கே. பாலசந்தர் ‘மகளிர் தினம்’: நல்லா வௌங்கும் நாடு

avaloruthodarkathai
பி.பி.சி தொலைக்காட்சி, ‘டெல்லியில் பெண்ணைப் பாலியல் வன்முறை செய்து கொலை செய்தவன் பேட்டியை, மகளிர் தினத்தை முன்னிட்டு, ஒளிபரப்பும்’ என்று முன்னர் அறிவித்திருந்தது.

அதுபோல் பொதிகை தொலைக்காட்சி, ‘மகளிர் தினச் சிறப்பாக இயக்குர் கே. பாலசந்தர் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி’ என்று அறிவித்திருக்கிறது.

வேலைக்குப் போகிற பெண்கள் கவர்ச்சியாக உடையணிந்து ஆண்களைக் கவர்வது போல்தான் போவார்கள். கணவன் இல்லாதவர்கள், குடும்பப் பொறுப்பற்ற ஆண்கள் இந்தச் சூழல் தான் பெண்களை வேலைக்குப் போக வேண்டிய இழிவான நிலைக்குத் தள்ளுகிறது..
பாவம் குடும்ப வறுமை காரணமாகப் பெண் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. வீட்டிலிருந்தால், பெண்கள் நிம்மதியாக, பாதுகாப்பாக, மன அமைதியுடன் வாழ்வார்கள் என்று,
பெண்கள் வேலைக்குப் போவதையே ‘விலை’க்குப் போவதைப்போல் அவள் ஒரு தொடர்கதையில் சித்தரித்தார்.

தொடர்ந்து தன் படங்களில், மோசமான கணவனைப் பிரிந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்வதைத் தடுத்தே வந்தார்.
அரசு தொலைக்காட்சி மகளிர் தினத்திற்கு இவரைப் பற்றிச் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பி, சிறப்புச் செய்திறதாம் பெண்களுக்கு.
நல்லா வௌங்கும் நாடு.
*

இயக்குநர் K. பாலசந்தர் மரணமும் ‘முற்போக்கு’ ஒப்பாரிகளும்

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

5 thoughts on “கே. பாலசந்தர் ‘மகளிர் தினம்’: நல்லா வௌங்கும் நாடு

  1. நல்லவேளை மகளீர் தினத்தன்று பாலசந்தரின் அரங்கேற்றம் படத்தை தொல்லைகாட்சியில் போடாமல் இருந்தார்களே என்று சந்தோஷபடுங்கள் தோழரே.

Leave a Reply

%d bloggers like this: