உங்களின் உலகத் தரம் வாய்ந்த பட்டியலில் தயவு செய்து சேர்த்து விடாதீர்கள்

dpi-vera

எழுத்தாளர்களுக்கென்று தனியாக ‘சங்கம்’ வைப்பதே மோசடி என்ற கருத்துக் கொண்டவன் நான்.

அப்படியிருக்கையில் டாப் 10 எழுத்தாளர்கள் பட்டியலை அவர்களாகவே உருவாக்கி அதில் என்னை சேர்ப்பது எனக்கு செய்கிற பெரிய அவமானமாக கருதுகிறேன்.

அதனால் தயவு செய்து தோழர்கள், சீட்டு குலுக்கிப் போட்டு தேர்தெடுப்பது. விரல்களை நீட்டி அதை தொடச் சொல்லி தேர்ந்தெடுப்பது போன்ற முறைகளிலோ
அல்லது

தனது கோஷ்டியை சேர்ந்தவர், தான் ஆதாரிக்கிற அரசில் கட்சியின் ஆதரவாளர், தனக்குத் தெரிந்தவர் தெரியாதவர் என்றெல்லாம் பார்க்காமல்,

நேர்மையோடு விருப்பு வெறுப்பின்றியும் தேர்தேடுக்கிற,
உங்களின் உலகத் தரம் வாய்ந்த எழுத்தளார்கள் பட்டியலில் கூட என்னை தயவு செய்து சேர்த்து விடாதிர்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்.

நான் எழுத்தாளனே இல்ல.

*
June 6 facebook ல் எழுதியது.

எழுத்தாளன் என்பது தகுதியும் அல்ல; எழுதுவது திறமையும் அல்ல

7 thoughts on “உங்களின் உலகத் தரம் வாய்ந்த பட்டியலில் தயவு செய்து சேர்த்து விடாதீர்கள்

 1. // நேர்மையோடு விருப்பு வெறுப்பின்றியும் தேர்தேடுக்கிற,
  உங்களின் உலகத் தரம் வாய்ந்த எழுத்தளார்கள் பட்டியலில் கூட என்னை தயவு செய்து சேர்த்து விடாதிர்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். //

  நீங்கள் அப்படி கேட்டுக்கொள்ள எவ்விதமான தேவையும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

 2. “நேர்மையோடு விருப்பு வெறுப்பின்றியும் தேர்தேடுக்கிற, உங்களின் உலகத் தரம் வாய்ந்த எழுத்தளார்கள் பட்டியலில் கூட என்னை தயவு செய்து சேர்த்து விடாதிர்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்”

 3. இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படை விதிப்படி குற்றம் செய்தவரைவிட குற்றம்செய்ய தூண்டியவருக்குதான் அதிகப்படியான தண்டனை வழங்கப்படுவது மரபு.
  அதுபோல தாங்கள் சாதாரண எழுத்தாளர் இல்லை என்றாலும் தங்களது எழுத்துக்களால் வெறும் வாசகர்களாக இருந்த என்போன்ற பலரையும் விமர்சகர்களாகவாவது முன்னேற்றி இருக்கிறீர்களே? அந்த அடிப்படையில் கூட தங்கள் பெயரை அவர்கள் தேர்வுசெய்திருக்கலாம்.

  (எனக்குத் தெரிந்து; பெரியார் – டாக்டர் அம்பேத்கரை ஆழமாக படித்து, ஒப்பிட்டு விரிவான விளக்கங்களோடு பேசக்கூடடிய ஆற்றல் உள்ள அறிவாளி ஆ.ராசா.

  அப்படி பேசக்கூடியவர்கள் எனக்குத் தெரிந்து இவருவர் மட்டும்தான். ஒன்று அவர். இன்னொன்று நான்.
  இதை கர்வத்தோடும் பெருமையோடும் தெரிவித்துக்கொள்கிறேன்.),,,,,,,,ஆ. ராசா வெற்றிபெற வேண்டும்..மே 16 2014.

  இந்த வைர வரிகளுக்குப்பிறகும் அவர்கள் உங்கள் பெயரை சேர்க்கவில்லைஎன்றால் அவமானம் அவர்களுக்குத்தானே?

 4. ஒரு சந்தேகம் திரு.மதிமாறன்.இந்த இடுகை உங்களுடையதுதானா அல்லது மண்டபத்தில் இருந்த யாரேனும் ஒருவருடையதா?
  ஏனென்றால், எந்த பட்டியல்? யார் உருவாக்கினார்கள்? என்பதெல்லாம் இல்லாமல் மொட்டையாக இருக்கிறதே அதனால் கேட்கிறேன்.
  ஒரு கல்லூரி விழாவில் கண்ணதாசன் அவர்கள் மாணவன் ஒருவனது கவிதையை வாசித்ததற்கு கிடைத்த கைதட்டல் போல ஆகிவிடப்போகிறது எங்கள் விமர்சனம்.

 5. இங்கு பின்னூட்டமிட்டவர்கள் நேற்றைய (சூன்-௨௦) தினத்தந்தி நாளிதழை பார்க்கவும்.
  கரகாட்டக்காரி என்று முந்தைய செய்தியில் பதிவானது தற்போது கரகாட்டக் கலைஞர் என்று பதிவாகியுள்ளது.
  இத்தைகைய வினையூக்க செயல்பாடுகளே ஆணாதிக்க மனநிலையை ஓரளவு மாற்றும்.

Leave a Reply

%d bloggers like this: