இரண்டாம் பாகம்: சென்னையில் ஒரு நாள்

Parvathi-Menonசென்னையில் ஒரு நாள் போன்ற நல்ல படங்களையே சரியில்லை என்கிறீர்களே, நீங்கள் வந்து படம் எடுத்துப் பாருங்கள்.

-டி. சௌமியா, சென்னை.

சென்னையில் ஒரு நாள் இரண்டாம் பாகம் எடுக்கலாமென்று இருக்கிறேன்.

ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக, போலிசார் போக்குவரத்தை நிறுத்தி வைத்ததில் எத்தனை உயிர்கள் பலியாகின என்ற விவரங்களோடு.

விபத்தில் படுகாயமுற்றவர், பிரசவ வேதனையில் துடித்த பெண், விஷ பாம்பால் கடிப்பட்ட விவசாயி, கொதிக்கும் எண்ணையை மேலே கொட்டிக் கொண்ட குழந்தை, ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்ட முதியவர், கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்த நிலையில் உயிருக்குப் போராடியவர், கடன் தொல்லை மற்றும் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற ஆண்கள் பெண்கள்

இவர்களையெல்லாம் வாரிபோட்டுக் கொண்டு அவசரமாக போன மாட்டு வண்டி, டிராக்டர், பைக். சைக்கிள் ரிக்க்ஷா. ஆட்டோ, கார் இவைகளை மடக்கி வைத்ததால், உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு போக முடியாமல் எப்படி இறந்தார்கள் என்பதுதான் திரைக்கதை.

படம் எடுக்க நான் ரெடி.

தயாரிப்பாளாராக நீங்க ரெடியா?

*

தங்கம் 2013 மே  மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

சென்னையில் ஒரு நாள்

2 thoughts on “இரண்டாம் பாகம்: சென்னையில் ஒரு நாள்

  1. இந்த படம் பார்த்த பொழுது நான் நினைத்ததை நீங்கள் அப்படியே பதிலாக சொல்லிவிட்டீர்கள். மிகச் சரியான் பதில்

Leave a Reply

%d