facebook விஜயகாந்த்துகள்
எதையாவது பேசுகிறார் விஜயகாந்த். கூட்டம் சேருகிறது. கை தட்டுகிறது. அங்கீகாரமாக கருதி, ‘நாம் சரியாகத்தான் பேசுகிறோம்’ என்று இன்னும் கூடுதலாக உளறுகிறார். தவறான தகவல்கள் தருகிறார். அப்படியும் கூடுகிறது. கை தட்டுகிறது.
அதனால் இன்னும் அதிகமாக தன்னைப் பற்றி மிகை மதிப்பீட்டிற்கு செல்கிறார். மீண்டும் தவறான தகவல்களை துணிச்சலோடு பேசுகிறார்.
‘பெரியார்போல் வெண்தாடி வேந்தர் மோடி’ ‘வைகோ வீட்டிற்கு அம்பேத்கர் வந்தார்’ இப்படி அரிதாக புரிவது போல் அவர் பேசுவதை விட, புரியாமல் பேசுவதே புரட்சிகரமானது என்று சொல்லிவிடலாம்.
இதுபோலவே கருத்து சொல்கிற பல விஜயகாந்த்துகள் facebook லும் இருக்கிறார்கள். அவர்கள் எதையாவது எழுதுகிறார்கள் அதற்கு நூற்றுக்கணக்கான Like களும் Share ம் செய்யப்படுகிறது.
அதையே அங்கீகாரமாக கருதி, ‘நாம் எழுதுவது உலகமகா தத்துவம், விமர்சனம்’ என்று இன்னும் கூடுதலாக உளறுகிறார்கள். தன்னை பற்றி மிகை மதிப்பீட்டிற்கு சென்று எதை பற்றியும் அடிப்படை கூட தெரிந்து கொள்ளாமல் சகட்டு மேனிக்கு யாரை குறித்தும் பொறுப்பற்று எழுதுகிறார்கள்.
அவருக்கு கூட்டமும் கை தட்டல்களும் கிடைத்ததுபோல், இவர்களுக்கும் Like க்கும் Share ம் கிடைக்கிறது.
தங்கள் சந்தர்ப்பவாதத்தையே தகுதியாக மாற்றிக் கொண்ட அரசியல்வாதிகளைப்போல், பிரமுகர்களாக பாவித்துக் கொண்டு தங்களைப் பற்றி உயர்வாக ‘மனிதாபிமானம், தியாகம், வள்ளல்தனம், கொள்கையில் உறுதி’ என்று பல சம்பவங்களை அவர்களே புகழ்ந்து எழுதி படமும் தகவல்களும் தந்து அதனுடன் இணைப்பாக அறிவுரை, ஆலோசனைகளும் வழங்கி இன்னும் கூடுதலாக கொல்கிறார்கள்.
இப்படியாக தங்கள் ஆர்வக் கோளாரை அறிவாக மாற்ற முயற்சிக்கிறவர்களின் அட்டகாசம் தாங்க முடியல.
தங்கள் படங்களை அடிக்கடி வெளியிட்டு நடிகன், நடிகையைப் போல் பந்தா செய்கிறவர்களும் இருக்கிறார்கள்.
ஆக, விஜயாந்துக்கே சவால் விடுகிறார்கள் facebook விஜயகாந்த்துகள்.
இதில் யார் முட்டாள்?
கை தட்டுகிறவர்களா? Like share செய்கிறவர்களா?
அவுங்களா? இல்ல நாமா?
*
3.04.2014 அன்று facebook ல் எழுதியது.
கிரிக்கெட்: அடிமையாட்டம் வெற்றியாட்டம் சூதாட்டம்
பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்
True!!
Every time we read your posts, that is exactly how all of us feel.