அவருடைய தைரியம், ‘லாஜிக், எளிமையான வார்த்தை ஒரு பிரமாண்டம்

kuselan_rajini

தியேட்டர் அதிபர்கள் திருட்டு வி.சி.டி போட்டவர்கள்வரை எல்லோரையும் ‘குசேலனாக’ மாற்றிய ரஜினியின் குசேலன் கதையல்ல இது; ஒரியஜனல் குசேலன்.

*

குசேலன் கதை, ரொம்ப பழைய காலத்திலிருந்தே பார்ப்பனர்கள் ஏழைகள்தான் என்பதை விளக்கிச் சொல்ல வந்த குறியீட்டுக் கதை. 27 குழந்தைகளைப் பெற்ற (பரிதாபத்திற்குரிய பெண்) குசேலன் வாழ்க்கையில் வறுமை தாண்டவமாடுகிறது. தாண்டவத்தை நிறுத்த, தன் பால்ய நண்பன் கண்ணனைப் பார்த்து உதவி பெறுகிறான் என்பது தான் கதை.

பார்ப்பனத் துயரைத் தாங்கி, ‘சென்டிமென்ட்டச்’சோடு அத்தனை நூற்றாண்டுகளாகக் கேள்வி கேட்பாரற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இந்தக் கதையை, போன நூற்றாண்டில் ஒருவர் தனது ஒரே கேள்வியால் தரைமட்டமாக்கி விட்டார்.

கேள்வி இதுதான்: ‘‘27 பிள்ளைகளைப் பெற்ற ஒருவன் பிச்சை எடுக்கிறான். எவ்வளவு பெரிய மோசடி இது. ஆண்டுக்கு ஒரு பிள்ளை என்று பெற்றிருந்தாலும், 7 பிள்ளைகள் 20 வயதிற்குள் மேல் இருந்திருக்கும். தோளுக்கு மேல் வளர்ந்த தடிமாடு பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவன் பிச்சை எடுக்கிறான் என்றால், அவன் குடும்பத்து யோக்யதை என்ன? உழைக்காமல் உண்பதே பார்ப்பன வாழ்க்கை, தர்மம்’’ என்பது போல் கேட்டிருப்பார் அவர்.

அப்படிக் கேட்டவர் தந்தை பெரியார்.

மிகப் பெரிய வறுமையை சித்தரிப்பதற்காக 27 குழந்தைகளைப் போட்டு திரைக்கதையை தயார் செய்திருக்கிறார்கள். அந்தத் திரைக்கதையில் உள்ள ஓட்டையை தனது நுட்பமான பகுத்தறிவினால் அம்பலப்படுத்தினார் பெரியார்.

அவருடைய சிந்தனையின் தைரியம் மாதிரியே அவருடைய ‘லாஜிக்’, அதைச் சொல்லும், அவருடைய எளிமையான வார்த்தை ஒரு பிரமாண்டம்.

*

‘சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ புத்தகத்திலிருந்து..

*

Sankara Madam

**

புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள:

‘அங்குசம்’ ஞா. டார்வின் தாசன் – 94443 37384

கோயம்புத்தூர்: வழக்கறிஞர் பாலா – 98942 30138

திருச்சி : நாக. குணராஜ் – பெரியார் நூல் நிலையம் – 98655 96940

தஞ்சை: தோழர் எழிலரசன் – 94885 45546

தொடர்புடையவை:

சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் !

பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்

இரண்டாண்டுகளில் மூன்று பதிப்பு..

6 thoughts on “அவருடைய தைரியம், ‘லாஜிக், எளிமையான வார்த்தை ஒரு பிரமாண்டம்

  1. பொதுவாகவே கதைகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செல்லும் பொது சிறிது மிகைப்படுத்தபடுகிறது.. இது இயல்பு. சொல்லப்போனால் இது மேலும் நயம் சேர்க்கின்றது. ஒரிஜினல் போட்டோவில் photoshop செய்வது போல். ஒருவன் ஈடுபாட்டுடன் இந்த கதையை கேட்கும்போது, ‘வறுமையிலும் நாகரீகம்’, ‘பணத்தையும் அதிகராத்தையும் விட உயர்ந்த நட்பு, அன்பு’ போன்ற மனதின் பண்பட்ட உணர்ச்சிகளை அனுபவித்து அதன் இனிப்பை உணர்கிறான்.இனிப்பை உணர்ந்ததால், இனிப்பான பண்பட்ட முறையில் தன் வாழ்வை நடத்த முயல்கிறான். வாழ்வை இனிப்பூட்ட வந்த கருவிகள் இந்த கதைகள்.

    ஆனால், இதே கருத்துக்கள் வெறும் கதைகளில் இருந்து நடைமுறையில் மனிதத் தன்மை இல்லாததை பெரியார் எதிர்த்தார். இது போன்ற புராணங்கள், அடிமைப்படுத்த உப்யோகிக்கப்பட்டதால், பெரியார் இவற்றை நிராகரித்தார். அவர் சாடியது கருவியின் உபயோகத்தை. அவர் காலத்தில் இது தேவைப்பட்ட ஒன்று.

    இன்று, மனித மனதில் இந்த இனிப்பை ஊட்ட, பண்படுத்த வேறு கருவிகள் இல்லாத நிலையில், மேலும் இந்த கருவிகளை பலவீனமாக்குவது நன்றன்று. 🙂

  2. தந்தை பெரியார் காட்டிய வழி நடப்போம்.பார்ப்பனியத்தை ஒழிப்போம், தோழருக்கு பாராட்டுக்கள்.

  3. இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்போம்.

Leave a Reply

%d