ரஜினி; பாலபிஷேகம் பரம்பரைப் புத்தி
‘ரஜினி படத்திற்கு பால் அபிசேகம்’
இதை ரசிக மனோபாவமாக மட்டும் பார்க்க முடியாது. இது இந்து மரபு மூடத்தனத்தின் தொடர்ச்சி.
கற்சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்யலாம். ‘கட்டவுட்டு’ க்கு செய்யக் கூடாதா?
அதைச் செய்கிற யாருக்கும் இதைக் கேட்பற்கு யோக்யதை கிடையாது.
ayya, hindu kovilgalil ulla silaigal oru ariviyal reedhiyaana kaaranangalukku utpatte amaikkap pettrurikkindrana; melum avattrirkkaana poosanai muraigalum ariviyal nokkudane seyyappattu varuginddrana. thina thanthi vaasippavar kooda idhanai arivaar enum nilayil thangalin ivvaaraana padhivu hindu madhathin meedhaana veruppai velippaduththugiradhe andri verondum illai. ariviyarpaar amaikkap petra kovil silaigalum oru nadiganum ondrenak karudhum thangalin ippadhive moodaththanathin ediththukkaattu.
அய்யா, ஹிந்து கோவில்களில் உள்ள சிலைகள் ஒரு அறிவியல் ரீதியான காரணங்களுக்கு உட்பட்டே அமைக்கப் பெற்றுறிக்கின்றன; மேலும் அவற்றிற்கான பூசனை முறைகளும் அறிவியல் நோக்குடனே செய்யப்பட்டு வருகின்றன. தினத் தந்தி வாசிப்பவர் கூட இதனை அறிவார் எனும் நிலையில் தங்களின் இவ்வாறான பதிவு ஹிந்து மதத்தின் மீதான தங்களின் வெறுப்பை வெளிப்படுத்துகிறதே அன்றி வேறொன்றும் இல்லை. அறிவியற்பார் அமைக்கப் பெற்ற கோவில் சிலைகளும் ஒரு நடிகனும் ஒன்றெனக் கருதும் தங்களின் இப்பதிவே மூடத்தனத்தின் எடுத்துக்காட்டு.
If the cutouts are installed scientifically, there is no problem in ‘paalabhisheghum’. Then it will not be considered as ‘mooda nambigai’ 😉
“இதை ரசிக மனோபாவமாக மட்டும் பார்க்க முடியாது. இது இந்து மரபு மூடத்தனத்தின் தொடர்ச்சி”
.இதை இத்துடன் விட்டுவிடக்குடாது .நண்பர் மதிமாறன்.
கோவில் சிலைகளுக்கும் மாலை மரியாதைகள் தரப்படுகின்றன.
பெரியார் அம்பேத்கார் சிலைகளுக்கும் அவ்வாறே மாலைகளும் மரியாதைகளும் செய்யப்படுகின்றன.
கடவுளுக்கும் நாள் நட்சத்திரம் பார்த்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
தலைவர்களது சிலைகளுக்கும் அவ்வாறே( பிறந்தநாள் இறந்தநாள்,போராட்டநாள் ) மரியாதைகள் தொடர்கின்றன.
உருவவழிபாடு கூடாது என போதித்த புத்தரே சிலையாக்கப்பட்டு மாலை மரியாதைக்கு உட்படுத்தப்பட்டுவிடார்.
இத்தகைய செயல்களை இப்போது நாம் இந்து முடதனத்தின் பேரில் கண்டிக்கலாமா?அல்லது பகுத்தறிவின் பேரில் கண்டிக்கலாமா? அல்லது புத மத முடதனத்தின்பேரில் கண்டிக்கலாமா?
நாம் முடிவெடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது நண்பர் மதிமாறன்..
ஆனால் நிச்சயம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக இதுபோன்ற ஏதேனும் ஒன்றை நாம் செய்தாகவேண்டும்.
அல்லது இந்துமதத்தில் செய்வதுமட்டும்தான் காட்டுமிராண்டித்தனம் மற்றவர்கள் செய்வது நூற்றுக்கு நுறு அறிவு சார்ந்தது என சட்டம் கொண்டுவர போராடவேண்டும்.சரிதானே நண்பர் மதிமாறன்?
மற்றபடி யாருடைய யோக்கியதை பற்றியும் இங்கே நான் கேள்விஎழுப்பி அவர்களது பகுத்தறிவை சங்கடத்திற்குள்ளாக்க விரும்பவில்லை.