ஏழாம் அறிவு தமிழர்களும் அவர்களின் 4 ஆம் ‘வர்ண’ உணர்வுகளும்

7 ஆம் அறிவு விமர்சனத்தைப் படித்துவிட்டு பல தோழர்கள் சிறப்பாக, சரியாக இருக்கிறது என்றார்கள்.
இந்து மதவாதிகள், ‘நீ கிறிஸ்துவர்களிடம் பணம் வாங்கிவிட்டாய். கெட்டு ஒழிந்து போ’ என்று முனிவர்களுக்குரிய கோபத்தோடு சபித்தார்கள். இன்னும் சிலர், ‘நீ கிறித்துவன்தானே அதான் புத்திய காண்பிச்சிட்ட..’ என்று எனக்கு ஞானஸ்நானம் செய்து வைத்தார்கள்.
Manimaran Karunanidhi என்கிற பெயரில் ஒரு ‘அம்பி’ தொடர்ந்து எனக்கு ஆபாசமாக பல பின்னூட்டங்களை எழுதி வருகிறார், அவர் என்னுடைய இணையப் பக்கத்தை தடை செய்ய world press க்கு புகார் அனுப்பச் சொல்லி வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறார்.
Hi All,
Today i have sent a request to close this mathimaran’s blog to world press.
Mathimaran lost his mind control. His aim to comment one particular community and write good about a community which is feeding for him and for his family.
Those who feel the same to report abuse and want to close this mathimaran’s blog,
Please use following link and report abuse.
http://en.wordpress.com/abuse/
Manimaran Karunanidhi
manimaran.karunanidhi@gmail.com
148.87.19.222 (ip)
இந்து தமிழ்த்தேசிவாதிகளோ, இன்னும் ஒருபடி மேலேபோய் ‘நீ தமிழனை இழிவு படுத்திவிட்டாய். போய் சாவுடா. அடுத்த ஜென்மத்துல வேற இனத்துல போய் பொறந்துக்க. தமிழ்நாட்ல இருக்காதே’ என்று சிங்கள ராஜபக்சே தமிழர்களை ‘இலங்கையில் இருக்காதே’ என்று கொக்கரிப்பதுப் போல் கொதித்தார்கள்.
இன்னும் சிலரோ, ‘உன்னை 7 ஆம் அறிவுக்கு விமர்சனம் எழுத சொன்னவனுங்க நல்லாவே இருக்க மாட்டானுங்க’ என்று என் நண்பர்களை சபித்தார்கள்.
இந்த கோபங்கள் எல்லாம், இயலாமையாகத்தான் வெளிபட்டதே தவிர, ஒரு வார்த்தைக்கூட நான் எழுதியதற்கு பதிலாக வரவில்லை.
‘மாமன் மகள்’ திரைப்படத்தில், சாவித்திரியை ஒருதலையாக காதலிக்கும் சந்திரபாபு, ஒரு அட்டையில் சாவித்திரி படத்தை வரைந்து வாயில் ஒரு ஓட்டை போட்டு, அதன் வழியாக சாத்துக்குடி சுளைகளை ஊட்டிக் கொண்டிருப்பார். சுளைகள் அட்டையின் பின் பக்கமாக கீழே விழுந்து கொண்டிருக்கும்.
சந்திரபாபுவின் காதல் தூதராக வரும் துரைராஜ் அதைப் பார்த்து, அந்த ஓட்டையில் வாயை வைத்து, ‘சாவித்திரி’க்கு ஊட்டும் சாத்துக்குடி சுளைகளை தின்று கொண்டிருப்பார். அதைப் புரிந்த சந்திரபாபு, தன் இன்னொரு கையில் இருக்கும சிகரெட்டால் துரைராஜ் நாக்கை சுட்டுவிடுவார்.
அலறி துடிக்கும் துரைராஜை பார்த்துவுடன் சந்திரபாபு, ‘டேய் அவள பாத்தியாட, என்ன சொன்னா?’ என்பார்.
‘அய்யய்யோ முதலாளி, என் நாக்கை சுட்டுட்டிங்களே’ என்று அலறுவார் துரைராஜ். அதை பொருட்படுத்தாமல் மீண்டும் சந்திரபாபு, ‘டேய் அவள பாத்தியாட?’ என்பார்.
‘முதலாளி எனக்கு நாக்கு எரியுது. என்னால தாங்க முடியலையே. இந்த மாதிரி பண்ணிட்டீங்களே, என்னால ஒரு வார்த்தைக் கூட பேச முடியாது’ என்று தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பார்.
கடுப்பான சந்திரபாபு, ‘அடப்பாவி, தேவையில்லாம இவ்வளவு வார்த்தை பேசுற. ஒரே ஒரு வார்த்தை என் ஆள பாத்தியா, இல்லையானு சொல்லக்கூடாதா?’ என்பார்.
அதுபோல் தேவையில்லாமல், நிறைய புலம்புகிற, சபிக்கிற இந்து மற்றும் இந்து தமிழ்த்தேசியவாதிகள் ஒரே ஒரு வார்தையையாவது நமக்கு பதிலாக தந்திருக்கலாம். மாறாக நான் தமிழர்களை இழிவுபடுத்தியதாக அபாண்டம் சொல்கிறார்கள்.
நானா தமிழர்களை இழிவுபடுத்தினேன்? 7 ஆம் அறிவுதான் தமிழர்களின் பெருமையாக, இந்து பார்ப்பன பெருமைகளைக் காட்டி, சூத்திரத் தன்மையை தமிழன் அடையாளமாக இழிவுபடுத்தியிருக்கிறது.
///விஞ்ஞானி என்றால், கண்டிப்பாக பார்ப்பனப் பெயர்தான். இந்தப் படத்திலும் சுபா சீனிவாசன்தான் ஆராய்ச்சியாளர். (சித்த வைத்தியரான சீனிவாசன், தன் பொண்ணுக்கு வச்ச பேரப் பாரு.) இதுதான் 7 ஆம் அறிவின் தமிழ் உணர்வு.
இவர்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவோ பராவயில்லை. அவரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் விஞ்ஞானிக்கு ‘முருகன்’ என்ற தமிழ் பெயரை வைத்திருந்தார்./// என்று 7 ஆம் அறிவு பற்றி எழுதியபோது குறிப்பிட்டிருந்தேன்.
‘முருகன்’ என்று பெயர் வைபத்தில்கூட எனக்கு உடன்பாடு இல்லை. பெரியாரைப் போல் மதசார்பற்ற தமிழ்ப்பெயர்களை வைப்பதைதான் நான் கடைப்பிடிக்கிறேன். ஆதரிக்கிறேன். ஆனால், தமிழ்ப் பெருமை பேசுகிற 7 ஆம் அறிவு ஒப்பிட்டளவில்கூட ‘முருகன்’ என்கிற தமிழ்ப் பெயரைக்கூட ஏன் தேர்தெடுக்கவில்லை?
சுபஸ்ரீ, காயத்திரி, சுரேஷ், ரமேஷ், பாலாஜி போன்ற பெயர்களை மட்டுமல்ல, கந்தசாமி, சுப்பிரமணியன், சுப்பிரமணியசாமி இதுபோன்ற சமஸ்கிருத பார்ப்பனப் பெயர்களையும் ‘இந்து’ என்பதற்காக ‘இந்து’ தமிழர்கள், விரும்பி வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், ‘முருகன்’ ’ஆறுமுகம்’ ‘ஏழுமலை’ ‘பழனி’ ‘திருப்பதி, என்கிற இந்து தமிழ்ப்பெயர்களை ‘இந்து’ என்பதற்காக பார்ப்பனர்கள் வைப்பதில்லை.
ஆக 7 ஆம் அறிவின் தமிழ் விரோதப் போக்கை, சூத்திர தன்மையை, அடிமைப்புத்தியை சுட்டிக் காட்டி எழுதினேன்.
ஆனால், பாவம் ‘தமிழர்கள்’ சூத்திரர்களாக இருப்பதிலேயே சுகம் காண்கிறார்கள். இந்த அடிமை மனோபாவம்தான், படத்தின் இயக்குநர் தமிழரும் ரசிக தமிழர்களும் Tally ஆகிற இடம்.
***
///பெரியம்மை, காலரா போன்ற தொற்று நோய்களால், சித்த வைத்தியத்தில் சிறந்தவர்களான தமிழர்கள் கும்பல் கும்பலாக செத்துக் கொண்டிருந்தபோது, போதிதர்மனாக வந்து தமிழர்களுக்கு மருத்துவம் பார்த்தது வெள்ளைக்காரன்தான். (அவுனுக்கும் வந்துடுமோ என்ற பயம்தான்) வெள்ளைக்காரன் வருகைக்குப் பிறகுதான் பெரியம்மை போன்ற நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அற்ப ஆயுள் இந்தியர்களுக்கு, ஆயுள் 60 வயதை தாண்டியது./// என்று விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
இதை, தமிழர்களின் சித்த வைத்தியத்திற்கு எதிராக நான் எழுதிவிட்டதாக கோபித்துக் கொண்டார்கள். சித்த வைத்தியத்தின் சிறப்புகளை அறியாதவன் அல்ல நான். ஆனால், தீவிர இறைநம்பிக்கை, ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்ட காரணத்தால், பெரிய அளவில் வளர்ந்து உலகம் முழுக்க மாற்று மருத்துவமாக பரவி இருக்க வேண்டி சித்த வைத்தியம், மூடநம்பிக்கை என்ற முட்டு சந்தில் போய் நின்று விட்டது.
‘இந்த மருந்த சாப்பிடுங்க. சரியாகும். கடவுள் இருக்கான். நம்பிக்கையா இருங்க.’ என்று மருத்துவர் பேசுவது தப்பில்லை.
மாறாக, ‘ஏழு வாரம் தொடர்ந்து, சனீஸ்வரன் கோயிலுக்கு போயிட்டு வாங்க. அங்க போய் இந்த மருத்தை அர்ச்சனை தட்டுல வைச்சி தீவார்த்தன காண்பிச்ச பிறகு சாப்பிடுங்க. கண்டிப்பாக நோய் சரியாகிவிடும்’ என்றால் அது எப்படி வைத்தியமாகும்?
மருத்துவர்கள் இறை நம்பிக்கை, ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் மருத்துவமே அப்படி மாறினால், அது தன் சிறப்புகளை, நம்பகத்தன்மையை இழந்துவிடும் என்பதற்கு சித்த வைத்தியமே சாட்சி.
modern medicine என்று சொல்லப்படுகிற அலோபதி வைத்தியமுறை மருத்துவர்களிடம் மூட நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அந்த மருத்துவத்தில் மூடநம்பிக்கை இல்லை. மாறாக, அது வணிகம் என்ற பெரும் சகதியில் சிக்கியிருக்கிறது.
இப்படித்தான் பெரியம்மையை, நோயாக பார்க்காமல் கடவுளாக பார்த்தார்கள். ‘ஆத்தா எறங்கி இருக்கா, அவள குளுர வைச்ச அவளே போயிடுவா..’ என்று பக்தியாக பேசினார்கள். இதனால்தான் பெரியம்மைக்கு மருத்துவமும் பார்க்கவில்லை. மருந்தும் கண்டுபிடிக்கவில்லை.
வெள்ளைக்காரன் வந்து பெரியம்மையை நோய் என்று கண்டு, தன் மருத்துவத்தால் ஆத்தாவுக்கு ஆப்பு அடிக்கவில்லை என்றால், ஆத்தா ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஆப்படிச்சிட்டு போயிருப்பா.
***
‘இந்து மதத்தின் மீதும், பிராமணர்கள் மீது உனக்கு என்ன அப்படி கோபம்? உன் தனிப்பட்ட கோபத்தை எல்லாம் தமிழிடமும், தமிழர்களிடம் காட்டாதே?’ என்று கோமாளித்தனம் செய்கிறார்கள்.
தனிநபர்களின் மீதான அபிப்ராயத்தை அவர்கள் சார்ந்திருக்கிற, ஜாதி, மதம் இவைகளோடு தொடர்புபடுத்தி பார்ப்பதுதான் ஜாதி அபிமானிகளின் புத்தி. ஒருவரால் உதவி, லாபம கிடைத்தால் அவரை புகழ்வதும், அவரோடே சண்டையானால், ‘அவன் ஜாதி புத்திய காண்பிச்சிட்டான்’ என்பதும், ‘அவனுக்கிட்ட இருக்கிற மத வெறி நம்ம ஆளுங்ககிட்ட இல்ல’ என்பதும்தான் இவர்கள் கடைப்பிடிக்கிற காழ்ப்புணர்ச்சி அரசியல்.
அதுபோலவே நம்மையும் பார்க்கிறார்கள். எனக்கு ஒரே ஒரு பார்ப்பனரோடுகூட தனிப்பட்ட முறையில் எந்த தகராறும் இல்லை. அவ்வளவு ஏன் எனக்கு தனிப்பட்ட முறையில் பார்ப்பனர்கள் யாரும் தீங்கு செய்ததில்லை. மாறாக அந்த சமூகத்தைச் சேர்ந்த என் நண்பர்கள் எனக்கு நன்மைதான் செய்திருக்கிறார்கள்.
என்னுடைய தனிப்பட்ட நட்பிற்காக அல்லது விருப்பத்திற்காக சமூகத்தில் இருக்கிற பார்ப்பனிய ஆதிக்கத்தை ‘இல்லை’ என்று சொல்லமுடியுமா?
7 ஆம் அறிவு ஆங்கிலத்திற்கு எதிராக பாரதியாரைப்போல், தமிழ்ப் பெருமை பேசுகிறது. தமிழ் ஒன்றும் மட்டம் இல்லை என்று கோபப்படுகிறது. சரிதான்.
ஆனால், தமிழை நீச மொழி, இழிவான மொழி என்று சொன்னது யார்?
சீனாக்காரனா? ஜப்பான்காரனா? வெள்ளைக்காரனா? மலையாளியா? கன்னடக்காரனா? தெலுங்கனா?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பாரதியாரைப்போலவே பம்முகிறது 7 ஆம் அறிவு.
தமிழை ‘குரங்குமொழி’ என்று சொன்ன, விஞ்ஞானி நெல்சனை ‘வாயிலேயே போடுவேன்’ என்று கோப்பப்பட்டு நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கு தமிழ் உகந்த மொழிதான் என்று நிறுவுகிறது 7 ஆம் அறிவு. சரிதான். அதை ஒத்துக் கொள்கிறோம்.
நவீன ஆராய்ச்சிக்கே உகந்ததாக இருக்கிற தமிழ், கேவலம் கோயிலில் அர்ச்சனை செய்தவற்கு உகந்த மொழியல்ல எனறு சொல்லுகிற சிவாச்சாரியர்கள், பட்டாச்சாரியர்கள், தீட்சிதர்கள் ‘வாயிலேயே போடுவேன்’ என்று சொல்லுகிற தைரியம் 7 ஆம் அறிவு உட்பட எந்த தமிழ் உணர்வாளனுக்கு வந்திருக்கிறது? இதைத்தான் நான் அடிமைப்புத்தி என்கிறேன்.
‘பல்லவர்கள் ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் இருந்தது. தேவராம், திருவாசகம் போன்றவைகள் புகழ்பெற்றது. ஞானசூனியமான உனக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை’ என்று வெத்து வார்த்தைகளை சுழற்றுகிறார்கள்.
உண்மையில் பல்லவர் ஆட்சியில் தமிழ் உயர்ந்த நிலைக்கு போகவில்லை. சமஸ்கிருதம்தான் உயர்ந்தநிலைக்கு போனது. அதுவே ஆட்சி மொழியாகவும் இருந்தது. தேவாரம், திருவாசகத்திற்குகூட தெருவில் பாடுவதற்கும் கோபுரவாசலில் நின்று பாடுவதற்கும்தான் அனுமதி இருந்ததே தவிர, கர்பகிரகத்திற்குள் பாடுவதற்கு அனுமதி இல்லை. தமிழுக்கு, தமிழனுக்கு அதற்கான அருகதை இல்லை என்று காரணம் சொல்லப்பட்டது. இன்றளவும் அதுதானே நீடிக்கிறது.
சுடு, சொரணை, மானம், ஈனம் உள்ள எவனும் சுருங்கச் சொன்னால், சுயமரியாதை உள்ள எவனும், அவன் தமிழனாக. பக்தனாக இல்லாவிடினும்கூட, தமிழுக்கு நேரும் இந்த அவமானத்தை தட்டிக் கேட்பான். வள்ளலார், பெரியார் போன்றவர்கள் அதைத்தான் செய்தார்கள்.
ஆனால், சுயமரியாதை இல்லாதவன் தொடர்ந்து சூத்திரனாகவே இருக்க விரும்பி, சந்துல நின்னு எட்டிப்பார்த்து, வந்தவரைக்கும் லாபம் என்று சாமிய கும்பிட்டு வருவான்.
‘சிற்ப கலையில் சிறந்து விளங்கிய பல்லவர்கள் தமிழர்கள்தான், அவர்களால் தமிழ்நாடு பெருமை பெற்றது. மகாபலிபுரம் சிற்பங்களால் தமிழ்நாடு உலகஅளவில் புகழ் பெற்றது. உனக்கு கொஞ்சமாவது நன்றி இருக்கா? அவர்களை விமர்சிக்க உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?’ என்ற பாணியிலும் வீசுகிறார்கள்.
ஆமாம். பல்லவர் ஆட்சியில் கற்களுக்கும், சிற்பங்களுக்கும், சிலைகளுக்கும் இருந்த மரியாதை தமிழுக்கும், தமிழுர்களுக்கும் இல்லை.
இப்படியே போனா,
‘பல்லவர்களால்தான் மகாபலிபுரம் புகழ் பெற்றது. அதனால்தான் இன்னைக்கு நாம week end ல மகாபலிபுரத்துல ரூம் போட்டு ஜாலிய இருக்கோம். கொஞ்சம்கூட நன்றி இல்லாம அந்த பல்லவர்களை போய் திட்டுறீயே?’ என்பார்கள் போலும்.
நவம்பர் 9, 2011 அன்று எழுதியது.
தொடர்புடையது:
7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல
//ஆனால், ‘முருகன்’ ’ஆறுமுகம்’ ‘பழனி’ என்கிற இந்து தமிழ்ப்பெயர்களை ‘இந்து’ என்பதற்காக பார்ப்பனர்கள் வைப்பதில்லை//
எ.கா. திருச்செந்தூரில் வாழும் பார்ப்பனர்கள், செந்திவேல், செந்தில், செந்தில்முருகன், கந்தன், சுப்பிரமணியன் என்று வைத்துக்கொள்பவர்கள் ஏராளம். திருத்தணியில் வாழ்பவர்கள், தணிகைவேல், என்று வைத்துக்கொள்வதுண்டு.
வெறும், முருகன் என்று பரவலாக தமிழ்ப்பார்ப்பன்ர்கள் (ஐயர்கள் மட்டும்)சூட்டுவதுண்டு தம் குழந்தைகளுக்கு. பெண்ணுக்கு வள்ளி என்ற பெயரும் உண்டு. ஆனால் வள்ளி ஒரு திராவிடபெண் என்றுதான் கந்தபுராணம் சொல்லும். எனினும் அப்பெயரை அவர்கள் தவிர்ப்பதில்லை.
ஐயங்கார்கள் ஐயர்களைக்காட்டிலும் தூயதமிழில் பெயர்சூட்டிக் கொள்வதுண்டு. அப்பெயர்கள் பார்ப்ப்னரல்லாதோர் கூட சூட்டிக்கொள்வதில்லை. ஐயங்கார் பெயர்கள் வருமாறு.
திருமலை, ஆராவமுதன், அலர்மேல் வல்லி, (அல்லது வெறும் வல்லி), மணாளன் அரங்கன, திருவாழ் மார்பன்
இப்படி நிறைய தூய தமிழ்ப் பெயர்கள். இப்பெயர்களில் இவர்கள் வைக்கக் காரணம் இவை ஆழ்வார் இப்பெயர்களைச் சூட்டித் திருமாலையும் திருமகளையும் மங்களாசாசனம் (பாடிப் போற்றுதல், வணங்குதல்) செய்தனர். தமிழைப் போற்றுதல் ஐயங்கார்களுக்கு ஒரு கடப்பாடு என அவர்கள் மதம் சொல்கிறது. உங்களுக்கு ஆரேனும் அக்கட்டளையிட்டிருக்கின்றனரா ? )))
மதிமாறன், நன்றாக எழுதுகிறீர்கள். ஆங்காங்கே சில கருத்துப் பிழைகளைத் தவிர்த்தல் உங்கள் பதிவு மேலும் ஒளிரும்..
நல்ல விளக்கம்.
இப் பெயர் உள்ள பார்ப்பனர்களை காவ்யாக்காரர் மட்டும் அறிவார் போலும்.
//உங்களுக்கு ஆரேனும் அக்கட்டளையிட்டிருக்கின்றனரா ?//
காவ்யா உங்களுக்கு எந்த ஐங்கார் கட்டையிட்டார்.
மற்றவைகளுக்கு பார்ப்பனர்களின் தமிழ் எதிர்ப்புப் போக்கிற்கு உரிய விளக்கம் சொல்லாமல், நீங்கள் பார்ப்பனர் வேட்டிக்கு பின் ஒழிந்து கொண்டிர்கள்.
good ……….thank you……..!
//பல்லவர்களால்தான் மகாபலிபுரம் புகழ் பெற்றது. அதனால்தான் இன்னைக்கு நாம week end ல மகாபலிபுரத்துல ரூம் போட்டு ஜாலிய இருக்கோம். கொஞ்சம்கூட நன்றி இல்லாம அந்த பல்லவர்களை போய் திட்டுறீயே?’ என்பார்கள் போலும்// வேணாம் தலைவா! உணர்ச்சி உங்களோட கண்ண மறைக்குது! பதில் சொல்லுங்க! ஆனால் இந்த மாதிரி நம்ம மேலேயே நீங்க மண்ண அள்ளி போடாதீங்க! மகாபளிபுரம்னாலே லாட்ஜ்தானா? கல்லிலே கலைவண்ணம் கண்டான் என்கிற வரிகள் உங்களுக்கு காமெடியாக தெரியலாம். ஆனால் ரசிப்புத் தன்மை மிக்க உங்களைப் போன்ற nanbargal இந்த மாதிரி வார்த்தைகள் உபயோகிப்பது வருத்தமாக இருக்கிறது.
well done ! MARAN you have sword in your pen tip .
யோக்கியன்கள் வாரான்கள் சொம்பை எடுத்து உள்ளே வை என்பது மாதிரியில்ல இருக்கு யோக்கியர்கள் சொல்லுவது!
///ஆனால், சுயமரியாதை இல்லாதவன் தொடர்ந்து சூத்திரனாகவே இருக்க விரும்பி, சந்துல நின்னு எட்டிப்பார்த்து, வந்தவரைக்கும் லாபம் என்று சாமிய கும்பிட்டு வருவான்.///
தமிழை நீச மொழி, இழிவான மொழி என்று சொன்னது யார்?
சீனாக்காரனா? ஜப்பான்காரனா? வெள்ளைக்காரனா? மலையாளியா? கன்னடக்காரனா?
தமிழை ‘குரங்குமொழி’ என்று சொன்ன, விஞ்ஞானி நெல்சனை ‘வாயிலேயே போடுவேன்’ என்று கோப்பப்பட்டு நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கு தமிழ் உகந்த மொழிதான் என்று நிறுவுகிறது 7 ஆம் அறிவு. சரிதான். அதை ஒத்துக் கொள்கிறோம்.
நவீன ஆராய்ச்சிக்கே உகந்ததாக இருக்கிற தமிழ், கேவலம் கோயிலில் அர்ச்சனை செய்தவற்கு உகந்த மொழியல்ல எனறு சொல்லுகிற சிவாச்சாரியர்கள், பட்டாச்சாரியர்கள், தீட்சிதர்கள் ‘வாயிலேயே போடுவேன்’ என்று சொல்லுகிற தைரியம் 7 ஆம் அறிவு உட்பட எந்த தமிழ் உணர்வாளனுக்கு வந்திருக்கிறது? இதைத்தான் நான் அடிமைப்புத்தி என்கிறேன்.//
7ம் அறிவு படத்தை ஆதரிக்கும் கூட்டம் இதற்கு பதில் சொல்லிவிட்டு ஆதரிக்கட்டும். சரியான குட்டு
வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
.
.
*****
ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர்……. விடியோ விளக்கம். ****
.
.
manimaaranudaiya katturaikal sariyaanavaiye
nethi adi
//நவீன ஆராய்ச்சிக்கே உகந்ததாக இருக்கிற தமிழ், கேவலம் கோயிலில் அர்ச்சனை செய்தவற்கு உகந்த மொழியல்ல எனறு சொல்லுகிற சிவாச்சாரியர்கள், பட்டாச்சாரியர்கள், தீட்சிதர்கள் ‘வாயிலேயே போடுவேன்’ என்று சொல்லுகிற தைரியம் 7 ஆம் அறிவு உட்பட எந்த தமிழ் உணர்வாளனுக்கு வந்திருக்கிறது?//
செருப்படி தோழர். வீண் பெருமை தான் இருக்கிறதே ஒழிய உண்மையான மானமோ , சுயமரியாதையோ இந்த பக்கிகளுக்கு கிடையாது.
sappai mettarukku ivvalavu adithadiyaaa….?
karumam karumam. Poi velaiyai paarunga saar
suresh, entha mettara pesalana namakku velaye kidachurukkathu. mathimaran ungal pani sirappanathu, thodarattum, vaalthukkal.
கட்டுரையாளர் அவர்களே, இந்த பக்கத்தில் உள்ள பின்னூட்டங்களை படித்து பார்க்கவும்..
http://www.facebook.com/photo.php?fbid=2356839122286&set=t.1289487960&type=3&theater
கட்டுரையாளர் அவர்களே,
//தூணிலும் துரும்பிலும் இருக்கும் ஸ்ரீ ரங்கநாதனுள் இருப்பதோ, புத்தர்; நாமத்தைப்போட்டு ரங்கநாதனாக ஏமாற்றினார்கள். அதுவே பின்னாளில் ‘நாமம்’ என்பதே ஏமாற்றுவதற்கான குறியீடாக மாறியது. ‘என்ன நாமத்த போட்டுட்டானா..// கூறியிருக்கிறீர்கள்..
புத்தர் பிறப்பதற்கு முன்னரே திருவரங்கம் கோவிலில் ரங்கநாதன் இருந்ததாக குறிப்புகள் உள்ளன.
அகநானூறு 137: திருவரங்கம் பங்குனித் திருநாள் விழா! அதற்குக் கூடும் மக்கள் கூட்டம்!
தலைவன் பிரிவானோ என்று கருதி வேறுபட்ட தலைவிக்கு, தோழி சொல்லியது
திணை: பாலைத் திணை
பாடியவர்: உறையூர் முதுகூத்தனார்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில் 10
தீஇல் அடுப்பின் அரங்கம் போலப்,
பெரும்பாழ் கொண்டன்று, நுதலே, தோளும்,
அங்கு அரங்க இறைவனின் பங்குனித் திருநாளில் பெருத்த கூட்டம் கூடும்! ஆனால் அதற்கு அடுத்த நாள், கூட்டம் குறைந்து வெறிச்சோடி இருக்கும்!
அந்தச் சோலைகளில், முந்தைய நாள், மக்கள் தாங்கள் உண்ணுவதற்காகச் செய்த அடுப்பில், தீயே இருக்காது! வெறும் அடுப்பு தான் இருக்கும்! அது போல நன்றாக விழாக் கோலம் போல் இருந்த உன் நெற்றி, இப்படிப் பொலிவு இழந்து போனதே!
(நன்றி: மாதவிப்பந்தல்)
http://madhavipanthal.blogspot.com/2010/08/aganaanooru.html
என்று அந்த பாடல் சொல்கிறது.இர்ன்றும் திருவரங்கத்தில் பங்குனி திருவிழா கொண்டாடப்படுகிறது.
அகநானூற்றில் உள்ள இந்த பாடல் சங்க காலத்தில் இயற்றப்பட்டது.அதாவது கிருத்து பிறப்பதற்கு முன்.அவ்வாறு இருக்க கிருத்து பிறப்பதற்கு பின் பிறந்த புத்தருக்கு கோவில்/விகாரம் எவ்வாறு ஸ்ரீரங்கத்தில் இருந்திருக்க முடியும்?
//நவீன ஆராய்ச்சிக்கே உகந்ததாக இருக்கிற தமிழ், கேவலம் கோயிலில் அர்ச்சனை செய்தவற்கு உகந்த மொழியல்ல எனறு சொல்லுகிற சிவாச்சாரியர்கள், பட்டாச்சாரியர்கள், தீட்சிதர்கள் ‘வாயிலேயே போடுவேன்’ என்று சொல்லுகிற தைரியம் 7 ஆம் அறிவு உட்பட எந்த தமிழ் உணர்வாளனுக்கு வந்திருக்கிறது? இதைத்தான் நான் அடிமைப்புத்தி என்கிறேன்.//
நண்பரே!! சிவன் கோவில்களில் தேவாரம், திருவாசகம் இன்னும் பாடப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில் எழுப்பிய இராஜ இராஜ சோழன் பிறந்த தினமான ஐப்பசி சதயம் அன்று பெருவுடையாருக்கு மூன்று நாட்கள் அபிஷேகம் செய்வித்து தேவாரம், திருவாசகம் அன்று முழுதும் பாடப்படுகிறது.
தருமபுரம் சுவாமிநாதன் பாடிய திருமுறைகள் எங்கள் ஊர் சிவன் கோவில்களில் ஒலிக்கிறது. சிவபுராணம், கோளறு திருப்பதிகம், சிவவாக்கியர் பாடல்கள் எல்லா பிரதோஷ தினங்களிலும் பாடப்படுகின்றன.
மார்கழி ஆருத்ரா தரிசனத்தின் போது திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி எல்லா சிவாலயங்களிலும் பாடப்படுகின்றன..
கந்தர் சஷ்டி திருவிழாவின் போதும் கார்த்திகை நட்சரத்தின் போதும் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் பாடப்படுகிறது..
தமிழ் வேதம் என்று போற்றப்படும் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் தான் திருமால் கோவில்களில் முதலில் படிக்கப்படுகிறது.
“ஒவ்வொரு புறப்பாட்டிலும் இறைவனுக்கும் முன்னால், தமிழ் தான் முழங்கிச் செல்கிறது! தமிழுக்கும் பின்னால் இறைவன்! அவனுக்கும் பின்னால் தான் வேதங்கள்!
“பச்சைத் தமிழின் பின்னால் செல்லும் பசுங் கொண்டலே”-ன்னு தமிழ்க் கடவுள் திருமாலைப் பாடுகிறார் “குமர”குருபரர்!
“வண்டமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்”….
தமிழை ஓதிச் செல்பவர் பின்னால் திரிகின்றவனாம் திருமால்! ஆகா, இதுவல்லவோ தமிழ்ப் பற்று! – நன்றி: மாதவிப்பந்தல்
http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_17.html
மார்கழி மாதத்தில் திருப்பாவையும், வாரணமாயிரமும் திருமாலை துதித்து பாடப்படுகின்றன..
ஏழாம் அறிவு படத்தில், தமிழுக்கு வக்காலத்து வாங்குவதாய் வரும் கட்சியில், நாட்டின் இன்றைய அவல நிலைக்கு வறுமை,ஊழல், போன்ற காரணங்களை ஆங்கிலத்தில் சொல்லி அதன் இடையே இடஒதுகிடும் அவலநிலைக்கு காரணம் என்று சொல்வாள் பாப்பாத்தி. இடஒதுக்கிடு முறையில் இந்தியாவுக்கே முன் மாதிரியாக திகழ்ந்த தமிழ்நாட்டிலேயே, அதற்கு எதிரான பரப்புரையை நேரடியான வசனத்தில் சொன்னது திராவிட அரசியலுக்கு எதிரானது இது தெரியாத பேரன் திராவிட பேரன் தயாரிப்பாளர்.
உங்களுடையது அறிவார்ந்த விமர்சனம். பாராட்டுக்கள்!
கட்டுரையாளர் அவர்களே,
//தூணிலும் துரும்பிலும் இருக்கும் ஸ்ரீ ரங்கநாதனுள் இருப்பதோ, புத்தர்; நாமத்தைப்போட்டு ரங்கநாதனாக ஏமாற்றினார்கள்//
என்று சொல்கிறீர்கள்.//
ரங்கநாதன் ஸ்ரீரங்கத்தில் இருப்பதோ பாம்பணை மேல். புத்தர் பாம்பணை மேல் உறங்கியது போல் சிலைகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
சில சந்தேகங்கள்..
புத்தர் சிலையை பெருமாளாக மாற்றுவதற்காக பாம்பணை பிற்பாடு எவ்வாறு வைத்திருக்க முடியும்?
பாம்பணை தனியாக செய்து புத்தர் சிலையில் பொருத்தியதாக வைத்துக்கொண்டால் சிலையை விட அகலமான பாம்பணையை
எவ்வாறு கருவறைக்குள் கொண்டு சென்று பொருத்தியிருக்க முடியும்?
விளக்கம் தேவை..
http://www.flickr.com/photos/39822138@N02/3662569593/
வெ. மதிமாறன்,
உங்களுடைய பதிவுகள் அருமை.
பகுத்தறிவு பகுத்தறிவு என்று கடவுள் இல்லை என்பது உங்கள் கருத்து. அதனால் பிறிதார் பகுத்தறிவு அற்றவர்கள் என்று இல்லை. இனிப்பை சுவையாதவன் இனிப்பை மறுப்பது போலாம். அவர்களுக்கு இனிப்பை விளங்க வைக்கவும் முடியாது. பல்லவன் காலத்தில் தமிழ் அழிக்கப்பட்டது என நீங்கள் சொல்லுவது சரியே. எனென்றால் பல்லவன் தமிழ் இனவழியைச் சார்ந்தவன் அல்லன். இது போல் தான் சோழனும் தமிழ் இனத்தைச் சார்ந்தவன் அல்லன். இதனால் தான் இவர்கள் ஆட்சியில் தமிழ் சங்கங்கள் அமைக்கப் படவில்லை. இவர்கள் காலத்தில் தான் தமிழ் பண்கள் தவிர்க்கப்பட்டு கீர்த்தனைகள் ஆரிய மொழியிலும் தெலுங்கிலும் பாடப்பட்டன, ஆதரிக்கப் பட்டன, இது ஒரு வகையில் தமிழ் மொழியின் கன்னித் தன்மையை பாதித்தது.
கார்த்தி,
அர்ச்சனை, அபிஷேகம், தரிசனம் இவை வட மொழி தானே, ஏன் தமிழைப் பயன்படுத்தக் கூடாது. தேவாரம் திருவாசகம் போன்றவற்றை பாட்டாகப் பாடிவிட்டு வழிபாட்டோடு இணையும் அர்ச்சனைக்கு மட்டும் ஏன் பார்ப்பன மொழி? தமிழில் வழிபாடு செய்தால் கடவுள் கேளாரோ? தேவாரத்தையும் திருவாசகத்தையும் கோவிலுக்குள் பல நூற்றாண்டுகள் பூட்டி வைத்தது ஏன்?
தோழன் கண்டன்,
இடஒதுக்கீடு முறையால் சீரழிவு மட்டுமே. பொருளாதாரத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு முறை அமைந்தாலாவது அதைச் சற்று ஞாயப் படுத்தலாம். அனைவருக்கும் ஒருபோன்ற கல்வி அளித்து அனைவரையும் திறமையுள்ளவர்களாக மாற்றாது. திறமை அற்றவர்களுக்கும் உயர்பதவி தரும் இட ஒதுக்கீடு அரசின் இயலாமையே.
நம் மக்கள் குறுகிய வட்டத்தில் சிந்திப்பவர்கள் உண்ணா விரதம் இருந்தாலே அடுத்த காந்தி(?) என்று சொல்லுவார்கள்.
ம ஜாண் ரூபட்,
//பல்லவன் தமிழ் இனவழியைச் சார்ந்தவன் அல்லன். இது போல் தான் சோழனும் தமிழ் இனத்தைச் சார்ந்தவன் அல்லன்.//
ஆரியமும் திராவிடமும் ஒன்றே.
ஆரியர்களும், திராவிடர்களும் ஒரே இனத்தவர் என்று மரபு பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
பார்க்க: http://indianrealist.wordpress.com/2009/09/27/aryan-dravidian-racist-theory-trashed-again-by-genetic-evidence/
ஆரியப் படையெடுப்பு சுத்தப் பொய்!!
ஆதாரம் 1:
சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட நகர அமைப்பு யாகசாலைகள், ஆரியர்களின் நூலான Shulbasutras-ன் படி கட்டப்பட்டுள்ளது. அப்படியானால் ஆரியர்கள் சிந்து சமவெளியில் ஏற்கனவே இருந்துள்ளார்கள் என்று தானே அர்த்தம்.
ஆதாரம் 2:
ஆரியப் படையெடுப்பு 1200 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக சொல்லப்படுகிறது.அப்படியானால் 4000 ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில் சரஸ்வதி நதியை பற்றிய குறிப்பு இருக்கிறது. எவ்வாறு இது இருந்திருக்க முடியும்?
http://www.stephen-knapp.com/death_of_the_aryan_invasion_theory.htm
//தேவாரத்தையும் திருவாசகத்தையும் கோவிலுக்குள் பல நூற்றாண்டுகள் பூட்டி வைத்தது ஏன்?//
களப்பிரர் படையெடுப்புகளில் இருந்து காப்பதற்காகவே தேவாரம், திருவாசகத்தை அறையில் பூட்டியதாக கேள்விபட்டிருக்கிறேன்(சரியாக தெரியவில்லை) .
ராஜ ராஜ சோழன் தான் பன்னிரு திருமுறைகளை சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூட்டிய அறைகளில் இருந்து மீட்டதாக வரலாறு.
//இவர்கள் ஆட்சியில் தமிழ் சங்கங்கள் அமைக்கப் படவில்லை. இவர்கள் காலத்தில் தான் தமிழ் பண்கள் தவிர்க்கப்பட்டு கீர்த்தனைகள் ஆரிய மொழியிலும் தெலுங்கிலும் பாடப்பட்டன, ஆதரிக்கப் பட்டன, இது ஒரு வகையில் தமிழ் மொழியின் கன்னித் தன்மையை பாதித்தது.//
அப்படியானால் தஞ்சை பெரிய கோவிலில் ஏன் கல்வெட்டை மட்டும் ராஜ ராஜ சோழன் தமிழில் பதிப்பித்தார்?
ஒதுவார்களுக்கு இவ்வளவு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று கல்வெட்டிலே ஏன் பதிப்பித்துள்ளார்?
சிதம்பரம் கோவிலில் பன்னிரு திருமுறைகளை ஏன் மீட்டார்?
// வெள்ளைக்காரன் வந்து பெரியம்மையை நோய் என்று கண்டு, தன் மருத்துவத்தால் ஆத்தாவுக்கு ஆப்பு அடிக்கவில்லை என்றால், ஆத்தா ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஆப்படிச்சிட்டு போயிருப்பா //
17, 18 ஆம் நூற்றாண்டுகளில் அய்ரோப்பாவில் இருந்த வெள்ளைக்காரனுக்கும் இங்கே வந்து, இருந்த வெள்ளைக்காரனுக்கும் ஆத்தா ஆப்படித்திருக்கிறாள். வைசூரி என்றால் உன் வெள்ளைக்காரத் தாத்தா ஓட்டம் எடுக்கும் கதைகளைப் பற்றிய நாட்டுப்புற பாடல்களை தேடிப்படி.
19 ம் நூற்றாண்டில்தான் அய்ரோப்பா முழுவதும் வழக்கத்திற்க்கு வந்திருந்த தடுப்பு மருந்தை இந்தியாவுக்கு வெள்ளைக்காரன் கொண்டு வந்தது தங்களைப் பாதுகாத்துக் கொள்ள. உம்மீது உள்ள அக்கறையால் அல்ல.
இன்றுவரை பெரியம்மைக்கு தடுப்புதான் இருக்கிறதே தவிர குணமாக்க தனியாக மருந்தில்லை. சிடொபொவிர் என்ற மருந்து, ட்ரிப்ஸ் மூலம் ஏற்றப் படுவது, பெரியம்மையை குணமாக்குகிறதோ இல்லையோ கிட்னியை சேதமாக்கும்.
தடுப்பு ஊசியையும் மீறி எப்போவாச்சும் ஆத்தா உனக்கு ஆப்படிச்சா வேப்பிலை மீது படுத்து, அரைத்துப் பூசி மஞ்சள் தண்ணியில் குளிச்சு எழுந்தால் கிட்னி சேதமாகாமல் தப்பலாம்.
// இது போல் தான் சோழனும் தமிழ் இனத்தைச் சார்ந்தவன் அல்லன். //
எந்தச் சோழனைச் சொல்றீர்.? கருணாநிதிச் சோழரையா?
கார்த்தி,
மரபு பரிசோதனை உண்மையைக் காட்டாது:
அதனால் பெருமானர்கள் (Brahmins) அனைவரும் ஆரியர்கள் இல்லை. இதனால் மரபுப் பரிசோதனைப் படி இதை நிரூபித்தல் சற்று கடினமானதே. பிற தாழ்த்தப் பட்டதாகக் கருதப் படும் வகுப்பைச் சார்ந்தவர்கள் அனைவரும் திராவிடர்களும் இல்லை. இந்த கலப்பு இங்கு ஏற்கனவே ஏற்பட்டு விட்டது. அனால் சிலர் தான் ஆரிய வழி வந்தவர்களாக ஆரியா என்ற பெயரினைத் தங்கள் வைக்கும் வழக்கை கொண்டுள்ளார்கள். பிரித்தார் அதை வெறுக்கின்றனர். ஆனால் ஓரிரு வகுப்பைச் சார்ந்தவர்களில் பெரும்பான்மையானோர் திராவிடர்களாக உள்ளனர். இப்படி இந்த வகுப்பினர் ஆரிய வகுப்பைச் சார்ந்தவர் இந்த வகுப்பினர் ஆரிய வகுப்பினரைச் சாராதவர் என்று பிரித்துப் பார்க்க முடியாத நிலையில் எப்படி மரபுப் பரிசோதனை தீர்க்கமான முடிவினைத் தரும்?
ஆரியப் படை எடுப்பு முழுப்பொய் ஆனால் ஆரிய ஊடுருவல் (புலப் பெயர்வு) முற்றிலும் உண்மை:
நிலவியல் அடையாளக் குறிப்பின் படி (Geographical landmark) ரிக் மறையில் குறிப்பிடப் பட்டுள்ள நிலவியல் அடையாளங்கள் சமவாய்ப்பு முறை பயன்படுத்தி பார்க்கும் போது நடு இந்தியப் பகுதியை நோக்கி நகர்கிறது. இதன் மூலம் ரிக் மறையை எழுதியவர்கள் மேற்கு அல்லது நடு ஆசியப் பகுதியிலிருந்து தெற்கு நோக்கி நகர்ந்தது எனும் கொள்கை வலுக்கிறது. பாக்டீரியங்களின் அடிப்படையிலான ஆய்வும் இதற்கு இசைந்து செல்வதாகவே உள்ளது, நிலவியல் அடிப்படையிலான குறிப்பின் படி பார்க்கையில் ரிக் மறையில் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றிய எந்தவிதக் குறிப்பும் இல்லை. இதன் கீழ் பார்க்கையில் சிந்து சமவெளி மக்களும் ரிக் மறையை எழுதிய மக்களும் வெவ்வேறானவர் என்பது புலனாம். நீங்கள் சொல்லும் கட்டிட முறை தமிழர்களாலும் பின்பற்றப் பட்டு வந்தது. பல ஒற்றுமைகள் தமிழக கட்டிட முறைக்கும் லோதல் பகுதியில் வாழ்ந்த சிந்து சமவெளி மக்களுக்கும் உள்ளது குறிப்பாக அங்கணம், கழிவு நீர் குழாய்கள் அமைத்தல், இரட்டை அடுப்பு (உள்ளடுப்பு, தனித்த வெளியடுப்பு) போன்றவை. இதை ஆரியர்கள் திராவிடர்களிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டார்கள். நீங்கள் சொல்லும் Shulbasutras கி.மு. 600 இல் எழுதப் பட்டதே. அதற்கு முன் எழுதப் பட்ட வேதங்களில் இது போன்ற குறிப்புகள் இல்லை. மொழியியல் ஆய்வின் அடிப்படையில் பார்த்தோமெனில் ரிக் மறையின் முற்பகுதியில் திராவிடச் சொல்கள் குறைவாகவும் பிற்பகுதியில் அதிகமாகவும் கலக்கப் பட்டு இருக்கின்றன இதனால் மெல்ல மெல்ல திராவிட மொழி ஆரியத்துடன் கலந்தது என்பது திண்ணமாம். மேலும் பாகிஸ்தானின் பலுசிச்தானத்தில் இன்றும் திராவிட மொழி பேசப் படுகிறது. மேலும் சீன மொழியும் முந்தய-திராவிட மொழி கூட்டமைப்பில் இருந்து பிரிந்ததுவே (சீனி என்ற சொல் சினத்திலிருந்து பெறப்படுவது எனும் பொருளினால் வந்ததே). இது தெற்காசியப் பகுதியில் தோன்றியது திராவிடம் என்பதை உறுதிப் படுத்துவதாகும். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருவேறு மொழிகள் பிறப்பது என்பது ஒவ்வாதக் கருத்தாம். ஒரு மொழி இருக்க இன்னொரு மொழியின் தேவை இன்மையால் இன்னொரு மொழி அதே இடத்தில் பின்னர் தோன்றல் என்பதும் ஒவ்வாததே. சரஸ்வதி நதி என்பது சிந்து நதியின் முந்தையப் பாதையே ஆகும். செயற்கைக் கோளிலிருந்து கிடைத்தத் தகவலின் படி இது வற்றியது கி.மு. 1900 . இது ரிக் மறை எழுதப் பட்ட காலத்துடன் ஒத்து செல்கிறது. மேலும் ரிக் மறை உண்டாக்கப் பட்ட போது அதற்கு எழுத்து முறை இல்லை. பின்னரே அது எழுத்தாக்கம் பெற்றது. அதுவரை வாய்வழியாய்ப் பாடப் பெற்று வந்தது. மேலும் மொழி ஆராய்ச்சி வடமொழியை இந்திய-ஆரிய மொழி என்றே சொல்கிறது. இதற்கு ஆதாரங்கள் (word(ariyan) -> வார்த்), gen(ariyan) -> genanam(sanskrit), duo(ariyan) – do(=2, sanskrit), tri(ariyan) -> (=3,sanskrit), pazham(thamizh)->paL(sanskrit), funch(ariyan)->(=5,sanskrit), sex(ariyan)->sush(=6,sanskrit,septum(ariyan)->supta(=7,sanskrit),octa(ariyan)=ashta(=8,sanskrit), novem(ariyan)->nava(=9,sanskrit), desim(ariyan)->dasa(=10,sanskrit), மங்கலம்(தமிழ்) = mangaL(sanskrit), இலக்கணம்(தமிழ்) = lakshan(sanskrit),
(தமிழிலிருந்து சென்றதை சொல்லும் சொல்களுக்கு தமிழில் மூலச் சொல் இருப்பதாலும் அதே நேரத்தில் வடமொழியில் மூலச்சொல் இல்லாததாலும் இது தமிழிலிருந்து சென்றது என்பது திண்ணமாம். ) இவ்வாறு ஆரியத் தமிழ் சொல்கள் கூடி உருவானதே வடமொழியாம். இப்படி ஆரியம் இந்தியாவில் நுழைந்தது உறுதிப்பாடு அடைகிறது.
ஆதாரம் 1
there are not many Dravidian loan words in the earliest stratum of Vedas, even though the Dravidian influence quickly increases in the post-Rigvedic period. In the essay “Substrate Languages in Old Indo-Aryan”, Prof. Witzel says, “As we can no longer reckon with Dravidian influence on the early RV, this means that the language of the pre-Rigvedic Indus civilization, at least in the Panjab, was of (Para-) Austro-Asiatic nature.” – http://en.wikipedia.org/wiki/Proto-Dravidian
ஆதாரம் 2
Some scholars have suggested that the characteristically BMAC artifacts found at burials in Mehrgarh and Baluchistan are explained by a movement of peoples from Central Asia to the south – http://en.wikipedia.org/wiki/Indo-Aryan_migration
பல்லவனையும் சோழனையும் நான் ஆரியத்திலோ திராவிடத்திலோ சேர்க்க வில்லை அவர்கள் பரம்பரை தமிழ் குலத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்று தான் குறிப்பிட்டேன்.
//களப்பிரர் படையெடுப்புகளில் இருந்து காப்பதற்காகவே தேவாரம், திருவாசகத்தை அறையில் பூட்டியதாக கேள்விபட்டிருக்கிறேன்//
ஏன் வேறு நூல்கள் பூட்டி வைக்கப் படவில்லை, நான் மறைகளுக்கு நிகரான நூல்கள் மட்டுமே என் பூட்டி வைக்கப் பட்டன?
நான் சோழர்களும், பல்லவர்களும் தமிழ் பரம்பரையச் சாராதவர்கள் என்று தான் சொன்னேன் அன்றி அவர்கள் தமிழர்களாக வில்லை என்று சொல்லவில்லை. இப்பொழுது தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மக்களையும் சௌராஷ்டிர மக்களையும் போன்றவர்கள் தமிழை நன்கு கற்றுகொண்டவர்கள் தாய்மொழியை மறந்தவர்கள். இருப்பினும் இப்பொழுது வாழு தெலுங்கினற்கும் சௌராஷ்டிர மக்களுக்கும் இறுப்பது போன்றே அவர்களுக்கும் தாய்மொழிமேல் ஒரு பற்று இருந்தது அதனால் தான் அவர்கள் தன் தாய் மொழி பாடல்களை வரவேற்றனர்.
//அப்படியானால் தஞ்சை பெரிய கோவிலில் ஏன் கல்வெட்டை மட்டும் ராஜ ராஜ சோழன் தமிழில் பதிப்பித்தார்?
ஒதுவார்களுக்கு இவ்வளவு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று கல்வெட்டிலே ஏன் பதிப்பித்துள்ளார்?
சிதம்பரம் கோவிலில் பன்னிரு திருமுறைகளை ஏன் மீட்டார்?//
காலம் செல்லச் செல்ல தாய்மொழி மறந்து தமிழ்மொழியனாகவே ஆகிவிட்டனர்.
தமிழ் நாட்டில் பல பேருக்கு தான் ஆரியனா திராவிடனா என்ற உண்மை தெரியாது. பல பேருக்கு அல்ல ஒருவருக்கும் தெரியாது என்றே கூறலாம். அதனால் ஆரியன் திராவிடன் என்ற பாகுபாடு தேவை இல்லை. ஆனால் ஆரிய மொழி ஊடுருவியது என்பது மறுக்க இயலாதது
I don’t want to hurt anybody’s feeling. If I do I am sorry.
karthi, I haven’t read the stephen’s link because I have already read that.
And one more information the scipts found in ariccamedu recently. is matching with indus sripts. and it is thamizh. and kranda letter is adapted from thamizh. the inscription at korkai escavations proves this.
வைசூரி அய்யர்,
//எந்தச் சோழனைச் சொல்றீர்.? கருணாநிதிச் சோழரையா?//
கருணாநிதியும் பாரம்பரியம் பார்க்கில் தமிழர் அல்லரே.
Karthi,
According to the notes of Xuang Sang, TamilNadu is ruled by Pandiyas, and by no one else. And they had Bow & arrow in their flag. This proves that Cheras separated themselves from Pandiyas. (and the people are saying that cheras and pandiyas were brothers). And that time dowry is given by man not by woman. And it is said that chera dynasty is the dowry given by Pandiya king.
@ ஜாண் ரூபட்
அனபாயன் என்ற குலோத்துங்கர்-1 தான் ராஜராஜ நரேந்திரன் என்ற கீழைச்சாளுக்கிய மன்னருக்கும் மாமன்னர் ராஜேந்திரரின் புதல்விக்கும் பிறந்து பெரும்புகழ் பெற்றவர். பிற்காலச் சோழர்களின் முதல்வரும் இவரே. அதற்குமுன் சோழவம்சத்தில் தந்தைவழியில் அனைவரும் தமிழரே. தந்தைவழியில் மட்டுமின்றி தாய்வழியிலும் தமிழர்களே. குறிப்பாக மாமன்னர் ராஜராஜரின் தாயும் (திருக்கோவிலூர் மலையமான் புதல்வியார்), மாமன்னர் ராஜேந்திரரின் தாயும்கூட (கொடும்பாளூர் வேளாரின் புதல்வியார்) தமிழர்களே.
// வெள்ளைக்காரன் வந்து பெரியம்மையை நோய் என்று கண்டு, தன் மருத்துவத்தால் ஆத்தாவுக்கு ஆப்பு அடிக்கவில்லை என்றால், ஆத்தா ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஆப்படிச்சிட்டு போயிருப்பா //
எனது முந்தைய இடுகையை மட்டுறுத்தாமல் வெளியிட்ட மதிமாறன் விமர்சனங்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும், தைரியமும் உள்ள நேர்மையாளர் என்று புரிந்துகொண்டேன். மனம் புண்படும்படி கூறியிருந்தால் மன்னிக்கவும்.
சரி, இப்பொழுது வெள்ளைக்காரன் ஆத்தாவுக்கு ஆப்படித்தானா இல்லை தனக்குத் தானே அடித்துக் கொண்டானா எனப் பார்க்கலாம்.
தடுப்பு மருந்து என்பதே நோய்க்கிருமிகளை வலுவிழக்கச் செய்து உடலில் செலுத்திக் கொள்வதின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலே வளர்த்துக் கொள்ள கால அவகாசமும், தூண்டுதலும் தருவதே. அதாகப்பட்டது, டம்மி ஆப்பை வெள்ளைக்காரன் தனக்குத் தானே வைத்து கொண்டுதான் தப்ப முடிந்ததே தவிர ஆத்தாவுக்கு ஆப்பு வைத்தான் என்று மார்தட்டுவது தவறு. மேலும் தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டவர்களிடம் ஆத்தா பரிதாபப்பட்டு தொந்தரவும் செய்வதில்லை.!
இதே போல செல்ஃப் ஆப்பு வைத்துக்கொள்ளும் பலவித டெக்னிக்குகளை வெள்ளைகாரன் இங்கே பரப்பி செய்த நன்மைகளைவிட தீமைகளே அதிகம்.
ம ஜாண் ரூபட் ,
//நிலவியல் அடிப்படையிலான குறிப்பின் படி பார்க்கையில் ரிக் மறையில் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றிய எந்தவிதக் குறிப்பும் இல்லை. இதன் கீழ் பார்க்கையில் சிந்து சமவெளி மக்களும் ரிக் மறையை எழுதிய மக்களும் வெவ்வேறானவர் என்பது புலனாம்.
சரஸ்வதி நதி என்பது சிந்து நதியின் முந்தையப் பாதையே ஆகும். செயற்கைக் கோளிலிருந்து கிடைத்தத் தகவலின் படி இது வற்றியது கி.மு. 1900 . இது ரிக் மறை எழுதப் பட்ட காலத்துடன் ஒத்து செல்கிறது.//
Saraswathi seems to have originated in Kailash Mansarovar and emerged on the plains from the Siwalik Hills at the foothills of the Himalayas in Himachal Pradesh, flowed through the Ghaggar valley in Haryana and the Rajasthan desert, on to Hakra in the Cholistan desert (Sindh, Pakistan), before reaching the Rann of Kutch through the Nara Valley and falling off
into the Arabian Sea.
Scientists of the Bhabha Atomic Research Centre (BARC) found that
water was available in the Rajasthan desert at depths of merely 50 to 60 metres, as a result of which agriculture was possible even in the extreme summer months. The Central Arid Zone Research Institute (CAZRI), Jodhpur, mapped the defunct course of a river through satellite and aerial photographs and field studies.
BARC also made some amazing discoveries. First, the waters tested were potable; second,they derived from Himalayan glaciers; third, they were between 8000 to 14000 years old; and finally, the waters were being slowly recharged through aquifers from somewhere in the north despite the fact that records showed only very scanty rainfall in the semi-arid region of Marusthali. BARC thus confirmed ISRO findings about the river, and this was an unintended fallout of Pokharan!
Projects related to the re-discovery of Vedic River Sarasvati have been transformed as
projects to revive the great river to fulfil the water supply needs of 20 crore people in
Northwest India and to make the Thar desert fertile again. These projects have also led to the
demand for a National Water Grid to make every river of India a perennial river and provide
water for everyone, for generations to come.
கார்த்தி,
Some thing is wrong in the data you have got. Some people are intentionally doing this to predate the saraswathi river.
Indus valley civilization was in existence till1900B.C – 1300B.C at the place of saraswathi river. And this period sarawathi river was flowing. It is proved by no sites are found at saraswati river but at the same time sites were found at the banks of the river. And the people have used the shells got from the river for making their ornments or someother things.
May be some branches of the river would dried out at the time you have mentioned. But the time span is too high to believe the statement. Because in too short time period the remaining have dried out.
Lets wait everything will come to light.
Sariyaga sonneergal thamilare…innum ethanai naluku than indha moodargal thangal eyalamaiyai vasaipadugalaga matruvargalo?
7 ஆம் அறிவு படத்தை 2 ஆவது முறையாகப் பார்த்தேன். இட ஒதுக்கீடு , மத மாற்றம் குறித்து விஷத்தை கக்குகிறது அந்த படம். மத மாற்றம் தவறு என்றால் அந்த படம் போற்றி கொண்டாடுகிற போதி தருமர் ஏன் புத்த மதத்திற்கு மாறினார் என்ற கேள்விக்கு பதில் சொல்லவே இல்லை. ஒரு காட்சியில் “இட ஒதுக்கீடு இருப்பதால்தான் திறமையானவன் வெளியில் நிக்கிறான் ” என்கிறார் ஸ்ருதி ஹாசன். திறமையான அறிவு குஞ்சுகள் திறமைலேயே முன்னேற வேண்டியதுதானே…. ? நூறு நூறு ஆண்டுகளாக செருப்பு தைத்தவன் , மயிர் சிரைத்தவன் இப்போதான் படிக்கவே வந்திருக்கான். அது உங்களுக்கு வலிக்குது…
அதே படத்தில் போதி தர்மன் வாரிசு வித்தை காட்டி பிழைக்கிறான். ஆனால் எந்த மரபணு விசேசமும் இல்லாத (படத்தில் அப்படிதானே சொல்றாங்க!) குடும்பத்தை சேர்ந்த சுபா ஸ்ரீனிவாசன் ஐ.ஐ.டி. யில் மரபணு பொறியியல் படிக்கறாங்க …. சமூக நீதி பரம்பரையில் வந்த குடும்பத்தை சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இந்த படத்தை தயாரிக்கிறார். எங்க போய் முட்டிக்கறது?
தமிழகத்தில் பல ஆண்டுகளாக ரிசர்வேஷன் முறை கடைபிடிக்கப்பட்டதால் ஏற்பட்ட முன்னேற்றத்தை கீழ் வரும் தகவல் மூலமாக அறியவும்:
Monday, June 30, 2008
What is the Community wise Composition of Top 500 Rankers in Tamil Nadu
Counseling for Admission to MBBS / BDS in Tamil Nadu starts from 04.07.2008 and Director of Medical Education, 162, Periyar Road, Chennai has releasted the counselling schedule The Community of the Top 500 Rankers can be seen from that Of the Top 500 Rankers in Tamil Nadu.
Forward Community – FC – 55 Students – 11 %
Backward Community – BC – 293 Students – 58.6 %
Christians – BCC – 29 Students – 5.8 %
Muslims – BCM – 20 Students – 4 %
Most Backward Community – MBC – 70 Students – 14 %
Scheduled Castes – SC – 32 Students – 6.4 %
Scheduled Tribes – ST – 1 Student – 0.2 %
இதே போல IIT/IIM களில் வரும் முன்னேற்றத்தை பார்க்க சில வருடங்கள் பிடிக்கத்தானே செய்யும். இப்போது தானே மண்டல் கமிஷன் மூலமாக உள்ளே அனுமதித்து உள்ளீர்கள் துரியோதனன்/வி.பி.சிங் தயவில் – கர்ணனுக்கு/ ஒ.பி.சி மக்களுக்கு வாய்பு கிடைத்தது போல).
திராவிடக் கட்சிகள் இல்லாமல் இதைச் சாதித்து இருக்க முடியாது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
வாழ்க!!!வாடிய பயிரை கண்டு மனம் வாடிய-வள்ளலார் பிறந்த/ வாழ்ந்த ” தமிழ் நாடு”
தமிழிலும் கேள்விகள் இடம்பெற நடவடிக்கை: மத்திய பணியாளர் தேர்வாணையத் தலைவர்
//சுருக்கெழுத்தர் பணிகளில் இந்தியா முழுவதும் தமிழகம் மற்றும் கேரளத்தினரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. சுருக்கெழுத்தர்களுக்கான காலியிடங்களில் 2 ஆயிரம் இடங்களை நிரப்ப முடியவில்லை.”- என்.கே. ரகுபதி (எஸ்.எஸ்.சி.) மத்திய பணியாளர் தேர்வாணையத் தலைவர்//
ஹி..ஹி..ஹி… நாங்க தான் டாஸ்மாக்கிலும் /வி.ஏ.ஒ விலும்/ கோவிலிலும்/காவலிலும்/ /கால் சென்டர்/ கலா சென்டர் களிலும் தஞ்சம் தேடியுள்ளோமே!!! எல்லாம் மக்கள் சேவைக்கே!
பெரியம்மை ஒழிக்கப்பட்டதால்தான் விதவிதமான நோய்கள் தோன்றின. ஒருமுறை அம்மை வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும். வெள்ளைக்காரனின் நவீன அறிவியல் இதை அறியவில்லை. தமிழகத்தில் பிறந்து இஸ்லாம் நெறியை ஏற்றுக்கொண்டு அரபியில் பெயர் வைக்கவும் பிரார்த்தனை செய்யவும் இயேசுவை ஏற்றுக்கொண்டு யூத பெயர் வைக்கவும் உரிமை உள்ளபோது தமிழகத்தில் பிறந்து இந்து பெயர் வைக்கவும் சமஸ்கிருதத்தை பிரார்த்தனை மொழியாக ஏற்றுக்கொள்ள உரிமை உண்டு.
அருமை