் அடையப்போவது பார்பனர்கள் தான் .

 58. “போதித‌ரும‌ர் விஷ‌ம் வைத்து கொல்ல‌ப‌ட்டார் என்ற‌ ம‌கா பொய்யை யாரும் ந‌ம்ம‌ வேண்டாம்”

 59. ஐயா..

  இத்தனைப் பின்னூட்டங்களுக்கும் நீங்கள் பதில் கொடுத்த மாதிரி தெரியவில்லை, அதன் காரணம் என்ன?
  நிற்க..

  தமிழகத்தின் மன்னர்கள் பவுத்தத்தையும் சமணத்தையும் அழித்தது (என்னவோ நேரில் பார்த்த மாதிரி எழுதியிருக்கிறீர்?) தான் மகாக் கொடுமை போலும், வரலாற்று ஆய்வாளர்கள் அவர்களை நல்லவர்களாய்ச் சித்தரித்தது, எழுதியதெல்லாம் ஆபாசம் என்பது போலும் இத்தனை மனக்குமுறலுடன் பேசுகிற நீர் உங்கள் சம காலத்தில் நடக்கும் எத்தனை மனித உரிமை மீரல்களுக்கு உங்கள் அரசியல், ஜாதி, இனப் பூச்சுக்கள் அல்லாத உண்மை மனிதத்தோடு குரல் கொடுத்திருக்கிறீர்கள்.

  ஆதிக் காலந்தொட்டே ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு அவனுக்கே பிடித்த ஒரு சாயத்தை அடித்துக்கொண்டு அந்த சாயத்துக்காகவே கொள்கை கூறு என்று வாழ்கிறான். அது கூட தவறில்லை. அது அவனுடைய தனி மனித சுதந்திரம். அது அடுத்தவனை துன்புறுத்தாத வரை.

  ஒரு பவுத்த விசுவாசியாக(?) உங்களுக்கு இந்தப்படத்தில் போதிதர்மன் ஒரு தமிழனாக மட்டுமே அடையாளங்காட்டப்பட்டிருப்பது குறையாய்த் தெரிந்திருக்கலாம். மறத்தமிழன் என்ற சாயத்தை ஆசையாய்ப் பூசிக்கொண்டிருக்கும் முருகதாசுக்கு போதிதர்மன் தமிழனாய் மட்டுமே தெரிந்திருக்கிறார் பாவம். அதை நீங்கள் விமர்சிப்பதில் ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?

  பார்ப்பனர் மீதும், தமிழனின் மீதும் இந்துக்களின் மீதும் காழ்ப்புணர்ச்சி இருந்தால் அது உங்களின் தனிப்பட்ட கருத்து. அதை வைத்துக்கொண்டு இது போல சிதைவுக் கருத்துக்களைப் பரப்புவதற்கு பதிலாக, உங்களின் பவுத்த சார்புக் கருத்தை ஒரு பாஸிடிவ் எண்ணத்தை ஊக்குவிக்கும் விதமாகச் சொல்லுங்களேன்?

  இந்தப்படத்தின் மீதான குற்றங்களாய் நீங்கள் சொல்லும் ஒரு கருத்துக்காகிலும் ஆதாரங்காட்டி நீங்கள் சொல்லியிருந்தாலாவது பரவாயில்லை.
  ஆனால் போதிதர்மர் பௌத்தர், அது தொடர்பாகவே அவர் சீனம் சென்றார் என்பது போல சில கருத்துக்கள் உண்மை என்பது ஒத்துக்கொள்ளபடவேண்டிய விஷயமே என்றாலும் உங்களின் இந்தப் பதிவு ஏழாம் அறிவு எனும் படத்திற்கான பின்னூட்டமாகவோ விமர்சனமாகவோ மட்டும் தெரியவில்லை.
  உங்களின் ஒட்டுமொத்த மனக்கசப்பையும் பிழிந்து காயப்போட கிடைத்த கொடி போலாகிவிட்டது.

  தர்க்க ரீதியாக நீங்கள் சொன்ன எந்தக்கருத்தையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் ஒரு விஷயத்தை மட்டும் ஒத்துக்கொண்டேயாக வேண்டும்.

  உலகிலேயே தான் பிறந்த குடும்பத்தின் மீதே சேற்றை வாறியிறைத்துக்கொள்ளும் பணபில் தமிழனுக்குத்தான் முதலிடம் என்பதை நிரூபிக்கவே, எதிலுமே நல்லதைக் காணத் தெரியாமல் கெட்டதை மட்டுமே பார்க்கத் தெரிந்த நாலு பேர் இருக்கத் தான் செய்கிறார்கள்.

 60. “தசாவதாரம், வைணவப் பெருமையோடு அய்யங்கார் உயர்வை பேசியது. நேரடியான பார்ப்பனிய கருத்தை அய்யங்கார் Version ஆக காட்டியது. 7 ஆம் அறிவோ, இந்து பார்ப்பனிய சார்பு நிலைக்கு தமிழன் Paint அடித்திருக்கிறது”… மிக மிக அருமை தோழரே … மேலும் நான் என் சிரிப்பை அடக்கமுடியாமல் இருந்த பதிவு “நம்ம ஊர்ல சண்டைன்னு வந்துட்டா மண்ண வாரி தூத்துறதுதான் வழக்கம். அதையே கிராபிக்ஸ்ல, அப்படியே புழுதிய கிளப்பி போதிதர்மன் எதிரி மேலே குப்பையை வாரி அடிப்பதுபோல் காட்டியிருக்கிறார்கள். “””இந்த முறையை சென்னை Corporation க்கு சொல்லிக் கொடுத்தா, சென்னையாவது சுத்தமாகும்”””.
  ரொம்ப சரியாய் சொன்னிங்க ….மற்றும் தாங்கள் பதிவு செய்த ….சில மன்னர்களின் தெளிவான மற்றும் சரியான குறிப்புக்கள் மிகச் சிறந்ததாக இருந்தது … எல்லாத்தையும் தாங்கள் நன்றாக பதிவு செய்துவிட்டு
  இறுதியாக முடிக்கும் தருவாயில் ” தமிழின உணர்வு, ஜாதி உணர்வில்தானே முடிகிறது” இது தான் என்னைப்போன்ற சாதாரன மக்களின் மனம் வருந்தச்செய்கிறது …முற்றிலும் நேர்மையான அதே சமயம் தெளிவான யதார்த்த உண்மையை தங்களின் விமர்சனம் மூலம் இந்த உலகத்திற்கு நிருபித்து காட்டியுளிர்கள் .. மிக்க நன்றி அய்யா …பாலாஜி. பா

 61. உலகமே கொண்டாட வேண்டிய நிகழ்கால தமிழன் அண்ணன் பிரபாகரனை இவனுங்கலுக்கு கண்ணுக்கு தெரியாதாம் , நம்ப தகுந்தவற்றை ஆவணமாக்காமல் இப்படியும் இருக்குமா என்ற சந்தேக பொருளை சப்பைக்கட்டு கட்டி தமிழ்ன் வீரன் என்பானாம் . காசு பண்ணும் தமிழ்ப்படம் -விளம்பரத்துக்கு ஆதி வீர தமிழன்….அவ்வளவு தான்..பதிவு அருமை அண்ணா…

 62. sir
  Your review about this film was correct. It is in accordance with the correct interpretation of history.your are doing a great service by spreading awareness in respect of history among the Tamils.These film makers intrepreting history according to their beliefs thus suppressing the truth. Prejudiced mind is a hindrance to enlightenment.According to Buddha.”seeing things as it is required” for right understanding of the life and world.Please continue this type of service.Thank you.

 63. Sir
  Your review is correct based on the correct understanding of the history. Please continue this type of useful service to the Tamils.
  Thank you

 64. Please continue your work. Who is Tamilan? Look at their leaders Jay and Karuna. more than 70% of Tamil is behind them, from this you can understand that its very difficult to change them.

  whether you or murugadas can not change them positively or negatively.

 65. hi

  You are wrong .. saying every thing in a wrong way , because of your wrong vision ….

 66. மிகவும் தெள்ளத் தெளிவாக இக்கட்டுரை அமைந்துள்ளது…. இதை படித்தும் இப்படி கண்டமேனிக்கு கருத்துக்களை கூறும் மூட்டாள் பயல்களை 1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது….

 67. இந்த மதி மாறனை சிறந்த விமர்சகர் என நினைத்து இருந்தேன்.இப்பொழுதுதான் தெரிகிறது இவர் மதி கேட்டவர் என்று.இப்படி அவர் தமிழனா இல்லை இவர தமிழனா என் கேள்வி கேட்க்கும் புத்திசாலியே நீ தமிழனா,ஆமாம் என்றால் என்ன ஆதாரம்.உன்னை போன்ற குழப்பவதிகளால் தான் தமிழினம் இன்னும் முன்னேறாமல் உள்ளது.

 68. //
  குறிப்பாக பள்ளிகொண்ட நிலையிருக்கும் புத்தர் சிலை உலகப் புகழ் பெற்றது. அதுதான் ஸ்ரீ ரங்கத்திலிருக்கிறது.
  //

  வட இந்திய சிலைகளில் புத்தர் நின்றுகொண்டும், கால்களை மடித்து அமர்ந்துகொண்டும் இருக்கிறார். புத்தம் தென்னாட்டுக்கு வந்து பின் இலங்கை, தூரக்கிழக்கு நாடுகளுக்கு பரவியது. அரங்கனையும், திருவட்டாறு ஆதிகேசவனையும், ஸ்ரீ பத்மனாபனையும் பார்த்து மனதை பறிகொடுத்த புத்த பிட்சுகள் புத்தரையும் அப்படியே ஒயிலாக படுத்தமேனிக்கு சிலை வடிக்கத் தொடங்கிவிட்டர்கள். இப்படியாகத்தானே புத்தர் படுத்தமேனிக்கு இலங்கை, தூரக்கிழக்கு நாடுகளில் காட்சியளிக்கத் தொடங்கினார். நீர் முதலில் இருந்து பார்க்காமல் நடுவில் கரண்டி கொடுத்து வரலாற்றை தோசையைத் திருப்புகிற மாதிரி திருப்புவதையும், நாமக்கதைவிடுவதையும் பார்த்தா சிரிப்பு சிரிப்பா வர்றது போங்கோ, மதி சார்.

 69. எப்படியோ சிரமப்பட்டு சினிமாகாரனா ஆயிடுறாங்க. பிறகு கருத்து கந்தசாமியா மாறி கண்டத சொல்லி நம்ம தாலிய அறுக்குறாய்ங்க. இருக்குற முக்கியமான வேலையெல்லாம் உட்டுட்டு இந்த அக்கப்போருக்கு எல்லாம் விமர்சனம் எழுதி தொலைக்க வேண்டியதா இருக்கு

  avlo kastappattu nenga yen intha vimarsanam eluthe erukkenga pesama neengalum aadu maadu meikka poi irukkalama……..

 70. இவருக்கு எல்லாம் தெரிந்த மாதிரியும்
  மற்றவர்களுக்கு எதுவுமே தெரியாத மாதிரியும் இக்கட்டுரை உள்ளது.
  எந்த படைப்பையும் மதிப்பீடு செய்யும்போது நிறை குறைகளை
  பார்க்கவேண்டும்.குறை சொல்ல முடிவெடுத்து எழுதியது போல தெரிகிறது

 71. Very good article. We need to first and foremost CRUCIFY everybody who talks about our ancient glory. Only a TRUE Tamilian (DNA Verification suggested) should be allowed to talk about true Tamils history. Most Tamil communities living in Tamil Nadu today are actually immigrants. They dont qualify to be called true Tamilian. Great eye opener article.

 72. Why is this craziness when we are all one blood. Of course it won’t be nice to say that we are living in this cruel world.

 73. ஒரு பதிப்பினை பார்த்து முதல் முறை கோவம் கொண்டிருக்கிறேன்..

  //எந்த படைப்பையும் மதிப்பீடு செய்யும்போது நிறை குறைகளை
  பார்க்கவேண்டும்.குறை சொல்ல முடிவெடுத்து எழுதியது போல தெரிகிறது// நன்றி முத்துகுமார்

  தங்களுடைய எழுத்து திறமை உணர்ச்சியை தூண்டக்கூடியதா இருக்கிறது பாராட்டுக்கள் …

  ஏதோ ஒரு விசயத்தை மட்டும் வைத்துக்கொண்டே உங்களுடைய கருத்தை சொல்ல முற்படும் பாணி தான் உங்களை நிறை குறைகளிலிருந்து ஒன்றை மட்டும் செய்ய தூண்டுகிறது. உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லும் உரிமை எனக்கு இல்லை.. ஆனால் உங்களுடைய இந்த வழி கவலையா இருக்கிறது.. இதற்கு முதலும் உங்கள் ஒரு பதிப்பை பார்த்தேன் அதுவும் ஒரு கவலையான உணர்வை தான் கொடுத்தது.

 74. அன்புள்ள மதிமாறன் வணக்கம்

  நல்லது
  அடுத்தவர்களின் ஜாதி வெறியை அடிக்கடி பேசும் போது நாம் தாழ்ந்தவன் என்ற எண்ணத்தை உங்களுக்கு நீங்களே அடிக்கடி உணர்த்தி கொள்கிறீர்கள்.
  போகட்டும்
  போதி தர்மன் பவுத்த தமிழனாக இருக்க கூடாதா ?
  அல்லது பவுத்தன் தமிழனாக இருக்க கூடாதா?
  தமிழ்நாட்டை ஆண்ட பல மன்னர்கள் சைவ,வைணவ,சமண,பவுத்த மதங்களை ஏற்று(தழுவி) ஆட்சி புரிந்து இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும் அல்லவா?
  அப்படித்தான் சில பல்லவ மன்னர்கள் பவுத்த மத ஆட்சியாளர் களாக இருந்து உள்ளனர் என்பதும் வரலாறு.
  அப்படி ஒரு பல்லவ இளவரசனான ஒரு போதி தர்மனை படமாக்கி தமிழன் என்று கூறி உள்ளார்
  முருகதாஸ் அது அவரின் அதீத தமிழுணர்வு தவறில்லை
  முழுமையான வரலாற்று ஆராய்ச்சி மனப்பான்மை இருந்திருந்தால் அவர் அப்படி சொல்லி இருக்க மாட்டார்.
  அவரை விட உங்களின் வினோத மன உணர்வு கொடுமையாக இருக்கிறது. பவுத்தன் வேறு தமிழன் வேறு?
  நாசமாக போகட்டும் .
  அய்யா ஒரு பிரச்சினை காலம் காலமாக இருக்கிறது
  அதனால் தான் பல்லவர்களை தமிழ் மன்னர்கள் என்று தமிழ் ஆய்வாளர்கள் ஒப்புகொள்வதில்லை
  அது ஏன் என்று தெரியுமா?
  நேரில் பேசுவும் என் அலை பேசி தருகிறேன்.
  படம் முதல் காட்சி செவ்வாயன்று பார்த்து விட்டு செண்பக மூர்த்திக்கு(ஏழாம் அறிவு இணை தயாரிப்பாளர்) போன்செய்து பேசினேன்
  9841280410
  பல்லவர்கள் தமிழர்கள் அல்ல என்று

 75. பல்லவர்கள் தமிழர்கள் அல்ல என்று சொன்னால் அறிவார்த்தமாக இருந்திருக்கும் பவுத்தன் தமிழன் அல்ல என்பது எந்தவகையில் அறிவார்ந்த கூற்று
  பவுத்தர்களின் பேச்சு மொழிதான் என்ன அய்யா?
  அதை பேசினால் மட்டும் தான் பவுத்தனா?

 76. வணக்கம். மேலே எழுதியுள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கான விமர்சனத்தையும், அதன் மீதான எதிர்வினை எழுத்துக்களையும் அதற்கு மீ்ண்டும் விமர்சகர் சொல்லி இருக்கின்ற சில பதிலாக்கங்களையும் படித்தேன். முதலில் தமிழ் சினிமா சினிமாவுக்கான வளச்சியில் நல்ல முன்னேற்றத்தைப் பெற்று வருகிறதா? தற்பொழுது தமிழ் சினிமாவில் கதையாக்கப்பட்டு வரும் கருத்தியல்களும் காட்சியமைப்புகளும் தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு ஆரோகியமானதுதானா? என்பது பற்றிய அடிப்படைக் கேள்விகளை மேலேசொன்ன யாரும் கேட்டதாகவோ அல்லது பகிர்ந்துகொண்டதாகவோ தெரியவில்லை. சினிமா ஒரு அற்புதமான கலையூடகம். அவ்வளவு தான். முதலில் சினிமாவை எடுக்கும் அறிவி ஜீவிகளும் அதனைப் புரிந்துகொள்ள வேண்டும். சினிமாவை தன் சொந்த பணத்தைக் கொடுத்துப் பார்க்கும் ஆர்வளர்களும் அதனை புரிந்துகொள்ள வேண்டும்.

  நல்ல சினிமா எப்பொழுதும் விமர்சனங்களை உண்டுபண்ணும் ஆனால் பார்வையாளர்களுக்குள் மேற்கண்டவாறான சமய மற்றும் சாதியப் பிதற்றல்களை உண்டுபண்ணாது. முதலில் ஏழாம் அறிவு படம் ஒரு கருத்தைத் தமிழ் மக்களுக்குச் சொல்லவந்தப் படம்தானா? இல்லை பணம் சம்பாதிக்க எடுத்த நவீன புதிய வித்தியாசமான இன்னும் என்ன என்ன மாற்று வழிகளும் வார்த்தைகளும் இருக்கிறதோ அவ்வழிகளில் எல்லாம் எடுக்கப்பட்ட முயற்சியா?
  போதிதர்மனை யாருக்கும் தெரியாது என்பதற்கானக் காட்சிப்பதிவுகளும் அந்தப்படத்தில் நிறையவே இருக்கின்றன. அதேபோல் போதி தர்மன் என்பவர் யார் என்பதை நிறுவும் படியான காட்சியமைபுகளும் உரையாடல்களும் அதிகமாகவே இருக்கின்றன. இதிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது இயக்குனர் முருகதாஸ் தான் சிறந்த இயக்குனர் என்ற பெயரையும் தன் படம் நல்ல பரபரப்புக்குள்ளான வசூலையும் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்கான ஏழாம் அறிவு என்ற படத்தை இடுத்திருக்கிறார்.

  நாம் கேட்டுகும் கேள்விகளுக்கு பதில் சொல்வதைவிட அவருக்கு ஏழாம் அறிவு படம் தற்போழுது திரையில் சாதித்துவரும் சூழல் குறி்த்த பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு போய் பேசுவதில் நல்ல விளாம்பரம் கிடைக்கிறது.

  தமிழில் எடுக்கப்படும் ஒருசிலப் படங்கள் சுமாரான சினிமாக்கள். அவ்வளவுதான். சரியான சினிமா இன்னும் எதுவும் தமிழில் வரவில்லை. என்பது தான் உண்மை.
  இங்கிருக்கும் சூழலைப் பதிவு செய்ய விரும்பாத பட்சத்தில் அப்படி ஒரு மிகச்சரியான தமிழ் சினமா கண்டிப்பாக தமிழில் காபி அடித்தாலும் வராது.. வரவேவரதா? எனபது தான் என் ஏக்கம். எதிர்பார்ப்பு.
  நன்றி!
  அன்பு., செய்யாறு.

 77. THAMILAN oru pudhu thagavalai thiraipadam moolam alithaal adhai etrukolla marukkiradhu indha Thamil nenjam..

  Thamilan enbavan yaar….?
  Oru ilakkiyathai padaippavan Thaaltha pattavanaaga thaan irukka venduma..?
  Appodhudhaan paaraatuveergala….?
  Appadi yendral THIRUMAAVALAVAN thaan ilakkiyam padaikka vendum…

  DRAVIDAM, THAMILAN, enbadhellam oru vagayaana unarvu..
  Nam Thandhyum thaayum thamil sollikoduthadhaal naam Thamil karkirom..
  Oru Brahmanan Tharkaappu Kalai solli koduthaal karkka koodaadhaa…?

  Oru nalla thagavalai solliya thiraipadthai Jaadhi, Madham, Mozhi, Inam endra kannadigalil paarpadhu yeno….?

 78. Cinema vasanagalai thandi ithupondra chandrukaludanum idithuraipathu avasiyam.Keep it up.

 79. அன்புள்ள மதிமாறன் வணக்கம்

  எந்த படைப்பையும் மதிப்பீடு செய்யும்போது நிறை குறைகளை
  பார்க்கவேண்டும். உலகிலேயே தான் பிறந்த தமிழனத்தின் மீதே சேற்றை வாறியிறைத்துக்கொள்ளும் பணபில் தமிழனுக்குத்தான் முதலிடம் என்பதை நிரூபிக்க மிகவும் தெள்ளத் தெளிவாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

Leave a Reply

%d