மற்றபடி, மிகச் சிறந்த வாழ்க்கை அவருடையது
ஒரு கைதி, துண்டுத் தாளில் இந்தியாவின் உயர் பதவியிலிருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதி அனுப்பியதை, பொதுநல வழக்காக ஏற்று.. நியாயம் வழங்கியவர் வி.ஆர். கிருஷ்ணய்யர். அதுதான் முதல் பொதுநல வழக்கு என்று நினைக்கிறேன்.
பெரியாரின் நூலுக்கு விதிக்கப்பட்ட தடையைக் கூட நீக்கியிருக்கிறார்.
டாக்டர் அம்பேத்கரின் உழைப்பால் நீதிபதியானவர்கள், பெரியாரின் முயற்சியால் இன்னும் சமூக நீதி அரசியலின் பயனாய் நீதிபதியானவர்கள் செய்யாத அல்லது செய்ய விரும்பாத பல சிறப்பான செயல்களை, எளிய தலித் மக்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் செய்தவர் மரியாதைக்குரிய வி.ஆர். கிருஷ்ணய்யர். . அதுவும் ஒரு பார்ப்பனக் குடும்பத்திலிருந்து… என்பது அவருக்குக் கூடுதல் சிறப்பு.
*
மே 2007 ஆம் ஆண்டு‘ சமூக விழிப்புணர்வு’ இதழில் அவரைப் பற்றி இப்படி எழுதினேன்:
ஒரு சிறந்த நீதிபதி, சட்டத்தின்படி மட்டும் இயங்க மாட்டார். ஏனென்றால் சில நேரங்களில் சட்டத்தின் படி சரியாக இருப்பது நியாயத்தின் படி , நீதியின் படி தவறாக இருக்கும்.
சட்டத்தின் படி மட்டும் இயங்குபவர், தீர்ப்பு வழங்குபவராக தான் இருப்பார். நீதி வழங்குபவராக இருக்க மாட்டார்.
சட்டத்தின் துணையோடு நியாயப்படி, நீதியின் படி – பரிவோடு, துணிவோடு தீர்ப்பு வழங்குபவருக்குப் பெயர் தான் நீதிபதி. சுருங்கச் சொன்னால் வி.ஆர். கிருஷ்ணய்யர் மாதிரி.
“ரயில்வேயில் பதவி உயர்வுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது’ என்று தொடுக்கப்பட்ட வழக்கில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மரியாதைக்குரிய கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது.
*
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த கிருஷ்ணய்யர் அவர்கள், தன் பெயருக்குப் பின் உள்ள ஜாதி பெயரை பெருமையாக நினைத்ததும் அல்லது தவறாக நினைக்காததும், மோடியைக் குறித்துத் தவறாகப் பேசியதும் தான் நமக்கு வருத்தமாக இருக்கிறது.
மற்றபடி, மிகச் சிறந்த வாழ்க்கை அவருடையது.
நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு மரணம்
பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) உடல் தானமும் இஸ்லாமியர்களின் மதஉணர்வும்
இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!
எஸ்.எஸ்.ஆர்: தற்கொலைக்கு முயன்றேன் – பெரியார் என்னை அவமானப்படுத்தி விட்டார்
ருத்ரையா-எம்.எஸ்.எஸ். பாண்டியன்; ஒப்பாரி வைப்பதால் என்ன பயன்?
கடைசி வரியில், கிருஷ்ணய்யர், மோடியைப் பற்றி தவறாக பேசியது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதை பாராட்டி பேசியது என்றே எழுதியிருக்க வேண்டும். நீங்கள் சொல்ல வந்த கருத்துப்படி அதுதான் சரி. எனவே, அன்பு கூர்ந்து திருத்தவும்.
மோடி குறித்து தவறான கருத்து தான் அது. சரியாகத்தான் குறிப்பிட்டுள்ளேன்.
நண்பர் மதிமாறனிடமிருந்து கூட இப்படிஒரு பதிவா?
நீங்கள் நினைத்ததை கிருஸ்ணையர் தனது வாழ்க்கையில்(தொழிலில்) வாழ்ந்தே காட்டிவிட்டார்.பின்பும் பெயர் குறித்து விமர்சமென்ன?
அவர் ஜோசெப் என்றோ அல்லது இஸ்மாயில் என்றோ பெயர்வைத்திருந்தாலும் அவரது செயல்பாடுகளில் மாற்றம் இருந்திருக்காது என்பது நிச்சயம்.
ஆனால் அப்போது உங்களது விமர்சனங்களில்
(“இவ்வளவு சிறப்புகள் நிறைந்த கிருஷ்ணய்யர் அவர்கள், தன் பெயருக்குப் பின் உள்ள ஜாதி பெயரை பெருமையாக நினைத்ததும் அல்லது தவறாக நினைக்காததும்,”)
இந்த வரி வந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்?
ரோஜா எப்படி அழைத்தாலும் ரோஜாதான் …
அய்யர் என்கிற பதம் எவ்வளவு ஒவ்வாமையை நம்மிடம் ஏற்படுத்தியிருகிறது ?
அதுக்குள்ளே இட ஒதுக்கீடு வேண்டாமுன்னு கூவுரானுங்க…